P11 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்து இருந்து அரவிந்தனுக்கு போர் அடித்து விட்டது.
“நான் வெளியப் போகப்போறேன். எதாவது வாங்கனுமா?” என்றான்.
“காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும் திலோத்தமாவும் போய் வாங்கிட்டு வர்றீங்களா?” காமாட்சி சொல்ல...
பாவனாவை விட்டு இவர்கள் இருவரும் சென்று மீண்டும் பிரச்சனை வரவா... “நான் பாவனாவோட இருக்கேன்.” என்றாள் திலோத்தமா.
“அவ இருக்கட்டும், நீங்க வாங்க மா, நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்.” என்ற மகனுடன் காமாட்சி கடைக்கு கிளம்பினார்.
திரும்ப வரும் வழியில் காமாட்சி புலம்பிக் கொண்டே வர, “அம்மா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கோங்க. திலோத்தமா பாவனாவை நல்லா பார்த்திக்கனும்ன்னு நினைக்கிறா... அதை பார்த்து நாம சந்தோஷம் தான் படனும். பாவனாவுக்கு உடம்பு சரி இல்லை. அதனால இப்ப கொஞ்சம் டென்ஷன்னா இருக்கா... இல்லைனா என்கிட்டயும் நல்லத்தான் இருப்பா... நீங்க ஏன் சும்மா அதை நினைச்சே டென்ஷன் ஆகிறீங்க.”


************************************************************************************************************************

“நேத்து ஏன் டா மம்மியை அப்படி சொன்னீங்க. நீ அவங்களோட ப்ரண்ட் தானே..அவங்க உன்கிட்ட சொல்லிட்டு தானே இந்த வீட்டுக்கு வந்தாங்க. நீ கூட ஹப்பியா தான் இருந்த. அப்ப ஏன் நேத்து அப்படி பண்ண?”
“அது வித்யா அத்தை சொன்னாங்க, நீங்க திலோ மம்மியோட சேர்ந்திட்டு என்னை மாமா வீட்லயே விட்டுடுவீங்களாம். அப்படியா அப்பா? நீங்க என்னை விட்டுடுவீங்களா?” பாவனா கண்களில் உயிரை தேக்கி அவனைப் பார்க்க, அரவிந்தனுக்கு நெஞ்செல்லாம் ரணமாக வலித்தது.
தான் வார்த்தையால் என்ன சமாதானம் சொன்னாலும், பாவனாவின் மனதில் விழுந்த சந்தேகம் போகவே போகாது என அவனுக்கு தெரியும். அவள் நாளடைவில் தங்களை புரிந்து கொண்டால் தான் உண்டு என நினைத்தவன், “வித்யா அத்தைக்கு திலோ மம்மி பத்தி தெரியாது. அதனால் உன்கிட்ட அப்படி சொல்லி இருப்பா..”
“உன்னைப் பார்த்து ஒருத்தர் கெட்ட பொண்ணு சொன்னா, நீ கெட்ட பொண்ணு ஆகிடுவியா?” அரவிந்தன் கேட்க, பாவனா இல்லை என்றாள்.


***********************************************************************************************************************

“அவ ஒன்னும் சின்ன கிளாஸ் படிக்கலை, சும்மா சும்மா லீவ் போட. அப்புறம் பாடம் எப்படி புரியும்?”
“நீங்க அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. நான் அவளுக்கு சொல்லிக் கொடுத்துப்பேன்.”
“ஓ... மேடம், காலேஜ் லக்சுரர் இல்லை மறந்திட்டேன்.” என்றவன் குப்புற படுத்துக்கொள்ள... சிறிது நேரத்தில் பாவனாவும் உறங்கி விட்டாள்.
அவள் உறங்கியதும், “அரவிந்த், நீங்க பாவனாகிட்ட என்ன பேசினீங்க?” திலோத்தமா கேட்க,
“நாங்க ஆயிரம் பேசிப்போம். அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.” என்றான்.
என்ன டா இவன், இன்னைக்கு எக்குதப்பாக பேசி வைக்கிறான் என நினைத்தவள், எழுந்து உட்கார்ந்து அவனைப் பார்க்க.... அவள் பார்ப்பது தெரிந்து, அரவிந்தனும் தலையை தூக்கி பார்த்தான். அவன் முகத்தில் கோபம் இல்லை. மாறாக சிரித்துக் கொண்டு தான் இருந்தான். திலோத்தமா மீண்டும் படுத்தக் கொண்டாள்.
 

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

அம்மாவையும் பொண்ணையும் off பண்ணியாச்சு......

Leave போட்டுட்டு எங்க போறாங்க?????
ரம்யா ஹனிமூன் அனுப்புறீங்களா?????
இப்போ அந்த காட்டுக்கு கூட்டிட்டு போனால் பாவனா ரொம்ப enjoy பண்ணுவாளே.......:p

Dr முகம் bright ஆ இருக்குதே......
திலோ ஸ்பார்க் அடிக்கிறாளா??????

ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தமா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் கலைபவன் நானம்மா.......
 
Last edited:

தரணி

Well-Known Member
இந்த சொல்லிட்டாலே குழந்தை....வித்யா உனக்கு அண்ணன் உறவு வேணும் அப்படினு நினச்சா இனிமே கொஞ்சம் கவனமா இரு.....நல்லது பண்ணுறேன்னு நினச்சு பிரச்சனை பண்ணாதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top