Happy Birthday MALLI MAM

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
வணக்கம் ஃபிரண்ட்ஸ்.. இன்னைக்கு நமக்கு ஸ்பெஷல் day ... வீட்லர் ஆஃபிஸ்ல எவ்வளவோ பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு நம்மளை நம்மளா மட்டும் இருக்க வைக்கிற மந்திர எழுத்துக்களோட உரிமையாளர் இந்த உலகத்துக்கு வந்த நாள்.

அவங்களுக்கு என்னால ஆன சின்ன வாழ்த்து தான் இது. ❤❤❤எப்படி எப்படியோ யோசிச்சு கடைசில இப்படி யோசிச்சது... ஒரு சின்ன Quiz பண்ணலாம்னு பார்த்தேன். சரி முடிஞ்சா எல்லாரும் ட்ரை பண்ணுவோமா..
அடிக்கடி படிச்சு படிச்சு மனசுல ஆழமா பதிஞ்ச சில வரிகள் தான் இங்க..

(1) உனக்கு ஒன்னுமே தெரியாது டி… யார் என்ன சொன்னாலு
ம் மண்டைய மண்டைய ஆட்டு…"

ரொம்ப famous dialogue friends ...யார் யாருகிட்ட சொன்னாங்கனு கண்டு பிடிச்சு இருப்பீங்க... But question என்னன்னா.. எந்த இடத்துக்கு முன்னாடி சொல்லப்பட்டதுங்கிறதுதான்...?!

(2) (a)"பொண்ண வளர்த்து… இந்தளவுக்கு ஆளாக்கிவிட்டிருக்கிறோம். எங்களுக்கு சீர் செய்ய தெரியாதா டா ?நீ இதுல எல்லாம் தலையிடாத ..

யாரை தலையிடாதனு சொல்றாங்க...,?

(b) "ஆமாமில்ல! வாழ்க்கை முழுசுக்கும் இதுக்கு நீ தான்னு கமிட் ஆகிட்ட...அட்லீஸ்ட் லொகேஷனாவது மாத்துவோம்..!

யார்கிட்ட சொல்றாங்க?

a க்கும் bக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னனும் சொல்லுங்க பார்ப்போம்.

(3) " உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலன்னு என் வாயால சொன்னாதான் விடுவியா.ஐ.மிஸ் யூ." (அப்பக் கூட ஐ லவ் யூ சொல்றாங்களா பாருங்களேன்..)

யார் யாருகிட்ட சொன்னது. ?

(4) "ஏன்னா ரெண்டு பேருமே இன்டிபன்டன்ட் பெர்ஸனாலிட்டிஸ். மற்றவங்க சொல்றத கேட்க மாட்டோம். நமக்கு சரின்னு படுறதா தான் செய்வோம்."
யாருப்பா இது..?♥♥♥ கெத்து…

(5) ப்ச் உளரக்கூடாது …….க்காகவும் ..... வாழ்க்கையும் நிற்காது…..இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவங்க அவங்க வாழ்க்கைய அவங்க வாழ்ந்துதான் ஆகணும்."

யதார்த்தத்த பேசுறேன்னு மாட்டிக்கிட்ட இந்த டையலாக்…அந்த புள்ளி வச்ச இடத்துல என்ன வரும் …?

(6) அஸ்வின் ஈஷ்வரையும் … வர்ஷினியையும் எப்படிக் கூப்பிடுவான் ஃபிரண்ட்ஸ்..?

(7) " கவிதையோட கீழப் போட்டுக்கோ… எழுதினவர் யாருனு தெரிய.."
யார் ஃபிரண்ட்ஸ்…?❤❤❤❤❤

(8) "அவளோட பொறுப்பை நாங்க தான் ஏத்துட்டு இருக்கோம். நாங்க செய்வோம்…"
ஹீரோயின் வேறன்னாலும் இந்த டையலாக் சென்னவங்கள கடைசி வரை எல்லாருக்குமே பிடிக்கும் ... அது யார்?

(9) (a) அண்ணனுக்காக ! அவனின் கடைசி வார்த்தைகளுக்காக.. தன் மொத்த வாழ்க்கையையும் மாற்றிக் கொண்டது யார்?
(b) "நீங்க என்கிட்ட பேச மாட்டீங்க இல்லையா?அப்போ எனக்கு யார் கூடவும் பேசப்பிடிக்காமப் போச்சு .."
எந்த தம்பதியரின் உரையாடல் இது.?❤❤❤

(10) " முத்தத்தை விட வேற ஏதாவது பிடிச்சதுனா அது குறைஞ்சிடும்.."
இப்படி பேசி அடி வாங்கினது யார்…?

(11) முத்து விநாயகம் -ஆனந்த் … ரெண்டு பேரும் ஃபிரன்ட்ஸ்…
ரஞ்சனி - ஐஸ்வர்யா … இவங்க ரெண்டு பேரும் ஃபிரன்ட்ஸ்
அப்புறம் மீரா … இது யாராயிருக்கும் .. final ஆ... நிகில்.... இவங்க எல்லாம் யார் என்னனு கண்டு பிடிச்சு இருப்பீங்க… but கேள்வி என்னன்னா … இவங்களோட Profession என்னங்கிறதுதான்…? ( எதுல வருவாங்கனு Comment பண்ணுங்க)

(12) (a)கன்னத்துல ரோடு போட்டுருக்குனு எல்லாருக்கும் காண்பிச்ச ரெண்டு பேர் சொல்லுங்க பார்ப்போம்…
(b) காலில் அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தவங்க ரெண்டு பேர் யாரு ஃபிரண்ட்ஸ்.. (note hospital a)

ஆனா கேள்வி என்னன்னா இவங்க எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு (கண்டுபிடிச்சா… இப்படியெல்லாமா கேள்வி கேட்பனு… என்னைய அடிக்க வருவீங்க... வாங்க நானும் ரெடி தான் ஃபிரண்ட்ஸ்..)

(13) பார்த்திபன் கடந்த காலத்தில என்ன நடந்ததோ …அது சீரியஸான பக்கம்... நாம் அதை விட்டுட்டு Romantic ஆ.. think பண்ணுவோம் .. பார்த்திபன் அபிராமி லைஃப்ல என்ன நடந்திருக்கும... இல்ல இருக்கலாம் …

சத்தமில்லாமல் ஒரு ……

இதுக்கெல்லாம் விடை கண்டுப்பிடிக்க ஈஸியா ஒரு Clue கொடுக்கிறேன். அது என்னன்னா …

❤❤ HAPPY BIRTHDAY ❤❤
MALLI MAM.
நிச்சியம் ஜோ சிஸ்டர் எல்லாத்துக்கும் விடைய கடகடனுடைப் பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன். விடைகள் தமிழில் என்றாலும் முதல் எழுத்து எல்லாம் இங்க தான் ... கண்டுபிடிங்க கண்டுபிடிங்க.

மல்லி மேம் Ph.dமுடிச்சு டாக்டரேட் வாங்குற முன்னாடி நாம எல்லாம் தமிழ் இலக்கியத்துல 'மல்லிகா மணிவண்ணன் கதைகள் அப்படிங்கிற தலைப்புல டாக்டரேட் வாங்கிடுவோம்ல.. இத்தனை நாட்கள் எங்களை மகிழ்வித்த மகிழ்வித்துக் கொண்டிருக்கும் மல்லி மேம் க்கு இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.♥♥♥ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க
WAITING
 
Anuradha Ravisankarram

Well-Known Member
2a அன்னக் கிளி ன் அண்ணன்
5 கார்த்திக் to Sakthi ...ven
7 இப்படிக்கு உன் இதயம் வாசு
8. சரவண பாண்டியன் ..காதல் கொண்டேனே
10 ஹரி (ப வ மு தா)
12a 1.guru wife அரசி (கா க ம) ...
2.ஆகாஷ் வ த வ
12b 1Jayanthi....நீ ரீ.
2 Annakkili... க கை சே
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement