Nilavai Thedum Paalveli Ivan 4

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

என்னத்த சொல்ல, இந்த காலத்து பெற்றோர்களும் பசங்களுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுக்குறாங்க... அவங்க அதை தப்பான வழியில உபயோகிக்கிறாங்க....


 
Last edited:

fathima.ar

Well-Known Member
கஷ்டம் தெரியாமல் வளர்ந்தா
இஷ்டம் போல வாழுங்க போல..
நல்லவன் தான் ஜஸ்ட் ஒரு தப்பான பழக்கம் எல்லாத்துக்கும் காரணமா போச்சு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வந்துட்டாங்களா....
காலேஜ் என்ன பண்ணும் மூடிமறைக்கும்....
parents அழுவாங்க பிள்ளைங்க நிலைமையை பார்த்து....
பிள்ளைங்க நெருப்பு சுடும்னு கை வெந்தால் தான் தெரிஞ்சுப்போம் னு நிக்குறாங்க...
என்ன பண்ண...

தப்பு ரெண்டு பேர் மேலயும் தான்.....
ஆனாலும் அவனுக்கு விசு சொல்ற தண்டனை கொடுக்கணும் தான்.....
இவனுங்க வயசென்ன..... அதுக்குள்ளே drugs படுக்கைக்கு பொண்ணு :mad::mad::mad:
அப்புறம் கிறுக்கனா சுத்துவானுங்க.....

அம்மா அப்பா கொடுக்கும் அதிக சுதந்திரம் தான் இவங்க கெட்டுப்போக காரணம்.....
அதுவும் இப்போ உள்ள culture பணத்தை என்ன செய்ய னு கட்டி வச்சிருக்கவங்க பையன்களை அவங்க பிளாட் இருந்தால் அங்கே/ இல்லையா வாடகைக்கு/இல்லையா வாங்கி கொடுத்து தனியா தங்க வச்சு அவனுங்க friends கூட சேர்ந்து இல்லாத கெட்ட பழக்கமே இல்லைனு ஆகிடுறானுங்க படிக்கிறப்போவே..... எவ்ளோவோ abortions நடக்குது காலேஜ் students கிட்ட..... topless/nude போட்டோஸ் ஷேர் பண்ணுறது எல்லாம் ரொம்ப சாதாரணம்..... 2012ல இருந்தே WA ல ஷேர் பண்ணி அதுக்கு enquiry committee போட்டு விசாரிச்சதெல்லாம் உண்டு.....
இந்த காலம் பிள்ளைங்க இதிதெல்லாம் சிக்காமல் படிச்சி முடிச்சுட்டு வந்தாங்கன்னா வேலைக்கு போறப்போ ஓரளவுக்கு பொறுப்போடு இருந்துப்பாங்க.....
பிள்ளைங்க ஒழுக்கமா இருந்தாலே ரொம்ப சந்தோசம்..... இந்த ஒன்னு தான் வேண்டுதலே..... பணமெல்லாம் அப்புறம் தான்.....

என்னோட கிளாஸ் ல லாஸ்ட் month நடந்தது...... டெஸ்ட் வைக்கிறப்போ டெஸ்க் ல ரெண்டு பேருக்கும் A row B row னு மார்க் பண்ணி Aக்கு ஒரு செட் question B க்கு ஒரு செட் questionனு குடுத்து உக்கார வச்சாச்சு copying avoid பண்ண......
ஒரு பையனும் பொண்ணும் மட்டும் எக்ஸ்ட்ரா இருந்தாங்க.... ஒரே டெஸ்க் ல உக்காரவச்சாச்சு (எக்ஸாம் க்கு registration number-wise ஆணோ பொண்ணோ ரெண்டு பேர் தான்..... வேற வேற year students இருப்பாங்க..... அப்படி நினைச்சு தான் உக்கார வச்சேன்..... ஆனால் கிளாஸ் ல இனி இப்படி உக்கார வைப்ப னு எனக்கு பாடமே கத்து கொடுத்துட்டாங்க..... normal கிளாஸ் ல உக்கார்ந்தா கூட எழுப்பி அவங்கவங்க பக்கம் உக்காரவச்சுடுவேன்.....)
அதை பக்கத்துக்கு டெஸ்க் ல இருந்த அவனோட friend வீடியோ எடுத்து கிளாஸ் unofficial WA குரூப் ல போட்டாச்சு.... பொண்ணுங்க பார்த்துட்டு அந்த பொண்ணுக்கு சொல்ல அவ என் கிட்ட complaint பண்ணிட்டா.... அதுல நானும் கொஞ்சம் வர்றேன்.....
உடனே அவனை வர சொல்ல அவன் என்னோட class லேயே திரும்பவும் வந்தான்...... சரி எல்லோருக்கும் தெரியட்டும் னு கிளாஸ் முன்னாடியே விஷயத்தை சொல்லி second person permission இல்லாமல் போட்டோ வீடியோ எடுக்கிறது தப்பு..... இங்கே முன்னாடி வந்து இனி செய்யமாட்டேன் னு மட்டும் சொல்லு.... sorry கூட வேண்டாம் னு சொல்ல வரவே இல்லை...... அப்போ அவளை அவங்க அப்பா கிட்ட போலீஸ் complaint பண்ண சொல்லவா??? வீடியோ proof இருக்கு னு சொல்லியும் வரவே இல்லை..... நான் டெலீட் பண்ணிட்டேன்னு சொன்னான்...... நான் Dean கிட்ட சொல்லிடுவேன்.... நீயே பேசிக்கோ னு சொல்லிவிட்டு மொபைல் எடுத்துட்டு வந்துட்டேன்...... அப்புறம் அவங்க பேசி மொபைல் குடுத்தாங்க.....
ஒரு two days ல அவன் எனக்கு போன் பண்ணுறான் mam என்னை இன்னொரு கிளாஸ் ல mam கிட்ட doubt கேக்குறப்போ mam கூட சேர்த்து வீடியோ எடுத்து அதே குரூப் ல போட்டிருக்கா அந்த பொண்ணு னு..... என்னத்த சொல்ல??? நான் நீ அந்த mam கிட்ட வீடியோ காட்டி அவங்களையே டீல் பண்ண சொல்லு னு சொல்லிவிட்டேன்.....
இவங்க பஞ்சாயத்துக்குள்ள போனால் நாம வேலையே வேண்டாம்டா னு ஓடிடுவோம்..... அப்படிதான் பையனுங்க மட்டுமில்லை பொண்ணுங்களும்.....

இதெல்லாம் காலேஜ் ல அடிக்கடி பார்க்கிற கேட்கிற சம்பவங்கள்......
சோ ஆணோ பொண்ணோ பிள்ளைங்களை ரொம்ப ரொம்ப பொறுப்பா பார்த்துக்கோங்க காலேஜ் வந்தப்புறம்....

கோமா :eek::eek::eek:
கால் அசையுது......

தாலி கட்டினது மால் ல.....
அப்போ இதோட முடியாது போல..... இன்னும் இருக்கு.....
 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love:
இப்போதைய பசங்க,பொண்ணுங்க ,ஒரு செயல் செய்யும் போது அதன் பின்விளைவுகளை கொஞ்சம் யோசித்தால் போதும்....அது இல்லவே இல்லை:cry:

விசு ,கோபம் நியாயம் தான்..இன்னும் இருக்கும் போலவே :rolleyes::rolleyes::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top