Raasitha's Ninmel Kaadhalagi Nindren P22

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
ஐயர் மாங்கல்யம் எடுத்து கொடுக்க, கதிரவன் கைகள் அதை வாங்க மறுத்து விரல்கள் மூடி கொள்ள, ஐயர் மாங்கல்யத்தை நீட்டியது நீட்டியபடி இருக்க, அந்த நொடி சரியாகக் கந்தசாமி விழியை நேருக்கு நேராகச் சந்தித்தார்.

"பாருமா... நீ சொன்ன பொய்யோட பலன். உன்னோட பொய் என்ன தலைகுனிய வைக்கல, உன்னோட வாழ்க்கையவே தலைகுப்புற கவுத்திடுச்சு. தாலிய வாங்கவே யோசிக்கறவன்கிட்ட இருந்து உனக்கு மரியாதையோ அன்போ கிடைக்குமா ? இந்த வாழ்க்கையை வாழவா என்ன பேசாதனு தடுத்த ? எதுக்குமே அழ கூடாதுனு சொன்னேன். ஆனா இனி உன்னோட வாழ்க்கையே கண்ணீரா மட்டும்தான் இருக்கப் போகுதா ?" என்பதாய் இருக்க,

"இப்ப இப்படி இருக்கலாம் பா. நான் செஞ்சது சரி இல்ல. தப்புதான். ஆனா தப்பவே போய்டாது. நீங்க எனக்குத் தைரியமா வாழ கத்து கொடுத்துருக்கீங்க. இப்ப இருக்குற நிலைமையை மாத்தி இவரோட காதலுக்கும் மரியாதைக்கும் சொந்தக்காரியா நிச்சயம் ஒருநாள் இருப்பேன். தோத்து போகவும் மாட்டேன். அழவும் மாட்டேன். எப்பயும் எதுக்காகவும் என்ன நடந்தாலும்" எனத் தன் தந்தையின் பார்வைக்குப் பதில் பார்வை பார்த்தபடி மனதில் நினைக்க,

அதே சமயம் பார்வதி மகனிடம் தாலியை வாங்கிக் கட்டும்படி சமிங்கை செய்ய, கதிரவன் ஒருமுறை கண்களை இறுக மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு ஒரு முடிவோடு மாங்கல்யத்தைக் கைகளில் வாங்கினான்.

அவள் கழுத்தில் முதல் முடிச்சு போட்டவன், "எதுக்கு இந்த நாடகம் ஆடுனனு கண்டுபிடிக்காம விடமாட்டேன். உன்ன சுத்தமா பிடிக்கல" என எண்ண, அதே சமயம் விழி, "என்ன சுத்தமா பிடிக்காம நீங்க போடற முதல் முடிச்சுதான் என்னை உங்களுக்குப் பிடிக்கப் போறதுக்கான ஆரம்பம்" என விழி மனதில் நினைக்க

"நீ பண்ணின பித்தலாட்டத்தை நிரூபிக்கிறேன். அதுவும் ஊரறிய" என இவன் இரண்டாம் முடிச்சுக்குச் சங்கல்பம் எடுக்க, விழியோ அதே சமயம், "ஊரறிய உங்க கூடச் சந்தோசமா வாழனும்" என நினைக்க

இறுதி முடிச்சு போடும் பொழுது, "உனக்கான தண்டனையை நிச்சயமா தருவேன். அத நீ மறக்கவே மாட்ட ஏழேழு ஜென்மத்துக்கும்" எனச் சூளுரைக்க, "ஏழு ஏழு ஜென்மத்துக்கும் உங்கள மறக்காம நான் உங்ககூடவே வாழனும்" எனக் காதலுடன் விழி நினைக்க

ஒரே ஒரு நொடி மூன்றாவது முடிச்சை போட்ட பிறகு இருவரது பார்வையும் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொண்டது.

அவளுடைய விழிகள், "உன்னோடு வாழத்தான் இந்த வாழ்வே" என்பதாய்
அவனுடைய விழிகளோ, "என்னோட நீ எப்படி வாழறனு நானும் பாக்குறேன்" என்பதாய்

நேர்கோட்டில் இருவரின் பார்வைகளும்
முரணான எண்ணங்களுடன்
இருமனமும் திருமணத்தில்
இருதுருவமாய் இணைந்திருந்தன

மாறானும் சாந்தினியின் கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டியிருக்க, அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் முடியும் முன்னர், கந்தசாமி அங்கிருந்து புறப்பட, வேகமாக அவரை அழைத்த பார்வதி ஏதோ கூற வந்தவரை தடுத்து, "பத்து நிமிஷம் முடுஞ்சிடுச்சு" எனக் கூறி சட்டென்று துண்டை உதறிவிட்டு விடு விடுவெனச் சென்றுவிட, மகளைப் பார்த்து அழுதபடி தேவியும் பின்னோடு செல்ல, அவர்களைத் தொடர்ந்து விழியன் மொத்த குடும்பமும் நிற்காமல் சென்றிருந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
21st அப்டேட் காலையிலேயே
கொடுத்துட்டீங்க
இப்போ P-22=ன்னு வரணும்,
ராசிதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top