அத்தியாயம் – 1

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் – 1

1992 மதுரை மாவட்டம் விளாங்குடி.........

ஓயாது பொழிந்த மாரியால் மண் மனம் சுண்டி இழுக்கக் கால்கள் தன் போக்கில் விளாங்குடியில் வந்து நின்றது.கிராமம் சற்று முன்னேறி பஞ்சாயத் டௌனாக மாறினாலும் இன்னும் மண் மனம் பேசும் மதுரையை மாவட்டமாகக் கொண்ட இவ்வூரில் இருந்து எனது பயணம் நீங்களும் வாருங்களேன் இந்த மண்ணின் மக்களின் உணர்வுகளைச் சற்று தீண்டி பார்ப்போம்...

விளாங்குடி பஞ்சாயத் உங்களை அன்புடன் வரவேற்கிறது (மதுரை வடக்கு தாலுகா மதுரை மாவட்டம்) என்ற பெயர் பலகையை முறைத்த வண்ணமே நின்று கொண்டு இருந்தாள் உவகைமலர்.

அடர் வண்ண பச்சை பாவாடையும் அதே நிறத்தில் பட்டு ரவிக்கையும் கிளி பச்சை நிறத்தில் தாவணியும் அணிந்திருந்தவள் பார்க்க பாந்தமாகத் தான் இருந்தாள் பருவம் என்று பார்த்தால் அரிவை போலும்.முகத்தில் மட்டும் அத்தனை கடுமை வாய் ஓயாமல் வசை பாடி கொண்டு இருந்தது அந்தப் பச்சை கிளி.

“ம்மா இன்னும் எம்புட்டு நேரம் நான் நிக்கக் காலு நோவுது” பல்லை கடித்துக் கொண்டு தனது தாயிடம் பேசிய உவகைமலரை கெஞ்சுவது போல் பார்த்து வைத்தாள் அவளது தாய் அறிவழகி.

அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு தெய்வமே என்று நின்று இருந்தது இளைய பிள்ளை அகர நங்கை இப்பெண் அரிவை பருவத்தில் அடியெடுத்து வைத்து இரு மாதங்கள் ஆகின்றது. அமைதியாக இருந்தாலும் இளைய பிள்ளை கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

“அம்மொய் உன்னைத்தான் கேக்கேன் என் மூஞ்சிய மூஞ்சிய வெறிக்க”

“கொஞ்சம் பொறுமை பழகு சாமி இந்தா வந்துபுடுவாக” ஒருமணி நேரமாக இதையே சொல்லும் தாயை என்ன செய்ய.

“நீ ஏன்ம்மா பெரியம்மா கூடப் போகல? உன்ன என்ன சொன்னேன்?...

“இடமில்ல சொன்னாகப் பாப்பா”

“யாரு?” கண்ணை உருட்டி பெரிய மகள் கேட்கும் தோரணையே அந்தத் தாய்க்குப் பயத்தைக் கொடுக்க

“யாருனு தெரியல சாமி பொதுவுல ஒரு குரல்........” தாய் இழுக்க

“உன்னைய என்னம்மா செய்ய நான்.... இடமில்லன்னு ஆகி போச்சுல எதுக்கு தோணாந்து கிட்டு நிக்க....இந்தா இருக்கு ஊரு பஸ் ஏறி போனா பத்தே நிமிஷம்..... அந்தப் பக்கம் மினி பஸ் ஏறுனா கோவிலுக்கே நேர போயிடலாம் அது விட்டுப்போட்டு எம்புட்டு நேரம் காக்க வைக்கிற பசி காதை அடைக்குது”

“நம்ம பஸ்ல போனா அய்யன் அம்புட்டு தான் நம்ப குடும்பம் மொத்தமும் இருக்க நம்ம மட்டும்..........”

