P5 Uppuk Katru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Friends :)

மதியம் போல வீடு வந்தவன், வடித்து வைத்த சாதத்தையும், ரோஜா அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த வைத்திருந்த குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுவிட்டு படுத்தது தான் தெரியும். அவன் மீண்டும் கண்விழித்தது மறுநாள் காலை தான்.
தொடர்ந்த பல மணி நேர உறக்கத்தில் உடல் அசதி எல்லாம் போய் விட, சுறு சுறுப்பாக உணர்ந்தான். குளித்து விட்டு வந்தவன், ரோஜா வீட்டிற்கு சென்றான்.
அவள் தந்தை கடலுக்கு சென்று இருக்க... குளித்து முடித்து வெளியே நின்று ஈர தலைத் துவட்டிக் கொண்டு இருந்தாள். இவன் திண்ணையில் வந்து உட்கார்ந்ததும், “நல்ல தூக்கமா...” என்றவள், அவன் வருவான் என சேர்த்து செய்து வைத்திருந்த உணவை கொண்டு வர உள்ளே சென்றாள்.
பானையோடு கேப்பை கூழும், தனியாக தட்டில் மோர் மிளகாயும் கொண்டு வந்து வைத்தாள்.
கூழில் மோரை ஊற்றிக் கரைத்தவள், அவனுக்கு டம்ளரில் ஊற்றிக் கொடுக்க... அதை வாங்கி குடித்தவன், மறுகையால் மோர் மிளகாயை எடுத்து கடித்தான்.
தனக்கும் கூழை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டவள், “நேத்து உங்க படகுல ஒரு பொண்ணு வந்ததே யாரு அவங்க?” என கேட்டாள்.
“எதோ ஆராய்ச்சி படிப்பு படிக்கிறவங்க போல... மீனவர்களை பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்காங்க. அவங்க நாட்டுப்படகுல தான் வந்திட்டு இருந்தாங்க. பிறகு நம்ம படகை பார்த்ததும், ஆசைப்பட்டு இதுல ஏறினாங்க.” என்றவன், காலியான டம்ளரை நீட்ட, மீண்டும் அதில் கூழை நிரப்பிக் கொடுத்தாள்.
“ஓ,...அப்படியா?”
“ஆமாம். பக்கத்தில ரெசார்ட்ல தான் தங்கி இருக்காங்க. வேளாங்கண்ணி போகணும்ன்னு சொன்னாங்க. நீயும் வரியா?” என்றான்.
“படகுலையா...”
“ஆமாம், நம்ம ஜோசப் சொந்தக்காரன் மோட்டார் படகு வச்சிருக்கான். ஆறு பேர் போறது அதுல போயிட்டு வந்திடலாம்.”
“எப்ப?”
“இப்ப காலையில போகனும்.”
“இருங்க நான் எங்க அப்பாவுக்கு சோறு மட்டும் ஆக்கி வச்சிட்டு வந்திடுறேன்.” என்றவள், அவர்கள் சாப்பிட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சிட்டாக உள்ளே சென்று விட...
“பத்து மணிக்குள்ள படகு துறைக்கு வந்திடு.” என குரல் கொடுத்துவிட்டு சென்றான்.
நேற்று வைத்த மீன் குழம்பு இருக்க அரிசியை களைந்து உலையில் போட்டவள், உலர்வதற்காக விரித்து விட்டடிருந்த கூந்தலை வாரி பின்னளிட்டாள். பிறகு அன்று அருள் வாங்கித் தந்த நீல நிற புடவையை எடுத்து உடுத்தியவள், முகத்திற்கு ஒப்பனை செய்து கொண்டாள்.
வீட்டை ஒதுங்க வைத்துவிட்டு, சாதத்தை வடித்துவிட்டு, வீட்டை பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்தாள்.
“அக்கா, நான் வர்றதுக்குள்ள எங்க அப்பா வந்திட்டா சாவியை கொடுத்திடுங்க. எங்க அப்பா கேட்டா நான் சீக்கிரம் வந்திடுவேன்னு சொல்லுங்க.” என மட்டும் சொல்லிவிட்டு சென்றாள்.
அவள் அப்பா வர மதியமாகி விடும். அதற்குள் வந்துவிடலாம் என நினைத்தாள்.
அவள் படகு துறைக்கு சென்ற போது, அவளுக்காக மற்றவர்கள் காத்திருந்தனர். நேற்று பார்த்த பெண்ணும் அங்கிருந்தாள்.
“இவங்க ரேணு....” என அவளிடம் சொன்னவன், “இது ரோஜா.” என்று மட்டும் சொல்ல...
“யாருன்னு கேளுங்க?” என ஜோசப் எடுத்துக் கொடுத்தான். ரோஜா வெட்கப்பட....அருள் பதில் சொல்லாமல் சிரிக்க... அதிலேயே ரேணுவுக்கு விஷயம் புரிந்து விட்டது.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பாக்கு சொல்லாமல் கடல் பயணம்...... அதுவும் அருளோடு......
தெரிந்தால் குதிப்பாரே அப்பா.....

வேளாங்கண்ணி போய் நல்லா வேண்டிக்கிட்டு வாங்க......
சீக்கிரமே உங்கப்பா மனசு மாறட்டும்னு......

அந்த சோறு வடித்தது ரோஜா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top