ஏரிக்கரை

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் செல்லம்ஸ் நான் தோஷி ( நிஜ பெயர் யமுனா ) ...இங்கு எனது பயணத்தை ' ஏரிக்கரை ' என்னும் சிறுகதை மூலம் ஆரம்பிக்கிறேன் . எனது எழுத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும் ...நிறைகளை தட்டிக்கொடுத்தும் நான் இப்பயணத்தில் வெற்றி பெற உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தை ஆரம்பிக்கிறேன் சகோஸ் ...:love:
 
Last edited:

Thoshi

Writers Team
Tamil Novel Writer
இறைவன் படைத்ததில் இயல்பு கெடாமல் தொடரும் பட்டியலில் இன்றும் இருக்கிறது ....குழந்தையின் சிரிப்பு.....



ஏரிக்கரை 1 :




விடியற்காலை ஐந்து மணி ...

இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளின் சாட்சியாய் ஆதவன் உதிக்க ஆரம்பித்தான் . சென்னை மாநகரத்தின் ஏதோ ஓர் இடம் . ஏரி அல்ல குளத்தின் தயவால் குளுமையான காற்று உடலை தழுவி செல்கையில் , அதற்க்கு நேர்மாறாய் புள்ளினங்களின் அளப்பரிய சத்தங்கள் அவ்விடத்தில் பரவாலாய் ஒலித்தது.
காற்றின் குளுமையை அனுபவிக்க தடையாய் காற்றோடு கலந்து வந்தது துர்நாற்றம் .

அவ்வழியில் செல்வோர் சிலர் யோசனையுடன் அவ்விடத்தை ஆர்ய்ந்ததின் முடிவில் ஏரிக்கரையோரம் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து அங்கு சென்று பார்த்தனர் .முதலில் சென்ற ஒருவர் அங்கனவே வாந்தி எடுக்க மற்றவர் மயக்கம் அடைந்ததை கண்டு மற்றவர்களுக்கு அங்கு செல்ல ஆர்வம் இருந்தும் இவர்கள் நிலையினால் தயங்கி அவ்வூரின் காவல்துறையினருக்கு தகவலளித்தனர் .


காலை 6 மணியளவில் :

வழக்கம்போல் தாமதமாய் அவ்விடத்திற்கு வந்த போலீசார் துர்நாற்றம் அதிகமாகி இருந்ததில் மூக்கை மூடிக்கொண்டு ஏரிபக்கம் சென்று அங்கு இருந்ததை பார்த்தவர்கள் ஒரு நொடி உறைந்து விட்டனர் . அங்கிருந்தது ஒரு பிணம் ,.உடலில் ஆங்காங்கே ரத்தகாயத்துடன் அக்காயங்களும் சிதைந்த நிலையில் , முகம் முழுவதும் மீன்கள் தின்றிருக்கும் போல அவை தின்றதின் மிச்சம் மட்டுமே இருந்தது அவ்வுடலில் பார்க்கும்பொழுதே வயிற்றை பிரட்டுவது போல் .

எப்படியோ அவ்வுடலை அப்புறப்படுத்தி எரிக்கரையோரமாக சிறிது சமமான இடத்தில் கிடத்திய
சிறிது நேரதில்லெல்லாம் ￰தடயவியல்துறையை சார்ந்தவர்கள் வந்து அவ்வுடலை சற்று சோதித்து பார்த்து பிறகு கொண்டு சென்றனர் .

விசாரணையில் அது வேளச்சேரியை சேர்ந்த அகல்யா என்னும் பெண்ணின் உடல் என்று அறிந்து அவரின் குடும்பத்தாரிடம் விசாரித்ததில் சிறிது நாள் முன்பு அப்பெண்ணின் குழந்தை காணாமல்போனதாகவும் , குழந்தையை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இப்பெண் மனமுடைந்து இருந்ததாகவும் தெரிந்தது . அப்பெண்ணின் குடும்பத்தாரே இது தற்கொலை என அடித்து சொல்லினர் .

பின்பு அதை பற்றி விவாதிக்கையில் ஒரு அதிகாரி , சார் அந்த பொண்ணோட உடல்ல இருந்த காயம்லாம் பார்த்தா வெறும் மீன் கடிச்சதுனால வந்த மாதிரி தெரிலயே ....

அந்த கேசில் தலைமை தாங்குபவர் , ஆமாயா நீ சொல்றதும் சரிதான் ஆனா எங்கயா நம்பல விசாரிக்க விட்றாங்க...அந்த பொண்ணு வீட்லயே இது தற்கொலைனு சொல்லிட்டாங்க நீங்க கேஸ முடிங்கனு மேலிடத்துல சொல்லிட்டாங்களே இதுகப்புறம் நம்ப என்ன பண்ணமுடியும் . கேஸ முடிச்சப்பரும்... பணக்காரன் எவனா வந்து என் வீட்டு நாய காணும்னு கம்ப்லைன் குடுப்பான் நம்பளும் நாயா அலைஞ்சி அந்த நாய கண்டுபிடிக்கனும் சலிப்பாய் சொல்லியவர் அவரின் மேலிடம் அவருகிட்ட கட்டளையின் படி பத்திரைகைக்கு இது குடும்ப தகராறால் நேர்ந்த தற்கொலை என்று தகவலளித்துவிட்டு அந்த கேஸை முடித்துவிட்டார் .
மக்களும் அதை பற்றி மறந்து அன்றாடவாழ்வை கடக்கையில் .... மறந்ததை நினைவூட்டுவது போல் அமைந்த அச்சம்பவத்தால் அனைவரும் திடுக்கிட்டனர் . திடுக்கிடலை மரணபயமாய் மாற்ற செய்தது அதை பின் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் ....


அதே ஏரிக்கரை , அதே புள்ளினங்களின் பயம்கொண்ட சத்தங்கள் ....காற்றில் துர்நாற்றம் . ஆம் அதே ஏரிக்கரை தன்னுடைய ஐந்தாம் பிணத்துடன் .......




--------------------------------------------
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய
"ஏரிக்கரை"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
யமுனா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இஸ்டோரி ஆரம்பத்திலையே
ஐந்து கொலையா?
இதெல்லாம் கொஞ்சங்கூட
சரியில்லை
நியாயமுமில்லை, யமுனாப்
பெண்ணே

அகல்யாவை ஆரு
கொன்னாங்கோ?
அவிய வூட்டுக்காரரா?
இல்லாங்காட்டி வேற
ஆராச்சுமா?

எங்கனயோ அவளை
கொன்னுப் போட்டு
இன்னாத்துக்கு இங்கன
ஏரிக்கரையில அகல்யாவோட
பொணத்தை கொண்டாந்து
ஆரு போட்டாங்கோ?

அகல்யாவோட குழந்தை
எங்கே?
அதையும் கொன்னுப்
போட்டாங்களா?

அந்த அஞ்சாவது பிணம்
யாரு?

இப்பிடிக்கா ஊருப்பட்ட
சச்சுபென்சு வைச்சுக்கிட்டு
நக்கினியூண்டு அப்டேட்
கொடுத்து எஸ்ஸாயிட்டீங்களே,
யமுனா செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top