UUU - 11

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
யம்மா கீர்த்தி என்ன பொண்ணும்மா நீ…இப்படியே திக்கிக்கொண்டு கிட…
பாவம் சரண்..எப்படித்தான் பொறுத்துக்கொள்ளப்போறானோ…நீ எந்த காலத்துக்கு திக்காம மாமா ன்னு கூப்பிட்டு ..பிள்ளை குட்டி பெத்து..யப்பா இப்பவே கண்ணை கட்டுதே..
சூப்பர் எபி ருத்ரா..
 

Priyaasai

Active Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

கதைக்குள் செல்வதற்கு முன் ஒரு சின்ன விளக்கம். தன்னோட இருக்கிறது கீர்த்தி இல்லை ப்ரீத்தின்னு சரண் கண்டு பிடிச்ச அன்னைக்கு தான் ப்ரீத்தி அவளோட பிளாஷ்பேக் ஒரு நைட் முழுக்க சொல்லுவா அடுத்த நாள் காலையே சரண் கீர்த்தியை தேடி புறப்பட்டு பெங்களூர் போய் அதற்க்கு அடுத்த நாள் காலை வளைகாப்பிற்கு கீர்த்தியோட வந்திருப்பான். அன்னைக்கு மாலை நாதன் ஒரு நாள் இடைவெளியில் இவங்களோட திருமணத்தை நடத்த முடிவு செய்து இருப்பார். சோ பல வருஷம் கழிச்சி சந்திக்கிற சரண் கீர்த்தி இடையில் இன்னும் எதுவும் பேசி தீர்க்கபடாமலே அவங்களோட கல்யாணம் கீர்த்தி வேண்டாம்ன்னு மறுத்தும் நடந்துடுச்சி.

ஆரணியில இருந்து கிளம்பும் போது கீர்த்திக்கு எதுவும் தெரியாதுன்னு சரண் நினைச்சிருக்க போற வழியில தான் எல்லாமே அவளுக்கு தெரிஞ்சு நடந்தது ஆனா எதையும் அவனுக்கு தெரியவிடாம பண்ணின கீர்த்தி சைந்தவியையும் சொல்லவிடாம கட்டி போட்டு இருக்கான்னு அப்போ தான் தெரியும். அதேபோல சரனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டு போன ப்ரீத்தி அங்க சரண் கிட்ட நடந்துகிட்ட விதம் பத்தி கீர்த்திக்கும் சரண் சொல்லி தான் தெரியும் நிலைமை இப்படி இருக்கப்போ பாகம் 3 ஆரம்பிச்சதுமே ரெண்டு பெரும் நார்மலா இருக்கிறது சாத்தியம் இல்லை.

ஒருவேளை ஒரு வாரம் ஒரு மாதத்திற்கு பின் திருமணம் நடப்பதாக இருந்தால் கூட இவங்க மனநிலை வேற மாதிரி இருக்கும். பலருக்கு சரண் ஏன் இப்படி கோபமாவே இருக்கான் கீர்த்தி ஏன் இப்படின்னு ஆதங்கம் இருக்கு அது உங்கள் கருத்துக்களில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன தான் மனித மனம் மாறுதலுக்கு உட்பட்டது என்றாலும் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது அல்லவா..!! அதனால் ஆனா மனசுல வச்சிட்டு கதையை தொடர்ந்து வாசிக்கும் போது உங்களால ஏன் கதை இப்படி நகருதுன்னு கனெக்ட் பண்ணிக்க முடியும்ன்னு நம்பறேன்
.

இப்போ கதைக்குள்ள போகலாம் வாங்க...

