Neengaatha Reengaaram 11 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாழ்க்கை-ங்கிறது,
ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு மாதிரி இருக்கும்

மருதுவின் நிலையில் இவள்
இருந்திருந்தால் ஜெர்மனிக்காரன்
கூப்பிட்டு வேலை கொடுக்குமளவுக்கு
ஜதி அம்மிணியால் படித்திருக்க
முடியுமா, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
படிக்காதவன்-லாம் கல்யாணமே
செய்யக்கூடாது-ன்னு இருந்தால்
நம்ம நாட்டில் அரசியல்வாதிகளுக்கு
மனைவி, துணைவி, தொடுப்பு-ன்னு
ஏகப்பட்ட சொந்தங்கள் பிள்ளைகள்
இதெல்லாம் கிடைத்திருக்குமா?
 

banumathi jayaraman

Well-Known Member
அரசியல்வாதிகள் யாருக்குமே
கல்யாணம்-ன்னு ஒண்ணு
ஆகியேயிருக்காதே?

அரசியலுக்கு வரும் முன்னால்
தாதாவாக இருந்தவர்களுக்கும்
யாரும் பெண் கொடுத்திருக்க
மாட்டார்களே?
 

malar02

Well-Known Member
பணம் தான் பிரதானமாக போய்விட்டது.....நவீன யுகத்தில்..
மனதை கனக்க செய்த பதிவு....
அவனது அநாதாரவான நிலை படித்து...


நன்றிக்கான கல்யாணமாக நினைத்த
ஜெ குடும்பத்தினர்.....
அந்த நன்றியை கல்யாணம் செய்து வைத்த உடன்
கடன் தீர்ந்தது என்று நினைத்து விட்டனர் போல...
புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு தனிமை தேவை தான்..
அதற்காக , எல்லாவற்றையும் இருவருமே செய்து
கொள்ளும் படியான நிலைமையில் விட்டது கொடுமையிலும்
கொடுமை.....
அவனை நினைக்க வேண்டாம் தன் பெண்ணை நினைக்கலாமே ............
அவன் தனி ஆள் என்று தெரியும் அவனுக்கானவங்க எல்லோரும் போயிட்டாங்கனு தெரியும்
கடன் கழிந்து விட்டதா ...............
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னோட மூளையை கொஞ்சம்
ஏரியல் இல்லாட்டி சர்ப் எக்ஸ்செல்லில்
அலசி ஆராய்ஞ்சு பாரு, ஜெயந்தி டியர்

சோற்றுக்கே வழியில்லாத பொழுது
மருது அவனால் எப்படி பத்தாவதும்
பன்னெண்டாவதும் படிக்க முடியும்,
ஜதிப்பெண்ணே?
 

banumathi jayaraman

Well-Known Member
மருது படிக்காவிட்டால் என்ன?
மருதாச்சல மூர்த்தி கடல் கடந்து
வாணிபம் செய்தால் என்ன?
குற்றுயிரும் கொலையுயிருமாய்
இருந்த, சாகக் கிடந்த விமலனின்
உயிரை படித்த இவர்களால்
திரும்பக் கொண்டு வர முடிந்ததா?
அதுக்கு படிக்காத மருதுவின்
தயவுதானே வேண்டியிருந்தது
 

banumathi jayaraman

Well-Known Member
மருது இல்லாவிட்டால் போலீஸ்
ஸ்டேஷனில் அம்மாவையும்
பெண்ணையும் என்னவெல்லாம்
பாடுபடுத்தியிருப்பார்களோ?
இதையெல்லாம் மருதுவின், ஜதி
நினைத்துப் பார்க்க வேண்டும்,
மல்லிகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top