Coimbatore

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கொங்கு தமிழ் :love::love:

தமிழ் மக்கள் பேசும் தமிழ் மொழியிலேயே ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்கேட்ப மண்டல பாஷைகளை அள்ளி வீசுவார்கள். அதில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவை மக்களின் சாதாரண பேச்சுகளிலும் கூட மரியாதை மணம் வீசும். மரியாதை மட்டுமா!! அன்பிற்கும் குறைவிருக்காது.

“ஏங் கண்ணு இப்போ பஸ்ஸு வருமுங்ளா?!!” என்று முன்பின் தெரியாதவரிடம் கேட்கும் கேள்வியிலேயே “நீங்க கோவை ஆஹ்!!” என எதிரிலிருப்பவர் விழுந்துவிடுவார்.
வீட்டிற்கு வரும் சிரியவர்களிடம் கூட "எப்போ வந்தீங்க? என்று கேட்பதே வழக்கம்.

“ஏனுங் அப்புச்சி” “ஏனுங் ஆத்தா” என்று பெரியவர்களை அழைத்தால்

“ஏனுங் அம்மணி” “ஏங் கண்ணு” “ஏஞ்சாமி” என்று தான் பதிலுக்கு திருப்பி அழைப்பார்கள்.

“ஒன்னா போலாம்” என்பது வெறும் வார்த்தை “ஒட்டுக்கா போலாம்” எங்கள் எமோஷன். :love::love::giggle::giggle:

அரிசியும் பருப்பும் சாதம் மணக்க அதனோடு “ஒரு வாய் உண்டுட்டு போ கண்ணு” என்ற அம்முச்சியின் வார்த்தைகளில் அன்பும் சேர.. சுவைத்து பார்த்தவர்களுக்கு தான் அதன் சுவை தெரியும். மறக்கக்கூடிய ஒன்றா அது!! :love::love::love:

பெரியவர்களோடு இருக்கும் போது அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தால் தெரியும்,
அவசரமாய் செல்வதை குறிக்க “வேகு வேகுன்னு எங்க கண்ணு போற??” என்பார்கள்.

குளித்து செல்ல “தண்ணி ஊத்திட்டு போ”... தள்ளிச் சென்று அமர “அக்கட்டால போய் உக்காரு” என்பர்.. அவர்கள் பேசுவதை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

திட்டுவாங்குவது கூட சுகம் தான் :giggle::giggle:

சிறியவர்கள் ஒரு இடத்தில் இல்லாது ஓடிக்கொண்டிருந்தால் “பொட்டாட்டம் உக்கார்” (அமைதியாக) என்பர்.

“கொஞ்சமாவது வருத்தமானம் (குடும்ப சூழல்) தெரியுதா உனக்கு”
கொஞ்சம் டீப்பாய் சென்றால் “ஆகாவழி” ஒன்றுக்கும் உதவாத என்ற பொருள்.

வட்டார மொழி வழக்கு தான் ஒவ்வொரு ஊருக்கு அழகு சேர்ப்பதே.. :love::love:
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சுற்றுலாத் தளங்கள் என்று பார்த்தால்


வால்பாறை, குரங்கருவி, பரம்பிக்குளம் ஆழியார் அணை, வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்ட அறிவுத்திருக்கோவில், டாப்ஸ்லிப்..
படப்பிடிப்புக்கு பெயர்போன ஆத்துப்பாறை, சேத்துமடை, காளியாபுரம் சுற்றுவட்டாரங்களில் என்றும் பசுமை போர்வை விரித்திருக்கும்.

அய்யன் சிவனுக்கு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மகன் முருகனுக்கு மருதமலை.
உலகிலேயே சுவையான குடீநீர் இரண்டாம் இடத்தில் உள்ள சிறுவாணி ஆறு.. பொள்ளாச்சி இளநீர்.. மெரைன் காலேஜ், பி.ஸ்.ஜி காலேஜ் போன்று பல கல்வி நிறுவங்கள்..

என்ற ஊரை பத்தி சொல்லிகிட்டே போலாமுங்.. :love::love:
பொறகு பாக்கலாமுங்.......

மண் வாசம் கூட
சேந்து மரியாதையும்
வீசும்ங்க
எங்க ஊரு
வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க

 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
குமரனின் வீடே... கொங்குதான்... மருதமலை
விவசாய கல்லூரி.... psg காலேஜ்....
இந்த ஊர்... அரிசியும்பருப்பும் சாப்பாடு அவ்வளோ பேமஸ் சிஸ்....
கொள்ளு பருப்பு கடையுவாங்க பாருங்க.... அவ்வளோ சூப்பரா இருக்கும்... இந்த பெண்களின் கைமணத்தில்....
சூலூர்.... ஏர் போர்ஸ்....
மரியாதையான அன்பான பேச்சு வழக்கு .... சின்ன குழந்தைய கூட... "ஏங்கன்னு....." என அழைக்கும் அழகு....
இந்த ஊர் வெதர்.... அப்படியே... சிலு சிலுன்னு இருக்கும்....
:love::love::love::love:
சில்லென்ற கோயம்புத்தூர்
அரிசியும் பருப்பு சாப்பாட்டிற்கு ஈடு இணையே இல்லைங்க அக்கா :D:D
 

Chitrasaraswathi

Well-Known Member
கோயமுத்தூர்னா கெத்துதான். எந்த ஊருக்கு போனாலும் நாம் பேசுவதை கேட்டு நீங்க கோயமுத்தூரா என்று கேட்கும்போது வரும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கோயமுத்தூர்னா கெத்துதான். எந்த ஊருக்கு போனாலும் நாம் பேசுவதை கேட்டு நீங்க கோயமுத்தூரா என்று கேட்கும்போது வரும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை
கண்டிப்பாங்க சித்ரா மா.. :love::love:
அந்த ஏனுங் வெச்சே கண்டுபிடிச்சிருவாங்க..
நீங்க கோவை ஆஹ் னு கேட்கும்போதே உள்ளுக்குள்ள அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும்.
 

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman

காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் ....

இந்த பக்கம் ஒரு எட்டு வந்துட்டு போங் பானுமா
காரமடை அரங்கநாதர் திருக்கோயில்
மேட்டுப்பாளையம் வன
பத்ரகாளியம்மன் திருக்கோயில்
ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்
எல்லாமே பேமஸ்தான்ப்பா

ஆசியாவிலேயே பெரிய விநாயகர்
இருக்கும் திருக்கோவில் எங்கள்
கோயம்புத்தூர் புலியகுளம்
விநாயகர் திருக்கோவில்தான்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எழுத்தாளர் விமலாரமணியம்மா
இந்த கோயம்புத்தூர்க்காரங்கதான்

புகழ் பெற்ற நாடகாசிரியர்
திரு. ராதாகிருஷ்ணன் வேறு
ஊர்க்காரராக இருந்தாலும் கோவை
அனுராதா-ன்னு சொன்னால்தான்
அவரைப் பற்றி எல்லோருக்கும்
தெரியும்

இந்த கோயம்புத்தூருக்கு வரும்
அரசு அதிகாரிகள் எல்லோரும்
இந்த ஊரை விட்டுப் பிரிய
மனமில்லாமல் ஓய்வு
காலத்திலாவது இங்கே வந்து
செட்டில் ஆகிடலாமுன்னு
எல்லோரும் கொஞ்சூண்டு
இடமாவது வாங்கிப்
போட்டிருக்காங்கப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இங்கே கோயம்புத்தூரில்தான்
முதன் முதலில் பிளாக் தண்டர்
பல்வகை விளையாட்டுத் திடல்
உருவானது
இதைப் பார்த்துத்தான் மற்ற
ஊர்களில் பிளாக் தண்டர்கள்
உருவாச்சுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top