அத்தியாயம் - 16

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் - 16

ஒரு வழியாக அனைத்தும் முடிவடைந்த நிலையில் அனைவரும் கலைந்து செல்ல சீயான் மற்றும் வேம்பு தேங்கினர்.அங்கு சில மணித் துளிகள் கனமான மௌனம் அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் சீயானை கட்டிக் கொண்டு அழுது கரைந்தால்.

இன்றோடு இந்த கண்ணில் உள்ள நீர் அனைத்தும் வத்தி போகட்டும் என்று எண்ணினானோ என்னமோ அவனும் அமைதி காத்தான் அவளது அழுகை சற்று நேரம் கடந்து நிற்க.அவளது முகம் தாங்கி “இப்போ என்ன நம்பி வரியாடி” அவனது கேள்வி தீயாய் தகிக்க

ஐய்யோ! மாமா நீ என்ன பேசுற அவள் பதறி கொண்டு கேட்க

“நீதானடி அந்த குதி குதிச்ச ‘என்ன எல்லாரும் பேசுவாங்க’ ‘உங்களுக்கு அது தான் வேணுமா’ அப்படி இப்படினு இப்போ என்ன சொல்லுற”

“நான் ஒன்னும் அதுக்கு சொல்ல” குரல் சற்று இறங்கி ஒலிக்க

எதுக்கு சொல்ல? வருத்தம் போய் அவனது எடக்கு பேச்சில் கோபம் கொண்டவள் “உன்கிட்ட மனுசன் பேசுவனா ஆள விடு நான் போறேன்” அவனது பிடியில் இருந்து விலகி முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டால்.

ஏய்! எங்கடி போற

ஹ்ம்ம்…. என் புருசன் வீட்டுக்கு

“அது சரி” என்றவன் மெல்ல சிரித்து கொண்டான் அவள் செல்வதையே ஒரு வித நிறைவோடு பார்த்துக் கொண்டு இருந்தவன் தோள் மீது ஓர் கரம் விழ திரும்பி பார்த்தவன் எதிரில் நின்றது வேம்புவின் கடந்த காலம்.

அதாவது அந்த பையனுடய அப்பாவும் அம்மாவும் தான். சற்று முன் தான் பெண் என்பதை மறந்து ஆத்திரத்தில் பேசிய அந்த தாய் இப்போது குற்ற உணர்வில் தன் முன் நிற்க அவரை தான் அசையாமல் பார்த்து கொண்டு இருந்தான் சீயான்.

அவனும் என்ன? ஏது? என்று கேட்கவில்லை அவர்களும் பேசவில்லை நொடிகள் மட்டும் வலிகளோடு கடந்தது. அதனை தகர்த்தார்அந்த மனிதன் “பேச வேண்டி வந்துட்டு பேசாம நின்னா என்ன அர்த்தம் பேசுறது பேசிட்டு வா” என்க ஒரு பெருமூச்சுடன் பேசினார் அந்த தாய்.

“நான் இங்க மன்னிப்பு கேட்க வரல தம்பி” பேச்சின் தொடக்கமே அவனது கோபத்தை அதிகரிக்கத் தன்னைக் கட்டு படுத்திக் கொண்டு நின்றான் செவி மட்டுமே விழித்திருக்க மற்ற புலன்கள் அனைத்தையும் உறங்க வைக்கப் போராடி கொண்டு இருந்தான்.புலன்கள் விழித்தால் எதிரில் ஒருவர் நிற்க முடியாது அத்தனை கனல் அவனிடத்தில்.

“தப்பு செஞ்ச எல்லாருக்கும் ஒரு நியாயம் இருக்கும் அதே போலத் தான் எனக்கும் பொதுவா பிள்ளைகளுனு வரும் போது எல்லாத் தாயும் சுயநலம் தான் நானும் அப்படித்தான்.புள்ளைய பெத்துக் கண் குளிர வளர்த்து அதை பரிக் கொடுக்குற கொடுமை இருக்கே அது யாருக்கும் வர கூடாது.

ஒரு கெட்ட பழக்கம் கூடக் கிடையாது என் பையனுக்கு அவனுக்குப் போய்க் கடவுள் ஏன் இப்படி ஒரு நோய் கொடுத்தானு தெரியல.எனக்கு வேண்டியது எல்லாம் என் பையன் என்னோட இருக்கனும் அவன் இல்லாத பட்சத்துல அவன் நிழல் என்கூட இருக்கனும் அதுக்கு ஒரே தீர்வு கல்யாணம்”

பொதுவா குழந்தைங்க விளையாடும் போது நம்ப குழந்தை இன்னொரு குழந்தையை தள்ளி விட்டா என்ன நடக்கும்.நம்ப குழந்தை செய்த தவறை மறைக்க மத்த குழந்தைகளை சாடுவோம் சில பெற்றோர்களின் நிலை இது தான் அந்த தவறை தான் இந்த தாயும் செய்தார்.

என்ன தான் அவர் தவறுக்கு விளக்கம் அளித்தாலும் மனது ஆறுமா என்ன? ஆக அவர் செய்த காரியத்தின் வீரியத்தை இன்னும் அவர் அறியவில்லை இனியும் அறியமாட்டார்.

கோபத்தை அடக்கி அவருக்குப் பதில் அளித்தான் சீயான் “உங்க நிலையை நாங்க உணர்ந்ததுனாலத் தான் பஞ்சாயத் பேசினோம் இல்லனா என் நடவடிக்கையே வேற மாதிரி இருக்கும்” என்க இருவரும் தலையை குனிந்து கொண்டனர்.

அவர்களை மேலும் பேசி சங்கடம் செய்ய மனம் கொள்ளாமல் “சரிங்க நான் வரேன் என்றவன்” கிளம்பிவிட்டான் இன்னும் சிறிது நேரம் இருந்தால் அவனால் அவனையே எதிர் கொள்ள முடியாது.அத்தனை வெறுப்பு அந்த மனிதர்கள் மேல் காலத்துக்கும் ஆரா வடுவை ஏற்படுத்தி விட்டு விளக்கம் சொல்லும் அவர்களை என்ன செய்ய.

இனி வரும் காலத்தில் எல்லாம் மனித நேயம் என்பது புத்தகத்தில் மட்டுமே எழுத்தாக பார்க்க முடியும் போலும்.இங்கு உள்ள மனிதர்கள் இடத்தில் அவை காண்பது அரிது.

அதிலும் சில விதி விலக்கு இருந்தாலும் இந்த பொல்லா காலம் அவர்களையும் மாற்றிவிடும் என்பதில் எந்த அய்யமுமில்லை ஆனால் பெண்ணவளுக்கு முதல் திருமண தோல்வி என்ற பேச்சு காலத்துக்கும் உண்டு அல்லவா.

அவளது நிலை கண்டு தான் அவன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்கிறான்.அவளது பலத்தை உடைக்க விடக் கூடாது என்பதற்குத் தான் அவளை அரட்டி வைத்தது.

ஏனென்றால் இது முடிவல்ல இனி தான் ஆரம்பம் அவள் நாளை எதிர் கொள்ளும் மனிதர்களில் அவளது குழந்தைகளும் ஒன்று எனவே எந்த விதமான கடந்த காலக் கசடு பேச்சுக்களையும் அவள் திடமாக கடந்து வர வேண்டும் அதுவும் என் மீது கொண்ட நம்பிக்கையோடு அதற்கு முதல் படி இன்று ஊரை கூட்டி அவளை நிறுத்தியது.

முன் பாதியில் காலம் சற்று கொடூரமாக விளையாண்டாலும் பிற்பாதியில் நிறைவை தருமென்பது தின்னம்.இவ்வாறு யோசித்தவாறே வீட்டினுள் நுழைந்தவனை நிகழ்ச்சியுடன் எதிர் கொண்டனர் குடும்பத்தினர்.அவர்களை பார்த்தவாறே உள்ளே வந்தவன் நேராக சென்று தனது தந்தை காலடியில் அமர நடுங்கும் கைகளால் அவனது தலையை தடவியவர்.

“எஞ்சாமி எப்படி இந்த விசியத்தைக் கையாண்டு என் மருமகள மன சுணக்கம் இல்லாம காப்பாத்த போரணு நெனச்சேன் ஆனா சுளுவா முடுச்சுபுட்ட” சற்றுக் கரக் கரத்த குரலில் சொல்ல பதறிப் போனான் சீயான்.இது நாள் வரை கேட்டிராத கலக்கம் அவரது பேச்சில் வெளி பட

“என்னங்க ஐயா?”

“ஒன்னுமில்லை சாமி தப்பு செஞ்சாலும் சரி நம்ப பண்ண தப்புக்கு தான் இந்த அடினு மனச தேத்திக்கிடலாம், ஆனா செய்யாத தப்புக்கு அனுபவிக்கிற கொடுமை இருக்கே” முனியாண்டியின் பேச்சில் உள்ளம் குறு குறுக்க

“மச்சான் நீங்க சொல்லுறது நெசம் தானுங்க தப்பு பண்ணது நான் தான். நான் தான் பாவி, நான் தானுங்க தண்டனை அனுபவிக்கனும் சிறுசுங்க இரண்டும் பட்ட பாட்டுக்கு நான் தானே காரணம் என்று தலையில் அடித்துக் கொண்டவரை பார்த்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

‘நீங்கள் இல்லை கவலை வேண்டாம்’ என்று சொல்ல அங்கு உள்ள அனைவருக்கும் வாய் வரவில்லை சொல்ல முடியுமா என்ன?அவர் மட்டுமே அனைத்துக்கும் காரணம் அவசர முடிவும், நிதானமற்ற செய்கையுமே அனைத்தையும் நொறுக்கியது.

எனவே அனைவரும் ஒரு வித இறுக்கத்தில் இருக்க அவர்களை மாற்றும் பொருட்டு “விடுங்க மாமா இனி நடக்கப் போறத பார்ப்போம்.ஐயா நான் முத்துவ பார்த்து கல்யாண வேலை எம்புட்டுத் தூரம் முடிஞ்சு இருக்குனு கேட்டு ட்டு வரேன் நீங்களும் தோப்புக்கு போங்க” என்றவன் கலங்கி நிற்கும் பொன்னுரங்கத்தையும் “

மாமா ஐயாக்கு துணைக்கு நீங்களும் போங்க” என்றவன் கண்களால் வேம்புவை அழைத்து விட்டுச் சென்றான்.

இருவரும் வெளியில் வர “உனக்கு என்ன வேனும் கல்யாணத்துக்குச் சொல்லு”

அவனது கேள்வியில் உயிர் கொண்டாலும் தலையைக் கவிழ்ந்து கொண்டே “ஒன்னும் வேணாம் மாமா”

“நீ இந்த மாதிரி பைத்தியமா யோசிப்பண்ணு தெரியும் ரொம்ப யோசிக்காத சொல்லு என்ன வேணும்” என்க பெண்ணிடம் அமைதி மட்டுமே பதிலாகக் கிடைக்கக் குரலை உயர்த்தாமல் தனது கோபத்தை வெளிப்படுத்தினான்.

ஏய்! உனக்கு வேணாம் இது இரண்டாவது கல்யாணமா இருக்கலாம்.எனக்கு இது தாண்டி முதல் கல்யாணம் அவனது பேச்சில் கண்ணில் நீர் கோர்க்க அழுது கொண்டே ஏன் மாமா? ஒருவித ஆற்றாமையோடு கேட்டவளை

என்னடி! ஏன்?

“உனக்குக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா? இல்லையா?”

நீ.... தன்னைப் புரிய வைக்கும் நோக்கத்துடன் நெருங்கியவளை கை நீட்டி தடுத்தவன் “ இருக்கு இல்ல மட்டும் சொல்லு”

“ப்ச் பிடிச்சு இருக்கு” அப்போ நான் சொல்லுறது செய் அவனது பேச்சில் கோபம் வர அதுவும் அவன் தன்னிடம் பிடித்தம் பற்றிக் கேட்க பத்தி கொண்டு வந்தது. அவளை என்ன நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டு இப்போது கேட்கும் கேள்வியைப் பார் அதுவும் சட்டமாக அவனது பேச்சில் கோபம் கொப்பளிக்கப் பல்லை கடித்துக் கொண்டு. என் விருப்பத்தை நீ எப்போ கேட்கணும்?

“எப்போ கேட்கணும்?” வேம்புவின் கேள்விக்கு அவளைப் போலவே சீயானும் எதிர் கேள்வி கேட்க எரிச்சல் மிகுதியில் .

“பலிட்டாயில் குடிக்கும் போது…. எல்லாம் முடுஞ்ச பிற்பாடு வந்து கேக்குற”

“அப்படிதாண்டி கேட்பேன் பதில் சொல்லு”

“முடியாது போட”

“போட…வ்……வா”

“ஆமாடா நீ என்ன பெரிய சண்டியரோ”அவளது கோபம் உல்லாசம் கொடுக்க

“பின்ன இல்லையா” என்றவன் மீசையை முறுக்க இன்னும் அவனிடம் வம்பு வளர்க்க எண்ணியவள்

“ஹ்ம்ம்… நான் பார்த்த வரைக்கும் ஒரு வம்புக்கும் போனது இல்லையே ஒருவேளை நானும் ரவுடி தாணுங்குற மாதிரியோ”

“பேசுடி பேசு கொழுப்பு கொஞ்சம் நஞ்சமாடி இருக்கு உனக்கு தெருஞ்சா வம்புக்கு போவாங்க அதுவும் எங்க ஐயாக்குத் தெரிஞ்சுது அம்புட்டு தான்.

வெளில கேட்டு பாருடி இந்தப் பாண்டி யாருனு” அவனது பேச்சுக்குப் பழிப்பு காட்டியவள்

“நான் எதுக்கு வெளில கேட்கணும் எனக்கே தெரியுமே பாண்டிய பத்தி” பேச்சுக்கு பேச்சு எதிர்த்து பேசியது இல்லாமல் சீயானை பெயர் சொல்லி அழைக்க அவளது அழைப்பில் போதை ஏறினாலும் வெளியில் சீறலாய்.

“எனக்கு நீ தான் பெரு வச்சவ மாதிரி பெயர் சொல்லி கூப்புடுற”

“நான் கூப்புடா தானே பெரு வச்சதே”

“அடிங்க….” அவளைப் பிடிப்பது போல் வர சிரித்துக் கொண்டே சிட்டாகப் பறந்து விட்டால்.அவனும் சிரிப்புடன் முத்துவை பார்க்க செல்ல இவர்களது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த பொன்னுரங்கதற்குக் கண் கலங்கியது இனியாவது இவர்கள் வாழ்க்கை பூத்து குலுங்கட்டும் என்று மனமார வாழ்த்தினார்.

பெரும் பாரம் விலகக் கல்யாண கனவுகள் கண்களில் தெரிய போதையுடன் முத்துவீட்டுக்கு சென்றவன்.வாசலை கடந்து உள்ளே செல்ல அங்கே கண்ட காட்சியில் டேய் என்னடா? சித்தி என்னது இது?

“இவன கொல்லாம விடமாட்டேன் பாண்டி” வீராயி சொல்ல.

“நானும் தான்டா சீயான்” முத்துவும் சொல்ல இருவரது பேச்சையும் கேட்டவன் அதிர்ந்து நின்றான்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top