E2 Nee Enbathu Yaathenil

Advertisement

Ansadoss

Well-Known Member
அருமை, அருமை, வெகு அருமையான, மிகச்சரியான விளக்கம், பாத்திமா டியர்
பாரதி கண்ட புதுமை பெண் பற்றி விளக்கம் வேண்டும் பானும்மா.

பாரதி தன் புதுமை பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளது என்ன? என்று பட்டியலிடுங்களேன். நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.

எனக்கு இன்னும் புரியவில்லை மல்லியின் நாயகியை பற்றி பேசும் போது.

இதுவல்ல பாரதியின் கனவு என்று பாத்திமா எதை குறிப்பிட்டிருக்கிறார்கள்?

பாரதியின் கனவுக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் இங்கு யாரேனும் மோசமான கருத்தினை பதிவிட்டீருக்கிறார்களா?

அப்படி இருந்தால் அந்த கருத்துப் பதிவு எது என்று குறிப்பிடுங்கள் திருத்தி கொள்கிறோம்.

அப்படி இல்லை மனதில் தோன்றியதை எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக போட்டேன் என்பவர்கள் அதை இங்கே பதிவிட வேண்டாமே.

தங்கள் திறமைகளை வெளிகொணர நினைக்கும் தோழமைகள் மல்லியிடம் கேட்டால் புதிய Forum உருவாக்கி தர அவர்கள் தயங்குவதே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே பானும்மா.

பாத்திமா கூட இந்த கதைக்கு சம்பந்தமில்லாத ஆனால் சமுதாயத்திற்கு தேவையானதாக கருதும் தனக்கு தோன்றிய கருத்துக்களை தனி Forumல் பதிவிடலாமே.

இங்கே மல்லியின் கதாபாத்திரங்களை பற்றியும் அக்காதாபாத்திரங்களின் குணாதிசயங்களை பற்றி மட்டும் விமர்சிப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதும். நான் உங்களை பற்றி தெரிந்து கொள்வதும். நாம் நம் குடும்பம், வேலை, குழந்தைகள் மற்றும் நமது சுகதுக்கங்களை பற்றி பகிர்ந்து கொள்வதும் நன்றாக இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். நமக்கிடையே கண்ணுக்கு தெரியாத பந்தத்தை அது உருவாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.
 

Sundaramuma

Well-Known Member
Vilunthalum thappu kidaiyathu sis. Oru ponna marriage panni oru kulanthaikkum thaayakki vittu pidikkalai divorce kettu then take it for garanted mathiri pona poguthu en ooruku vantha irukkalaamnu solrathu.... what to say. Malli mam has just portrayed the state of most women in our country. Atleast in sundari's she is self employed so that she didn't need anyone support for her necessities.
எஸ்.. அப்பா வசதியானவர் இருக்க போய் தான் சுந்தரி நன்றாக இருக்கிறாள் ..... இல்லாவிட்டால் நினைக்கவே கொடுமையா இருக்கு.....
 

Sundaramuma

Well-Known Member
அது, திமிர் & கர்வம் இல்லை, Aravin22 டியர்
ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும், இருக்க வேண்டிய,
தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை மட்டுமே, டியர்

நீங்கள் இப்படியெல்லாம் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் வருத்தமே, Aravin22 டியர்
அவங்க சரியாய் தான் சொல்லி இருகாங்க ....பானு...
மல்லிகா அவங்க கதைகளில் குறிப்பிட்டு இருந்ததை தான் சொல்லி இருக்காங்க.....
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
தாரிக் செல்லமும், சித்திக் செல்லமும், எல்லா நலன்களையும், எல்லா செல்வங்களையும், பெற்று அவரவர், விரும்பும் துறையில், சிறப்பாக சாதித்து, பெற்றோரான உங்களுக்கும், நாட்டுக்கும் பலப்பல நன்மைகளை செய்து,
எப்பொழுதும் இருவரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வாங்கு வாழ வேணுமுன்னு எல்லாம் வல்ல என்னோட விநாயகப் பெருமானிடம் துஆ செய்து கொள்ளுகிறேன், பாத்திமா டியர்
இன்ஷா அல்லா, தாரிக் செல்லமும் சித்திக் செல்லமும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், பாத்திமா டியர்

இறைவன் நாமம் வாழ்க, பாத்திமா டியர்
மனம் உணர்த்த வாழ்த்துக்கள் ...பானு:):):)
Keep it up.....
 

ThangaMalar

Well-Known Member
மல்லிகா நாயகிகள் இடம் திமிரும் இருக்கும்.... அண்ணா ......
அதிகபட்ச தன்னம்பிக்கையும், தைரியமும் தானே திமிர்...

என்ன உமா சரிதானே...

பெண்களுக்கு அது மிக அழகு.....
 

Ansadoss

Well-Known Member
தோல்வியின் தாக்கத்தை மறைத்து
நிமிரந்து நிற்பதா
புதுமையும் புரட்சியும்..

புதுமை பெண் என்று நாம் பொதுவாக கருதுவது..
வாழ்க்கையில் தோற்று போன பெண்கள் பிறர் தயவின்றி முன்னேறி செல்வதையும்..
சில சமூக சேவை செய்பவர்களையும்
தான்.. இவர்கள் மட்டும் புதுமை பெண்ணாக இருக்க வேண்டுமா..
அதுமட்டுமா புதுமையை புரட்சியை
நிர்ணயம் செய்யவேண்டும்?


அடக்கமும் வெட்கமும்
மட்டும் பெண்மையின்
குணமல்ல..
ஒழுக்கமும் நேர்மையும்
கற்று கொடுக்க
வேண்டும்..

தோல்வியுற்ற திருமண வாழ்வா
பாரதி கண்ட
புதுமை பெண்ணை உருவாக்குவது....
முண்டாசு கவிஞனின்
கனவுக்கே இழுக்கு..

பாரதியின் கனவு தோல்வியுற்ற பெண் வெற்றி கொள்வதில் மட்டும் அடங்குவதில்லை.. ஒவ்வொரு பெண்ணுக்கும் சேரும்..

வெற்றி பெறும் திருமண வாழ்வு மட்டுமல்ல நம் இனத்தின் இலக்கு..
நல்ல குடும்பம் மட்டுமல்ல..
நல்ல சமுதாயமும்..
பெண்களாகிய நம் கையில்..

நல்ல மண வாழ்வு மட்டும் நம் லட்சியம் ஆகாது..
நல்ல சமுதாயமும் நாம் உருவாக்கலாம்..



வாருங்கள் நம் போராட்ட களத்தை
நோக்கி....
உருவாக்குவோம் புதிய
தமிழகம்..
மீட்டு வருவோம் அதன் புனிதத்தை..

Guys the reason here i posted s malli personified a major character who without her mistake lost her married life..
Yes I accept it those single ladies who fight against the blamming society and for their living are bold and strong and surely they are puthumai pen..


But this is a msg to other women who limited themselves with family and children...
I want them to feel the charishma and look forward and do something to bring back our own Tamil nadu...



( ennoda kavithaikkum vilakka uraiya):cool:
நல்ல மணவாழ்வு மட்டுமே நல்ல குடும்பத்தை உருவாக்கும்.

நல்ல குடும்பம் நல்ல குழந்தைகளை உருவாக்கும்.

நல்ல குழந்தைகள் நல்ல இளைஞர்களாக உருவெடுப்பார்கள்

நல்ல இளைஞர்கள் தான் புதிய சமுதாயத்தை உருவாக்குகின்றனர்.

எனவே வெற்றிகரமான மணவாழ்க்கை ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உருவாக்கும் என்று மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

உங்கள் கவிதைக்கு நீங்க தானே தெளிவுரை கொடுத்தீங்க. முத்தமிழ் அறிஞர் யாரும் தெளிவுரை எழுதவில்லைதானே? தெளிபடுத்த வேண்டியது கடமைம்மா.

கவிதை எழுதியது கடவுளேயாயினும் குறை இருப்பின் நிற்க வைத்து கேள்வி கேட்ட நக்கீரர் வாழ்ந்த பூமி இது.
 

Sundaramuma

Well-Known Member
கவிதை அருமை...
விளக்கம் இல்லாமலே விளங்கியதே...
எங்கள் தமிழ் அறிவை
பரீட்சித்துப்
பார்க்கிறாயா
பாத்திமா...

கம்பன் வீட்டுக் கட்டுத்தறிப் போல்
நாங்கள் மல்லிகாவின் கைக்குட்டை..
நன்றாக புரியும் எங்களுக்கு...

கவலை வேண்டாம் உனக்கு....
விளக்கம் வேண்டாம் உன் கவிக்கு...
I second....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top