Neengaatha Reengaaram 19 3

Advertisement

Suvitha

Well-Known Member
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு...

நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு...
 

Joher

Well-Known Member
Tks மல்லி.......

ஜாடிக்கேத்த மூடி.....
மருதுக்கேத்த ஜதி......
மூஞ்சி முகரையை பேத்துருவேன்னு சொல்றவனுக்கு demo காட்டியிருக்கலாம்......

என்ன தான் சண்டை போட்டாலும் பொறுத்துக்கொள்ளும் பொண்டாடிகள் போ னு சொல்றப்போ உக்கிரமாகிறது தான்......
பொண்டாட்டி இல்லாத ஒரு நாளையே தாங்கிக்கொள்ள முடியாத ஆண்கள் போனப்புறம் என்ன நிலையில் இருப்பாங்க என்பதற்கு மருது sample......
இனி மருது கட்டினவ காலில் விழுந்தாலும் விட்டுடுவாளா என்ன???

கெத்து மரியாதை போய்டும்னு பேசி கடைசியில் உன்னை ஒன்னும் இல்லாமல் ஆகிவிட்டாளே......
உன் வீட்டுலயே உன் மூஞ்சில அரையுற மாதிரி கதவை அடிக்கிறாள்......
நீ சாவி போட்டு திறக்க போறியா???

பார்த்துடா உன்னை வெளியே போடான்னு சொல்லிட போறா....
எதுக்கும் உன் சுதியை கொஞ்சம் அடக்கு.....

படிப்பும் வேலையும் கொடுக்கும் தன்னம்பிக்கையை இனி தான் பார்க்க போறான் மருது......

சூப்பர் மல்லி......
 

Sasideera

Well-Known Member
தாயின் அன்பும் அரவணைப்பும் தெரியாது!!!

தந்தையின் கண்டிப்பும் தெரியாது!!!

தங்கை தம்பியின் வம்பும் அறியாது!!!

நட்பின் சண்டையும் தெரியாது!!!

அதனால் தானோ என்னவோ என் நல்லது கெட்டது ஏதும் அறியாமல் நானே ராஜா நானே மந்திரியாக இருந்தேனோ!!!

ராஜாவாக பலருக்கு நான் தீர்த்த குற்றங்களை இன்று என் மனங்கவர்ந்த ராணிக்கு பரிசளித்தது என் அறியாமையா!!! அல்ல என் ஆற்றாமையா!!!

வளர்ந்த குமரியாக அவள் இருந்தாலும் வளராத அவளின் பக்குவத்தை ஏற்காமல் அடம்பிடித்தது ஏனோ!!!

எனக்கும் எந்தன் உணர்வுகளுக்கும் எல்லா உறவாக என்னை ஆளும் ராணியாக அவள் மட்டுமே வேண்டும் என்ற என் ஏக்கமே இந்த கோபமோ!!!

எல்லோருக்கும் வேண்டிய உதவி செய்து ஊருக்கே நான் ராஜாவானாலும் என்றுமே இந்த ராணியின் அன்பையும் காதலையும் யாசிக்கும் கடைநிலை யாசகனே நான்!!!

இன்று அவளிடம் மன்னிப்பும் யாசிக்கிறேன்!!!
 

malar02

Well-Known Member
என்ன மாப்பிளைக்கு தப்பாத மாமனாரா
இருக்கணும்னு நினைக்கிறாரா கோபால்
அவரை கடைசியில் சமாதனம் செய்ய போகிறவன்
இவன்தான் போல பொண்ணு ஏத்துக்க போறதில்ல


கலையம்மா இன்னும் கொஞ்சம் பாஸ்ட் ஆக்ஷ்ன் எடுங்க
ரொம்ப ஸ்லோமோஷன்

விஷால் சூப்பர் அப்பு இரண்டு பேரையும் காப்பத்திட்ட
நேர்மையா கேட்டபாரு உங்க வயசென்ன அவ வயசென்னனு அங்க நிக்கற

இப்ப அவளும் முறுக்கிடா இப்பவாது என் kk வருமா காத்திருக்கிறேன்
 

Suvitha

Well-Known Member
பாவம் மருது, மாமனாரின் வார்த்தைகள் அவனின் மனதை பதம்பார்த்துவிட்டது. நான் யாருமற்றவனா? அனாதையா? என்ற தவிப்பு அவனுள்...
ராஜா மாதிரி ராஜாங்கம் பண்ணிய இடத்தில் நாலு பேருக்கு முன் தனக்கு தலையிறக்கமாக போய்விட்டதே என்ற அடக்க முடியாத கோபம் அவனுள்...

தன்னை வீட்டை விட்டு போ என்று சொல்லிவிட்டானே என்ற தவிப்பு ஜதியிடம். போன்னு சொன்னால் அம்மா வீட்டுக்கு தான் போணுமா? நான் மாட்டேன் என்ற பிடிவாதம் மனதில்...

அவனுடைய வாய் நீ வேண்டாம் எனக்கு என்று சொல்லுது ஆனால் மனது?
எப்படியோ ஜதி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறா.
மறுப்பு, மறுதலிப்பு எப்படி இருக்கும் என்று அவனுக்கும் டிரையல் காண்பித்து விட்டாள் ஜதி.
மூடிய கதவிற்கு முன்னே மருது, பின்னே ஜதி. கதவு மூடியிருக்கலாம் ஆனால் உள்ளங்கள் இரண்டும் தன் இணையின் அனுசரணைக்காக தவிப்பில் காத்திருக்கிறது...

"உள்ளத்தை மறைத்தேன்
உயிர் வலி பொறுத்தேனே
சுயத்தை எதுவோ
சுட்டதடி வந்தேன்..."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top