“நிறுத்தும்மா அது நம்ப குடும்பம் இல்ல உன் அப்பன் ஆத்தா குடும்பம்...உம்ம வீட்டு மக்க மனுஷாள் பத்தி தெரியாதாக்கும் பேசாம இருமொய் கடுப்ப கிளப்பிட்டு என்னைக்கு தான் இதுக்கெல்லாம் விடிவோ தெரியல” உவகைமலர் கடுகாய் பொரிய தனது தாயை காப்பாற்றும் பொருட்டுத் தனது செப்பு வாய் திறந்தாள் நங்கை

“அக்கா இன்னும் கொஞ்சம் நேரம் பார்ப்போம் இல்லையா அடுத்தப் பஸ்ல ஏறி போய்டலாம் அம்மா நொந்துகாதக்கா அதுவே பாவம் நிக்க முடியாம நிக்குது” என்றதும் தான் தனது அன்னையைப் பார்த்தாள் மலர்

“ம்மா அரச மரத்தடியில போய் உட்காரு நிக்க முடியாம ஏன் நிக்கிற” மலர் சொல்ல எதிர் வாதம் செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து கொண்டார்.

அப்பொழுது பகலவன் சற்றுப் பலமாகப் பல்லை காட்ட தனது மாராப்பை எடுத்து தலையோடு போர்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அந்தத் தோற்றத்தில் தனது தாயை பார்த்த பெண்களுக்குக் கண்கள் கலங்கும் போல் இருந்தது. பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்து பெண் புகுந்தகமும் அப்படியே என்ன சற்றுச் சுயநலம் கூடி குடிகெடுக்க இப்போது அறிவழகி பிறந்தகம் தஞ்சம்.... அங்கே சோமதேவன் தனிமையில் அது தனி கதை.

கால் விரல்கள் எல்லாம் சீல் பிடித்து சேத்து புண்ணாக இருக்க செருப்பை கூட போட முடியாமல் தவித்து கொண்டு அமர்ந்திருந்தவரை பார்க்க பார்க்க மனம் நொந்து போனது பெண்களுக்கு.

“நங்கை அம்மாக்கு நேத்து படுக்கும் பொதுச் சேத்து புண்ணு மருந்து போட்டுவிட்டியாடி”

“அதெல்லாம் போட்டேன்”

“அப்புறம் ஏன் புண்ணு இன்னும் ஆறலை? ஒரே நாளுல ஆராட்டியும் சீல் பிடிக்காம இருக்குமே”

“திரும்பத் தண்ணில நின்னா எப்படி மருந்து வேலை செய்யும்?”

“அதைச் சொல்லு எனக்கு வர கோவத்துக்கு......” அடுத்து என்ன பேசி இருபோல அவளை உரசியவாறு வந்து நின்றது கருப்பு நிற கார்.

கார் கதவை திறந்த சிங்கமுத்து “அறிவு பிள்ளைகளை கூட்டிட்டு சீக்கரம் வா பூசை போட போறாக” என்றவனை முறைத்துக் கொண்டே உவகைமலர் நிற்க அறிவழகி இரு பெண்களையும் இழுத்துக் கொண்டு காரில் ஏறினாள்.

எதையும் பார்க்கும் நிலையில் முத்து இல்லையென்பதால் வண்டி வேகமெடுத்து அவர்களது குலசாமி கோவிலுக்குச் சென்றது அவர்கள் கோவில் செல்லட்டும் அதற்குள் அக்குடும்பத்தை ஒருமுறை சுற்றி பார்த்து விடலாம் வாருங்கள்..

நடனதேவர் விளாங்குடி ஆலத்தூர் பட்டியில் பெரிய தலைக்கட்டு ஆவுடையம்மாள் அக்கா மற்றும் அவரது தங்கை செல்லம்மாளை மணமுடித்துத் தலா ஆறு பிள்ளைகள் பெற்ற மகராசன்.

