E11 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
Hi Malli
இனிய காலை வணக்கம்.....

Very fast turn of events...
highly dramatic too..

அதையெல்லாம் சாப்பிட்டு விட்டது,
எபியின் கடைசி வரியில் நீங்கள்
வைத்த check mate
நான்கு கேள்வி குறிகளுடன்...
இதுதான் மல்லி.....
Malli's Magic....love you....

எனது கருத்துகள்:
சட்டதால் முடித்து வைக்கப்பட்டது ...
At present ,legally no change in the status

அவளைப் பொருத்த வரை
அது முடிவில்லா பந்தம்
இறுதி வரை என்று சொல்கிறது
அவளின் கழுத்தில் இருந்து இறங்காத தாலி...
அவளை மேன்மை படுத்துகிறது
உயர்த்துகிறது......

முடித்து வைத்தவனின் நிலை
அதால பாதாளத்தில்
அவன் கூறப் போகும், தன்னிலை விளக்கம்...


அவள் ஏற்பாளா ?,இல்லை மறுப்பாளா ?
இல்லை மகனை மட்டும்
கருத்தில் கொண்டு
தனது வைராக்கியத்தை விட்டுக்கொடுத்து
ஏற்பாளா?
மூன்று கேள்விக் குறியில் எனது பதில்...
முடிவான பதில் உங்கள் கையில்....


ஆவலுடன்......

Happpppppy day.....:)
எந்த பூசி மொழுகளும் இல்லாமல் உண்மை எண்ணத்தையம் தோன்றியதையும் இப்பொழுது ஏன் எதற்கு என்று கூறி சரண் அடைதல் தான் உத்தமமாக இருக்கும் நலம் பயக்கும்
 

malar02

Well-Known Member
சூழ்நிலை கைதி சுந்தரி...
தமிழ்ச்சி சுந்தரி....
விரும்ப வாங்கிய தாலி.....
சுந்தரி always சுந்தரிதான்...

நடந்தவைகளை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டான்....
சிரமம் தான் அவனுக்கு,,,,
காரணங்கள் கூற வேண்டுமே,
ரத்திற்கான காரணங்கள்....
அவளும் அதை ஏற்க வேண்டுமே....


கண்ணனை விட கடுமையான எதிர்ப்பு விமலாவிடம் இருந்துதான்....
கண்ணனை ஏற்றாலும் ,விமலாவை ஏற்பாளா?
விமலாவை அவள் மனதளவில் கொஞ்சம் தள்ளித்தான் வைப்பாள் என்று தோன்றுகிறது அவங்க பிராயச்சித்தம் செய்யவந்தாலும் 5 நாட்கள் அவரால் கிடைத்த கசப்பு அனுபவம் அவளை மன்னிக்கவிடாது மனதளவில் மேலும் அவள் கர்ப்பத்தை எதிர்ப்புடன் நோக்கியது பையனுக்கு பிடிக்கவில்லை என்றால் சீப்பா நடத்தவேண்டுமா?? ஒதுங்கி இருக்க வேண்டியது தானே அந்தம்மா??அத்துவிட துணிச்சிடாங்க ஒரு பெண்ணை பெற்றவராக இருந்தும் சுந்தரியும் இப்போது ஒரு தாய் அதனால் அவங்க செய்ததை மேலுக்கு வேண்டுமானால் புறந்தள்ள முடியும்
 

malar02

Well-Known Member
நியாயமான கேள்விகள்
இந்த இரண்டு வருடம் கஷ்டப்பட்டது இப்போ உதவி செய்ய வந்தவுடன் மாறும் வலி இல்லை

எனினும், இந்த சூழ்நிலையில் அவளால் அவனது உதவியை மறுக்க முடியாது....
அதுமட்டுமல்ல குழந்தை வேறு ஒட்டி கொண்டானே
 

malar02

Well-Known Member
end epi will be like epilogue nu expect pannuraen...
after 2-3 yrs nu epi varalam....
ஒரு நாளில் அவன் மற்றும் அவன் குடும்பத்து உதவியை ஏற்று கொண்டாலும்.... ஒரு நாளில் அவனை ஏற்க முடியாது
அவன் இந்த ரெண்டு வருடம் தந்த வலி ஆழமானது

இப்போ கூட அவள் அவசரத்தில் வெந்நீர் தன் காலில் படவில்லை எனில் அழகாக situation handle பண்ணி இருப்பா
சிந்தா இருந்து இருந்தால் கூட உதவியா இருக்கும்
அவளுக்குரிய எல்லா வழியும் அடைச்சு போச்சு
so she need to accept his help... correct

but அதே வேகத்தில் அவனை மனம் தேடினாலும் ஏற்க முடியாது...
so expecting something similar to epilogue
பார்ப்போம் again halwa from Malli or not :)
 

malar02

Well-Known Member
Legally they are separated
So they need to go for Registered marriage

சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அவுளுக்கு எதிரா இருக்கும் போது கண்ணன் வந்து அவளுக்கு ஆபத்பாண்டவனா கை கொடுக்கிறான்...
அவளுக்கு சிந்தா மற்றும் உறவுகள் கை கொடுக்க முடியாத dramatic situation

மாத நாவல் என வரும் போது, சிறிது சிறிதா மனதில் இடம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக்கி, அதன் மூலம் அவள் மனதில் புகுவதற்கு no of pages கூட தடை ஆகி விடுகிறது...correct correct ......
எனினும் கண்ணன் அவளுக்காக வேலை விட்டது என்பது அவன் யோசித்து எடுத்த முடிவு

விமலா தான் தவற விட்டதை தானே சரி செய்யணும் என நினைக்கிறார்....
waiting for epilogue
 

murugesanlaxmi

Well-Known Member
வாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..

நிழலாய் இருந்த
உறவும் மயங்கி போக..

வரமாய் வந்தவனை
வேதனையிலும் காக்க..

தன்னை காக்க
மறந்ததே...


பாலைவனமாய் போன
நாட்களிலும் கொடிதாய்
போனதால்..
முட்கள் கூடி போனதோ..

கற்றையாய் பணமிருந்தும்
ஒற்றையாய் நிற்கும் போது
ஏற்படும் அச்சமும்
தனிமையும்
சொல்லில் அடங்காது..

தன்னை பாதுகாக்கவும்
ஒருவர் வருவது...
தண்ணீரை கண்ட
வாடிய செடியின் நிலை அன்றோ..
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
செல்லும் அது செல்லும்
விட்டு செல்லும்
இனி இவரை விட்டு செல்லும்

செல்லாது அது செல்லாது
இனி இவர்கள் வாழ்வில் செல்லாது
இனிமேலும் நில்லாது

ஆனது ரத்து ரத்தானது
இனி இங்கே ஆகாது விவாகரத்து
விவாகம் ரத்து ஆகாது
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
கோர்ட் விவாகரத்து தந்திருக்கலாம்....
இருவருடைய மனதும் அதை ஏற்கவில்லை.
அவர் பிரிந்த பிறகு வேறு பெண்ணை பார்க்கவில்லை...இவங்க கோபத்தில் நீயும்
வேண்டாம் உன் தாலியும் வேண்டாம் சொல்லவில்லை...
இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு..:)
உண்மை சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top