அத்தியாயம் – 3

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 3
இன்று வெள்ளிகிழமை. இன்னும் இரு தினங்களில் திருவாதிரை நோன்பு என்பதால், கடையில் கூட்டம் அலைமோதியது.

சிவனின் நட்சத்திரமான திருவாதிரை நோன்பு வெகு விமரிசையாக, சிதம்பரத்தில் கொண்டாடப்படும் விழா என்பதால், கடை வீதி எங்கும் கோலாகலமாக இருந்தது.

பெரிய நாச்சி செட்டி கடையிலும் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. சிதம்பரத்தில் பாரம்பரிய கடைகளில் முதன்மையானவை பெரிய நாச்சி பட்டு மட்டும் நகைகடை.உயர் ஜாதி வைரம் இங்கு பிரசித்தி பெற்றது.கடல் கடந்து இன்றும் வாணிபம் செய்கிறது, பெரிய நாச்சி குடும்பம்.

சித்தப்பன், பெரியப்பன், மாமன், மச்சான், அங்காளி, பங்காளியென மொத்தம் நாற்பது தலைக்கட்டு மதுரை, சேலம்,காரைக்குடி,வேந்தன்பட்டி,நெற்குப்பை,வையம்பட்டி,மயிலாடுதுறை,சிதம்பரம் என அவர்களது உறவினர்கள் ஊர் பெயரும் வெகுபிரசித்தி பெற்றதாக இருந்தது.

சிதம்பரம் முழுதும் அம்பலத்தான் ஆட்சி. இதோ அவர் கடையில் பெண்கள் கூட்டம் அவரவர் வசதிக்கேற்ப நூல் புடவை, மதுரை சுங்குடி, தரமான காஞ்சிபுரம் பட்டு என்று கடையை அலசிக் கொண்டு இருந்தனர்.

மர அடுக்கு மேஜையில் உள்ள துணிகளை எடுத்து போட்டுக் கொண்டு இருந்தார், கடை ஊழியர் சதாசிவம். பெரிய நாச்சியின் தங்கை மகன் என்பது கூடுதல் தகவல்.

“சிவா அண்ணே! அந்தப் பச்சை கலர் புடவை எடுண்ணே”

“ஆத்தா அதே கலர் தானே கீழ இருக்கு. அதைப்பாரு, சாமி”
“ஆனா, வேற பூ டிசைனா இருக்கு. நீ அது எடுண்ணே” என்று அடம்பிடித்த பெண் வேறுயாருமில்லை, நமது பொன்மொழி தான். பக்கத்தில் நமது சிவகாமசுந்தரி.

“அது சரி.”என்றவர் புடவையை எடுத்துப்போட, மீண்டும் பெண்கள் அதனை அலசி ஆராய்ந்தனர்.

“என்னடி மாமி உம்னு உட்கார்ந்து இருக்க, வெரசா மடிசார் எடு நேரம் போகுது.அம்மா தோசை ஊத்தி சட்டினி செய்யச் சொல்லுச்சு.”என்றாள் பொய்யாக பொன்மொழி....

“ப்ச்... வேண்டாம் ஏற்கனவே எடுத்துவச்சுட்டேன். அதுவே போதும்! நீ எடு. அவர்வர நேரம் நெருங்கிக்கிடித்து, நேக்கு பயமா இருக்குடி. நீ இங்க என்ன இழுத்துட்டு வருவேன்னு தெரிஞ்சு இருந்தா,வந்து இருக்கவே மாட்டேன்.”

‘அதான் தெரியுமே!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட பொன்மொழி வெளியில்,

“சரி சரி கொச்சுக்காதாடி. இங்கன தான் நல்ல புடவை கிடைக்கும். உனக்கே தெரியும் தானே! இதோ எடுத்துடுறேன்.” என்றவள் வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தினாள்.

சரியாக அந்நேரம், அம்பலத்தானும் சிவநேசனும் வந்து சேர்ந்தனர்.

ஆறு ஆண்டுகள் கழித்து, காட்சி தருகிறாள் அம்பிகை. ஆனாலும் அவளைக் கண்டு கொள்ளாமல், தரையில் அமர்ந்து கொண்டு புடவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்த பெண்களுக்கு இடையில் லாவகமாக சென்று சிவகாமி அருகில் வந்தவர் ,அவரை உரசி கொண்டு நின்று போட்டாரே ஒரு சத்தம்,மாமி கதிகலங்கிப் போனாள்.

“ஏய்! முரசு!”

எதிர்பாரா விதமாக அவரது சத்தம் தனது அருகில் கேட்க, கண்களை இறுக்க மூடிக்கொண்டு, நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள், சிவகாமி.

பொன்மொழி தோழியின் நிலை அறிந்து, அவளது கைகளைப் பற்றிக் கொண்டாள்.

அண்ணே! என்று வந்தவனை,

மீண்டும் பெருங்குரல் எடுத்து “என்னது இது” என்று தலைகீழ் கவிழ்ந்து கிடக்கும் பட்டுப் புடவை அடங்கிய அட்டைப்பெட்டியை காட்ட,

அந்த வாலிபன் பதறிப் போனான். தலைகீழாகப் புடவைகள் வேறு கவிழ்ந்து கிடந்தது.

“ஐயோ! யாருனு தெரியல, அண்ணே! ஏதோ கைதவறி தட்டிவிட்டு இருப்பாங்க. இதோ எடுத்துடுறேன்.” என்றவன் அதனை சரி செய்ய, மேலும் சத்தம் போட்டார்.

“கடையில கூட்டம் கூடும் விழா நாளுன்னு தெரியும் தானே? இன்னும் இரண்டு ஆளு கூட்டி வேலை பார்க்க வேண்டியது தானே?”

“பொருள் வீணாப் போனா விற்க முடியுமா? சிவம் அண்ணே நீயும் கவனிக்காம இருக்க! என்ன போ!” என்றவர் மேலும் சிறுது நேரம் அங்கே நிற்க,

குனிந்த தலை நிமிரவில்லை சிவகாமி, அவரும் அவளைத் தாண்டிச் செல்ல வில்லை. அவரது கால்களை மட்டுமே பார்த்துக் கொண்டே இருந்தார்.

மேலும் அரைமணி நேரம் நின்று, ஆடுகால் தசை கொண்டு சிவகாமியின் கை உரசி, தோள் உரசி அநியாயம் செய்த பின்னே, தனது சிறு அலுவலக அறைக்குள் செல்வது போல் பாசாங்கு செய்து நிற்க,

நண்பனைப் பார்த்துக் கொண்டே நின்றார்,சிவநேசன்.

அதுவரை மூச்சை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்த சிவகாமி,சற்று தளர்ந்து அமர்ந்து கழுத்தை பிடித்துக் கொண்டே எதிரில் இருக்கும் பொன்மொழியை முறைத்தாள், குனிந்தே இருந்தது வலியைக் கொடுத்தது.

“ஆத்தி, மாமி முறைக்கிறா...”

“நீ புடவை எடுக்காட்டியும் பரவாயில்லை.கிளம்பு! இல்லைனா, நீ பொறுமையா எடுத்துண்டுவா. நான் போறேன்.” என்றவள் விறு விறுவெனத் தனது பாதுகையை அணிந்து கொண்டு செல்ல,

கையில் கிடைத்த புடவையை சதாசிவத்திடம் கொடுத்த பொன்மொழி “அண்ணே! இதை எடுத்துக்குறேன். எம்புட்டு காசு..?”

“அதெல்லாம் வேணாம்.” என்ற அம்பலத்தான் சதாசிவத்திடம் திரும்பி,

“அண்ணே! புடவையை பையில போட்டுக் கொடு.அப்படியே அந்த மாம்பழக்கலர் மடிசாரையும் கொடுத்துடு.”

“தம்பி, அது தங்கச்சிக்கு வாங்குனது..” என்றவரை பார்த்துச் சத்தமாகச் சிரித்தவர்..

“இதுவும் உங்க தங்கச்சிக்குத் தான்!”

“ஆ! ஏன்டா தம்பிபையா, உமையாள் போய், மாமி போய், இப்போ யாரு?இதெல்லாம் சரில்லை!” என்று தீவிரமாகப் பேசியவரைப் பார்த்து முறைத்த அம்பலத்தான்,

“இப்போ போனது.உங்க தங்கிச்சிசி வகாமி.சுந்தரி…தான்.”சுந்தரி என்றதை அவர் அழுத்திச் சொல்லிய விதத்தில்,சிவநேசன் முகத்தில் புன்னகை...!

“ஹா! சிவா பாப்பாவா, இம்புட்டு வளர்ந்துநிக்குது. வாய் கொள்ளப் புன்னகையில் ஆச்சரியத்தைத் தேக்கி அவர் கேட்க,

மெல்ல தலை அசைத்தார்,அம்பலத்தான்.

“ஏன் தம்பி? இப்போ சொல்றீக! முன்னாடியே சொல்லி இருந்தீகனா, பாப்பா கூட இரண்டு வார்த்தை பேசி இருப்பேன். எம்புட்டு நாள் ஆச்சு புள்ளைய பார்த்து.” என்றவர் குரல் நெகிழ்ந்து இருந்தது.
திருமணமான புதிதில் பாவாடை சட்டையில் துரு துருவெனச் சுற்றித் திரிந்த பிள்ளையை, வம்பு செய்து கொண்டே இருப்பார்.