ஆசைக்கு மூன்று பெண் ஆஸ்திக்கு மூன்று ஆண் என்ற நிலையில் ஒன்பது பேரப்பிள்ளைகள்.... மகள்கள் இருவரையும் மதுரையில் மண முடிக்க அறிவழகி மட்டும் அதே ஊரில் உள்ள தனது மச்சுனனுக்குப் பெண் கொடுத்தார் அவரும் அதே செல்வாக்கை உடையவர் தான்.

நடனதேவர் என்றால் மரியாதை கலந்த பயம் உண்டு ஆனால் அவரையும் அல்லாட வைக்கும் இரு ஜீவன்கள் உண்டு அது சோமதேவன் இன்னொன்று சடையப்பன் தாய் மாமனை கொண்டு பிறந்ததால் என்னவோ சோமதேவனைக் கொண்டே இருந்தான் அதிலே நடன தேவருக்கு ஏக போகக் கடுப்பு.

பிறந்தகம் புகுந்தகம் செய்த களேபரத்தில் இடமற்று நின்றது என்னவோ அறிவழகி தான் இரு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தனியே முடியாமல் தடுமாற அவரது தந்தை வந்து அழைத்துக் கொண்டார் அன்று புகுந்த தஞ்சம் இன்று வரையில் அந்த நன்றிக்காக மாடாக உழைக்கிறார் அறிவழகி.

ஆம் சொந்த தாய் மாமன் தான் சோமதேவன் அதாவது ஆவுடையம்மாள் செல்லம்மாளுக்குத் தம்பி பொதுவாக இவர்கள் வெளியில் பெண் எடுத்துப் பெண் கொடுப்பது அரிது அவர்கள் சமூகத்தில் அப்படியே எடுத்தாலும் சுற்றி சுற்றி அவர்களும் உறவுகளாகத் தான் இருப்பார்கள்.

***

இவர்கள் வருவதற்குள் பூஜை தொடங்கி இருக்க வழமை போல் ஓர் புறமாக ஒதுங்கி நின்றாள் அறிவழகி தாயை கொண்டு பிள்ளைகளும் அவளுடன் நின்று கொண்டனர்.

அனைவரும் அவர்களை ஒரு பார்வை பார்த்து திரும்பி கொண்டனர் அவர்கள் செய்கையில் மலர் பல்லை கடித்துக் கொண்டு நின்றாள் என்றால் நங்கை ஓர் கூர் பார்வையுடன் நின்றாள்.

பூஜை முடிய அனைவரும் திருநீர் எடுத்துக்கொண்டு சற்று நேரம் அமர அறிவழகி அடுத்த வேலைக்கு ஆயுத்தமாகி செல்ல பார்க்க சற்று உறக்கவே கத்தி பேசினாள் உவகைமலர் ஏனோ இன்று பொறுமை என்பது மருந்துக்கும் இல்லாமல் போனது பெண்ணுக்கு.

அனைவரும் வந்து காற்றாட அமர அறிவழகி பந்திக்கு வேலை செய்ய முந்தி கொண்டு போக அத்தனை கோபம் வந்தது பெண்ணுக்கு அம்மா!..... அவள் போட்ட கூச்சலில் தூக்கி வாரி போட திரும்பினாள் அறிவழகி.

வேகமாக அவரிடம் நெருங்கியவள் அவரது கையில் உள்ள வாலியை பிடுங்கி பக்கத்தில் டொங்கென வைக்கப் புருவம் சுருக்கியது பெண்கள் கூட்டம்.

“எத்தினி தரம் சொல்லுறது வேலை செய்யதானு கால்லை பார்த்தியா நீ மணல் வேற சுடுது இதுல என்னனு வேலை பார்க்க போற” மலர் பேசி கொண்டு இருக்கும் போதே பேத்தியிடம் நெருங்கிய ஆவுடையம்மாள்

“என்ன சாமி இந்தக் கத்து கத்துற மெதுவா பேசு என்ன புது பழக்கம் இது அய்யன் பாக்குறாரு பார்”

“யாரு பார்த்தா என்ன நான் என்ன தப்பா சொல்லிட்டேன்” அதற்கும் அவள் ஏகுற அதற்குள் அவளை நெருங்கினார்கள் வள்ளியும், குமாரியும்

“என்ன மலர்? என்ன?” அவர்களை பார்த்ததும் பதறியெடுத்து அறிவழகி இன்னும் நெருக்கம் கொண்டு நின்று “ஒண்ணுமில்ல அக்கா” மழுப்ப

“என்ன ஒண்ணுமில்ல காலுல சேத்து புண்ணு அழுகி போயி ரணமா இருக்கு மணல் சுடுது இதுல எப்படி வேலை பார்ப்பாங்க”

“இதானா!......” எதார்த்தமாக வள்ளி கேட்டு வைக்க

குமாரி “சேத்து புண்ணு தானே நீ சத்தம் போட்டதும் நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்” என்றவரை என்ன செய்தால் தகுமென்று மலர் முறைக்க.

அவளது பார்வையை உணராத குமாரி மேலும் “அறிவு நான் ஒரு களிம்பு தரேன் ரவைக்குப் போடு ஒரே வாரம் எல்லாம் சரியா போகும் என்ன என்றவர் இதுக்கு போயா இந்த குட்டி கத்துச்சு” வள்ளியுடன் பேசி கொண்டே செல்ல நங்கைக்குத் தொண்டை அடைத்தது.

“சரிக்கா” என்ற தாயை முறைத்தவள் நீயெல்லாம் திருந்தவே மாட்ட எத்தினி சென்மம் எடுத்தாலும் ச்சை எப்படியோ போ”என்றவளுக்குக் கோபம்,இயலாமை அழுகையை தர கோவிலுக்குப் பின்புறம் சென்று அமர்ந்து விட்டாள்.

அக்காவை சமாதானம் செய்ய முடியாமல் தாயின் நிலை தடுக்க முடிந்த மட்டும் தாய்க்கு உதிவியாக இருந்தாள் அகர நங்கை. மலர் பட பட பட்டாசு என்றால் நங்கை அமைதி கொண்ட ஆழ கால விஷம் நேரம் பார்த்து பதம் பார்த்து விடும்.

அனைவரும் இவர்களை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் ஆனால் யாரும் பேச முற்படவில்லை அது என்னவோ அறிவழகி இங்கு வந்த நாளில் இருந்து இப்போது வரை ஒரு ஒதுக்கம் இருக்கத் தான் செய்தது.

பெரியம்மா ,பெரியப்பா, மாமா, அத்தை, அத்தான் ,அத்தாச்சி, அண்ணன், தங்கை என்று கூட்டு குடும்பமாக ஒரே இடத்தில் இருந்தாலும் உறவுகளின் நிழலில் இருந்து சற்று விலகி தான் இருந்தனர் மலரும் நங்கையும்.

எத்தனை நேரம் அங்கு இருந்தாலோ “மலரு பாப்பா” தனது தாத்தா நடனதேவர் குரலில் தெளிந்தவள் கண்களை அவசரமாக துடைத்து கொண்டு எழுந்து வந்தாள் அவருடன் நடந்தவளை ஓர் நிமிடம் உற்று நோக்கியவர் “என்ன சாமி கோபம் முகமே சரியில்ல வாடி கிடக்கு”

“ஒண்ணுமில்லங்க ஐயா தாத்தா.........இருக்கிற இடத்துல இருந்ததேன் மதிப்பு” எங்கோ பார்வையை பதித்து சொல்ல

ஓர் நிமிடம் நின்றது அவரது நடை “என்ன சொல்லுத விளங்கள சாமி என்ன சங்கதி? என்ன கோபம்? என் பேத்திக்கு” புருவம் சுருக்கிய வாறே கேட்க

“ஒண்ணுமில்லை ஐயா தாத்தா நான் அம்மாக்கு ஒரு கை கொடுக்கேன்” என்றவள் நிற்காமல் சென்று விட்டாள் போகும் அவளைப் பார்த்தவாறு வந்த செல்லம்மாள்

“என்னங்க சொல்லுது பாப்பா?.. முகமே சரியில்ல”

“பேச்சும் சரியில்ல செல்லம் என்ன செய்தின்னு தெரியல”

“கொஞ்ச நாளாவே சரியில்லதேன் எதிர்த்து நிக்கா கோப படுறா நேத்து சின்ன மருமக பொண்ணு கூடச் சண்டை அவ ஒரே அழுகை “மருமக படக்குனு பேசி புடுச்சு ஐத்தனு”

“என்ன நடக்குது வூட்டுல எங்க உன் அக்காரி” வேட்டியை மடித்து கட்டி கொண்டு அந்த வயதிலும் கோபமாக அவர் கர்ஜிக்கக் கோவில் இடம்.. வருடம் ஒரே முறை குடும்பம் செய்யும் பூசை வேறு.... எங்கே சண்டை சச்சரவு ஆகி விடுமோ என்று பயந்தவர்

“இன்னக்கி வுடுக மாமா எல்லாம் வூட்டுக்கு போகட்டும் பேசிபுடலாம்... இது கோவில் இப்போ தானுங்க பூசை முடிச்சோம்”

“பொண்ணு புள்ள நொந்து குலசாமி கும்பிட்டு என்ன கிடைக்க” கோபமாக நடனதேவர் கேட்க செல்லாமல் தலை குனிந்தார்.

“வறட்டு சிறுக்கி!... பெத்தது ஒண்ணே ஒன்னு அதைப் பார்க்க நோவுது” என்று தனது வயதையும் மறந்து வசவு செல்லம்மாளுக்கு.

ஆம் அறிவழகி மட்டுமே ஒரே பெண் செல்லம்மாளுக்கு அக்காளை விடக் கெடா மீசைக்குத் தங்கையின் மேல ஆசை என்ன செய்ய அதைக் காட்ட முடியாத நிலையில் அவ்வோப்போது வசை மாரி..

“அறிவு மட்டும் தான் பேசும் சிறுசு இரண்டும் என்கூடப் பேசி ரொம்ப நாள் ஆகுது மாமா”செல்லம்மாள் சோகமாகச் சொல்ல அதிர்ந்தது போனார் தேவர்

“என்னடி சொல்லுத?...... என்கிட்ட நீ ஏன் சொல்லல”

“அப்போ புரியல போகப் போகத்தேன் என்னமோ தப்பா தோணுது மாமா”

“உன்ன!...” என்றவர் இரண்டடி நெருங்கி வர பயந்து போனார் செல்லம்மாள். அந்த வயதிலும் சுங்குடி சேலை கட்டி வைராத்தால் இழைத்து இளைய மகள் போல் நின்றவளை அடிக்க மனம் வரவில்லை போலும்.

“போயிடு கண்ணுல அம்புடதா” என்றவர் திரும்பி வேகமாக நடக்க அவரையே பார்த்துக் கொண்டு இருந்த ஆவுடையம்மாள் செல்லம்மாவிடம் விரைந்து வந்தார் "என்ன செல்லம் என்ன ஆச்சு வஞ்சு புட்டரா இம்புட்டு கோபமா போறாரு "

“இன்னக்கி நேத்தா வாங்கிக் கட்டுறேன் வுடுக்கா”

“என்னடி செய்தி”

“பிறவு சொல்லறேன் நீ மக்க மனுஷாளை பாரு மாப்பிள்ளை மாருங்க கூப்பிடு பந்தி போற்றுலாம்” என்றவரை பார்த்துக் கொண்டே நிற்க

“உன்கிட்ட சொல்லாம என்ன வூடு போயி பேசுவோம் இது நேரம் இல்லை”

“சரி” என்று முகம் தெளியாமல் பயந்து கொண்டே சென்றார் ஆவுடையாளம்மாள் குடும்பம் மட்டுமே சதம் என்று வாழும் பெண்மணி அவருக்கு உலகமே கணவனும் பிள்ளைகளும் தான்.

மனைவியிடம் மல்லு கட்ட முடியாமல் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் அமர்ந்திருந்தார் தேவர். நடக்கும் கூத்தை ஆண்கள் கூட்டத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்த ராசியப்பன் தந்தையை நோக்கி வந்து “என்னங்க ஐயா” என்றவனைப் பார்த்து ஓர் இரு நிமிடம் முழித்தவர் மீண்டும் மகளைப் பார்த்துக் கொண்டே “எதோ தப்பா இருக்கு” மொட்டையாக பேச பதறினான் மகன்

“என்னய்யா”

“தெரியலை இந்தமலரு பாப்பா கொஞ்ச நாளா சரியில்ல... எதோ மனுசுல வச்சுக்கிட்டு இருக்கு உங்க செல்லம்மா கூட கூடப் பேசுறதே இல்லையாம்”

“என்னப்பா சொல்லுறீக நேத்து கூடச் சின்னவன் பொண்டாட்டி கூட எதோ லடாய் போல”

“ஹ்ம்ம் இப்போதான் உங்க அம்மா சொன்னா முதல இதை என்னனு கவனி வூட்டுல நடக்குறது தெரியாம என்ன வேலை ஆணுக்கும் பொண்ணுக்கும்”

“சரிப்பா பேசிடலாம்”

ஹ்ம்ம்!....... ஒரே உறுமல்

“உன் தொம்பி என்ன ஆனான் நல்ல நாள் பெரிய நாள் கூட குடும்பத்தோட இருக்க மாட்டராம்மா உன் தாய் மாமன் காரன் வூட்டு ஆளுங்க கூட கொஞ்சி கிடக்குறானா”

“அப்பா அது அவன் கூட்டாளி பைய இரண்டும் ஒரே தொழில் பட்டணத்துல அதேன்”

“பெரிய தொழில் போவியா.......மாப்பிள்ளை பார்க்க குமாரி வூட்டு ஆளுங்க வராய்ங்க செய்தி சொல்லி வர சொல்லு மருமவன் முன்னாடி மண்டி போட முடியாது என்ன?”

“நேத்தே செய்தி சொல்லி புட்டேன்”

“என்ன சொன்னவ பெரியவரு”

“பதிலே இல்லங்க”

“அப்போ வா நாளை மக்க நாள் நேருல போவோம்” என்றவர் குதித்து இறங்கி பந்தி நடக்கும் இடத்துக்குப் போக அதிர்ந்த ராசியப்பன் அலறி அடித்து தனது தம்பி சிங்கமுத்துவை நோக்கி விரைந்தார்.

“டேய் முத்து”

“என்னன்னே”

“போன போடுடா சடையப்பனுக்கு”

“ஏன்?”

“ ஐயா ஊருக்கு வரேன்னு சொல்லறாருனு சொல்லு”

“அய்யயோ” என்றவன் பதறி அடித்துப் போன் போட அங்கோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் சடையப்பன் “போன் போகுது எடுக்க மாட்டேங்கறான்”

“என்னடா இவனோட ரோதனையா போச்சுக் கடைசியா பொறந்து கால வருதுடா சாமி........ புலம்பியவர் முத்து அவன் கூட்டாளிக்கு போடு”

“அவன் அதுக்கு மேல முனகி கொண்டே இரு போட்டு பாக்குறேன் என்றவன் அழைக்க முதல் ரிங்கிலே எடுத்தான் முத்து கருப்பன் சோமதேவன் தந்தை வழி உறவு

“ஹலோ! சொல்லுங்க முத்துண்ணா”

“ஐயா சாமி போன் எடுத்துட்டியா நீ நல்ல இருப்ப எங்கப்பா எங்க குலசாமி”

“ஆரு உங்க தம்பியா?” நக்கல் குரலில் கருப்பன்

அவனது நக்கலை கண்டு கொண்டவர் பல்லை கடித்து கொண்டு முத்து ஒருவிதமாக தலையை ஆட்டி போனில் ஆமா!.. ஆமா!.. அவனே தான்!..

“நேத்து நைட் செம்ம ஆட்டம் ண்ணே கொடுக்காம்பட்டி திருவிழா செமயா இருந்துச்சு அதேன் ஒரே அலுப்பு தூங்குறான்”

“அப்படிங்களா நல்ல உழைப்பு தேன் யாரு யாரு போனீங்க” அவனை விட நக்கலாக சிங்க முத்து

“நானு, சோமு மாமா, சடை”

“அடி ஆத்தி!....கொடுத்து வச்ச மவரசனுங்க இரண்டு பொம்புள புள்ள பெத்தவன் பண்ணுற காரியமா !...... நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த முனக தம்பியின் செயலை பார்த்து செய்யகையில் என்ன வென்றார் ராசி.

“சோமு, கருப்பன், சடை நைட் ஒரே கூத்தாம் ஆள் மயக்கத்துல” தனது தாய் மாமனை நினைத்து பல்லை கண்டித்தனர் அண்ணனும் தம்பியும்.

“என்ன கருமம் டா என்று தலையில் அடித்துக் கொண்ட முத்து அவனை எழுப்பித் தெளிய வச்சு நாளைக்கி ஊருக்கு அனுப்பி வச்சுப்புடுங்க இல்லனா நாளை மக்கா நாள் ஐயா அங்கன இருப்பாரு சொல்ல சொன்னாரு”

“ஏன் என்ன த்துக்காம்” படு அலட்சியமாகக் கேட்ட இளையவனைக் கறுவா என்று கருவியவர்

“தம்பி வூட்டுல பூசை அம்புட்டு சொந்தமும் இருக்குங்க பேச முடியலைங்க தம்பிய அனுப்பி வையுங்க சாமியோவ்...... புண்ணியமா போகும்” போலி பவ்வியம் காட்டி கோபம் முகம் மறைத்து கெஞ்ச

“ஐயோ! என்னண்ணே ஒரே நாள் தான் நாளை மக்க நாள் கருக்கல்லுல வூடு வந்துருவோம்”

“சரிங்க” என்றவர் வைத்து விட்டு பழைய மாடல் தொலை பேசி அப்போது ட்ரெண்ட் உள்ள நோக்கியா போனை தம்பியாக எண்ணி முறைத்து முறைத்து பார்த்தார்

“என்னடா போனை முறைச்சு கிட்டு”

“இதையாவது முறைக்க முடியும் அவனுங்கள முடியாதுல அதேன் அந்தக் கருவா பைய என்ன நக்கலா கேள்வி கேக்கான் இந்த மனுஷன் இளந்தாரி பயலுக கூடக் கூட்டு சேர்ந்து ஒரே கொட்டம் லந்து கொடுக்குறானுக அண்ணே”

“என்ன பண்ண சொல்லுற வர வர சின்னவனுக்கு சண்டித்தனம் கூடி போகுது அவனை விட சோமு பண்ணுது” கவலையாக ராசியப்பன் என்னதான் அவரும் முரட்டு ஆண் என்றாலும் ஓர் அளவு கோல் இருந்தது அதுவும் குடும்பம், பெண் பிள்ளை என்றதும் அனைத்தும் விட்டுவிட்டார் ஆனால் தம்பி?

“எனக்கு ஒன்னும் சரியாப்படல” என இருவரும் தனது தம்பியை எண்ணி புலம்பி புலம்பி தவித்தனர்.

ஒருவழியாகப் பூசை முடிந்து அனைத்தையும் கழுவி எடுத்து வேனில் ஏற்றி ஒவ்வொருவராகக் கிளம்பும் வரையில் அறிவழகி குடும்பம் ஓய்வற்று ஒரே வேலை தான். அவ்வீட்டு பெண்களும் வேலை செய்தார்கள் தான் ஆனால் ஒரு அளவிற்குச் செய்து நேரத்துக்கு உண்டு அவர்களைத் தளர்த்திக் கொண்டனர் ஆனால் இவர்கள்.

தாயை விட்டால் இன்னும் செய்து கொண்டே இருப்பார் என்று மகள்கள் இருவரும் அவரை அமர்த்தி உணவு கொடுத்து அவர்களும் உண்டு மீண்டும் வேலை செய்தனர்.

ஒருவராக எல்லாரும் கிளம்ப இரு அம்பாசிடர் கார்கள் மட்டுமே நிற்க பேரப் பிள்ளைகள் பாட்டி தாத்தாவும் இரு தாய் மாமனுகளும் நின்றனர்.

முத்து ஒரு காரில் இவர்களை ஆறு கணக்கில் ஏற்றிக் கொண்டு புறப்பட

மீதி மூன்றும் மற்றும் நடனதேவர் இரு ஆத்தாக்கள் ராசியப்பன் இடம் பார்த்து அமர வைத்துவிட்டு திரும்ப எஞ்சி நின்றது அறிவழகி குடும்பம்

“நங்கை வா இடமிருக்கு அடுத்து வந்து அக்காவையும் அம்மாவையும் கூட்டிக்கலாம்” என்க ஆவேசமாக மலர் பேசவர அவளது கைபிடித்துத் தடுத்த நங்கை சிறு புன்னகை ஏந்தி பொறுமையாகப் பதில் சொன்னாள்..

“நீங்க உங்க குடும்பத்தைக் கூட்டிட்டு போக மாமா நான் அம்மா அக்கா கூடப் பஸ்ல கூட வந்துருவேன் அவுகள தனியா விட்டுட்டு வர முடியாது என்னதான் தெரிஞ்ச ஊரா இருந்தாலும் இரண்டும் பொம்பளைங்க” என்றதும் ராசியப்பன் அதிர இறங்கி வந்து விட்டார் நடனதேவர்.

“ஏய்!..... ராசி காரை எடு அவுகள விட்டுப்போட்டு வெரசா வா” என்றவர் தனது பெண்ணிடம் வந்து நின்று கொண்டார் ஆவுடையம்மாளும் செல்லம்மாளும் பதறியெடுத்து இறங்க பார்க்க அதற்கும் கர்ஜித்தார்.

இரண்டு சிறுக்கியும் இறங்குநீக வக்காளி கால வெட்டி புடுவேன் என்றவர் கதவோறொம் இறங்க பார்த்த செல்லம்மாளை ஒரே தள்ளாக உள்ளே தள்ளி எடுறா வண்டிய என்று உறும கார் சீறிப் பாய்ந்தது.

தந்தையின் கோபத்தில் கண்ணீர் வர பயந்து பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டார் அறிவழகி.மலர் வாய் தான் என்றாலும் தாத்தன் என்றால் பயம் அதுவும் கெடா மீசை ஆடுதசை ஆட முறுக்கி கொண்டு நிற்க ஹ்ம்ம் கால் கை எல்லாம் நடமாடியது.

சின்னது தான் யாரும் அறியா வண்ணம் கள்ள புன்னகையோடு நின்றது பிள்ளையார் சுழி போட்டு ஆட்டத்தை தொடங்கிய கர்வம் போலும்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Saroja

Well-Known Member
அப்பாவி அறிவு பிறந்த வீட்டில்
வேலைக்காரியா
ஏன் ரெண்டு அம்மாவுக்கு
புரியல
அப்பாவுக்கு தெரியல
நங்கை சரியா பேசிப்புட்டா
 
dhanuja senthilkumar

Well-Known Member
அப்பாவி அறிவு பிறந்த வீட்டில்
வேலைக்காரியா
ஏன் ரெண்டு அம்மாவுக்கு
புரியல
அப்பாவுக்கு தெரியல
நங்கை சரியா பேசிப்புட்டா
Correctu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top