View attachment 10636


உறவு - 11.1

என்னதான் வளர்மதியின் வார்த்தைகளில் தெளிவு பெற்றிருந்தாலும் சரணை அழைக்க வேண்டி கிளம்பியவளுக்கு உள்ளுக்குள் உதறத்தான் செய்தது. இருவருமே ஒத்த ரசனை, ஒத்த கருத்து கொண்டிருப்பவர்கள் என்பதால் அவர்கள் காதலித்த போது இருவரிடையில் பெரிதாக வாக்குவாதமோ, கருத்து பேதமோ, சண்டையோ இருந்ததே இல்லை வழக்கமாக எதிர் எதிர் துருவங்கள் தான் ஈர்க்கும் என்பர் ஆனால் இவர்கள் விடயத்தில் அது நேரெதிர்.

அதனால் ஊடல் கொண்டு பேசாமல் இருந்ததோ ஒருவரை ஒருவர் சமாதனபடுத்துவது என்பதோ பெரிதாக நிகழ்ந்தது இல்லை. சில நேரம் கீர்த்தி ஏதேனும் புரியாமல் பேசினால் கூட சரண் பக்குவமாக எடுத்து கூறும் விதத்திலேயே அவன் வழிக்கு வந்து விடுவாள், அதனால் இப்போது புதிதாக ஊடல் கொண்டு விலகி சென்று இருப்பவனை என்ன செய்து சமாதனபடுத்துவது என்று புரியாமல் அவளுள் கடும் போராட்டம்.

வளர்மதி கூறியது போல வேறு பெண்ணை திருமணம் செய்ய சொன்ன தன் வார்த்தைகள் அவனை எத்தனை காயபடுத்தி இருக்கும் என்று இப்போது நினைத்து பார்க்கையில் கீர்த்திக்கு புரிய தன் மீதே கோபம் எழுந்தது.

அசட்டுதனத்திற்கும் அளவுண்டு..!!

உருவ ஒற்றுமையை கொண்டு ஒருத்தி அவனோடு ஒரே வீட்டில் இருந்த போதும் அவளை ஏற்காதவனா தான் கூறியதற்காக இனியும் இன்னொருத்தியை மணம் புரிவான் என்ற கேள்வியை தன்னையே கேட்டுக்கொள்ள நிச்சயம் வாய்ப்பு இல்லை என்று மனசாட்சியும் எடுத்துரைக்க இனியும் இதுபோல அசட்டுத்தனமாக நடக்ககூடாது என்று தனக்குள் உறுதி மொழி எடுத்து கொண்டவள், அவள் விரும்பிய சரனுடனே காலம் தன்னை பிணைத்திருக்கும் நிலையில் அதை மறுப்பதும் இழப்பதும் எத்தனை அபத்தம் என்று புரிந்தது.

ஆனாலும் கோபமாக சென்றிருப்பவனை எவ்வாறு சமாதானபடுத்துவது என்று நினைக்கும் போதே பதட்டம் அதிகரித்து உள்ளங்கைகள் வியர்க்க தொடங்க அதை முந்தானையால் அழுந்த துடைத்தவாறே சரணை தேட தொடங்கினாள்..

வளர்மதி சரண் வெளியே இருப்பதாக கூறியதில் கீழே முழுக்க தேடியும் அவன் எங்கும் இல்லாது போக வாசலுக்கு வந்திருந்தாள் அங்கும் அவன் இல்லாமல் போக மேல் தளத்திற்கு சென்றவள் எங்கும் அவனை காணாது குழம்பி நின்றாள்.

அப்போது தான் மேலிருந்து ஏதோ மூட்டையை எடுத்து கொண்டு வந்த வெற்றி, "என்ன தேடற கீர்த்தி...?? என்ன வேணும்" என்றான்,

"அண்ணா மாமா.. மாமாவை தேடி வந்தேன் ஆனா அவர் எங்கயும் காணலை" என்றிட

"யாரு எழிலையா கேட்கிற..??"

"ப்ச் எழில் மாமாவை இல்லைண்ணா"

"வேற யார் ராஜேஷா..?? அவன் இப்பதான் நீலா அத்தையை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு போயிருக்கான்"

"ஐயோ அண்ணா அவரும் இல்லைண்ணா"

"வேற யார் உனக்கு மாமா..??" என்று வெற்றி புரியாமல் கேட்க,

"அண்ணா, அது நான் என் வீட்டுக்காரரை தான் மாமான்னு சொன்னேன்" என்றபோதே இதழ்கள் அழகாய் விரிய,

"அப்படியா..??? இது எப்போதில் இருந்து" என்று அவன் பார்க்க,

"அய்யோ இப்போ அதுவா முக்கியம், நான் எல்லா இடத்திலும் தேடிட்டேன் எங்கயும் காணலை நீங்க அவரை எங்கயாவது பார்த்தீங்களாண்ணா..??"

"இல்லையேமா, என்ன விஷயம்" என்றான்.

"அவர் இன்னும் சாப்பிடலைண்ணா அதான் கூட்டிட்டு போக வந்தேன்"

நேரத்தை பார்த்து 'இன்னுமா சாப்பிடலை..??' என்றவன்

"சரணுக்கு ஒரு போனை பண்ணி கேட்டா எங்க இருக்கான்னு தெரிய போகுது, எதுக்கு சுத்திட்டு இருக்க போன் பண்ணி கேளு" என்றான்.

அப்போது தான் சரணின் புது நம்பர் அவளிடம் இல்லை என்பதே புரிய தயக்கத்துடன் அவனை பார்த்தவள், "மாமா நம்பர் என்கிட்ட இல்லைண்ணா" என்றாள் இறங்கிய குரலில்.

சரண், கீர்த்தி, ப்ரீத்தி விடயங்கள் அவனுக்கு முழுதாக தெரியாவிட்டாலும் அன்று வளைகாப்பில் ஓரளவிற்கு தெரிய வந்ததில் அவளிடம் மேலும் எதையும் கேட்காமல், "சரி சரி இரு நான் பண்றேன்" என்று சரணுக்கு அழைத்து,

"எங்க இருக்க சரண்..??" என்றான்.

"வெளியே இருக்கேன் வெற்றி"

"வெளியேன்னா எங்க..??"

நாதன் தெருவில் இருந்து சில அடி தூரம் இருக்கும் மரத்தடியில் இருப்பதாக கூறியவன், எதுக்கு கேட்குறீங்க வெற்றி..? என்றான்

'சொல்றேன், சொல்றேன் ' என்று கைபேசியை அணைத்தவன் கீர்த்தியிடம் சரண் இருக்கும் இடத்தை கூற,

'தேங்க்ஸ்ண்ணா' என்றவள் உடனே வேகவேகமாக மாடியில் இருந்து இறங்கி வெளி வாசலுக்கு வந்தவள் அங்கு அமர்ந்திருந்த நாதனின் கேள்விகளுக்கு பதிலளித்து வெளியே வர நாதனின் வீட்டு வாசலில் இருந்து தூரத்தில் சரணும் விஷ்வாவும் நின்று கொண்டிருப்பது தெரிய அவர்களை நோக்கி சென்றவளின் நடை அருகே செல்லவும் தடைபட்டு போனது.

ஆம் !! விஷ்வாவிடம் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்த சரண் முகத்தில் தென்பட்ட இறுக்கம் இப்போது அங்கு செல்வதா வேண்டாமா என்ற கேள்வியை எழுப்ப முன்னேறாமல் அங்கேயே நின்றுவிட்டாள். அதிலும் இருவரும் ஏதோ முன்பே அறிமுகமானவர்கள் போல வெகு சகஜமாக பேசி கொண்டு இருப்பதை கண்டவளுக்கு ஆச்சர்யம்.

எத்தனை நிமிடம் நின்றிருந்தாளோ திடிரென யாரோ தோளை தொடவும் தூக்கி வாரி போட திரும்பி பார்த்தாள், வெற்றி தான் நின்றிருந்தான்.

