மீளாத்துயில்-- பானும்மா!!!

Luv Meena

Well-Known Member
#33
Enna aachu banumma... romba kashtama iruku itha ninaikave... ungala romba miss panrom banuma...
Rip... Unga family ku irangalum varuthamum banumaaaa
 
Tharav

Well-Known Member
#34
ஆழ்ந்த இரங்கல்--- பானுமா!!!!


வெள்ளிக்கிழமையில் இருந்து அவங்களை நம்ம சைட்ல பார்க்கல அதனால போஸ்ட் போட்டேன்... ஆனா பதில் இல்ல... யார்கிட்டேயும் போன் நம்பர் இருந்த மாதிரி தெரியல... நேத்து நைட்தான் சவீக்கா கிட்ட நம்பர் வாங்கினேன்... காலையில பேசலாம்னு இருந்தேன் அதுக்குள்ள ரதி அக்கா இந்த மாதிரின்னு சொல்லறாங்க... என்னால நம்ப முடியல... நம்ம தளத்தில் இருக்கும் முருகேசன் அண்ணாவிற்கு பானுமாவின் கணவரே இன்று காலை போன் செய்து விஷயம் சொல்லியிருக்கார்...நேற்று இரவு மாரடைப்பால் அவர் நம்மை எல்லாம் விட்டு மீளாத் துயிலில் ஆழ்ந்ததாக சொல்லி நம்ம தளத்தின் நண்பர்களுக்கு தெரிவிக்கும்படி பானுமாவின் கணவரே சொல்லியிருக்கார்... பானுமா ஊர்- கோயம்புத்தூர்


தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் எங்கு திரும்பினாலும் நீங்கதான் இருப்பீங்க... நான்தான் பர்ஸ்ட் டியர் என்ற கமெண்ட் எத்தனை எழுத்தாளரின் உத்வேகம் என்று நான் சொல்லி தெரிய வேணாம்... பானுமா ஒருநாளைக்கு எங்களுக்கு முதல் கமெண்ட்டை விட்டு கொடுங்களேன் என்று கேட்ட நாட்களெல்லாம் உண்டு... அப்போதெல்லாம் விட்டு கொடுத்து பேசி சரி டியர் என்று சொல்லியது உண்டு...


எழுத்தாளர் யாருக்கும் எந்தவிதமான எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்ததில்லை... யாரிடமும் பாகுபாடு காட்டியதில்லை... எல்லோரின் மீதும் கரிசனமும் அக்கறையும் அதிகம்... பக்கம் பக்கமாக பெரியதாக பானுமாவின் விமர்சனத்தை அதிகமாகவே இனி இழக்க போகிறோம் என்று வருத்தமாக இருக்கிறது... இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் உங்களை அதிகம் மிஸ் செய்வோம் பானுமா... வேற என்ன சொல்லன்னு தெரியல...


இதுவரை நேரில் பார்த்தது இல்லை... இது முகமறியா நட்பென்றாலும் தனி ஒரு நபராக வேற்று ஆளாக உணர்ந்ததில்லை... குடும்பத்தில் ஒருவராக இருந்த உங்களை இன்று இல்லை என்று உணரும் போது வருத்தமாக இருக்கிறது... பானுமா தங்களின் ஆன்மா சாந்தியடைய உங்கள் இஷ்ட தெய்வமான அந்த விநாயகரையே பிராத்திக்கறோம்... தங்கள் குடும்பத்திற்கு அந்த விநாயகரே பக்க பலமாக இருக்க வேண்டிக் கொள்கிறோம்...
Very true
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes