Iratturamozhithal - 21

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#1
மக்களே....

கதை இறுதிக்கட்டத்தினை எட்டிவிட்டோம் .. படித்து பிடித்தால்..... லைக், கமெண்ட்...

இல்லேன்னாலும்.... இன்பாக்ஸ்-க்கு வந்து திட்டி போவீங்களாம்..
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#3
IM 21

பாதி திறந்தும் திறவாமல் இருந்த அந்த வீட்டின் இரும்புக்கதவினை, மெதுவாய் திறந்தான் SNP . சற்றே மரங்கள் அடர்ந்த, பணக்காரர்கள் வசிக்கும் சென்னையின் பிரபலமான இடம், ஜன சந்தடியில்லா இடமும் கூட. சரியாய் .. கூகிள் வரைபடம் காட்டிய இடமும் அதுதான்.. நாலைந்து காலடித்தடங்கள், நடுவே எதையோ/யாரையோ இழுத்து சென்ற தடயம், கார் நிறுத்துமிடத்தில் இருந்து ஆரம்பித்து, வீட்டின் கதவு வரை இருந்தது..

உள்ளிருந்து சன்னமாய் முனகல் சத்தம் மிக மெல்லியதாக கேட்டது. கையில் வைத்திருந்த செல்போன் இன்னமும் டவர் காண்பிக்கவில்லை. வீட்டினுள் செல்வதா? வேண்டாமா?, என மனம் ஊசலாட..., அப்பெண்ணின் தீனமான குரல் மீண்டும் கேட்க, உட்செல்வதென நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவெடுத்தான்.. அடிதடிக்கு தயாராய் வரவில்லைதான், ஆனாலும் விஷயம் தெரிந்து ஒரு பெண்ணை... அது யாராயிருந்தாலும், விடமுடியாது ..இங்கே ஊசலாடுவது ஒரு பெண், அவளது மானம் அல்லவா?

மெல்ல அடிமேல் அடிஎடுத்து வைத்து கதவின் அருகில் நின்றான், பூட்டி இருக்கிறதா என பார்க்க, SNP எதிர்பாராவிதமாய் கதவு கைப்பிடியை திருகியதும் திறந்தது. சற்றே எச்சரிக்கையாய் திறந்து இரண்டு அடி எடுத்து வைக்க,

...ஷ்க் ...

வலதுபுறத்தில் இருந்து.. வேகமாய் எதோ தாக்க வர, கிட்டே வருகையில் அது ஒரு மனிதனின் கை, என அறிந்து, நொடியில் வலக்கையால் அக்கையை பிடித்து முறுக்கினான், அதன் சொந்தக்காரன், வலியில் முனகினான், காரணம், SNP அம்மனிதனின் கையை திருப்பி, முதுகு பக்கமாய் வளைத்து, சுவற்றில் அவன் முகத்தினை முட்டி இருந்தான்.. மின்னல் வேகத்தில் நடந்த இச்செயலில், குபுக் கென வாயில் இருந்து வந்த ரத்தம் அடியாளின் சட்டையை நனைத்தது.

மீண்டும் SNP -யை அவன் தாக்க வர, இம்முறை அதிக கஷ்டமில்லாமல், அடியாள் வயிற்றிலும், முகத்திலும், மாறி மாறி, குத்துவிட, அவன்.. கத்தக் கூட த்ராணியின்றி கீழே விழுந்தான்.

அவனை தாக்கும் போதே, பக்கவாட்டில் இருந்து "ஸ்ஸ்", காற்றை கிழித்து கத்தி வர, சட்டெனெ பின்புறம் குனிந்தவன், காலால்.. கத்தி வைத்திருப்பவன் கால்களை முழு பலத்துடன் உதைக்க.. "க்ம்ம்மா .", உடைந்த கால்களை கையில் பிடித்து அந்த அடியாளும் சரிய, SNP..., வேறு யாரும் உள்ளனரா என சுற்றும் முற்றும் பார்த்து, அருகே மயங்கி இருந்தவனின் கையில் இருந்த கத்தியை அகற்றினான்.

