E2 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
கண்ணன்:
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்

சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை

என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது
 

Manga

Well-Known Member
:)வருத்தமான எபி..
கண்ணனும் வருந்துகிறானே..
அபியை பார்ககும் முன்பே..இவ்வளவுன்னா...பாவம்..
நவீன கண்ணகியை எப்படிப்பா ..சமாளிக்கப்போற..
எப்படியும்...மல்லி ஊருக்கு அனுப்பி..கும்ம வைக்கப் போறங்க..வா..ராசா..வந்து பாரு.
Kolai pannitu varutha patta ennaka use. Sundari kalil saastangama viluntha great escape than,setharam kuraiyum.
 

aravin22

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
 
Last edited:

Ansadoss

Well-Known Member
சின்ன கண்ணனும் பெரிய கண்ணனும் சந்திக்க போகும் வேளையை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றோம் மல்லி.

சுந்தரி என்கிற பெயர் பிடிக்கவில்லையா ஹீரோவுக்கு? ஒருவேளை 'சொப்பன சுந்தரின்னு' வச்சிருந்தா பிடிச்சிருக்குமோ?:oops: வா ராசா வா 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடின்னு' அவ பின்னாடியே அலையப்போற பாரு;)
 

Adhirith

Well-Known Member

(ஹி....ஹி.... உங்கள் முன்னுரையின்
தொடர்ச்சி.....கூட ஒரு இருக்கலாம்....
நமது முன்னோர்களாகவும் இருக்கலாம்)

மனம்ஒரு குரங்கு...
மனித மனம் ஒரு குரங்கு...
தாவு,தப்பித்து ஓடு....ஆனால்....
உன்னில் இருக்கும்
என்னை தொலைத்து விடாதே.....
நான்,நானாக இருக்க விடு....
சரியா மல்லி.....?????


கண்ணுக்கெட்டிய தூரம் வரை
'R' factor ஏ கண்ணில் படவில்லை....
ரொம்ப dry subject ஆ,மல்லி.....:D
Poor,poor guys......:p:D


எபி3 க்காக காத்திருக்கிறேன்.....
 

Adhirith

Well-Known Member
hi friend MM

உங்கள் முன்னுரை மிக அருமை
கட + வுள் =கடவுள் உனக்குள் என்பதை மிக தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கீங்க


அப்படி போடு அருவாளை தான் ஆடாவிடடாலும் தன் சதை ஆடும் இருக்கில்ல ரத்த பாசம் என்னும் ரத்த நீர் உடம்பில் ஓடும் ஒவ்வொரு மனிதனும் அதில் நீந்தாமல் இருப்பதை தவிர்க்க முடியாதது

சீமை கருவேலமரம் சுந்தரிக்கு தெரிஞ்சு இருக்கும் வயக்காட்டுல வேலை செய்யறவளாச்சே அதைவெட்டுவது கடினம் என்று பார்ப்போம்

சீமை கருவேலம் கடின தன்மையுடையதுதான்....

அதனால்,தனக்கு எந்த பயனும் இல்லை என்ற
கருத்தில் கூறியிருப்பாளோ.......:oops:
 

Adhirith

Well-Known Member
சின்ன கண்ணனும் பெரிய கண்ணனும் சந்திக்க போகும் வேளையை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றோம் மல்லி.

சுந்தரி என்கிற பெயர் பிடிக்கவில்லையா ஹீரோவுக்கு? ஒருவேளை 'சொப்பன சுந்தரின்னு' வச்சிருந்தா பிடிச்சிருக்குமோ?:oops: வா ராசா வா 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடின்னு' அவ பின்னாடியே அலையப்போற பாரு;)

'சிம்ம சொப்பன சுந்தரி'....
கடிச்சு குதறிடப் போறா....
தமிழ் கெட்ட வார்த்தைகளுக்கு...
அணுகவும்.....சங்கீத வர்ஷினி....
:p:p:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top