அதனை எண்ணிப் புன்னகைத்தவர் முகம், மெல்ல மெல்ல கவலையாகி “என் கூட பாப்பா பேசவே இல்லை தம்பி.எனக்குத் தான் அடையாளம் தெரியல. அதுக்குத் தெரியும் தானுங்க.”

“தெரிஞ்சு இருக்கும்,அண்ணே! பேச தயக்கமா இருக்கும்.” என்றான் சிவநேசன்

“என்ன வோபோ! இந்தத் தரம் விட்டுராத தம்பி.” என்றவருக்குப் பதிலாக புன்னகையை கொடுத்து விட்டு, அம்பலத்தான் அலுவலக அறைக்குள் புகுந்து கொள்ள, அவர் பின்னோடு மீண்டும் சென்றார், சிவநேசன்.

தனது நாற்காலியில் அமர்ந்தவர் எதிரில், போலி முறைப்புடன் அமர்ந்து கொண்டார், சிவநேசன்

“என்னடா மாப்புள்ள?”

“எதுக்குடா நல்ல இருந்த பொட்டிய தள்ளிவிட்டு,அந்தக் கத்து கத்துன…?”

கடைக்குள் நுழையும் போதே சிவகாமியை பார்த்தவாரே நுழைந்தவர், அவள் மேல் உள்ள கோபத்தில் மேஜையில் இருக்கும் துணிப்பெட்டியை யாரும் அறியா வண்ணம் தள்ளி இருந்தார்.

கூட்டம் அலைமோத நான்கு ஊழியர் மட்டும் என்பதால், யாரும் சரிவரக் கவனிக்கவில்லை. ஆனால், சிவநேசன் கண்டு கொண்டார்.

“ஹி....ஹி...”என்று சிரித்தவர், “உன் தங்கச்சிய பார்த்த உடனே கோபம்! என் நெஞ்சு அளவு இருந்துகிட்டு கழுத்த நெறிக்கிறாளேனு.அதான் நான் கத்திப் பேசினா பயந்து கண்ணமூடிக்குவா.இந்நேரம் அம்மா இருந்தா, மாமின்னு அவுக பின்னாடி கட்டிக்கிடுவா.”

“அடப்பாவி,மீசைக்காரா! நீ சரியான மோசக்காரெண்டே!”

“ஹா... ஹா… உன்தங்கச்சி தான் மோசக்காரி!”

“யாரு?அது அந்தப் புள்ள பாவம் வெள்ளந்தி. உன் குசும்பும் கொட்டித் தனமும் தெரியாம, புள்ள பயந்து போகுது.”

“அடேயப்பா! நான் என்ன மாப்புள கொட்டித் தனம் பண்ணுனேன்.”

“நீ என்னடா பண்ணல. தங்கச்சி தோள்பட்டையைப் பார்த்தாத் தான் தெரியும்! இந்நேரத்துக்கு அண்டு போயிருக்கும்.”அம்பலத்தான் உரசியதைச் சொல்ல, சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டார்,தனது வெட்கத்தை மறைக்க.

“ஒய்! நில்லுடி மாப்புள! எங்க ஓடுற?”

“நான் ஏன் ஓடுறேன். வேலை இருக்கு, சாப்பிட போகணும்.”

“அதுசரி.வேலையும் சோறும் தான் முக்கியம்.நீ வா. ஆனாலும்,உன் மீசைல மண் ஓட்டலை மாப்பிள்ள..”என்றவரது தோளில் அடித்தவர், முகம் கொள்ளப் புன்னகையுடன் செல்ல,

சிவநேசனும் அவர் பின்னே சிரித்துக் கொண்டே சென்றார்,மனதில் அத்தனை நிம்மதி.
………
படபடத்த மனதுடன் கடையில் இருந்து வந்த சிவகாமி, தனது அறைக்குள் முடங்க.

பெண்கள் இருவரும் வந்த தினுசில் என்னவோ ஏதோவென்று பதறினார், பொன்மொழியின் தந்தை.

“என்ன பொண்ணு? சிவா பாப்பாக்கு என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்லை.“அண்ணே! கடைக்குக் கூட்டிட்டு போனேன்.”

அவளது பேச்சில் கோபம் கொண்ட அவரது தாய்,“ உனக்கு எதுக்கு வம்புடி?

“அம்மா, அவ அப்படியே இருக்கணுமா?”

“அதை அவுக அம்மா அப்பா பார்த்துக்கு வாங்க.அந்தப் பொண்ணு நம்ம வீட்டுல இருக்குறதே பயமா இருக்கு.ஆச்சி நம்மள தப்பா நெனைச்சுக்கிட்டா, என்ன செய்றது.”பொன்மொழியின் தாய்பதறிச் சொல்ல,

“நான் முறையா தகவல் சொல்லித் தான் கூட்டிட்டு வந்தேன்.பயப்பிடாத செல்வி.” என்று பொன்மொழியின் தந்தை கூற,இருவருக்கும் வாக்கு வாதம் நடந்தது.

பொன் மொழி அவர்களைக் கண்டு கொள்ளாமல், சிவகாமியை பார்க்கச் சென்று விட்டாள். அவளுக்குத் தெரியும்,அப்பா தனது அம்மாவை சமாளித்து விடுவார் என்று.

பொன்மொழியின் தந்தையும் தமிழ் ஆசிரியர் தான்.அவருக்குப் பெரிய நாச்சி நன்கு பரிச்சயம்.அந்தக் காலத்தில் பெரிய நாச்சி தனது கணவனுக்குக் கடிதம் எழுத மணியைத் தான் நாடுவார். அதில் நல்ல பழக்கம் உண்டு இருவருக்கும்.

என்னதான் தெரிந்தவர்களாக இருந்தாலும் திருமணமாகி ஒரு பெண் தனித்துத் தன் வீட்டில் இருப்பது, ஒரு அன்னையாக அவரை உறுதிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் மகளைக் கண்டித்து வருகிறார்.

அறையில் அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்,பொன்மொழி.

“சாரிடி..”

“ப்ச்... விடு.”

“அழுவாதடி மாமி!”

“நான் ஒன்னும் அழலை..”

“அப்புறம் என்ன?”

“ப்ச்...போடி!”அவளது பதில் ஒரு மார்க்கமாக வர..

“என்ன ஆச்சு மாமி?” என்று அவளது முகத்தை வலுக்கட்டாயமாக எடுத்துப் பார்க்க, தோழியைக் காணாது கண்கள் மூடி,வெட்கப் புன்னகையில் இருந்தாள், சிவகாமி.

“என்னடி இது? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்னு நெனச்சேன்.”
தோழியின் கேள்வியில் மெதுவாக கண்ணைத் திறந்தவள்,

“நான் ஏன் அழணும்?” என்று எதிர்கேள்வி கேட்க,

“அது சரி! ஆத்துக்காரர பார்த்த மெதப்பு!”

"அதெல்லாம் ஒண்ணுமில்லை .நான் அவரை பார்க்கலை." அவளது பதிலில் அதிர்ந்தவள்

"என்னடி சொல்லுற" தோழியின் தோற்றத்தை பார்த்த சிவகாமி

"நீ ஏனடிம்மா பதறுற"

“ஆஹா....இல்ல,ரொம்ப நேரம் உங்கிட்ட தானே நின்னுட்டு இருந்தார். நீ பார்க்கலன்னு சொல்லுறியே, அதான்.”

“அவர் முகத்தைப் பார்க்கலை. ஆனா,அவர் கால் விரல் பார்த்தேன். ரொம்பத் தான் குசும்பு..”

“ஏன்டி?அண்ணன் பாவம்..”

“ரொம்பப் பாவம்மா. கொழுப்பு கூடிடித்து மீசைக்காருக்கு!”என்றவள் நடந்ததைக் கூற,வாயை பொத்திக் கொண்டாள், பொன்மொழி.

“பாவம் சொன்னியே! சேட்டையை பார்த்தியோனோ? நேக்கு, அவர் கத்தி பேசுனா பயம் வரும்.. அவருக்கு கோபம் வந்தா ரொம்ப பேசுவார். அதுவும் ஹைபிச்தான்.நேக்கு பயம்னு தெருஞ்சுண்டே பக்கத்துல வந்து வந்து வம்பு பண்ணுறார். இதுக்கெல்லாம் மசியமாட்டா இந்த சிவகாமி, சொல்லிவை! உன் பாசமலர்கிட்ட!”என்ற சிவகாமி வெளியில் செல்ல, முழித்து கொண்டு அமர்ந்திருந்தாள், பொன்மொழி.

நேற்றைய தினம் தான், அம்பலத்தான் முதல் முறை பொன்மொழியிடம் பேசியது.

ஒரே ஊர் மக்கள். பக்கத்து தெரு. அதுவும் ஆசிரியர் மணியின் பெண் என்று தெரிந்தாலும், பேசிப் பழக்கமில்லை. ஆனால், மனைவியின் நெருங்கிய தோழி என்று தெரியும்.

திருவாதிரை நோன்பு என்பதால் புத்தாடை கொண்டு விரதம் இருக்கும் பழக்கமுண்டு. அதனால் தனது கடைக்கு மனைவியை அழைத்து வரச் சொல்ல, அவளும் தோழியின் நல் வாழ்வு கருதி சரியென்றாள்.

இன்னும் அம்பலத்தான் மனைவியை நேர் கொண்டு பார்க்க வில்லை. பக்கத்தில் இருந்தும் இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினர்.

இவர்கள் ஆட்டத்தை இன்னும் சூடு பிடிக்க வைத்தது, திருவாதிரை நோன்பு.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement