Puli Milagai / புளி மிளகாய்

Advertisement

Bhuvana

Well-Known Member
Puli Milagai / புளி மிளகாய் :

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் - 20 {அளவில் சின்னதாக உள்ளது}
வெங்காயம் - 1 {பொடியாக நறுக்கியது}
இஞ்சி - 1 சிறிய துண்டு {பொடியாக நறுக்கியது}
பூண்டு - 10 பல் {இரண்டாக நறுக்கியது}
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு புளிக்கரைசல் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கட்டியாக வேண்டுமென்று நினைத்தால் ஒரு கரண்டி இட்லி/தோசை மாவை இதனுடன் கலக்கி கொதிக்க விடலாம். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கலாம். இட்லி, தோசை மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Ingredients:

Green chilly - 20 {small in size}
Onion - 1 {finely chopped}
Ginger - 1 inch piece {finely chopped}
Garlic cloves - 10 {finely chopped}
Tamarind - 1 lemon size
Turmeric powder - 1 spoon
Mustard seeds, urad dhal - to temper
Salt & Oil - as required

Heat the kadai, add little oil & temper with mustard seeds, urad dhal & add onion, green chilly, ginger, garlic cloves & saute well until color change. Then add the tamarind juice, turmeric powder, salt & mix well.

If you want the kuzhambu to be thick add 1 spoon idly/dosa batter to it, mix well & allow it to boil until raw smell goes off. This is one of the best side dish for idly, dosa & curd rice.

40903456_1536084266497513_8598891218014830592_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top