E10 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
வலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி

மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Hi mam

எனக்கு ஒன்றுமே புரியவில்லை,கண்ணன் அதிரடியாக முடிவு எடுத்தால் அம்முடிவால் எப்படியும் சுந்தரி கோபமும் வெறுப்பும் அடையப்போகின்றார்கள்,அத்தோடு பயமாய் வேறு பார்க்கின்றார்கள்,அபராஜிதனை எப்படியும் சுந்தரியிடமிருந்து பிரிக்கமாட்டார்கள்,ஏனெனில் இப்போது மிகநன்றாகவே சுந்தரியின் பக்கம் இருந்து யோசிக்கின்றார்,அதனால் அப்படிச்செய்ய வாய்ப்பு இல்லை,ஆனால் என்ன செய்ப்போகின்றார்கள்,ஒருவேளை விவாகரத்தை ரத்து செய்யப்போகின்றாரா,அப்படி செய்தால் சுந்தரியையும் குழந்தையையும் இன்னும் இலகுவாக நெருங்கலாம் ,சுந்தரி வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும்போது,மற்றவர்களின் குறு குறு பார்வையிலிருந்து இதனால் தப்பிக்கலாம் என்று நினைக்கலாம் அல்லவா,குழந்தை பிறக்கின்ற தருணம் கணவன் மனைவிக்கு அழகான இன்பமான வலிநிறைந்த தருணம்,அந்நேரம் கூட இருந்து மனைவிக்கு ஆறுதலளிக்காமல் அந்த இனிய தருணத்தையும் அனுபவிக்காமல்,இப்போது வந்து கஸ்ரப்பட்டியா என்று வருத்தத்தோடு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா,சுந்தரி இன்னும் நிறைய திட்டி அனுப்பியிருக்கவேண்டும்,சுந்தரி மனதிலும் கண்ணன் மெதுமெதுவாக உள்நுழைகின்றார் ஏனெனில் தன் உணர்வுகளை அவரிடம் வெளிக்காட்டத்தொடங்கியுள்ளார்,பார்ப்போம் காலம் என்ன வைத்திருக்கின்றது அவர்களுக்கு என்று.

நன்றி
Aravin22
விவாகரத்தையே ரத்து செய்யப்போகிறான்
 

murugesanlaxmi

Well-Known Member
Very very nice, superb and excellent ud, Malli dear
ரொம்ப, ரொம்ப, நல்ல பதிவு, மல்லி செல்லம்
அப்பாடா, நம்ம துரைக்கண்ணன் டியர், நல்லதா ஒரு முடிவெடுக்கப் போறா-ன்னு தெரியுது
மீ, ரொம்பவே ஹேப்பி, மல்லி டியர்
என்னில், பாதிக்கும் குறைவான, வயதுடையவனை/வரை என்னால் அவர்,இவர், எனச்சொல்ல முடியாது,
மல்லி செல்லம்
ஆனால், என்னோட பொண்ணு, நம்ம சுந்தரிச்
செல்லத்தோட கணவர்,என்பதால், மாப்பிள்ளைக்கு மரியாதையை தரலாம்=ன்னு, முடிவு
பண்ணியிருக்கேன், மல்லி டியர்
waiting for your next lovely and cute ud, eagerly, மல்லி செல்லம்
நீங்க எது திட்டினாலும் செல்லம் போடுங்க சகோதரி{மரியாதை ஆகிடும்}
 

murugesanlaxmi

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
அருமையான பதிவு...சுந்தரி கண்ணன் இருவருடைய எண்ணங்களை சமவிகிதத்தில் அருமையா சொன்னீங்க...கண்ணன் சுந்தரியை உயர்வா நினைக்கிறார்...அவங்களை பிரிந்து இருக்கும் போது....நேரில் பார்க்கும் போது மட்டும் ரொம்ப உரிமை எடுத்து பேசுகிறார்...
கண்ணனுக்கு சுந்தரியிடம் பயம் இல்லை...
ஆனால் சுந்தரி ஏன் பயப்படுறாங்க....(முன் அனுபவம்) இருக்கா...
பாட்டியும் சுந்தரியும் இத்தனை வருடம் ஊரில் இருந்தும் ஏன் மாடு கன்று ஈன கஷ்டப்படும்போது எப்படி அனுகறது தெரியாம தாங்களும் கஷ்டப்படுறாங்க...
அவங்க இருவரையும் அன்போட பார்த்துக்க கட்டாயம் கண்ணன் குடும்பம் தேவை....கண்ணன் அப்பா பேரன் மேல் அதிக அன்புடன் இருக்கார்...மிகவும் மகிழ்ச்சி..
அபி இவ்ளோ அப்பா செல்லம் ஆகிட்டார்..
சுந்தரி கண்ணன் விட்டுட்டு போய்டுவார் சொல்லி மகனிடம் ஆதங்கப்படுவது அழகாக
இருந்தது...அதிலேயே தெரிகிறது சுந்தரியுடைய அன்பு...
உணர்வுகளின் சங்கமம்...
நன்றி.
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அழகான பதிவு
இப்போதான் சுந்தரியின் பாதிப்பு பத்தி யோசிக்கிறான்...
அவளுக்காக
vetnery doctor அழைத்து வருகிறான்...(he definitely scores here… and it also shows the need for a responsible person around her)
உன்னை உள்ளே விட மாட்டேன் என்றதும் துரைக்கு ஒரு அதீத கோபம்....
அதன் விளைவில் இங்கு வருவேன் என்கிறான்....
எப்பவும் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பானா??? அவளது உதாசீனம் அவனுக்கு கோபம் வரவைக்கிறது....அவன் அவளை உதாசீனம் செய்ததை மறந்து விட்டானா???
எப்படி வேக வேகமாக divorce போனானோ... அதே போல் ஒரு நொடியில் இங்கு வருவேன் என்கிறான்...
இந்த முடிவு நிலையானதா???
எதற்கு divorce பண்ணினான் என்று சுந்தரிக்கு தெரியாது... எதற்காக இங்கு வருவேன் என்கிறான் என்றும் அவளுக்கு தெரியாது...
எல்லாமே அவன் முடிவு மட்டும் தானா???
அவள் கருத்திற்கு அவனிடம் இடம் இல்லையா????
வீட்டில் இடம் பிடித்தாலும், மனதில் இடம் பிடிப்பது எப்போது???
அவள் மனதில் எவ்வாறு இடம் பிடிப்பான்.... மூன்று தங்கைகள் கூட இருந்தும் சிறிதும் பெண் மனம் பற்றி அறியவில்லை... பெண் மனம் என்று இல்லை... பிறர் மனம் அறியவில்லை... (
including amma appa)
divorce செய்யும்போதும் அப்பா அம்மா கருத்தை அறியவில்லை.... இப்பொழுதும்...அவன் முடிவில் பிறர் கருத்துக்கு இடம் இல்லை.... அது முன்னாள் மனைவி எனினும் சரி... அப்பா அம்மா என்றாலும் சரி
நல்ல அதங்கமான கேள்வி
 

murugesanlaxmi

Well-Known Member
hi friend MM

கண்ணன் -யப்பா இன்னமும் மற்றவர்கள் பார்வையை பற்றியே பயம் ....உங்க ஸ்டைலில் அவனின் பதில் குடும்பத்தின் முன்னால்........ சூப்பர் மறுபடியும் சுந்தரியிடமும் .....தெளிவாயிட்டான்....... நின்னுட்டான் கதையில் .....ஹீரோக்குனு பேசுவதில் ஒரு ஸ்டைல் குடுப்பிங்க பாருங்க செமயா இருக்கும் .......துரை ஒரு தடவை முடிவு எடுத்துடா அவர் பேச்சை அவரே ஒரு கேக்கமாடடார் போல

சுந்தரி -இறந்த கால வடுகளின் பின்னே மனம் நிகழ் காலத்தில் எதிர் காலத்தை பற்றி பயம் இன்னமும் மனம் குழப்பத்தில்
:)
அருமை
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
இந்த கதை எனக்கு பிடிக்கும்...பெயர் லிஸ்டில் எடுத்தேன்..
கேட்லாக் பண்ணி வச்சு இருக்கிறேனே ..என் புத்தகங்களை ...
அருமை சகோதரி எல்லா நாவல் பெயரும் சும்மா டக்கு டக்கு சொல்றீங்க
 

murugesanlaxmi

Well-Known Member
நான் ரசித்த கமெண்ட்ஸ்:-
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்றாங்க, அப்போ...., புருஷன் அமைவதெல்லாம் புரோக்கர் கொடுத்த வரமா?{என்ன கொடுமை சரவணா}
 

murugesanlaxmi

Well-Known Member
என் துறை நண்பனின் சிறு செய்தி :- பாத்ரூம்,கிச்சன் சிங்கிள் அடைப்பு ஏற்படும், அதற்கு கெமிக்கல் கடையில் விற்க்கும் கிளாசிக் சோடா {கிலோ 70ரூ} வாங்கி,பைபின் முடிவுபாகத்தை துணியால் அடைத்து,இந்த கெமிக்கலில் ஒருலிட்டர் சுடுநீர் ஊற்றி கலக்கி இரவு படுக்கும் போது ஊற்றி விட்டு,காலையில் அடைந்த துணியை எடுத்துவிட்டு நிறைய தண்ணீர் ஊற்றினால் அடைப்பு நீங்கிவிடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top