மாலை சூடும் வேளை-3

Advertisement

laxmidevi

Active Member
மாலை -3

இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக?

சக பயணிகளின் சத்தத்தில் கண் விழித்தாள் மங்கை. என்ன மணி 3.30 தன் ஆகிறது.அதற்குள் கோவை வந்துவிட்டோம். கல்லூரிக்கு போக பஸ் 4 மணிக்கு தானே வரும்.. சரி காத்திருப்போம் என்று நினைத்தாள் மங்கை.

மங்கை கல்லூரி பச்சை மலையின் மேல் உள்ளது. அங்கு காலை, மாலை இரு வேளை மட்டுமே பஸ் செல்லும். மற்ற நேரங்களில் மலையின் அடிவாரத்தில் இருந்து நடந்து தான் செல்ல வேண்டும். பொதுவாக அது நடக்க கூடிய தூரம் தான் ஆனால் அதிகாலை நேரத்தில் நடப்பது பாதுகாப்பு அல்ல. எனவே மங்கை தன் தோழிகளுடன் தெரிந்தவரின் ஆட்டோவில் சென்று விடுவாள்.இப்போது பஸ் ஏறி விட்டு ஆட்டோ அண்ணா வை அங்கு வர சொல்லலாம் என்று எண்ணியவாறு பஸ்க்கு காத்து கொண்டிருந்தாள்.எபபோதும் மங்கை தோழிகளுடன் தான் செல்வாள்.இன்று தனியே போக கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

நேரம் 4.30 ஆகியும் ஒரு பஸ்சும் வரவில்லை.அப்போது தான் மங்கை யின் அருகில் இருந்த பெண் இங்கு பஸ் வரலை,பச்சை மலை அருகில் உள்ள இடததிற்கு போகனும் கால் டாக்ஸி அனுப்பு ,என்று போனில் சொன்னாள்.இதை கேட்ட மங்கை , அப்பெண்ணிடம் தானும் அங்குதான் போக வேண்டும், உடன் கூட்டி செல்லுமாறு , பணம் தந்து விடுவதாகவும் சொன்னாள்.அவளும் சரி என்றாள்,பின் மங்கையை பற்றி கேட்டு கொண்டிருந்தாள் அந்த பெண்.
இவர்கள் இருவரையும் பார்த்த பாலா,மங்கையின் அருகில் இருந்த பெண்ணை தனியே அழைத்து பேசினார். மங்கை ,அவர்களின் அருகில் தூக்க கலக்கதொடு தன் பேக் யை தோளில் மாட்டியவாறு நின்று கொண்டு இருந்தாள்.

அப்போதுதான் விக்ரம் அவர்கள் முவரையும் பார்த்து குழம்பினான். காரணம் அந்த பெண் ரஞ்சிதா தவறான தொழில் செய்பவள்.அவளுடன் மங்கை ய பார்த்து குழம்பினான்.

பின் பாலாவிற்கு போன் பண்ணி, அண்ணா,அந்த பெண் ரஞ்சிதா வை பிறகு விசாரிக்கலாம் பக்கத்தில் இருக்கும் பெண்ணை முதலில் அனுப்பி விடுங்கள்.ரஞ்சிதாவிற்கும்,அந்த பெண்ணிற்கும் கண்டிப்பாக எந்த சம்பந்தமும் கிடையாது என்றான் விக்ரம்.

சார் அந்த பெண் காலேஜ் விடுதிகு போறதுக்கு உதவி கேட்டு இருக்கு. இவள் அதை யூஸ் பண்ணி அந்த பெண்னை கடத்த பார்த்திருக்கிறாள்.அந்த பெண்ணிற்கு இவளைப் பற்றி எதுவும் தெரியாது.பாவம் சார்.
.
சரிங்க அண்ணா.ரஞ்சிதாவை இங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அந்த பெண்ணிடம் பேசி அவளடத்திறகு பத்திரமாக அனுப்பி விடுங்கள்.ரஞ்சிதாவை பற்றி சொல்லி இனிமேல் யாரையும் நம்பி தனியே செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள்.
பாலாவும் விக்ரம் சொல்லியபடியே செய்தார்.மங்கையிடம் தன்னை அறிமுகப்படுத்திய பின் மங்கைக்கு நேரவிருந்த ஆபத்தை பற்றி கூறி எச்சரிக்கை யாக இருக்க சொன்னார்.
இதை கேட்டு மங்கை அதிர்ந்தாள், இனிமேல் கவனமாக இருப்பதாக சொன்னாள். அவளை பற்றி கேட்டார் பாலா.அவளும் தன்னை பற்றி கூறினாள்.

உனக்கு விஷயமே தெரியாத மா? அங்கே திவிரவாதிகள் ஊடுருவிருப்பதால் உள்ளே போகவும், வெளியேறவும் தடை செய்யப்பட்டுள்ளது.கலலூரிக்கும் விடுமுறை விடப்பட்டது.நீ உன் ஊருக்கே செல் மா

இல்ல சார் வீட்டில எல்லாரும் கோவில்க்கு போய் இருக்காங்க, போனும் போகலை ,என்ன செய்யணும் தெரியல சார்.

சொந்தம் இல்ல பிரண்ட்ஸ் வீட்ல தங்க முடியுமானு பாருமா?

எல்லாரும் அங்கே தான் போய் இருக்காங்க.இங்க குளோஸ் பிரண்ட்ஸ் யாரும் இல்ல சார், எப்படியாவது ஹாஸ்டல் போய் டா , பிரச்சினை இல்லை

அது தானே மா பிரச்சினை .. என் வீட்டில் என் மனைவி, குழந்தைகளுடன் ஊருக்கு போய் இருக்காங்க, இல்லனா,எங்க வீட்டுக்கே போகலாம்.என்ன செய்ய?

இதை பாலாவின் போன் மூலமாக கேட்ட விக்ரம் ,பாலாவிற்கு அழைத்து அண்ணா, நீங்கள் என் காரை எடுத்துக் கொண்டு,அந்த பெண்னை ஹாஸ்டல்ல விட்டு விட்டு மதியம் ஸ்டேஷன் வரும் போது காரை எடுத்து வாருங்கள்.செக்போஸ்டில் நான் பேசி விடுகிறேன், கன் இருக்கு தானே, ஏதேனும் உங்களால்
சாமாளிக்க முடியாத பிரச்சினை னா ,கன் யூஸ் பண்ண தயங்க வேண்டாம், நான் பார்த்து கொள்கிறேன் என்றான் விக்ரம்.

சார் நீங்க எப்படி வீட்டுக்கு போவிஙக?

நான் வேறு கார் வரச் சொல்லி போய் கொள்வேன் என்றான் விக்ரம்.
விக்ரம் பொதுவாக எல்லோர்க்கும் உதவக் கூடியவனே. திருந்திய குற்றவாளிகளுககு கூட வாழ வழி செய்து கொடுப்பான்.ஆனால் தவறு செய்பவர்களிடம் மட்டும் ருத்ர சிவனாக மாறி விடுவான்.அதனால் பாலாவிற்கு எதுவும் வேறுபாடாக தெரியவில்லை.அவரும் விக்ரமின் காரில் மங்கையை கூட்டிச் சென்றார்.

மங்கையும் வேறு வழியின்றி 'உங்களை சிரமபடுத்துவதறகு , மன்னியுங்கள் சார் என்று கூறி விட்டு அவருடன் சென்றாள்.

மங்கை இயல்பிலேயே கலகலப்பான பெண், பயணத்தின் போது பாலாவும் டன் ஏதேதோ பேசி கொண்டே வந்தாள்.
இவர்கள் காரை எந்த செக்போஸ்ட்டிலும் நிறுத்தவில்லை.பின்னே ஏபிசி யின் காரை நிறுத்த யாருக்கு தைரியம் இருக்கும்.
காரில் ஒரு இளைஞன் ,இரு குழந்தைகளை அனைத்தவாறு இருந்த ஃபோட்டோ அவளை கவர்ந்தது. ஃபோட்டோ வா? அதில் இருந்தவனா? அவளுக்கே வெளிச்சம்!!!!

இந்த குழந்தைகள் ரொம்பவே அழகு, யார் சார் என்றாள் மங்கை.
இவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசலைனா சாருக்கு அன்றைய பொழுதே போகது மா

யார் சார் இவர்? உங்க சொந்தமா?

இவர்தான்....என்று பாலா சொல்லும் போது அவருக்கு போன்கால் வந்தது, அவர் பேசி முடிக்கும் முன்பே ஹாஸ்டல் வந்து விட்டது.பாலாவிற்கு நன்றி கூறி காரில் இருந்து இறங்கினாள் மங்கை.

எனக்கு எதுக்குமா நன்றி, சார் தான் பர்மிஷன் கொடுத்தார், அவருக்கு தான் நன்றி சொல்லனும்

எப்படி இருந்தாலும் இந்த நேரத்தில் உங்கள் அலைச்சல் பார்க்காமல் அழைத்து வந்ததற்கு நன்றி சார், உங்க ஏபிசி சாருக்கும் என நன்றியை தெரிவியுங்கள் சார் என்றாள் மங்கை.

பின்னர் பாலாவிடம் விடை பெற்று தன் அறைக்கு வந்தாள் மங்கை.அங்கு அவளின் தோழிகள் காவ்யா,மதியழகி மும் தூங்கி கொண்டிருந்தனர்.பின் இவளும் தூங்கி விட்டாள்.
கனவில் தோன்றிய நபரை பார்த்த மங்கை , திடுக்கிட்டு எழுந்தாள்.மணியை பார்த்தால் காலை 9 .பின் கவி,மதியையும் எழுப்பி எல்லோரும் ரெப்ரெஷ் ஆகி காலை உணவு சாப்பிட்டு வந்தனர்.

கவி "எப்படி வந்த மங்கை, உள்ள வர யாருக்கும் பர்மிஷன் இல்லை பா, கல்லூரி முழுதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று கேட்டாள்.
மங்கை நடந்ததை கூறினாள்.
மற்ற
சரியான நேரத்தில் இருவரும் உதவி இருக்கிறார்கள்.இலலனா ரொம்பவே கஷ்டம் மங்கை என்றாள் கவி.
அதை நினைத்த போது காரில் ஃபோட்டோவில் பார்த்தவனின் முகம் மனதில் வந்து போனது.

மற்ற தோழிகளும் அங்கு வந்தனர். அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து தங்களுக்கு உள்ளே ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த புதியவனை பார்த்து மெல்லியதாய் அதிர்ந்தாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்

வந்தது யாரு?
விக்ரம்தானா?
இல்லை போட்டோவில் பார்த்தவரா?
போட்டோவில் இருந்தது யாரு?
மணிமேகலையின் கணவனா?
இல்லை முரளிதரனா?
 
Last edited:

laxmidevi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மிதேவி டியர்

வந்தது யாரு?
விக்ரம்தானா?
இல்லை போட்டோவில் பார்த்தவரா?
போட்டோவில் இருந்தது யாரு?
மணிமேகலையின் கணவனா?
இல்லை முரளிதரனா?


யார் னு சொல்ல மாட்டனே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top