UUU - 40

Advertisement

n.palaniappan

Well-Known Member
View attachment 10379


சரணை முதன் முறையாக சந்தித்த நிகழ்வை ப்ரீத்தி கூறி முடிக்கவும் எழில் அலரின் பார்வை சரண் புறம் தான் திரும்பியது...

"ப்ரீத்தி சொல்றது உண்மையா சரண்..??" என்று எழில் கேட்க,

அவனோ என்றோ ஒருநாள் கடந்து போன அவளுடனான தனது சந்திப்பு அவளிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அறிந்து நம்ப முடியாத திகைப்பில் நின்றிருந்தான். ஆம் சிறு பெண்ணான அவள் பிரகாசத்தின் புறக்கணிப்பால் உரிய அங்கிகாரம் இன்றி சமூகத்தில் எத்தகைய இன்னல்களை தாண்டி வந்திருப்பதை அறிந்தவனுக்கு தன்னுடனான சிறு சந்திப்பு அவள் மனதில் நீங்கா நினைவாய் அமைந்து தன் வாழ்வை பணயம் வைக்கும் சம்பவமாய் மாறிப்போன துரதரிஷ்டத்தை அவனும் என்னவென்று சொல்ல..!!

அன்று தன்னுடன் இருந்த இருவாரங்களும் அவள் நடந்து கொண்ட முறைக்கும் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்போது தெளிவான அர்த்தம் கிடைக்க அவள் நிலையை உணர்ந்து திகைத்து போனான் சரண்..!! பிரகாசத்தை துடிக்க வைக்க வேண்டியே அவள் தன்னை தேடி வந்திருப்பதை அப்போதே ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டவனுக்கு தந்தையை பழி வாங்க கூட வேறு வழியை தேர்ந்தெடுக்க விரும்பாமல் மனதை தொலைத்த தன்னிடமே அதன் மார்கத்தை தேடி வந்தவள் குறித்து பெரும் அலசல் அவனிடம்..!!

"சொல்லு சரண் ப்ரீத்தி சொல்றது உண்மையா..??" என்று எழில் இரண்டாம் முறையாக கேட்க,

அனைத்து புறமிருந்தும் கழுத்தை இறுக்கி பிடிப்பது போல தோன்ற சில நொடிகள் கண்களை அழுந்த மூடி திறந்தவன் "ஆமாண்ணா இப்போ இவங்க சொல்லும் போது தான் எனக்கு அந்த இன்சிடென்ட் நியாபகம் வருது ஆனா இது நடந்து பலவருஷம் ஆச்சு, நான் அந்த பெண்ணை ஐ மீன் ப்ரீத்தியை அவங்க அம்மாக்கிட்ட சேர்த்ததோட சரி அதுக்கு அப்புறம் அதை பத்தி பெருசா யோசிக்கலை ஆனா இவங்க.., இப்பவும் எப்படி..?? என்று நெற்றியை தேய்த்து விட்டு கொண்டவனுக்கு அவள் வருடங்கள் பல கடந்தும் தன் நினைவில் இருப்பதை எண்ணி ஆச்சர்யமே..!!

ப்ரீத்தி கூறியதை கவனமாக கேட்டுகொண்டிருந்த அலரிடம் ஆழ்ந்த சிந்தனை பலவகையில் தனக்குள் அந்நிகழ்வை ஒட்டி பார்த்தவள் சரணிடம், "நீங்க ஏன் மாமா ப்ரீத்தியை கொண்டு போய் விட்டீங்க, ஜஸ்ட் பஸ் ஏத்தி விட்டு இருக்கலாமே" என்று கேட்க,

"அப்படி இல்லை அமுலு அன்னைக்கு அந்த பொ.. ஐ மீன் ப்ரீத்தி சொன்ன கடத்தல் கதை எதுவும் நம்பறமாதிரி இல்லை.. நான் கேட்டதுக்கு டென்த்ன்னு சொன்னா ஒரு வேளை போர்ட் எக்ஸாம் போக போறதால வீட்ல ப்ரெஷர் அதிகமாகி அதனால வீட்டை விட்டு வந்திருப்பாளோ ஏதாவது தப்பான முடிவு எடுத்துட கூடாதேன்னு பாதுகாப்பா அவளை அவளோட வீட்ல விடனும்ன்னு கூட்டிட்டு போனேன்.. அவங்க அம்மா வந்ததும் பத்திரமா பார்த்துகோங்க இனிமேல் இந்த மாதிரி தனியா விடாதிங்கன்னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன். அவ்ளோ தான்..!!" என்று கூற,

அலருக்கு ஐயோ என்றாகி போனது.., இது தான் சரண்..!! என்றுமே பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்பவன் அன்றும் அதே அக்கறையுடன் ப்ரீத்தியை நடத்தி இருக்கிறான். இது ஒரு சாதாரண நிகழ்வு..!! ஆனால் அன்று விதி அத்தகைய கட்டுகடங்கா உணர்வுகளுடன் பயனித்தவளை திசை திருப்பி சரனை சந்திக்க வைத்து அவளை காதல் வயப்பட வைத்திருப்பதை எண்ணி நொந்து கொண்டாள்.

"அப்போ நீங்க ப்ரீத்தி முகத்தை பார்க்கலையா மாமா..???"

"இல்லைடா, என்கூட பேசிட்டு இருக்கும்போதும் அவங்க ஷால் கழட்டலை நான் திரும்ப வீட்டுக்கு வந்து பார்த்த போதும் அதே போல தான் இருந்தாங்க... சென்னையில பெரும்பாலானோர் இப்படி சுத்துரத்தை பார்த்திருக்கேன் அதனால அது எனக்கு வித்யாசமா படலை.. அதுமட்டுமில்லாம ஒரு பொண்ணு கிட்ட எப்படி நான் உன் முகத்தை காட்டுன்னு கேட்க முடியும்...???? அது அவங்களோட பர்சனல் சாய்ஸ்... நான் எப்படி அதை போர்ஸ் பண்ண முடி.." என்று அவன் முடிக்கும் முன்னமே,

"சரண் கேட்கலை ஆனா நீ அவன் அக்கா வீட்ல இருந்தப்ப அவன் அக்காவோ கூட இருந்த குழந்தைகளோ உன் முகத்தை காண்பிக்க சொல்லலையா ப்ரீத்தி" என்று எழில் கேட்க,

"கேட்டாங்க மாமா,ஆனா ஆரணியில பிரகாசத்தை தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க ஏன்னா அவன் அப்போ எம்.எல்.ஏ வா இருந்தான் அதனால் உள்ளூரை சேர்ந்த இவங்களுக்கும் அவன் குடும்பத்தை தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா..?? எங்கே என் முகத்தை பார்த்தா அவனோட பொண்ணுன்னு நெனச்சி என்னை கொண்டு போய் அவன் வீட்ல விட்டு அதனால குழப்பம் ஏற்பட்டு அப்புறம் நான் போட்ட ப்ளான் எல்லாம் சொதப்பிடுச்சின்னா..??? அவனுக்கு நான் அவனை தேடி வந்தது தெரிஞ்ச அப்புறம் நிச்சயம் என்னை உயிரோட விட மாட்டான் அதான் எனக்கு ஸ்கின் அலர்ஜி இருக்கு யாருக்கும் முகம் காட்ட மாட்டேன்..,

முகத்தை பார்த்தா பசங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு அவங்க அக்காகிட்ட சொல்லவும் அவங்க புரிஞ்சிகிட்டு பசங்களை அமைதி படுத்திட்டாங்க... அவங்க ரொம்ப ஸ்வீட்.., சாப்பாடு கூட நான் ட்ரெஸ் மாத்தின ரூம்லேயே சாப்பிட சொல்லிடாங்க... இவர் வரவும் என்கிட்டே சில கேள்விகள் கேட்டு என்னை கூட்டிட்டு சென்னை கிளம்பிட்டார்".

"அப்போ தி சோ கால்ட் லவ்" என்று தொடங்கியவன் சற்று நிதானித்து, ஏன் ப்ரீத்தி அதுக்கு அப்புறம் நீ சரனை திரும்ப பார்க்கலையா...??? அதாவது கண்டதும் காதல் கொண்ட சரணை தேட நீ முயற்ச்சிக்கலையா..?? என்று கேட்ட எழிலின் உட்பொருளை உணர்ந்தவள்

"நீங்களும் எனக்கு இவர் மேல இருக்கிறதை லவ்ன்னு ஏத்துக்க மாட்டீங்களா மாமா..??

"நிச்சயமாக இல்லை" என்று அழுத்தமாக தலை அசைத்தவன், புரியாத வயசுல அந்த வயசுக்கே உரிய ஹார்மன் மாற்றங்களால் எதிர்பாலர் மேல வரக்கூடிய ஈர்ப்புக்கு பேரு காதல் இல்லை ப்ரீத்தி, இட் இஸ் கால்ட் க்ரஷ்... லைக் படத்துல வர ஹீரோஸ் மேல அந்த வயசுக்கே இருக்கிற ஹீரோவர்ஷிப் போல தான் இதுவும்.., அந்த ஆள் பண்ணின எல்லா கேடுகெட்ட வேலைகளை பத்தி தெரிய வந்தப்புறம் இவனை பார்த்த உனக்கு அவன் உன்னை நடத்தின விதத்துல அவன் மேல ஒரு விதமான பிரமிப்பும் ஈர்ப்பும் ஏற்பட்டிருக்கு, கிட்டத்தட்ட ஹீரோவா தெரிஞ்சிருக்கான்.. அப்படி தானே..??? என்று கேட்க,

ப்ரீத்தி பதிலின்றி நின்றாள். எழில் சொல்வது எத்தனை உண்மை என்பதை காலம் கடந்த உணர்ந்திருந்தவளுக்கு அதை மறுக்க தோன்றவில்லை.., ஆம் அவள் கொண்டது நிஜமான காதல் என்றால் அது இந்நேரம் அவனை அவளுடன் சேர்த்து வைத்திருக்குமே..!!! கீர்த்தியாகஅந்த இரு வாரங்கள் இல்லையென்றாலும் தாலி கட்டிய பின்பான நாட்களில் கூட ஒருமுறை ஒரே ஒருமுறை கூட சரண் தன்னை காதலாக பார்த்ததில்லையே..., கர்ப்பிணி என்பதால் அவளை பார்க்கும் அவன் பார்வையில் ஒரு வித பரிதாபமும், அனுதாபமும், பச்சாதாபமும் கலந்திருக்குமே தவிர என்றுமே பார்வையால் கூட அவளை அவன் உரிமையாய் தீண்டவில்லை..., அவன் செய்கையில் அவள் தேடிய காதலும் பாசமும் இல்லாததாலேயே அவனை புறக்கணித்து கலைவாணியுடன் நாட்களை கடத்தினாள் நிஜம் அவ்வாறு இருக்கையில் எழிலிடம் அவள் எதை மறுக்க..!! அதனால் மனம் கனக்க மவுனமாக நிலம் நோக்கினாள்.

தொடர்ந்த எழில், "ஆனா நிஜம் அது இல்லை ப்ரீத்தி..., பிரகாசம் மாதிரி ஆட்கள் மட்டுமில்லை சரண் போன்ற ஆட்களும் கலந்தது தான் உலகம்..!! என்ன நீ வளர்ந்த சூழல் உன்னை அந்த மாதிரி ஆட்களை சந்திக்க பெருசா வாய்ப்பு கொடுத்திருக்காது... அதுக்காக நீ பார்த்தது மட்டுமே உலகம் இல்லையே அப்போ இல்லைன்னா என்ன ஒருவேளை இதுக்கு மேல அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்கலாம்" என்று கூற,

அவன் வார்த்தைகளில் ப்ரீத்தியின் உடல் இறுக தொடங்க மீண்டும் அவள் முகத்தில் அசாதாரண உறுதி படர்ந்தது. சரணும் அவள் முகத்தில் தென்பட்ட மாற்றங்களை அவதானித்து கொண்டிருக்க,

"சின்ன வயசுல கொலை பண்ண துணிஞ்சி இருக்கியே இதை பத்தி உங்க அம்மாக்கு தெரியுமா...?? மாமா உன்னை வீட்ல விட்ட அப்புறம் உங்க அம்மா, டாக்டர் பார்வதி யாரும் உன்னை எங்க போயிருந்தன்னு கேட்கலையா..??? கண்டிக்கலையா..??" என்ற அலரின் மீது பார்வையை திருப்பியவள்,

"இவர் என்னை விட்டுட்டு போகவும் எங்க அம்மா ஒரே அழுகை எங்க போன..?? எதனால் இப்படி பண்றன்னு கேட்க,நான் எதுக்கும் பதில் சொல்லாம அழுத்தமா நின்னுட்டு இருந்தேன்".

என்கிட்டே எதையும் வாங்க முடியாம அவங்க திணறிட்டு இருக்கும்போதே பார்வதி அம்மா எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.. நான் காணாம போனதால எங்க அம்மா அவங்க கிட்ட நடந்த விஷயத்தை சொல்லி நான் பிறக்க காரணமானவன் யாருன்னும் அடியாளம் காட்டி இருக்காங்க... அவன் முகத்தை பார்க்கவும் எந்த ஒரு விளக்கமும் தேவை படாம பார்வதி அம்மாக்கு பல வருஷத்துக்கு முன்னாடி அவன் பண்ணின ஏமாத்து வேலை பித்தலாட்டம் எல்லாம் புரிஞ்சிடுச்சி... அவனுக்கு பிறந்த குழந்தையை நண்பனோட குழந்தைன்னு எப்படி சொல்ல முடிஞ்சதுன்னு முதல்ல அவன் மேல அருவெருப்பு உண்டானது, அடுத்து இன்னொரு குழந்தையான என்னை நிற்கதியா விட்டுட்டு என்னை இந்நிலைக்கு ஆளாக்கிட்டு போனதுல அவங்களுக்கு சரியான கோபம் அதுவும் அன்னைக்கு அந்த பசங்க கூட நடந்த பிரச்சனை எல்லாம் தெரிஞ்சப்போ கொதிச்சி போயிட்டாங்க..."

"நீ எதுக்காக அவனை தேடி போனன்னு அவங்க கிட்ட சொன்னியா...?? அவங்க ஒன்னும் சொல்லலையா..??" என்று மேவாயை வருடியவாறு எழில் கேட்க,

"சொன்னேன் மாமா.., அதை கேட்கவும் அவங்களுக்கு சில நேரத்துக்கு எதையும் பேச முடியல அவ்வளவு அதிர்ச்சி.., அப்புறம் என்கிட்ட நிதானமா உட்காந்து பேசினப்போ நான் என் மனசுல இருக்கிற எல்லாத்தையும் அவங்க கிட்ட கொட்டினேன்... பொறுமையா கேட்டுகிட்ட பார்வதி அம்மா தான் சொன்னங்க நீ மோதுறவன் சாதாரண ஆள் இல்லை.. சூழ்ச்சி, வஞ்சம், பொய், பித்தலாட்டம், ஈவு இரக்கமே இல்லாதவன் அவன் முன்னாடி இப்படி நிற்கதியா போய் நின்னேன்னா உன்னை உரு தெரியாம அழிச்சிட்டு போயிட்டே இருப்பான்... ஏற்கனவே அவன் பதவிக்காக என்னை கொல்ல பார்த்ததும் அவங்களுக்கு தெரியும். அதனால முள்ளை முள்ளால தான் எடுக்கணும் உன்னோட எதிராளி என்ன ஆயுதத்தை எடுக்குறானோ அதை எடுத்து போரிடுவது தான் புத்திசாலி தனம்ன்னு சொன்னங்க...

அவனோட ஆயுதம் என்ன..??? சூழ்ச்சி, வஞ்சம், பித்தலாட்டம், பொய், புரட்டுன்னு எல்லா அயோக்கியதனத்தின் உருவமா இருக்கிறவன் கிட்ட அவன் வழியில போய் ஜெயிக்கணும்ன்னு என் மனசுல ஆழ பதிஞ்சிடுச்சி... அப்போதான் முடிவு பண்ணினேன்..., அவனை புத்திசாலி தனமா தடயமே இல்லாம அணுஅணுவா கொல்லணும்ன்னு..!! அதுவரை பாரும்மா மாதிரியே டாக்டர் ஆகுறது என் கனவா இருந்தாலும் அன்னையில இருந்து வெறியோட படிச்சேன் டாக்டர் ஆகியே தீரனும்ன்னு... ஏன் தெரியுமா..??? என்று அவர்களை பார்க்க,

'ஏன்..??'

"எல்லாரும் மருத்துவத்தை உயிர் காக்கும் தொழிலா நினைப்பாங்க.., எந்த வகையில எல்லாம் ஒரு உயிருக்கு ஆபத்து வரக்கூடும் அதை எந்த முறையில் எல்லாம் தீர்வு கண்டு அந்த உயிரை காப்பத்தலாம்ன்னு தெரிஞ்சிக்க மருத்துவத்தை தேர்ந்தெடுப்பாங்க... ஆனா நான் அவனை எப்படி தடயமே இல்லாம அணுஅணுவா துடிதுடிக்க வச்சி கொல்லலாம்ன்னு தெரிஞ்சிக்கவே மெடிசின் படிச்சேன், தேடி தேடி படிச்சேன்..." என்று கூற,

மூவருக்குமே அதிர்ச்சியில் வார்த்தை எழ வில்லை.

சில நிமிடங்களுக்கு பின் மீண்ட எழில் அவளிடம், "என்ன ப்ரீத்தி இதெல்லாம்..??" என்று கரகரத்த குரலில் கேட்க,

"வேற என்ன இருக்கனும்ன்னு நீங்க எதிர்பார்க்குறீங்க மாமா..???"

"ஏன் இந்த மாதிரி.." என்றவனுக்கு அவளது நிலை புரிந்தாலும் தன் வாழ்வு குறித்து கூட யோசிக்காத அவளது முட்டாள்தனமான பழிவெறி மேல் சிறு எரிச்சல் உண்டாக அதையே அவன் குரலும் பிரதிபலிக்க, உன்னோட லைப் பத்தி யோசிக்க மாட்டியா..???" என்றான்.

கசந்த முறுவலை வெளியேற்றியவள், "நான் ஏற்கனவே சொன்னது தான் மாமா எங்களுக்கு நடந்த அநீதியை கேட்டு பொங்கி எழுந்து யாரும் எங்களுக்காக போராட வருவாங்கன்னு எதிர்பார்க்கிறது முட்டாள் தனம்.. இங்க யாருக்கும் யார் மேலயும் அக்கறை இல்லை எனக்காக நான் தான் போராடனும்..., அது மட்டுமில்லை மாமா அக்கறையோட எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த பார்வதியம்மாவை எந்த சிக்கலிலும் இழுத்து விட நான் விரும்பலை.."

"அதுக்காக இந்த எக்ஸ்ட்ரீம் போவியா..?? அறிவில்லை உனக்கு..???" என்று அவள் முன் வந்து அலர் சீற,


ஹலோ...!! எக்ஸ்கியுஸ் மீ.., ஏன் லாயர் மேடம் போக கூடாது ..??? என்று எள்ளலாய் புருவம் உயர்த்தியவள்,

"என்னவோ இதுவரை ஜுவினைல் ஜெயிலே பார்க்காத மாதிரி பேசுற..?? காலம் மாறுதே தவிர ஆனாதை ஆசிரமங்கள் எண்ணிக்கை குறையல.., எத்தனையோ குழந்தைங்க பிச்சை எடுப்பதில் இருந்து திருட்டு, கடத்தல்ன்னு பல கொடுமைக்கு ஆளாகுறாங்களே யார் காரணம்ன்னு நினைக்கிற..??? பல நேரங்களில் இந்த மாதிரி கேடுகெட்ட ஜென்மங்களால தான் பல குழந்தைகள் வழி தவறி போறாங்க.., அவனுங்களோட வேட்க்கைக்கு நாங்க பலியா...???? என்று சினந்தவள்,

"நீ என்ன சொன்னாலும் சரி இவனை மாதிரி ஆட்கள் எல்லாம் கருவருக்க பட வேண்டியவனுங்க.. என்ன உன் பாட்டி அதை செய்யலை அதான் நான் செய்யறேன் இதுல என்ன தப்பு" என்று கேட்க,

"அதுக்கு தான்..." என்று அலர் தொடங்கவுமே அவளருகே வந்து நின்ற ப்ரீத்தி,

"செல்லம்" என்றிட,

திடீரென்ற அவளது விளிப்பு மாற்றத்தில் திகைத்தவள், "வாட்...??" என்று ஓரடி பின்னே செல்ல,

"உன்னைத்தான் செல்லம்" என்று மீண்டும் அவளை அழைக்க,

"வாட் ரப்பிஷ் இஸ் திஸ் ப்ரீத்தி" என்று வார்த்தைகளை பற்க்களுக்கிடையில் அரைத்து துப்பியவாறு அலர் எழிலை முறைக்க,

"ப்ரீத்தி நாங்க என்ன கேட்டுட்டு இருக்கோம் நீ என்ன பண்ணிட்டு இருக்க..??? வம்பை விலை கொடுத்து வாங்காத, அவ அடிச்சிட போறா இந்த பக்கம் வா" என்று எழில் அழைக்க,

"அட இருங்க மாமா.., தங்கச்சி கிட்ட ரெண்டு வார்த்தை பேசுற உரிமை இல்லையா எனக்கு..??" என்று கேட்க...,

"சொன்னா கேளு ப்ரீத்தி என்றவன் அவள் தன் வார்த்தையை மதிக்காமல் முன்னேறுவதை கண்டு, 'விதி யாரை விட்டது' என்று எண்ணியவனாக அவன் நகர,

"செல்லம் அப்.. என்று தொடங்கியவள் என்ன நினைத்தாலோ ஒரு நொடி இமைகளை மூடி திறந்து "செல்லம் நாதன் உன்னை கண்ணுக்குள்ள பொத்தி வளர்த்து இப்போ வரை உன் கண்ணுல தூசி விழுந்தா கூட துடிச்சி வீசுற காத்துக்கே தடை போடுவாரு உனக்கெல்லாம் அவன் மாதிரி மிருகம் செஞ்ச துரோகத்தையோ என்னோட வலியையோ புரிஞ்சிக்கிறது கஷ்டம், பெட்டர் நீ அமைதியா ஓரமா நின்னு வேடிக்கை பாரு" என்று அவள் கன்னத்தை தட்டி கொடுக்க,

அவள் கரத்தை தட்டி விட்ட அலர், "எங்க அப்பா பத்தின கம்பாரிசன் தேவை இல்லாதது..., ஜஸ்ட் ஷட் அப் அண்ட் கம் டு தி பாயின்ட் ப்ரீத்தி" என்று சிடுசிடுக்க

"ஆனா எனக்கு தோணுதே, அப்பான்னா நாதன் மாதிரி இருக்கனும்ன்னு" என்று முணுமுணுத்தவள், அவள் கோபத்தில் துளிர்த்த புன்னகையுடன் 'ஓகே ஓகே சொல்றேன்' என்றவளின் முகம் பிரகாசத்தை நினைக்கவும் மீண்டும் கடுமையை தத்தெடுத்து,

"அந்த வயசுல
அவனால நாங்க அனுபவிச்துக்கு அவனை துண்டு துண்டா வெட்டி போடனும் என்ற வெறி மட்டுமே இருந்தது ஏன்னா அவன் உயிரோட இருக்க வரை எங்க அம்மாவால அவனை யாருன்னு மத்தவங்களுக்கு அடையாளம் காட்ட முடியாது..., அதே அவன் செத்தா தைரியமா காட்டலாமே எங்க அம்மா மேல இருக்க களங்கம் போகுமே..!! என்னையும் இந்த சமூகம் ஒரு படி கீழ பார்க்காதே.., அது போதாதா..??? அதுக்கு தான் என்னோட போராட்டம்" என்று புருவம் உயர்த்த,

"போராட்டம் தப்பு இல்லை ப்ரீத்தி ஆனா அதுக்காக நீ தேர்ந்தெடுத்த வழி தான் தப்பு" என்ற சரனை பார்த்தவாறு எழில் கூற,

"காதலிலும் போரிலும் எதுவும் தப்பில்லை எல்லாமே நியாயம் தான் மாமா..!!" என்று கண்மூடி திறந்தவள் அன்னைக்கு துரோணாச்சார்யார் கேட்டப்போ அர்ஜுனனுக்கு மரமோ, பழங்களோ, பறவையோ கண்ணுக்கு தெரியலை தன்னோட இலக்கான பறவையின் கண்கள் மட்டுமே தெரிஞ்சது அதுபோல தான் எனக்கும் என்னோட இலக்கான அவனை அவனோட புகழை, பேரை, பதவியைன்னு எல்லாத்தையும் அழிச்சி அவனை உயிரோட பிச்சி பிச்சி போடணும்ங்கிற வெறிக்கு முன்னால எதுவும் தெரியலை என்றவளின் விழிகளில் ஜுவாலை மிளிர தொடர்ந்தவள் அப்படி எனக்கு நானோ இல்லை அவனுக்கு எதிரான என்னோட யுத்தத்துல பாதிக்கப்பட்டவங்க என் கண்ணுக்கு தெரிஞ்சிருந்த நான் நிச்சயம் இதுல இருந்து பின்வாங்கி இருப்பேன் அப்புறம் எப்படி நானும் எங்க அம்மாவும் இத்தனை வருஷம் அனுபவிச்ச வலியை அவனுக்கு உணர்த்த முடியும்..?? ஒவ்வொருநாளும் அணுஅணுவா அவன் துடிதுடிச்சி வாழும் போதே நரகத்தை அனுபவிக்கிறதை பார்த்து நான் ரசிக்கிறது எப்படி..??? எங்களோட கண்ணீருக்கு அவனோட இரத்தத்தை பதிலா வாங்கறது எப்படி..??? என்று குரலில் சிறு பிசிருதட்டாமல் அழுத்தத்துடன் ப்ரீத்தி கேட்க,

"சோ உன்னோட யுத்தம் பிரகாசத்துக்கு எதிரானது ஆம் ஐ ரைட்..??" என்ற அலருக்கு

'ஆம்' என்பதாக ப்ரீத்தியும் தலை அசைக்க,

"இடியட் அப்புறம் இதுல எங்க இருந்து மாமா வந்தாரு..?? எதுக்கு கீர்த்தியையும் அவரையும் பிரிச்ச..??? எதுக்காக ரெண்டு வாரம் அவர் கூட இருந்த..??? அவர் என்ன தப்பு பண்ணினார்ன்னு எல்லார் எதிர்லையும் அவரை அசிங்க படுத்தின..??? இது நிச்சயமா அவரோட குழந்தை இல்லைன்னு எங்களுக்கு தெரியும் அப்புறம் ஏன் அவரை இன்னும் கஷ்டபடுத்துற..??? கீர்த்தி எங்க இருக்கா..??" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே


"ஹே வைட் வைட் இது என்ன கோர்ட் ரூமா இவ்ளோ கேள்வி கேட்கிற..!! கொஞ்சம் மூச்சு எடு அலர்" என்றவள் எழில் புறம் திரும்பி, "எப்படி மாமா சமாளிக்கிறிங்க..??" என்று புன்னகைக்க..,

"அடங்கவே மாட்டியா...??? அவளை சீன்டாதே" என்பதாக எழில் ப்ரீத்தியை பார்க்க,

"அதை டீடைல்லா நான் உனக்கு அப்புறம் சொல்றேன் நீ முதல்ல விஷயத்துக்கு வா" என்று அவள் முகத்தை தன் புறம் திருப்பியவள் மீண்டும், "எதுக்கு மாமாவையும் கீர்த்தியும் பிரிச்..."

"ஹே ஸ்டாப் ஸ்டாப் இது என்ன புது கதை...??? நான் எப்போ அவங்களை பிரிச்சேன் கீர்த்தியையும் இவரையும் பிரிச்சது நான் இல்லை நாங்க பிறக்க காரணமானவன், அவன் இவங்களை பிரிச்சதால தான் இவர் நாட்டை விட்டே போனாரு.., ஆமாவா இல்லையான்னு கேளுங்க..??"

"அது எங்களுக்கு தெரியும் ஆனா அவன் பாரீன் போனதுக்கும் நீ.." என்ற எழிலின் புருவம் நெறிபட அதை நீவி விட்டவாறே, "அப்போ அப்படின்னா அப்போதான் நீ கீர்த்தியா இடம் மாறினியா...??? அவனோட ஊழல், ப்ராபர்ட்டி பத்தின தகவலை ஆதாரத்தோட எடுக்குறது அவ்ளோ சுலபம் கிடையாது வருஷகனக்காகி இருக்கும் அப்படின்னா நீ...??? நீ எப்போ கீர்த்தியா மாறின..??? கீர்த்தியை என்ன பண்ண...???"

"நாட் பேட் மாமா கரெக்டா கெஸ் பண்ணிடீங்க... இந்த இடத்துல உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்ட..??" என்று கேட்க..,

'சொல்லு' என்பதாக அவன் தலை அசைக்கவும்,

"நான் பிறக்க காரணமான *** தன் வாழ்க்கையிலேயே பண்ணின ஒரே நல்லது என்ன தெரியுமா..??? என்று கேட்கவும் அவர்களின் பார்வை அவள் மீது படிய,

"அதாவது எனக்கு பண்ணின நல்லது" என்று அழுத்தமாக மூவரையும் பார்க்க,

'தெரியாது' என்பதாக அவர்கள் பார்க்க,

"இவரையும் கீர்த்தியையும் பிரிச்சது தான்..!!" என்று கண் சிமிட்டி முகம் கொள்ளா புன்னகையுடன் கூற,

அதை எதிர்பாராத அனைவரின் விழிகளும் தெரித்து விழுமளவு விரிந்தது.


ஹாய் செல்லகுட்டீஸ்..,

இதோ "உயிரில் உறைந்த உறவே !!" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... நான் ஏற்கனவே சொன்னது போல முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகளுக்கான பதில் தான் இந்த பாகம்... சோ அதில் ப்ரீத்தி நடந்துகிட்ட முறையால உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதிலை ஒவ்வொரு அத்தியாயத்திலையும் கொடுத்துட்டு வரேன்.. உங்களுக்கு வேற ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க சொல்றேன்... படிச்சிட்டு மறக்காமல் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி

ருத்ரபிரார்த்தனா
நல்ல flowல்ல வேகமாக பயணிக்குது.
வளர்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top