"நீங்களாண்ணா பயந்தே போயிட்டேன்" என்று நெஞ்சில் கரம் பதித்து சீரற்ற மூச்சுக்களுடன் கேட்க,

"அவ்ளோ வேகமா கிளம்பின இப்போ இங்கயே நின்னுட்டு இருக்க என்ன ஆச்சு...??"

"இல்லைண்ணா அவரு..., அவர் அங்க பேசிட்டு இருக்காங்க அதான்" என்றவளின் தயக்கத்தை கண்டு கொண்டவன்,

"அதுக்காக கல்யாண மாப்பிள்ளைக்கு மதிய சாப்பாடா போட முடியும் மணி பதின்னொன்னு ஆகியும் மாப்பிள்ளை சாப்பிடலைன்னு மத்தவங்களுக்கு தெரிஞ்சா என் நைனா கவுரவம் என்ன ஆகுறது நீ வா" என்று அவள் கையை பிடித்து கூட்டி கொண்டு சரண் எதிரே நிற்க அப்போது தான் தனக்கு வந்த அழைப்பை கண்டு,

'ஒரு நிமிஷம் ப்ரோ' என்ற விஷ்வா அழைப்பை ஏற்றவாறு தள்ளி சென்றான்.

விஷ்வா நகரவும் 'சரண்' என்று அழைத்தவாறே கீர்த்தியோடு வெற்றி வந்து நிற்க தன் எதிரே நின்றவளை திரும்பியும் பாராமல் வெற்றியிடம், "என்ன விஷயம் வெற்றி கூப்பிட்டு இருந்தீங்க" என்றிட,

அதுவரை தைரியமாக வந்தவளுக்கு இப்போது சரணின் பாராமுகம் இதயத்துடிப்பை எகிற செய்ய, முந்தானையை இருவிரல்களில் பிடித்து திருகியவாறே படபடப்பை மட்டுபடுத்த முயன்றவள் உள்ளங்கைகள் வியர்க்க தொடங்க அதை துடைத்தவாறே அவன் பார்வைக்காக காத்திருக்க தொடங்கினாள்.

"இன்னும் நீ சாப்பிடலைன்னு சொல்லி கீர்த்தி உன்னை தேடிட்டு இருந்தா அதுக்கு தான் கால் பண்ணேன்" என்றவன் "என்ன பார்த்துட்டு இருக்க கூப்டுட்டு போ" என்று அங்கிருந்து கிளம்ப,

திருமணத்திற்கு பிறகு கூட இவளுக்கு தன்னை சந்திக்க ஒரு துணை தேவைபடுகிறதா என்று ஏற்கனவே அவள் வளரம்தியை உடன் இருக்க சொன்ன கோபத்தில் இருந்தவன் இப்போது வெற்றியை அழைத்து கொண்டு வந்திருந்ததை கண்டு அவன் கோபம் அதிகரித்து இருந்தது.

செல்லும் வெற்றியையே பார்த்து கொண்டு நின்ற சரணை கீர்த்தி "மா...மாமா " என்று எச்சில் கூட்டி விழுங்கியவாறு அழைக்கவும்,

அவள் புறம் திரும்பியவன் எடுத்ததுமே, "எதுக்குடி இங்க வந்த..?? என்று சீறியவன், நீ பேசினதுலயே மனசு நிறைஞ்சிடுச்சி இதுல சாப்பாடு ஒன்னுதான் இப்போ குறைச்சல்..!! போ போய் நிம்மதியா உன் பெரியம்மாவை கட்டிட்டு அழு " என்று எரிந்து விழ,

அதில் திடுக்கிட்டவள் அவன் கோபம் எதனால் என்றே புரியாமல், "மா...மாமா சாரி மாமா"

எப்போதும் தன்னிடம் ஆறுதல் தேடுபவள் இப்போது தனக்கு பயந்து வளரிடம் ஆறுதல் தேடியதில் இதற்க்காகவா இத்தனை வருட காத்திருப்பு என்ற கேள்வி எழ அதில் அவன் காதல் மனம் பெரிதாக அடிவாங்கி இருந்தது.

ஏற்கனவே ஆழ புரையோடி போயிருக்கும் காயத்தை கீர்த்தி மீண்டும் மீண்டும் கிளறி ரணபடுத்த அவனும் எத்தனை தான் தாங்க..!! முழுதாக வாழ்க்கையே வெறுத்து போனவனாக, "இத்தனை நாள் ஒருத்தன் இருக்கானா செத்தனான்னு கூட பார்க்க தோணல இப்போ சாரியை தூக்கிட்டு வந்துட்டா..." என்று பல்லை கடித்தவன் பார்வை ஒருமுறை சுற்றுபுறத்தை வலம் வந்து பின் அவளிடம் நிலைத்து, 'போடி போ போய் உன் சாரியை கொண்டு குப்பையில் போடு' என்றிட,

"ப்ளீஸ் மாமா நான் பேசினது தப்பு தான் இனிமேல் அப்படி பேச மாட்டேன், எனக்கு நீங்க வேணும் இன்னொரு முறை கண்டிப்பா அப்படி சொல்ல மாட்டேன் ப்ராமிஸ், என் மேல இருக்க கோபத்துல சாப்பிடாம இருக்காதீங்க ப்ளீஸ் சாப்... சாப்பிட வாங்க" என்று அழைக்க,

அவள் மீதே பார்வை பதித்திருந்தவனுக்கு எப்போதும் தன்னை காணும் போது காதல் பெருக்கோடும் விழிகளில் மெல்லிய நாணம் இழையோட பேசுபளிடம் இப்போது அச்சம் மட்டுமே மீதம் இருப்பதை கண்டு கொண்டவன் 'யார்...??? உன் பெரிம்மா சொல்லி அனுப்புனாங்களா இதை எல்லாம சொல்ல சொல்லி' என்று அழுத்தமாக கேட்க,

அவன் இப்படி கேட்பான் என்பதை எதிர்பாராத கீர்த்தியோ பயத்தில் 'ஆம்' என்று தலை அசைக்க,

அதை கண்டவனின் ரத்த அழுத்தம் ஏகத்திற்கு அதிகரிக்க பின்னந்தலையை அழுந்த கோதியவன் அவளிடம் சுட்டு விரலை நீட்டி, "ஏய் முதல்ல போடி இங்க இருந்து, கண்ணு முன்ன நின்ன இருக்க கோபத்துக்கு அறைஞ்சிடுவேன் ' என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்,

'மாமா ப்ளீஸ்' என்றவளின் விழிகள் என்ன முயன்றும் அதற்கு மேல் முடியாது என்பது போல கண்ணீரை உகுக்க அதை கண்டவன்,

என்னடா இன்னும் டேமை திறக்கலையேன்னு நெனச்சேன் என்றவன் அவள் கையை பிடித்து தன் அருகே இழுத்து நிறுத்தியவன், 'பெங்களூருல போய் ஒளிஞ்சிட்டு இருந்தப்போ எங்கடி போச்சு இந்த அக்கறை..??' என்று கேட்க,

'மா..மா' என்று அதிர்வுடன் அவனை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் போக பதட்டத்தில் "இல்லை மாமா எனக்கு.. நான்.. நீங்க சந்தோஷ ..." எனும் போதே,

'ஏய்' என்று சரண் கையை ஓங்கிவிட அதில் மிரட்சியுடன் இரண்டடி பின்னே நகர்ந்தாள் கீர்த்தி.

அவள் முகத்தில் கவிழ்ந்திருந்த அச்சத்தை கண்டவன் கரத்தை கீழே இறக்கி, "ஏய் உன்னை போன்னு சொன்னேன், மரியாதையா இங்கிருந்து போ, போய் உன் பெரியம்மாவை ஊட்டி விட சொல்லி சாப்பிடு" என்றான் அப்போதும் குறையாத ஆற்றாமையுடன்.

சரண் கை ஓங்கவும் தான் கூறிய வார்த்தைகள் எத்தனை அபத்தம் என்பது புரிபட கலங்கிய விழிகளுடன் அவனை நெருங்கியவள் இதழ்கள் துடிக்க, "நான் ஏதோ தெரியாம பேசிட்டேன் சாரி மாமா, உங்க கோபம் போக எவ்ளோ வேணும்ன்னாலும் அடிச்சிக்கோங்க ஆனா ப்ளீஸ் சாப்பிட வாங்க" என்று அழைக்க,

"இதோ பார் தெருவுல வச்சி சீன் க்ரியேட் பண்ணாம முதல்ல கண்ணை துடைடி" என்று அவன் சீற,

கீர்த்தியும் கண்ணை துடைத்து கொண்டு, "இப்போ வருவீங்களா மாமா" என்று கலக்கத்துடன் அவனை இங்கிருந்து அழைத்து சென்றுவிடும் எதிர்பார்ப்போடு கேட்க,

அவள் குரல் அவனை அசைத்தாலும் இதுநேரம் வரை விஷ்வாவிடம் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அவனால பழைய நினைவுகள் கிளறபட்டிருக்க என்ன முயன்றும் நிதானம் கொள்ள முடியாது போக, "கீர்த்தி என்னை கொஞ்சம் தனியா விடு" என்றான் தணிந்த குரலில்

அதே நேரம் தன் வீட்டிற்கு சென்றிருந்த வெற்றி விஷ்வவோடு அவர்களிடம் வர எழிலும் கதிரோடு தன் புல்லட்டில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

"என்ன சரண் ரெண்டு பேரும் இங்க நின்னுட்டு இருக்கீங்க வீட்டுக்கு கிளம்புற எண்ணம் இல்லையா..??" என்று எழில் கேட்க,

'இதோ கிளம்பனும்ண்ணா' என்றவனின் பார்வை கீர்த்தியிடம்,

அவளும் அவர்களை கண்டதும் கண்களோடு முகத்தையும் அழுந்த துடைத்திருந்தவள் முயன்று முகத்தில் புன்னகையை கொண்டு வர, "கீர்த்தி இன்னுமா நீங்க சாப்பிட போகலை, ஐயோ இப்படி வீட்டு மாப்பிள்ளையை எங்க நைனா பட்டினி போடுறது மட்டும் ஊருக்குள்ள தெரிஞ்சா அவர் கவுரவம் என்ன ஆகும்" என்று பதறி போனவன் விஷ்வாவிடம் திரும்பி நீங்க சாப்ட்டீங்களா..?? என்று கேட்க,

'இல்லை இதுவரை யாரும் என்னை சாப்பிட கூப்பிடலை' என்றான்

'என்னாது' என்று அதிர்ந்தவன் எழிலிடம், "மச்சி நீ சாப்ட்டியா..??" என்று கேட்டது தான் தாமதம்,

"கொலபசி மச்சான் !! ஒரு வாய் சோறு போட சொல்லி கேட்கலாம்ன்னா உன் தங்கச்சி இந்த நிமிஷம் வரை என் கண்ணுலேயே படலடா" என்று வருத்தத்தோடு கூற,

உடனே எழில் பின்னே இருந்த கதிரின் முதுகில் ஒன்று வைத்தவன், "டேய் வீட்டு மாப்பிள்ளைகளை கவனிக்காம என்னடா பண்ணிட்டு இருக்கீங்க" என்று கேட்க

எழிலோ வெற்றி முதுகில் ஒன்று வைத்து "அதையே தான்டா நானும் கேட்கிறேன்... நாங்க மூணு பேரும் இன்னும் சாப்பிடலை, இதுவரை உன் தங்கச்சிங்க ஒரு வார்த்தை சாப்பிட சொல்லி இருப்பாங்களா...?? என்னடா வளர்த்து வச்சி இருக்கீங்க கூப்புடுறா உன் நைனாவை கூட்டுடா பஞ்சாயத்தை" என்று வண்டியில் இருந்து இறங்க,

"மச்சி பஞ்சாயத்துக்கு நாங்க ரெடி ஆனா முடிவுல என் தங்கச்சியை கூட்டிட்டு நைனா வீட்டுக்கு போயிடுவார் உனக்கு ஓகேவா" என்று கேட்க,

'டேய்..' என்று அவனை எழில் முறைக்க,

கதிரோ முதுகை தேய்த்து விட்டு கொண்டே அங்கிருந்த கீர்த்தியை சுட்டி காட்டி 'அதான் அக்கா வந்து இருக்காங்களேண்ணா' என்று வெற்றியிடம் முறையிட,

'ஏன் கீர்த்தி கூப்பிட்டா சாப்பிட மாட்டீங்களாடா..??'

" கீர்த்தி சரணை கூப்பிட வந்திருக்கா, மத்த ரெண்டு பேர் எங்கடா..??" எழில்,

"டேய் கல்யாண பெண்ணே கூப்பிடும் போது எதுக்கு மத்தவங்களை கேட்குறீங்க, என் பொண்டாட்டி கூட தான் இன்னும் என்னை கண்டுக்கவே இல்லை நான் என்ன உன்னை மாதிரி பஞ்சாயத்தா வச்சேன்" என்று எழிலிடம் குறைபட,

'நீங்களும் சாப்பிடலையாண்ணா..??' என்று கீர்த்தி வாயை திறக்க,

'ஆம்' என வெற்றி கூறும் முன்னமே எழிலும் விஷ்வாவும் கோரசாக, 'அப்போ எங்களுக்கு டிபன் இல்லையா கீர்த்தி' என்று கேட்க,

அவர்கள் கேள்வியை எதிர்பாராத கீர்த்தியோ முதலில் திகைத்து பின் அனைவரையும் பார்த்து 'எல்லாரும் சாப்பிட வாங்க' என்று பொதுவாக அழைக்க,

"அப்புறம் என்ன கிளம்புங்கடா" என்றான் எழில்

'அண்ணா ஆனா அமுலு..' என்ற சரணின் கரத்தை ஏதோ ஒரு வேகத்தில் பிடித்த கீர்த்தி 'ப்ளீஸ் மாமா சாப்பிட வாங்க' என்று கெஞ்சலோடு அழைக்க,

தன் கரத்தை பிடித்திருந்த அவள் கரத்தின் ஈரமே கீர்த்தியின் அச்சத்தையும் படபடப்பையும் அவனுக்கு உணர்த்த கரத்தின் மீது பார்வை பதித்தவன் பின் அவள் முகத்தின் தவிப்பை கண்டு அதற்கு மேலும் மறுக்க முடியாமல் அனைவருடன் சென்றான்.
Super description of expressions n feelings
 

Rudraprarthana

Well-Known Member
யம்மா கீர்த்தி என்ன பொண்ணும்மா நீ…இப்படியே திக்கிக்கொண்டு கிட…
பாவம் சரண்..எப்படித்தான் பொறுத்துக்கொள்ளப்போறானோ…நீ எந்த காலத்துக்கு திக்காம மாமா ன்னு கூப்பிட்டு ..பிள்ளை குட்டி பெத்து..யப்பா இப்பவே கண்ணை கட்டுதே..
சூப்பர் எபி ருத்ரா..
ஹாஹஹா ஆமாம் சாலாம்மா சரண் பொறுமையை ரொம்பவே சோதிக்க போறா :ROFLMAO::ROFLMAO:நன்றிகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top