UUU 3 - 8

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
சூப்பர்மா ருத்ரா..நாதன் அப்பா பேசுறது 100% கரெக்ட். இந்த லூசு ப்ரீத்தியை ஓங்கி ஒரு அறையலாம்போல வருது..டாக்டர் மாதிரியா பேசுது..விஷ்வா முதல்ல இந்த லூசை கவுன்சிலிங்க்கு கூப்பிட்டுகொண்டுபோப்பா..
 

Priyaasai

Active Member
உறவு - 8.1

View attachment 10580

விஷ்வா குழந்தையையும் ப்ரீத்தியையும் அழைத்து செல்லவிருக்கும் நேரத்தில் அபசகுனமாக ஒலித்த ப்ரீத்தியின் வார்த்தைகளில் குழுமி இருந்த அத்தனை பேர் முகத்திலும் பேரதிர்ச்சி என்றால் நாதனோ 'ப்ரீத்தி' என்றழைத்து கொண்டே சட்டென இருக்கையில் இருந்து எழுந்து விட்டார். அவரை தொடர்ந்து மற்றவர்களும் எழ,

“வாழ்க்கையை தொடங்கும் முன்னமே இது என்ன அபசகுனமான பேச்சு ப்ரீத்தி” என்று கேட்ட நாதனின் முகம் செந்தணலாய் தகித்து கொண்டிருந்தது.

“வேற எப்படி பேச..??” என்று விழிகளால் விஷ்வாவை பொசுக்கியவாறே கேட்டவள் நாதனிடம்,

“இவன் யாருப்பா என் வாழ்க்கையை முடிவு பண்ண..?? என் வாழ்க்கையை எனக்கு பார்த்துக்க தெரியும் இவன் எப்படி வந்தானோ அப்படியே போக சொல்லுங்க” என்று அவளும் சளைக்காமல் பேச,


‘வாயை மூடு ப்ரீத்தி’ என்ற அவர் கண்டிப்பில் ப்ரீத்தியின் உடல் அன்னிச்சையாய் நடுங்கியது.

அவளை நெருங்கியவர், “யாரை என்ன பேசுறதுன்னு வரைமுறை இல்லையா..?? மாப்பிள்ளை கிட்ட இப்படி தான் மட்டு மரியாதை இல்லாம பேசுறதா...?? எங்கிருந்து கத்துகிட்ட..??” என்று கேட்க,

“என்னப்பா பேசுறீங்க..?? கண்ட கண்ட பொறுக்கியை எல்லாம் மாப்பிள்ளைன்னு சொல்லி..” என்று அவள் முடிக்கும் முன்னமே,

“ப்ரீத்தி” என்ற சீற்றத்துடன் நாதன் அவளை நோக்கி புறங்கையை ஓங்கிட அதை கண்ட ப்ரீத்திக்கு சர்வமும் ஒடுங்கி போனது.

ப்ரீத்தி மட்டுமல்ல அங்கே இருந்த விஷ்வாவும் தான் நாதனின் செய்கையை எதிர்பார்க்காமல் புருவம் உயர்த்தி அவரை பார்த்திருந்தான்.

‘என்னப்பா இது’ என்று கலங்கிய விழிகளுடன் பரீத்தி நாதனை பார்க்க,

மகளின் நடுக்கத்தில் முயன்று தன்னை கட்டுபடுத்திக்கொண்டு கையை கீழே இறக்கியவர், “நீ என்னை அப்பான்னு கூப்பிடறது உண்மைன்னா ஒழுங்கா மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேளு” என்று இறுகிய குரலில் அழுத்தமாக நாதன் உரைக்க,

‘வாட்’ என்று நாதனை பார்த்தவளின் பார்வை மறுகணமே விஷ்வாவின் மீது படிய அவனோ ஒற்றை கண் சிமிட்டி இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்ப அதை கண்டவளோ கண்களை இறுக மூடி “நோ வேப்பா” என்று உரக்க கத்தி இருந்தாள்.

என்ன...??

“முடியாது !! முடியவே முடியாது..!! ப்பா புரிஞ்சிக்கோங்கப்பா அவன் யாரோ..?? எனக்கு அவனை யாருன்னு கூட தெரியாது..??? அவன்கிட்ட போய் என்னால மன்னிப்பு..” என்று உதட்டை கடித்து தன்னை நிலை படுத்தியவள்,

“ வேணும்ன்னா உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் கண்ட..” என்று ஆரம்பித்தவளின் இதழ்கள் நாதனின் பார்வையில் தானாக பூட்டிகொண்டது.

“அவர் யாரோ இல்லை உனக்கு தாலி கட்டின புருஷன் உன் குழந்தைக்கு அப்பா..!! முதல்ல அதை மனசுல பதிய வை, நீ செய்திருக்க குளறுபடிக்கு அவர் இடத்துல நான் இருந்திருந்தா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன் ஆனா அவர் எவ்ளோ பெருந்தன்மையா உனக்கும் சேர்த்து யோசிச்சி எல்லா பழியையும் அவர்மேல போட்டு இருக்கார்... இப்படி ஒருத்தர் வாழ்க்கை துணையா கிடைக்க நீ கொடுத்து வச்சி இருக்கணும், ஆனா அருமை தெரியாம கண்டபடி பேசிட்டு இருக்க" என்றவரின் குரலே அவள் மீதான ஆதங்கத்தை வெளிச்சம் போட்டு காட்ட,

'அப்பா' என்று அவரை பார்த்தவளுக்கு அதற்கு மேல் வார்த்தை எழவில்லை.

"எங்க குடும்பத்துல புருஷனை இப்படி மரியாதைக்குறைவா பேசுற வழக்கம் இல்லை, இப்போவரை நீ பிரகாசத்தோட பொண்ணா தான் எனக்கு தெரியிற" என்று கூறவும் 'ப்பா' என்று அதிர்ந்து அவரை பார்த்தவள் விழிகளில் சட்டென கண்ணீர் கோர்த்துவிட்டது.

'ஆமா' என்று தலை அசைத்து அதை உறுதி படுத்தியவர், "நீ மனசார என்னை அப்பான்னு கூப்பிட்டது நிஜம்ன்னா இனியாவது என் பொண்ணா நடந்து என்னோட கௌரவத்தை காப்பாத்து, யார்கிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியலையா அமுலுகிட்ட கேட்டு கத்துக்கோ ஆனா இன்னொருமுறை நீ மாப்பிள்ளை கிட்ட தரம் தாழ்ந்து பேசுறது பார்த்தா நடக்கறதே வேற” என்று சுட்டு விரல் நீட்டி எச்சரிக்க,

நாதனின் வார்த்தைகள் ப்ரீத்தியின் அடி மனம் வரை சென்று தாக்கியது.

புதிதாக கிடைத்திருக்கும் தந்தையின் அன்பை, அரவணைப்பை இழக்க விரும்பாதவளாக ‘சாரிப்பா இனி பேச மாட்டேன்’ என்று ப்ரீத்தி தலை குனிந்தாள்.

“என்கிட்டே இல்ல மாப்பிள்ளை கிட்ட கேளு” என்று அவள் முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டு அவர் கூற,

“ப்பா ப்ளீஸ் அது மட்டும் என்னால முடியாது... ஆனா நீங்க சொன்ன மாதிரி இனிமேல் அப்படி மரியாதை இல்லாம பேச மாட்டேன்” என்று மெல்லிய குரலில் கூற,

“கொட்டின வார்த்தையை அள்ள முடியாது ப்ரீத்தி உனக்கு தாலி கட்டி குழந்தை வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவரை இத்தனை பேருக்கு நடுவுல பேசினது தப்புன்னு இன்னுமா உணரலை நீ..? உணர்ந்திருந்தா நான் எடுத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லாம நீயா மன்னிப்பு கேட்டிருப்ப" என்று அவளை பார்த்த நாதனின் பார்வையில் அத்தனை குற்றச்சாட்டு.

'ஆனா கட்டின புருஷன் கிட்ட அப்படி என்ன வீம்பு உனக்கு..?? உனக்காக தன்னோட கௌரவத்தை விட்டு கொடுத்து இருக்க மனுஷனுக்கு நீ செய்யற மரியாதை இது தானா..??? என் பொண்ணா இருந்தா முதல்ல இப்படி பேசியே இருக்க மாட்ட' என்றார் குறையாத ஆவேசத்தோடு.

'என் வார்த்தைக்கு மரியாதை இல்லாத உன்கிட்ட இனி பேசுறது வேஸ்ட்' என்று விரக்தியுடன் அவளை பார்த்தவர், உன்னை பெண்ணா ஏத்துகிட்ட பாவத்துக்கு நானே மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேட்குறேன்” என்றிட,

'ப்பா' என்று கண்களில் இருந்து வழிந்த கண்ணீருடன் நாதனை பார்த்த ப்ரீத்திக்கு அவர் வார்த்தைகளில் மனம் அத்தனை ரணமாகி போனது.

நாதனின் பேச்சை கேட்டுகொண்டிருந்த விஷ்வதேவே அவர் வார்த்தைகளில் சற்று ஆடித்தான் போனான்.

அருகே இருந்த எழிலிடம், “என்ன தல இப்படி பேசுறாரு” என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்க,

புன்னகையுடன் அவனை பார்த்த எழில், “அவர் இப்படி பேசலைன்னா தான் நீ ஆச்சர்யபடனும், இதுதான் இவர் கிட்ட எனக்கு பிடிச்சது அதே சமயம் பிடிக்காதது” என்றிட,

திரும்பி எழிலை பார்த்தவன், “தல அப்போ இவர் நல்லவரா..?? இல்லை கெட்டவரா..??” என்று கேட்க,

‘தெரியலையேப்பா..!!’ என்றவனின் இதழ்களோடு சேர்த்து கரங்களும் விரிந்திட சட்டென சிரித்துவிட்டான் விஷ்வதேவ்.

*

“நீ எத்தனை தப்பு பண்ணி இருந்தாலும் அதுக்கு எல்லாமே அப்பா இல்லாம நீ வளர்ந்த சூழலால தான்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா.." என்று ஆரம்பித்தவர் தலையை இருபுறமும் மறுப்பாக அசைத்து கொண்டே,

"இதையெல்லாம் சொன்னா மட்டும் நீ மாறிடவா போற, என்ன இருந்தாலும் என் பொண்ணு இப்படி அடுத்தவங்க எதிர்ல என்னை தலை குனிய வைக்கமாட்டா” என்று அவர் முடிக்கும் முன்னமே கண்களை அழுந்த துடைத்து கொண்டு தன் கையில் இருந்த குழந்தையை அவரிடம் கொடுத்தவள்,

நேரே விஷ்வாவிடம் சென்று, இரு கரங்களையும் அடித்து கூப்பி “நான் பேசினது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க சார்” என்று மன்னிப்பு வேண்டியவள் “இது எங்க குடும்ப விஷயம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது இதை நாங்களே பேசி தீர்த்துக்கிறோம் நீங்க கிளம்புங்க” என்று அப்போதும் குறையாத காரத்தோடு விஷ்வாவை தன் வாழ்வில் இருந்து ஒதுக்க முற்ப்பட,

“ப்ரீத்தி இங்க எல்லாருமே உன் வாழ்க்கைக்காக தான் பேசிட்டு இருக்கோம் ஆனா இது என்ன முட்டாள் தனமான பேச்சு இப்போ எதுக்கு விஷ்வாவை கிளம்ப சொல்ற” என்று எழிலும் தன் அதிருப்தியை தெரிவிக்க,

“வேண்டாம் மாமா இது சரிபடாது அவரை கிளம்ப சொல்லுங்க” என்று சுவரை வெறித்து கொண்டு கூற,

‘எப்படி சரிபடாது’ என்று கேட்டவாறு அவளருகே வந்த அலர்,

"நீ சுயநலவாதின்னு தெரியும் ஆனா இந்த அளவுக்கா..??" என்று விழி விரித்து வியக்க,

'என்ன சொல்ற..??'

“பின்னே அன்னைக்கு மாமா குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டு போன பிறகு குழந்தையோட வாழ்க்கையை பாழாக்கிட்டேன்னு என்னென்னமோ சொல்லி கதறின ஆனா இப்போ அதுக்கு அப்பா விஷ்வான்னு தெரிஞ்ச பிறகு அவர் தாலியையும் வாங்கிட்டு இப்போ வாழ முடியாது, அவரை கிளம்ப சொல்றியே இதுக்கு பேர் என்ன..??” என்று கேட்க,

“அலர் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ நான் தான் அப்படி ஒரு வாழ்க்கையே வேண்டாம்ன்னு சொல்றேனே..!! நான் அதுக்கு தகுதியானவளும் இல்லை ஆனா ஏன் எல்லாரும் என்னை கட்டாயபடுத்துறீங்க... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என... எனக்கு இப்பதான் அப்பா கிடைச்சி இருக்காரு யாருக்காகவும் நான் அவரை இழக்க விரும்பலை கடைசி வரை நான் என் அப்பாக்கு பெண்ணாவே இருந்துடுறேன் எனக்கு யாரும் வேண்டாம்” என்று உறுதியாக ஆரம்பித்தவள் விசும்பலுடன் முடித்தாள்.

“இது தான் இதுக்கு பேர் தான் சுயநலம்ன்னு சொல்றேன் இடியட்” என்று அலர் அவளை கடிய,

“இத்தன வயசுலயும் உனக்கு அப்பா வேணும் ஆனா குழந்தைக்கு அப்பா வேண்டாமா ப்ரீத்தி ...??? என்று எழில் நிதானமான குரலில் கேட்க,

இதழ்களை மடித்து கொண்டு நின்றவள் தன் மனதை கல்லாக்கி கொண்டு, "வேணும்ன்னா குழந்தையை அவங்க அப்பா கூடவே அனுப்பிடுங்க மாமா ” என்று கூற,

'வேண்டாம் ப்ரீத்தி !! கண்டிப்பா இப்போ இருக்க கோவத்துக்கு நான் உன்ன அறைஞ்சிடுவேன்" என்று கையை ஓங்கி கொண்டு அலர் முன்னேற அவளை தடுத்து பிடித்த எழில்,

" ப்ரீத்தி என்ன உளறல் இது ..?? என்று கண்டித்தவன் இங்க பாருமா அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் தப்பா தான் இருக்கும். விஷ்வா கிட்ட உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சொல்லு பேசி தீர்த்துக்கலாம் அதை விட்டுட்டு விவாகரத்து, குழந்தையை அனுப்புங்கன்னு அர்த்தமில்லாம பேசாத..??" என்ற எழிலிடமும் அடக்கப்பட்ட கோபம்.

“ஏய் உனக்கு குழந்தை என்ன அவ்ளோ விளையாட்டா போயிடுச்சா..?? ஆரம்பத்தில இருந்தே அதை பணயமா வச்சி நீ எத்தனையோ நடத்தி முடிச்சிட்ட ஆனா இப்பவும் அதை பத்தி யோசிக்காம அதோட அருமை தெரியாம ச்சை" என்று வெறுத்து போனது அலருக்கு.

இனியும் இவளிடம் பேசி உபயோகம் இல்லை என்பதால் எழிலிடம், “மாமா இதுக்கு மேல யார் பேசினாலும் அவ புரிஞ்சிக்க மாட்டா, யாரோட வார்த்தையும் மதிக்க மாட்டேன்னு சொல்றவ கிட்ட உனக்கு என்ன பேச்சு நீ தலையிடாத வா” என்று அழைக்க,

“அமுலு இது ப்ரீத்தியோட முடியறது இல்லை”

“அது உனக்கும் எனக்கும் தெரிஞ்சா போதுமா..?? நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்கிற யாராவது பிறந்து ரெண்டு நாளே ஆன சிசுவை இப்படி அனுப்புறேன்னு சொல்லுவாங்களா..??? ” என்று எழிலிடம் சீற,

“ஏன் எங்க அம்மா கீர்த்தியை அனுப்பலையா..??” என்றாள்

“முட்டாள் மாதிரி பேசாத ப்ரீத்தி, உன்னோட சூழலும் உங்க அம்மா சூழலும் ஒண்ணா அவங்க அறியாமையால குழந்தையை இழந்தாங்க நீ ஆணவத்தால இழக்க பார்க்கிற” என்று அலர் கூற,

கலங்கி நிற்கும் ப்ரீத்தியின் உணர்வுகளை ஓரளவு யூகித்த எழில் அவளருகே சென்று தலையை வருடிய கொடுத்து, “ப்ரீத்தி உனக்கான தண்டனையா நீ நினைக்கிறது உங்கம்மா இடத்துல உன்னை கொண்டு நிறுத்துறது இல்லை, அப்படி செஞ்சா அது குழந்தையை பாதிக்கும் அது தப்புன்னு உனக்கு புரியலையாமா.. இதுக்காகவா நீ இவ்ளோ நாள் போராடின, இதுவா நீ ஆசைப்பட்ட வாழ்க்கை..??" என்று கேட்க கண்ணீரை உள்ளிழுத்தவாறு வெறுமையாக அவனை பார்த்தாள்.

"நீ ஒன்னும் முட்டாள் இல்லை ப்ரீத்தி உனக்காக இல்லாட்டியும் குழந்தைக்காக இந்த வாழ்க்கையை ஏத்துக்க முயற்சி பண்ணு அது தான் புத்திசாலிதனம், உன்னோட பிடிவாதத்தால குழந்தையோட எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்கிடாத..!!"

"இப்போ நீ பேசினது அர்த்தமான பேச்சான்னு நீயே யோசிச்சி பாரு அன்னைக்கு கீர்த்தியை வளர்க்க தீபிகா மாமி இருந்தாங்க”

“அப்போ விஷ்.. என்று ஆரம்பித்தவள் ஒரு கணம் கண்களை மூடி திறந்து விஷ்வாவை பார்த்தவள்,

"அவரையும் வேற பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க என்னை விட்டுடுங்க" என்று கை கூப்ப, அது நேரம் வரை ஹாலின் ஓரத்தில் கண்ணீருடன் அனைத்தையும் அமைதியாக கேட்டுகொண்டிருந்த வசுமதி ப்ரீத்தியின் வார்த்தைகளில் ஓடோடி வந்து அவள் காலிலேயே விழுந்துவிட்டார்
.
Super
 

Rudraprarthana

Well-Known Member
சூப்பர்மா ருத்ரா..நாதன் அப்பா பேசுறது 100% கரெக்ட். இந்த லூசு ப்ரீத்தியை ஓங்கி ஒரு அறையலாம்போல வருது..டாக்டர் மாதிரியா பேசுது..விஷ்வா முதல்ல இந்த லூசை கவுன்சிலிங்க்கு கூப்பிட்டுகொண்டுபோப்பா..
ப்ரீத்தி அவளுக்கான தண்டனையை அனுபவிக்க நினைக்கிறா.. மிக்க நன்றிகள் சாலாம்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top