அடிபட்டவனுக்கு மூச்சு இருக்கிறதா என பார்த்து, நிமிர...

..ஹக்...

நடு மண்டையில் சுரீர் என்று ஒரு வலி.. கதவின் பின் ஒருவன் ஒளிந்திருந்து வந்து தாக்கியதே காரணம். அவன் கையிலிருந்த கட்டையில், தன் ரத்தத்தினை பார்த்த பின்புதான் SNP -க்கு உரைத்தது., யாரிடமும் தகவல் கூறாமல் வந்தோம் என்பது. மீண்டு தாக்க எத்தனிக்க, ஷ்ஷ்ஷ்... எதையோ, ஸ்பிரே செய்வதை உணர்ந்து தவிர்க்க இயலாமல், மெது மெதுவாய் மூர்ச்சையானான் SNP.

++++++++++++

பரிதி அவன் அலுவலக அறையில், மிக தீவிரமாய், போதை பொருட்கள் கடத்தும் கும்பலை குறித்த அவன் அறிந்த தகவல்களை, அட்டவணை படுத்திக்கொண்டு இருந்தான். தொலைபேசி அலற, ஒரு ரிங்-கிலேயே பரிதியின் கீழ் வேலை செய்யும் மற்றோரு காவல் அதிகாரியால் எடுக்கப்பட்டது.. காரணம், எக்காரணம் கொண்டும் இளம்பரிதி-யை தொந்தரவு செய்யவேண்டாம், என்று அவன் கூறியிருந்தான்.

"ம்ம்.. எப்படி இத்தனை கிலோவ, இன்னொரு நாட்டுக்கு ரொம்ப சுலபமா கடத்தறாங்க.. ஏன் , சில நாடுகள்-ல இருக்கிறா மாதிரி, போதைப்பொருட்கள் கடத்தலுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது?", என பலவாறாய் சிந்தனை..

"சார்", சிந்தனைக்கு கடிவாளமிட்டது, காவலரின் குரல்..

"ம்ப் ச் , நான்தான் தொந்தரவு பண்ணாதீங்க-ன்னு.. ", கேஸ் குறித்த தொடர்பும், அதன் வலைப்பின்னலும், மீண்டும் மனதில் தொகுப்பாய் வர வெகு நேரமெடுக்கும் என்பதை உணர்ந்தவனாய்..

"சார். சார்...., இது ரொம்ப அர்ஜென்ட், நம்ம ஸ்டேஷன் கான்ஸ்டபிள் தான் சார் லைன்-ல இருக்கார்", அவர் சொல்லி முடிக்கும்முன் போனை கையில் வாங்கி இருந்தான், இளம்பரிதி, அக்காவலர்கள்களை, மனோகரனை கண்காணிக்கவென அனுப்பியது இவனாயிற்றே?

"சொல்லுங்க... என்னாச்சு ?"

"சார், மனோகரன் வீட்டல ஆளுங்க இருக்காங்க.. ஆனா, அவனை காணோம், பழைய வேலைகாரங்க யாருமே இல்ல... கிட்டத்தட்ட மொத்தமா ஆளுங்க மாறினா மாதிரி இருக்கு.. "

"ஒரே நைட்-ல எப்படியா காணாம போவாங்க?"

"சார், அதான் தெரில சார், நைட் இங்கதான் இருந்தேன். சந்தடியே பண்ணாம போய்ட்டாங்க.. "

"அவன் கார்.-ல்லாம் ..?"

"எதுவுமே வீட்ல/ஷெட் ல இல்ல சார்"

"யோவ் .. என்னய்யா பண்றீங்க..? கண்ணுக்கு முன்னால காணாம போயிருக்கான்...?, வைய்யா போனை... ", சிறிது கடுப்புடன், போனை வைத்தான். ம்ம்ம்.. டோட்டலா காலி பண்ணிட்டு எங்க போவான்? குழந்தை என்னாச்சு? அவன் இந்த கேஸ் விஷயத்தை சாதாரணமா விட்ற ஆளில்லையே?.. பலவாறாய் சிந்தனை மனதுக்குள்..

சட்டென.. தொலைபேசியை எடுத்து, சரண்யுசாயா வை அழைத்தான். "அத்தை"

"சொல்லுங்க தம்பி...", இளம்பரிதியை இயல்பாய் பேர் சொல்லி அழைக்க வரவில்லை சரண் க்கு.. அதனால், தம்பி என்ற விளிப்பு.

"சாயங்காலம் வீட்டுக்கு தியா வரணும்-ன்னு சொல்லிட்டு இருந்தா, அதான் நீங்க இருப்பீங்களா , இல்ல , வெளிய எங்கயாவது போறீங்களா? - ன்னு தெரிஞ்சிக்கலாம்னு போன் பண்ணினேன்."

"வீட்லதான் இருப்பேன், வரச்சொல்லுங்க..", என்றவள்... "தம்பி....?", என்று நிறுத்தினாள் .

"ஆங்.. லைன்ல தான் இருக்கேன். சொல்லுங்க ?"

"ஏதாவது பிரச்சனையா?, குரலே சரியில்ல ?", வக்கீல் அல்லவா ?, சரியாய் கணித்திருந்தாள்.

"அதெலாம் ஒண்ணுமில்ல, வேலை டென்ஷன்... அப்பறம் பேசறேன்.., வெளிய போறதா இருந்தா, கால் பண்ணிட்டு போங்க , வைக்கறேன்."

இதேபோல், தியா-விற்கும் அழைத்து, SNP வீட்டில் இருக்க சொன்னான். பாஸ்கரிடம், கல்பா-வை வீட்டில், முடிந்தால் அவர்களின்(SNP ) வீட்டுக்கு அம்மாவுடன் வந்து இருக்குமாறு பணிக்கச் செய்தான், அவனுக்கு மட்டும் மனோகரன் கண்காணிப்பில் இருந்து மாயமான விஷயத்தை கோடி காட்டினான்.

SNP யின் அலைபேசி, நாட் ரீச்சபிளாகவே இருந்தது. பதட்டம் மெதுவே ஏற ஆரம்பித்தது. அரைமணி நேரத்தில், பாஸ்கர், பரிதியை தேடி அலுவலகதிற்கே வந்தான். கவலையோடு, "அப்பா?",என..

"பாக்கலாம், உக்காரு ", என்று அவனை ஆசுவாசப் படுத்தினான்.

கடைசியாய், அலைபேசி, எந்த பகுதியில் செயலாற்றியது?, என தகவல் தருமாறு, காவலர்களிடம் கேட்டான். "அவர் என்ன கார் எடுத்திட்டு போனாரு?"

"ஜாகுவார் "

"நம்பர் சொல்லு", என்க .. பாஸ்கர் சொன்னான்.

அதை அனைத்து டிராபிக் கண்ட்ரோல் -க்கும் அனுப்பி, தகவல் கிடைத்தால் உடனே தொடர்பு கொள்ளுமாறு ஆணையிட்டான், பரிதி. சுவர் முழுவதுமாய் இருந்த பெரிய திரையில், சென்னையின் போக்குவரத்து புள்ளிகளாய் தெரிய .. அதில், SNP யின் ஜாகுவாரை தேட தலைப்பட்டனர் இருவரும்..

அங்கே, சென்னையின் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதியில், முன்னும் பின்னும் லாரிகள் அணிவகுத்து இருக்க, SNP யின் ஜாகுவார் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.... ஆம், SNP எனும் சூர்யநாராயண பிரகாஷ், தி கிரேட், கடத்தப் பட்டு இருந்தான்.

++++++++++++++++++++

"அப்பாடா.. ஒரு வழியா முழிச்சிட்டியா?", குரல் பரிச்சயமில்லை, ஆனால்... அக்குரலில் வெறுப்பும், கோபமும் மண்டிக் கிடந்தது. SNP யோசித்தவாறே... கண்களை முயன்று திறந்தான், இமைகள் பாறாங்கற்களை வைத்தைப்போல் பாரமாய் இருந்தன . கைகள், இருக்கையுடன் கட்டப்பட்டிருந்தது. இடம் எதோ ஒரு பழைய வீடு. சற்று வெளிச்சம் வராத இருளான வீடு; எதிரே, ஒரு தொலைக்காட்சி இருந்தது. அருகிலேயே, அவனது அலைபேசியும், இன்ன பிற பொருட்களும் இருந்தன. குரல் வந்த திசையில் தலையை கஷ்டப்பட்டு திருப்பினான், SNP. தலை இன்னமும் விண் விண்னென்று வலித்தது.

அங்கே நின்றவன்... மனோகரன். சரண்யு வழக்கு போட்டதினால், ஊர் உலகம் மனோகரனை இழிவாய் பார்க்க/பேச.. இவன் மனைவி, அப்பழிச் சொற்களை தாங்க முடியாமல், தற்கொலை செய்துகொண்டாள். அன்றிலிருந்து, சரண் & SNP வாழ்க்கையை, அவர்களின் நிம்மதியை குலைப்பது என்பதை குறிக்கோளாய் வைத்துள்ளான்.

கேள்வியாய் மனோகரனை பார்த்திருந்தான் "இவன் எதுக்கு என்ன கடத்திட்டு வந்தான்?", மனதுக்குள் சிந்தனை ஆயிரமாயிரம் இருந்தும், எதையும் வெளிப்படுத்தாத முகம் SNP -யுடையது. இப்பொழுதும் அப்படியே. சின்ன புருவ சுருக்கத்தை தவிர வேறு மாற்றமில்லை...

இவனை நோக்கிய மனோகரன், "ஒரு சின்..ன படம் போடறேன். இப்போதான் எடிட் பண்ணி வந்துச்சு..பிச்சர் தெளிவா இருக்கா-ன்னு பாத்து சொல்லு"., என்று வன்மமாய்.. கிண்டலுடன் சொல்லி, தொலைக்காட்சியை உயிர்பித்தான்.

அடுத்த பத்து நிமிடங்கள் ஓடிய காட்சிகளை கண்ட SNP -க்கு, அப்படியே பூமி தன்னை விழுங்கிவிடாதா என்று தோன்றியது. உடல் முழுவதும் புழுக்கள் ஊர்வது போன்றதொரு உணர்வு.. மூளை வேலை நிறுத்தம் செய்தது. எந்த ஒரு உணர்வும் அடுத்தவனின் பார்வைக்கு காட்டாத SNP யின் முகம்.... வேதனை, அசூயை, மற்றும் ஒரு என்னவென்று சொல்ல இயலாத உணர்வினை வெளிப்படுத்தியது..

தோற்றுப் போன உணர்ச்சியின் உச்சக்கட்ட வெளிப்பாடாய், கண்கள் மூடி இருக்க... ""மனோகர்.. இதுக்கு நீ என்ன கொன்னுருக்கலாம்....", SNP வாயிலிருந்து வார்த்தைகள் தானாய் வந்தது.
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#4
அமர்ந்திருந்த மனோகரன், சட்டென எழுந்து, SNP அருகே வந்து, உறுத்து விழித்து , "ஹ ...? அது நான் ஏன் பண்ணனும்?, நீயே பண்ணிப்ப...,ஊரு உலகம் உன்னை பாத்து காறி துப்பும்.. அத பாத்து உன் பொண்டாட்டி காலம் பூரா அழனும் , நான் என் பொண்டாட்டிய விட்டுட்டு தவிக்கிற மாதிரி, ஏன் புள்ளை கஷ்டப்படறா மாதிரி... உன் குடும்பம் புழுங்கி புழுங்கி சாகனும்..", வெறுப்பு எனும் பெரு நெருப்பு அனலாய் வெளிப்பட... கர்ஜித்தான் மனோகரன், என்னும் பணத்திற்கு அடிமையான... மீன் விற்ற வியாபாரி..

