மெல்லிய காதல் பூக்கும் P9 and உறவால் உயிரானவள் P 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ போனஸ் கிப்ட்:love::love:

பிரதீபன் தியா வாழ்க்கைல என்ன நடந்தது? சூழ்ச்சியா? சதியா?

கார்த்திக்கை நோக்கி பாய்ந்த கத்தி யார் வீசினாங்க? அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

எத எழுதறது னு குழப்பமா இருந்துச்சு. முதல்ல எத கம்ப்ளீட் பண்ண முடியாதோ அதோட வரேன்.



images (23).jpg

நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியே அழைத்து சென்று அவளுக்கு பிடித்தவற்றை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தான் பிரதீபன். நடக்கும் போது அவள் அனுமதியில்லாமலையே கைகோர்த்து நடக்க மறுப்பு தெரிவிக்காமல் அவளும் கூடவே நடந்தாள். நாளாக நாளாக அவர்களின் நெருக்கம் அதிகரிக்க அவன் கோர்த்திருந்த கையோ அவளின் இடைவளைவிலும். அவளோ அவன் நெஞ்சிலும் சாய்ந்து பயணித்தனர்.


"என்ன பிரச்சினை தியா? என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?" அவளின் வியர்வை பூத்திருந்த முகத்தை துடைத்தவாறே பிரதீபன்



அவளின் தயக்கமும், பயமும் தூர ஓட கணவனை அதிசயமாக பார்த்திருந்தாள். "இவனுக்கு என் மேல் எவ்வளவு அன்பிருந்தால் ஒரு சின்ன அசைவையும் உடனே புரிந்துக் கொண்டு கேட்டிருப்பான்" என்று மனம் சொல்ல கணவனை காதல் பார்வை பார்த்தவாறே



"ஒன்னு சொல்லணும் கோவிக்க மாட்டீங்களே!"



"ரெண்டு கூட சொல்லு கோவம் வராது. ஆனா நீ என் கிட்ட இப்படி பயந்து பயந்து பேசுறது தான் சரியில்ல. உனக்கு என் கிட்ட என்ன பயம். பாரு எவ்வளவோ வேர்த்திருக்கு"



"ஐயோ அது இங்க வந்த நாள்ல இருந்து வேர்க்குது. ஊட்டி குளிர்ல வளர்ந்த உடம்பு இந்த ஊர் வெப்பநிலையை தாங்க கொஞ்சம் கஷ்டம் தான்"



"ஹாஹாஹா சரி சொல்லு என்ன விஷயம்" தியா இயல்பு நிலைக்கு வரவே நல்ல கணவனாக அவளை பேச வைத்தான்

images (55).jpg

"அது வந்து.... அது இன்னைக்கி வேணாம் ஒரு ஐஞ்சி நாள் கழிச்சு வச்சிக்கலாமா?"



"எது?" அவள் சொல்ல வருவது புரிந்தாலும் புரியாதது போல் கேட்டு அவளை சீண்டினான்.



தான் சொன்னது கணவனுக்கு புரியவில்லை என்றதும் தியாவின் மனம் மீண்டும் அடிக்க ஆரம்பித்து அவனுக்கு எவ்வாறு புரிய வைப்பதென்று முகத்தில் யோசனை ரேகைகளை ஓட விட்டவாறே கணவனை ஏறிட அவனோ குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தான்.



"நான் என்ன சொன்னேன் னு புரிஞ்சிக்க கிட்டு புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?" என்றவாறே அவனின் மார்பிலும், தோளிலும் அடிக்க அவளை இறுக அணைத்துக் கொண்டவன்

இனி தன்வாழ்வில் சோகங்களும், துன்பங்களும் இல்லவே இல்லை என்று சந்தோசவானில் பிரதீபன் பராந்தக கொண்டிருக்க, அவன் விதியோ அவனை பார்த்து கைகொட்டி சிரித்தது


11380295_473308529503354_796973262_n.jpg


"இல்ல ப்ரோ அது பொம்முவ நோக்கி வீசின கத்தியில்ல உன்ன நோக்கி வீசின கத்தி" ஆதி உறுதியாக சொல்ல



"எப்படி சொல்லுற?" கார்த்திக் தான் ஒரு போலீஸ் என்று கேள்வி கேட்டு வைக்க



"பொம்முவ இங்க படிக்க அனுப்பும் போதே அவ பாதுகாப்புக்கு ரெண்டு பேர ஏற்பாடு செஞ்சி இருந்தேன். அவ ஹாஸ்டல்ல இருந்து சுவரேறி குதிச்சு பல தடவ ப்ரெண்ட்ஸ் கூட நைட் ஷோ பாக்க போய் இருக்கா, அப்போ வராத ஆபத்து இப்போ கண்டிப்பா இல்ல. அப்படி போகும் போதுதான் உன்ன பார்த்து லவ் பண்ணவே ஆரம்பிச்சா. இது நீ வச்ச மிச்சம் உன்ன சொச்சமா நினைச்சி பின்னாடி துரத்துது"



ஆரு தன்னை காதலிக்கின்றாள் என்பது கார்த்திக்கு முற்றிலும் புதிய செய்தி. ஆருத்ராவே அவனிடம் அதை பற்றி கூறி இருக்காத நிலையில் அவள் சொல்லி இருப்பா என்று ஆதி சொல்ல கார்த்திக்கின் நெஞ்சம் முழுக்க உல்லாசம் பரவியது.



ஸ்கூலோ! காலேஜோ "மச்சான் உன்ன ஒரு பொண்ணு பாக்குற?" என்றும், "ஐ லவ் யு" கார்த்திக் என்றும் பலதடவைகள் கேட்டாலும் யாரையும், திரும்பி பார்க்க வேண்டும் என்றோ! காதலிக்க வேண்டும் என்றோ தோன்றியதே! இல்லை. காரணம் கவிலயா. அவள் பாதுகாப்பு, சந்தோசம் எல்லாவற்றையும் விட அவனுக்கு முக்கியமாக இருந்தது.



ஆனால் இன்று தன்னை ஒருத்தி காதலித்தும் சொல்லாமல் அவன் மனதை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கின்றாள் என்பது கர்வத்தை ஏற்படுத்தி இருக்க, "ஏன் டி என் கிட்ட சொல்லல" என்று அவளோடு சண்டை போடணும் போல் இருந்தது.



ஆருவின் கொஞ்சல் மொழிகளும், குரலும், அழகிய வதனமும் அநியாயத்துக்கு இந்நேரத்தில் நியாபகத்தில் வந்து "அவள் இந்நேரம் அருகில் இருந்தால் முத்த மழையில் நனைய வைத்திருப்பேன்" என்று உள்ளம் துள்ள அழைக்கா விருந்தாளியாக புன்னகை கார்த்திக்கின் உதட்டில் மலர்ந்தது.

"மச்சான் நீ வர வர சரியில்ல. கல்யாணத்த மூணு மாசம் தள்ளி வச்சது தப்போன்னு தோணுது" சீனு வார



ஆதியும் "பொம்மு உன் கிட்ட சொல்லலையா? சொல்லி இருப்பான்னு நினச்சேன். அன்னைக்கி ரெஸ்டூரண்ட்டுல உன்ன பத்தி சொல்ல தான் வர சொன்னா. விசயத்த சொல்ல முன்பே உன்ன பாத்துட்டேன். கூடவே கவியையும்" தன்னவள் அன்று பேசியவைகள் நியாபகத்தில் வந்து ஆதி புன்னகைக்க,

Screenshot_20190308-054138_Instagram.jpg

"இந்த கமிடட் பசங்க கூட இருந்தா நம்மள பைத்தியக்காரனாக்கமா விடமாட்டானுங்க" புலம்பியவாறே "டேய் டேய் அடங்குங்கடா... விசயத்துக்கு வாங்க. எக்ஷன் பண்ண வேண்டிய நேரத்துல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு, ட்ராக் மாறுது" சீனு கத்த அவன் புறம் திரும்பி இருவருமே! முறைக்கலாயினர்.

ENJOY:love::love::love::love::love::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆஆது?
தியா-ங்கிற பவரே இல்லாத லைட் ஜெகஜ்ஜோதியா எரியுதா?
எப்படிம்மா இப்படி?
திவ்யாக்கண்ணு உனக்கு என்ன
ஆச்சு?
பிரதீப் மச்சானை தியா நல்லா புரிஞ்சுக்கிட்டாளே

ஆனால் இந்த பர்த்டே பேபி மிலா டியருக்குத்தான் என்னமோ ஆயிடுச்சு போல
பிரதீப்புக்கு இன்னும் துன்பம்
தொடருமாமே
அவன் பாவமில்லே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top