UUU - 3 முன்னோட்டம் 2

Advertisement

Priyaasai

Active Member
View attachment 10470

இரவு முழுக்க அழுகையில் கரைந்தவள் எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் உறங்கிய சில மணி நேரங்களிலேயே கண்ட கனவின் விளைவாக அடித்து பிடித்து எழுந்தமர்ந்தவளின் முகத்தில் அத்தனை பதற்றம். முகம் வியர்வையில் குளித்திருக்க அருகே மேஜையில் இருந்த நீரை எடுத்து பருகியவள் அப்படியே சுவரோடு சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

துரத்தும் நினைவுகளை மறக்கும் வழியறியாது தவித்தவள் மெல்ல அதை கட்டுபடுத்தும் முயற்சியாக கவிழ்ந்து படுத்து தலையணையில் முகம் புதைக்க அவள் விழிகளோ அனுமதியின்றியே மீண்டும் கண்ணீரை மாரியாக பொழிய தொடங்கி இருந்தது.

எத்தனை நேரம் அதே நிலையில் இருந்தாளோ மெல்ல அறையில் பரவிய வெளிச்சம் கண்களை கூச செய்த நிலையில் திரும்பி பார்த்தவளின் பார்வையில் சட்டையை கழற்றி மாட்டிகொண்டு இருந்த சரண் விழுந்தான். உடனே வாரி சுருட்டி கொண்டு எழுந்தமர்ந்து கண்ணீரை துடைத்தவாறே அவனை பார்த்தவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை ஆவேசம் வந்ததோ உடனே எழுந்து அவன் முன் சென்று நின்றவள்,

'உங்க கிட்ட பேசணும்' என்றாள் கரகரத்த குரலில்


தன் வழியை மறித்து நிற்ப்பவளை ஒரு கரம் கொண்டு விலக்கி சென்ற சரணோ ஒரு டீசர்ட்டை எடுத்து போட்டுகொண்டு தன் கணினியோடு நாற்காலியில் அமர்ந்தவன் அதை இயக்கி தன் வேலையை தொடங்கி இருந்தான்.

'உங்ககிட்ட தான் மாமா பேசிட்டு இருக்கேன்' என்று திரும்ப கீர்த்தி அவனை அழைக்க,

நிமிர்ந்து அழுத்தமாக அவளை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவே..!!

அதையே தன் பேச்சை கேட்பதற்கான சம்மதமாய் எடுத்து கொண்டவள் அவனிடம், "நேத்து எங்க போயிருந்தீங்க..??" என்று கேட்க,

அவனோ அவள் கேள்வியை அலட்சியபடுத்தி மேஜையில் எதையோ தேடி கொண்டிருந்தான்.

"உங்களை தான் மாமா கேட்கிறேன் பதில் சொல்லுங்க"

"நீ கேட்டு நான் பதில் சொல்லவேண்டுமா..??" என்ற தோரணையில் அவள் புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தான் சரண்

அவனிடம் பதில் எதிர்பார்த்து நின்ற கீர்த்திக்கு நிமிடங்கள் பல கடந்தும் தொடரும் அவன் புறக்கணிப்பு வலியை ஏற்படுத்தினாலும் முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டவள் மீண்டும் அவனிடம், "சொல்லுங்க மாமா....??" என்றிட,

'ப்ச்' என்று சலித்தவாறே அவள் புறம் திரும்பியவன் 'எதுக்கு நசநசங்கிற, வேலை இருக்கு வெளியே போ' என்று கூறியவனின் முகத்தில் நொடிக்கு நொடி கடுமை அதிகரித்திருந்து.

அவன் கடுமையில் உடல் அதிர்ந்தாலும் அதை வெளிபடுத்தாமல் மீண்டும் அவனிடம் 'நேத்து எங்க போனீங்க..??' என்று கேட்க,

ஆச்சர்யமாக அவளை பார்த்தவன் இதழ்க்கடை மெல்ல வளைய 'அதை கேட்க நீ யார்..??' என்றான் முகத்தில் படர்ந்த குறுநகையுடன்.

அவன் கேள்வியில் அடிபட்ட பார்வையை அவன் மீது செலுத்தினாலும் தைரியத்தை வரவழைத்தவளாக, "நான்... நான் யார்ன்னு சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க" என்றாள்.

பின்னங்கழுத்தை வருடியவாறே "அதை ஏன் உங்கிட்ட சொல்லனும்" என்றான்.

நேற்று முழுக்க அவனை பற்றி எந்த தகவலும் தெரியாமல் அவள் பட்ட பாட்டை அவள் தானே அறிவாள், இது எதையும் புரிந்து கொள்ளாமல் தன்னை வதைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுபவனை தடுக்க முடியாமல் பார்த்தவள், "என்கிட்டே தான் மாமா சொல்லணும்... உங்களை கேட்க எனக்கு உரிமை இருக்கு"

'அப்படியா..??' என்று ஒற்றை புருவம் உயர்த்தி நிறுத்தியவன், 'எப்படி வந்தது அந்த உரிமை..??' என்று அவளை பார்க்க

இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று உள்ளுக்குள் மருகியவள், "நான் உங்க மனைவி, இது கொடுத்த உரிமை" என்று அவன் கட்டிய தாலியை அவன் முன் உயர்த்தி பிடிக்க

'ஓஓஒ' என்று புருவ தூக்கல் மட்டுமே அவனிடம்,

தாடையை நீவியவாறே கீர்த்தியை பார்த்தவனின் பார்வை அவளை கொன்று கிழிக்க அதை எதிர்கொள்ள முடியாமல் கீர்த்தி தலை குனிய,

"யாரு நீ பொண்டாட்டியா..??" என்றவாறே கணினியை மூடி வைத்தவன் கைவிரல்களை கோர்த்து நெட்டி முறித்தவாறே எழுந்து நிற்க அவன் செயலில் கீர்த்தி அன்னிச்சையாக பின்வாங்கினாள்.

ஆனால் மறுநொடியே அவளை இழுத்து இடையோடு இறுக்கி பிடித்து அணைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து, "பொண்டாட்டிக்கான அர்த்தம் தெரியுமாடி உனக்கு..?? என்று கேட்க அவன் விழிகளில் அத்தனை வெறுப்பு மண்டி கிடந்தது.

"ம.. மா.." என்று இதழ்களை துடிக்க கீர்த்தி அவனை பார்க்க

அவள் தாடையை பற்றியவன், "இன்னைக்கு வரை உங்கப்பனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த உன்னோட கடமையை செய்ய மாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டு உரிமையை மட்டுமே பேசுற நீ எனக்கு பொண்டாட்டியா..? என்று அடக்கப்பட்ட ஆவேசத்துடன் அவன் கேட்க,

தந்தையின் பேச்சை எடுத்ததுமே அவளுக்கு முதுகு தண்டு வடம் சில்லிட்டு போக, "நா.. நான் எங்கப்பா.. இல்லை அப்ப.." என்றவளுக்கு வார்த்தைகளும் தந்தி அடிக்க தொடங்க அச்சம் மேவிய விழிகளுடன் அவனை பார்த்தவள் , "இங்க வந்ததுல இருந்து நான் என்.. என்னோட கடமையை ஒழுங்கா தான் செய்யறேன் மாமா ஆனா..." என்று என்ன முயன்றும் முடியாமல் சிறு கேவலுடன் அவள் நிறுத்த,

அது நேரம் வரை இறுகிய முகத்துடன் அவளை பார்த்து கொண்டிருந்தவன் அவள் பதிலில் அடக்கமாட்டாமல் சிரிக்க தொடங்கி இருந்தான் சரண்..

அவன் சிரிப்பு எதனால் என்று புரியாது போனாலும் அது அவளை பலமாக தாக்க மனதில் எழுந்த வலியுடன் அவனை பார்த்தாள் கீர்த்தி.

"ஏன்டி உங்கப்பன் கிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்த.., அன்னைக்கு சொன்ன மாதிரியே இன்ன வரை கன்னியா இருக்க நீ பொண்டாட்டியா உன் கடமையை ஒழுங்கா செய்யறேன்னு சொல்றது உனக்கே வேடிக்கையா இல்லை" என்று கேட்க

விழித்திரையை நிறைத்த கண்ணீருடன் அவனை பார்த்த கீர்த்தியிடம் கனத்த மௌனம் மட்டுமே..!!

****

வேண்டுமென்றே அவளை நோகடிக்க அவன் பேசுவதை கண்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் "ப்ளீஸ் மாமா, நீங்க ஏன் ..." என்று ஆரம்பித்தவளின் வார்த்தைகள் சரணின் குரலில் நின்று போனது.

"குழந்தை வேணும்ன்னா பெத்துக்கோ யார் உன்னை தடுத்தா..??" என்று சரண் அவளை பார்க்க,

"அர்த்தத்துடன் தான் பேசுகிறானா இவன்" என்று கீர்த்தி பார்க்க

"ஏன்டி குழந்தையும் வேணும் நான் சொல்றதையும் கேட்க முடியாதுன்னு சொல்றவளுக்கு என்னை விட குழந்தை தான் முக்கியம்ன்னா தாராளமா பெத்துக்கோ. அதை தடுக்க நான் யார்..??" என்றவாறே எழுந்து நிற்க,

அவனது மாற்றத்தில் அதிர்ந்து நின்ற கீர்த்திக்கு வார்த்தை வசப்படாது போக "என்ன... அப்போ மாமா நீங்க" என்று இதழ்கள் துடிக்க அவனை பார்த்தவளிடம்

"உங்க குடும்பத்துக்கு ஐவிஎப் எல்லாம் புதுசா என்ன..?" என்று எள்ளலாக அவளை பார்த்தவன்,


"உனக்கு குழந்தை அவ்வளவு முக்கியம்ன்னா தாராளமா ஐவிஎப் பண்ணிக்கலாம் ஆனா இந்த முறையும் டொனேட் பண்ண நான் அதே இளைச்சவாயான் சரண் கிடையாது" என்று இரக்கமே இல்லாமல் வார்த்தைகளால் அவள் உயிரை குடித்து வெளியேறி இருந்தான் சரண்.

ஆனால் தலையில் யாரோ கூடை தணலை கொட்டியது போல துடிதுடித்து போன கீர்த்திக்கு நெஞ்சை அடைத்து கொண்டு வர மடங்கி அமர்ந்தவளிடம் அசைவற்று போனது.
Super
 

Rudraprarthana

Well-Known Member
சரண் என்ன இப்படி படுத்தி எடுக்கிறான் கீர்த்தியை..இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லாயில்லை..கீர்த்தி பாவம் இல்லையா..
நிச்சயமா சாலாம்மா ஆனால் நடந்த விடயங்கள் அப்படிப்பட்டது ஆகிற்றே... மிக்க நன்றிகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top