SNP மனக்கண்முன் சரண்.. சரண்.. சரண் .. மட்டுமே.... "இவன் இவ்வளவு கீழ போவான்-ன்னு கனவுல கூட யோசிக்கலையே ? சே.. என்ன பிறவி இவன்?, சரண்.. நீ தைரியமா இவனை face பண்ணனும்.., நானே இல்லேன்னாலும்.. நீ உடைஞ்சுபோக கூடாது " , மனம் ஆத்மார்த்தமாய் யாசித்தது

இறுக்கி மூடியிருந்த கண்களை திறக்கவே நரேனுக்கு கூசியது, எதிரே இருந்த திரையை பார்க்கப் பார்க்க, மனதுள் ஒரு வெறி.. உட்கார்ந்த நிலையிலேயே, சற்று குனிந்து, இருக்கையுடனே எழுந்து மனோகரனை பலம் கொண்ட வரை தள்ளிவிட்டான். இதை எதிர்பாராத மனோகரன், பிடிமானமின்றி விழுந்தான். சற்றே பலமான அடி.

மனோகரை தள்ளிய அடுத்த நொடி, அலைபேசியை நோக்கி பாய்ந்திருந்தான்.. SNP. ஆனால், அலைபேசியை உயிர்ப்பிக்க, ரேகையை பதிய வைக்க வேண்டுமே? டேபிள் அருகில் சென்று, கஷ்டப்பட்டு விரல்களை கொண்டு பேசியை எடுத்து.. ரேகை வைத்து உயிர்ப்பித்தான். ஒருவாறாக அலைபேசியும் உயிர்பெற, வாய்ஸ் கமாண்ட் பொத்தானை அமுக்கி, "கால் சர..", என்றதுதான் தாமதம்.. SNP இருக்கையோடு உருண்டிருந்தான். SNP-யின் இருக்கையை எட்டி உதைத்த மனோகர்.. "நான் இருக்கும்போதே புருஷனும் பொண்டாட்டியும் கொஞ்சி குலாவுவீங்களோ? விட்ருவேனா ?"

" உன் காருல ஜாமர் போட்டு, ஆபீஸ்லேந்து நீ கிளம்பினதுக்கு அப்பறம் சிக்னல் பக்கத்துல வந்த உடனே, ஜாமர் ஆஃப் பண்ணி, உன் கம்பெனி பொண்ணை காப்பாத்த சொல்லி, ஆளுங்களை செட் பண்ணி, மயக்க மருந்து கொடுத்து, உன்ன கஷ்டப்பட்டு கடத்தி ....", திரையை காண்பித்து, அகங்காரமாய் "ஹ ஹ .. இதெல்லாம் ஏற்பாடு பண்ணினா , ஒரு செகண்ட்-ல எல்லாத்தயும் முடிக்க பாக்கற ? என்ன பாத்தா அவ்வளவு கேனையன் மாதிரியா இருக்கு..? "

"என் ஆளுங்க/புள்ள எல்லாரையும் பிளான் பண்ணி வேற ஸ்டேட் க்கு மாத்திட்டேன்.. என் பொண்டாட்டி இல்லாத ஊரு, என் பேரு கெட்டுப் போன ஊரு இது.", சொல்லும்போது மனோகரின் கண்கள் கலங்கியது, கண்ணீரைத் துடைத்தவன், "காலி பண்ணிட்டு போறேன்.. மொத்தமா.... ஆனா அதுக்கு முன்ன... உன்ன, உம்பொண்டாட்டிய ஏதும் பண்ணாம போவேனா?", மீண்டும் ரௌத்திரத்துக்கு மாறியது அவன் பார்வை..

"அவமானம் ன்னா என்னன்னு உனக்கு தெரிய வேணாம்?", உஷ்ணமாய் பார்வை பார்த்து.. SNP -யின் அலைபேசியை பிடிங்கி.. "இதை இப்போ உன் குடும்பத்துக்கு அனுப்பறேன்.. பாத்து சந்தோஷமா இருக்கட்டும் ..."

தொலைக்காட்சியில் இருந்த பென் ட்ரைவ்-வில் இருந்த அந்த காணொளி, SNP அலைபேசிக்கு, காப்பி செய்து அனுப்பி.. வாட்சாப்-பில் ஐந்து பேருக்கு அனுப்பினான்... அவர்கள்.. சரண், பாஸ்கர் ஆதித்யா, இளம்பரிதி, அதிதி சந்தியா, மற்றும் கல்பலதிகா..

ஒருவித கையறு நிலையில், அதை பார்த்து வெறித்தான்.. வெற்றியின் மறுபெயர் என்று அனைவராலும் அழைக்கப்படும் SNP..

யானைக்கும் அடி சறுக்கும்.....

சறுக்கியதோ ?
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#7
IM 21 2

"பிரபல தொழிலதிபரின் காம லீலை"... என்று ஆரம்பித்த அந்த காணொளியில், ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் மின்தூக்கியில் [அட லிப்ட்-ங்கொ], இருந்து வெளிவந்தவன் நிச்சயமாய் சூர்யநாராயண ப்ரகாஷேதான்.. அதுவும் அவன் அணைத்தவாறு வந்த பெண் கட்டியிருந்த புடவை .. எதையும் மறைப்பதற்கான நோக்கத்தில் அணியப்படவில்லை.. இருவரும் ஒரு அறைக்குள் செல்ல.. காமிராவும் பின் தொடர்ந்தது. SNP அணிந்து வந்த சூட்டும், சட்டையும் கட்டிலில் கிடக்க, அவன் தேக்கு மர தேகம் பனியனுக்குள் அடங்க முடியாது அதன் திண்மையை வெளிப்படுத்த .. அப்பெண் நின்று கொண்டிருந்த SNP கழுத்தை கட்டி தழுவிக்கொண்டிருந்தாள்.

இன்னமும் ஆறேழு நிமிடம் ஓடிய அந்த காணொளி..... சரண்-னை செதில் செதிலாய் வெட்டுவது போல் உயிரோடு கொன்றது.. ஆம்.. கற்பென்பது இருபாலர்க்கும் பொதுவில் வைப்போம் - என்பதை பின்பற்றும் தன்னவனை .. நிலை பிறழ்ந்த நிலையில் காண யார்தான் தலைப்படுவார்? பிறழ்ந்தானா?
பிறழ்விக்கப்பட்டானா? அது இரண்டாம்பட்சம் ...ஆனால்.. இந்த காணொளி வெளிவந்தால், மீடியாவின் பசிக்கு நல்ல தீனி..SNP எனும் மாமனிதனின் நற்பெயர் .. நாற்சந்தியில் தூற்றப்படும். அதை, சரண்யு உயிரோடு இருக்கும்வரை எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது. முடிவெடுத்து கண்ணீரை துடைத்தவள், பாஸ்கரை அழைத்தாள் ..

"மெஸேஜ் எங்கேருந்து வந்ததுன்னு கண்டுபிடிச்சிட்டாயா? ", சரண் வினவ..

அவள் கேட்ட த்வனியிலேயே தெரிந்தது, இதன் தாக்கத்தில் இருந்து வெளிவந்திருந்தது. பாஸ்கரும் குரலை இயல்பாக்கி , "சிக்னல் வந்தது.. இப்போ கட்டாயிடுச்சு .. ஆனா கொஞ்ச நேரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுவோம்", பரிதியை பார்த்துக் கொண்டு அன்னைக்கு உறுதியளித்தான். வேறு எதுவும் பேசும் நேரமும் இல்லை, வேளையும் இதுவல்ல என்பதை உணர்ந்தவன், "தெரிஞ்ச உடனே போன் பண்றேன்மா ", மிக கனமான நேரங்களை, மௌனங்களில் கடத்த வேண்டும்.. இல்லையேல், வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புண்டு.

இளம்பரிதி, அவனுக்கு வாட்ஸ்ப்பில் பதிவு வந்த அடுத்த நொடியில், சென்னையின் அனைத்து இணையதள சேவையையும் முடக்க நடவடிக்கை எடுத்தான். இதில் சம்பந்தப்பட்ட நபர் SNP என தெரிந்தவுடன், கட்சி /அரசு பாகுபாடின்றி அனைத்து துறையும் ஒத்துழைத்தது. எனவே.. அந்த காணொளி, வேறு யாருக்கும் இன்னும் பகிரப்படவில்லை..

மொழிவோம்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes