மாயவனின் அணங்கிவள்-39

Advertisement

Priyamehan

Well-Known Member
இரவு படுக்கும் போதே வேந்தன் அருகில் அருவி வந்து படுத்ததும் எங்கு தன்னை மீறி அவளை ஏதாவது செய்துவிடுவேனோ என்று பயந்து அருவி உறங்கியதும் எழுந்து வெளியே சென்று விட்டான்.

பனியில் வெகுநேரம் நடந்தவன் தன்னுடைய உணர்வுகளை கட்டுப் படுத்திக்கொண்டப் பிறகே மீண்டும் உள்ளே வந்தவன் அருவி தூங்குவதை பார்த்து விட்டு சோபாவில் படுத்துக் கொண்டான்.

தரையில் படுத்திருக்கும் அருவியின் பிம்பம் வரி வடிவமாக காட்சியளிக்க ... அவன் எண்ணங்கள் எங்கு எங்கோ சென்றது.

"யப்பா சாமி இவளை பார்க்காம இருக்கறது தான் நமக்கு நல்லது" என்று அருவியை பார்க்காமல் திரும்பி படுத்துக் கொண்டான்.

அவன் மனமோ "ஒரே ஒரு கிஸ்...எவ்வளவு நாள் தான் நானும் பிரமச்சாரியா இருக்கறது அதிகமா வேண்டா ஒரு கிஸ் போதும்" என்று முரண்டு பிடிக்க...அதை அதட்ட வழி தெரியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டது மட்டும் தான் நினைவு இருக்கிறது வேந்தனிற்கு.

தூக்க கலக்கத்தில் எப்போதும் கீழே இறங்கி படுத்தான் என்று அவனுக்கு சுத்தமாக நினைவு இல்லை..

எழுந்து பார்க்கும் போது அருவி அவன் மார்பில் உறங்கிக் கொண்டிருந்தாள், அதைக்கண்டு தான் வேந்தன் அதிர்ச்சியானது...

இப்போது அருவியை விலக்க வழி தெரியாமல் முழித்தான்.

"இப்போ எழுந்தா நான் தான் வேணும்னு இப்படி பண்ணதா சொல்லுவாளே,இன்னும் என்ன என்ன பேச்சி வாங்கணுமோ என்று எண்ணிக் கொண்டிருக்க வெளியே பால்காரன் மணி அடித்து வேந்தனை நினைவுக்கு கொண்டு வந்தான்.

வேகமாக அருவியை விலக்கி விட்டு எழுந்து சென்று கதவை திறந்தான்.

"ஐயா பால் கறக்க குண்டாவும் எண்ணையும் வேணுங்க.. பெரிய அம்மிணி இல்லைங்களா?" என்றவன் பார்வை கதவை தாண்டி வீட்டின்னுள் சென்றது.. அவன் பார்வை போன திசையில்லையே வேந்தன் பார்வையும் செல்ல அங்கு அருவி பாதி போர்வையை போர்த்தியவாரு படுத்திருப்பது தெரிந்தது.

அதைக்கண்டதும் வேந்தனுக்கு கோவம் எல்லையை கடக்க கதவை இழுத்து பெரும் சத்ததுடன் மூடினான்.

"ஏய் என்ன பார்வ அங்க?, வந்த வேலை என்னவோ அதை மட்டும் பாரு.." என்று வார்த்தைகளை கடித்து துப்ப..

"இல்லய்யா அருவிம்மா தான் தினமும் எண்ணை எடுத்து குடுப்பாங்க, அதான் அவங்கள காணான்னு பார்த்தேன்" என்று சமாளித்தான்.

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த வேந்தனுக்கு அவ்வளவு கோவம்..பார்க்க 27 வயது இளைஞன் போல் இருந்தான்... அவன் பார்வை வீட்டை சுற்றி அலைமோதிக் கொண்டேயிருந்தது.

"ஏய் இங்கப்பாரு வந்தமா பாலை எடுத்தமா போனமான்னு இருக்கனும் அதை விட்டு வேற வேலைப் பார்த்த மூஞ்சு முகரை உடைச்சிடுவேன்" என்று பலமாக சத்தம் போடவும் அந்த பால்காரன் பயந்து விட்டான்.

அருவி கதவு அடைத்த சத்தம் கேட்டு எழுந்தவள் வேந்தனின் பேச்சுக்குரல் கேட்கவும் வெளியே வந்து பார்த்தாள்...

தலைக் கலைந்து கன்னம் தொட, விட்டு போன தூக்கம் கண்ணில் மிச்சம் இருக்க வந்து நிற்பவளைப் ரசனையாக பார்த்த பால்காரனை பார்க்க பார்க்க வேந்தனுக்கு வெறியாகியது.

அருவி வேந்தனைப் பார்க்காமல் அவனை தாண்டி நின்ற பால்காரனை பார்த்தவள்.

'ஹே முத்து என்ன இன்னிக்கு நேரமா வந்துட்ட போல..?"

"ஆமா அம்மிணி நேரமா எழுந்ததால வந்துட்டேன்" என்று முத்துவும் பதில் சொல்லிக் கொண்டிருக்க

"உள்ளேப் போ" என்று ஆகாரமாக கத்தினான் வேந்தன்.

அப்போது தான் அவன் முகத்தைப் பார்த்தாள் அருவி... அவனை மேலும் கோவப்படுத்த விரும்பாமல் உள்ளே செல்ல திரும்பியள்..

"முத்து சோப்பு கொட்டாயில்லையே இருக்கு கையை நல்லா கழுவிட்டு பால் பீய்ச்சு" என்று உள்ளே சென்று விட்டாள்.

முத்து பால் கறந்து ஊத்திவிட்டு வேந்தனிடம் பால் கணக்கு சொல்ல வர...

"நாளையில இருந்து நீ பால் எடுக்க வர வேண்டாம், நான் உங்க ஓனர்கிட்ட பேசிக்கறேன், இப்போ எத்தனை லிட்டர் வந்தது சொல்லிட்டு கிளம்பு" என்றவன் முகம் முள்ளை கட்டியது போல் கடுகடுவென்று இருந்தது.

"ஐயா அப்படி எதுவும் பண்ணிடாதீங்கய்யா.. ஓனர் எதுமே கேக்காம வேலையை விட்டு தூக்கிடுவாங்க..." என்று புலம்பியவன், "நான் அருவிம்மாவை தப்பா பார்க்கலைங்கைய்யா என்னை ஒரு அண்ணனா நினைச்சி தினமும் முத்து முத்துன்னு நல்லா பேசுவாங்க...எனக்கும் கூட பொறந்தது யாருமில்லைன்னு அருவிக்கிட்ட ஒரு பாசம் அதான் ஆளை காணலையேன்னு எட்டிப் பார்த்துட்டுட்டேன் தப்பு தான் மன்னிடுங்க" என்று கைக் கூப்பி கெஞ்சியவன் ... "இப்போ பத்து லிட்டரு வந்தது" என்று திரும்பி பார்க்காமல் கிளம்பி விட்டான்.

உள்ளே வந்த வேந்தன் படுக்கையை மடித்துக் கொண்டிருந்த அருவியின் முழங்கைக்கு மேல் பிடித்து அவன் புறம் திருப்பியவன்

"அறிவு இருக்காடி...?எங்க போனாலும் யாராவது ஒருத்தர்கிட்ட உறவு கொண்டாடிட்டு வருவியா? அவங்க நல்லவங்களா இல்லைனான்னு பார்க்க மாட்டியா? இதுக்கு தான் உன்னைய எங்கையும் அனுப்பாம கைக்குள்ளயே வெச்சிருந்தேன்... அவன் நீ தூங்கறதை எட்டிப் பார்க்கறான்... அவனைப் போய் முத்து முத்துன்னு செல்லம் கொஞ்சி பேசிட்டு இருக்க...கொஞ்சம் கூட யோசிக்கறதேயில்ல" என்று கத்த..

அவள் எங்கு அதையெல்லாம் காதில் வாங்கினால்... உன்னைய கைக்குள்ளயே வெச்சிருந்தேன் என்ற வார்த்தை மட்டும் தான் ரீங்காரமாக காதில் ஒலித்துக் கொண்டிருந்தது அத்துடன் சேர்ந்து உரிமையான 'டி'என்ற வார்த்தையும் தான்.

"ஏய் உன்னைய தாண்டி கேக்கறேன் எதுக்கு இப்படி செல மாதிரி நிற்கர..?"

"ஹா... நீங்க கூட தான் நேத்து நான் கேட்டதுக்கு பதில் சொல்லல முதல அதுக்கு சொல்லுங்க அப்புறம் நான் இதுக்கு பதில் சொல்றேன்..." என்று குளியறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

"நான் பேசிட்டு இருக்கேன் நீ போற... அதுவும் இதுவும் ஒன்னா?" என்று வெளியே இருந்து கத்தியவன் அருவியிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும் காபி போட சமையலறைக்குச் சென்று விட்டான்.

இருவரும் சமைத்து சாப்பிடும் போது காசி தாத்தாவும் அம்சவேணி பாட்டியும் வந்துவிட்டனர்.

"ராசா நீ வந்துருக்கும் போது நாங்க வெளிய மாட்டிக்கிட்டோம் உன்னைய கவனிக்க முடியல"

"பரவலா தாத்தா உங்க பேத்தி நல்லாவே கவனிச்சிகிட்டா" என்று அவன் மார்பில் படுத்து உறங்கியதை நினைத்து புன்னகையுடன் கூறினான்.

"பாட்டி..."

"சொல்லு கண்ணு"

"நான் தலைக்கு ஊத்திட்டேன்".

"அப்படியா..? எப்போ?"

"நேத்து"

"அச்சோ உள்ளே வந்துட்ட, எந்த பொருளையும் தொடலையே..சமயக்கட்டுக்குள்ள போனியா?

இல்ல என்று மறுப்பாக தலையசைக்க

"நான் வூட்ட வழிச்சிகறேன்
தாத்தன கைத்து கட்டல வெளியே எடுத்து போட சொல்றே, நீ வெளியே அட்டைக்கு அடியில் படுத்துக்கோ...வீட்டுக்கு உள்ளே வரக்கூடாது.. ஐஞ்சு நாளைக்கு சாப்பாடு நான் செஞ்சி போடறேன்.. தட்டு, டம்ளர்லா தனியா தான் வெச்சிக்கணும்,வெளியே போய் இரு வாரேன்" என்று உடை மாற்ற போனார் பாட்டி

அருவி பாவமாக வேந்தனைப் பார்த்தாள்.

அவள் பார்வையில் என்ன கண்டானோ.. "தாத்தா இவள ஊருக்கு கூட்டிட்டு போறேன்... அவளுக்கு பிராஜக்ட் வேலை இருக்கு... எப்படியும் நோம்பிக்கு வருவோம்ல..." என்று ஆபத்பாந்தனாக வேந்தன் வந்து காப்பாற்ற அருவிக்கு அப்போது தான் உயிரே வந்தது.

சிறிது யோசித்த காசி தாத்தா.."இந்த முறையாவாது காப்பு கட்டறதுக்கு முன்னாடியே வந்து சேருங்க" என்று கண்டிப்புடன் சொல்ல..

"சரி வந்தரோம்" என்றவன் "சாப்பிட்டோம் இப்போ கிளம்புனா தான் அங்க போய் அத்தையை பிக்கப் பண்ண முடியும் கிளம்பட்டுமா?" என்றதும் அருவியின் முகம் சிருத்தது.

தாத்தா பாட்டியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்ப..

"நீ இருந்த இந்த ஒரு வாரமும் வூடே கலகலன்னு இருந்தது கண்ணு.. இனி இந்த கிழவன் கிழவியும் தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு உக்கார்ந்து இருக்கோணும்" என்று பாட்டி கவலைக் கொள்ள...

"கண்டிப்பா இந்த நோம்பிக்கு சீக்கிரம் வரோம்" என்றவள் காரின் அருகே செல்ல..

அவள் முன்னாள் அமர்வாளா? பின்னால் அமர்வாளா? என்று வேந்தன் பார்த்துக் கொண்டிருக்க அருவி வேந்தனின் அருகில் தான் அமர்ந்தாள்.

அதில் வேந்தனின் கண்களில் மின்னல் வெட்டியது.

கார் மெதுவாக கிளம்ப..

"வெளிய படுக்க அவ்வளவு கஷ்டமா ...?" என்றான்

"வெளிய படுக்கறதுல பிரச்சனை இல்ல... எனக்கு தொணைக்கு அவங்க ரெண்டு பேருமே படுத்துப்பாக ... எனக்கு அந்த தனி தட்டு தனி டம்ளர் இதுலாம் தான் பிரச்சனை.. ஏதோ தீண்ட தகாத ஒன்னு நடந்ததுப் போல பாட்டி பண்ணுவாங்க அது தான் பிடிக்கல"

"அவங்க அந்த கால மனுசங்க அப்படி தான் இருப்பாங்க"

"நான் இருக்க வேண்டான்னு சொல்லலையே எனக்கு பிடிக்கலைன்னு தான் சொல்றேன்... அந்த காலத்துல வேற ஒரு விசயத்துக்காக அப்படி பண்ணாங்க ஆனா அதையே இப்போ மாத்தி ஏதோ தீட்டு மாதிரி பண்றது பிடிக்கல.."

"என்ன வேற விசியம்..?"

"மாசத்துல முப்பது நாளும் வீட்டுக்காக ஓடி ஓடி வேலை செய்யற பொண்ணுங்க... மாதவிலக்கு ஆகற போதாவது ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு தான் ஊர்ல எல்லா பொண்ணுகளும் தங்க ஒரு குடிசையும் தனி தனி தட்டும் குடுத்து அங்க தங்கி மூனு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு சொல்லுவாங்க... அதை தப்பா புரிஞ்சிட்டு ஏதோ தொட்டா தீட்டுன்னு தனி தனி பொருள் கொடுக்கறது எனக்கு பிடிக்கல" . என்றவள் சட்டென்று "எப்படி நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிஞ்சிது? ஊருக்கு வான்னு கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கல" என்றாள்.

"நான் கூட நீ வருவன்னு எதிர்பார்க்கல" என்று சொல்ல.. கார் சத்தியமங்கலத்தை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது.

"மாமா இங்க கொடிவேரி டேம் இருக்கு... அதுக்கு போய்ட்டு போவாமா?" என்றாள் ஆர்வமாக.அவள் ஆர்வம் எல்லாம் ஷர்மிளாவைப் பார்ப்பதை எப்படியாவது தள்ளிப்போட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அதற்காக வீட்டிற்கு செல்வதை எப்படி தாமதிப்பது என்று காரணங்களை தேட ஆரம்பித்தாள்.

"இப்போ குளிக்க போறியா?"

"இல்ல சும்மா பார்த்துட்டு போலாம்ல..ஜாலியா இருக்கும்"

"டைம் இல்லை அத்தையும் மாமாவும் வீட்டுக்கு வந்துப்பாங்க.."

"நீங்கதான் பிக் பண்ணணும்னு சொன்னிங்க.."

"பிக் பண்ண கார்த்திக்கும் தேவாவும் போய்ட்டாங்களா.."

"அப்போ பொறுமையா போலாம்ல.."

"ஏன் வீட்டுக்கு வரதுல விருப்பமில்லையா?"

"அப்படி சொல்லல" என்றவள்... 'கொஞ்சம் நேரம் தள்ளிபோடலாம்னு நினைச்சா விடமாட்டான் போலையே' என்று நினைத்தாள்.

காரின் கண்ணாடி வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாலும் அவள் மனம் பலதையும் நினைத்துக்கொண்டு தான் வந்தது.

ஷர்மிளா சித்தியை எதிர்க் கொள்வதை நினைத்து தான் அவளது கவலை முழுவதும்.

கடைசியாக வந்தப் போதுக் கூட அவர் சொல்லி சென்றது இன்றும் அருவியின் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"உன்னைய இந்த வீட்டுலையே இருக்க வைக்க... காதல் கீதல்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்க கேப்பாங்க... அப்படி கேட்டா வேண்டான்னு சொல்லி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடு... இங்க இருந்து போனா தான் நீ சந்தோசமா இருப்ப, இவங்க கூட இருந்தா உன்னோட மொத்த சந்தோசத்துக்கு ஆப்பு வெச்சிடுவாங்க, உன்னால நிம்மதியா ஒரு சொட்டு தண்ணிக் கூட குடிக்க முடியாது.

உன்னோட சந்தோசத்துக்காகவும் நிம்மதிக்காவும் சித்தி ரிஸ்க் எடுக்க முடிவு பண்ணிட்டேன்டா...

வேந்தனுக்கு தேவாவை கட்டி வெச்சி உன்னைய இந்த சிறையில இருந்து விடுதலை பண்ணலாம்ன்னு இருக்கேன்" என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டு சென்றார்.
அவர் உளறினாலும் அதில் இருக்கும் உள்ளர்த்ததை தேவா அன்று பேசும் போதே புரிந்துக் கொண்டாள் அருவி.

ஷர்மிளா தேவாவின் மனதில் மட்டும் அருவியை பற்றி தவறாக கூறி நஞ்சை விதைக்கவில்லை அருவியின் மனதிலும் வேந்தனைப் பற்றி தவறாக கூறி அவள் மனதையும் வேந்தனுக்கு எதிராக திருப்பிருக்கிறார் என்பதெல்லாம் இப்போது தான் புரிய ஆரம்பித்தது அருவிக்கு.

'என்னோட அதியை நான் யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன்... எதுக்கு விட்டு குடுக்கணும்... முன்னாடி கேட்டுருந்தா குடுத்துருப்பனோ என்னவோ இப்போ என் மனசு புரிஞ்ச பின்னாடி கண்டிப்பா அதியை யாருக்கும் குடுக்க மாட்டேன், அவன் எனக்கு மட்டும் தான்" என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

ஊரில் இருந்த இரண்டு நாளும் வேந்தன் கண்ணில் தெரிந்தது காதல் தான் என்றும் இப்போது புரிந்துகொண்டவள் அதை உறுதிப் படுத்திக்கொள்ள..

"மாமா... நேத்து நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல" என்றாள் திடிரெண்டு..

"என்ன கேட்ட?"என்றவன் காரை அவர்களில் ஊருக்கு செல்லும் வழியில் திருப்பஅருவின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அந்த கேள்விக்கு விடை தெரிந்து விட்டால் காதலுக்காக சித்தியிடம் உறுதியாக நின்று போராடலாம் என்ற எண்ணம் வர..

"என்னைய பார்க்கற பார்வையில ஏதோ வித்தியாசm தெரியுதே அது என்னனு கேட்டேன், சீக்கிரம் சொல்லுங்க மாமா வீடு வரப் போகுது.. சொல்லுங்க மாமா என்று அடம்பிடித்தவளுக்கு அதற்கான பதிலை தெரிந்துக் கொள்ளாமல் வீட்டிற்கு செல்வதற்கு பிடிக்கவில்லை.

அருவி கேக்கவில்லை என்றாலும் வேந்தன் சொல்லி விடும் முடிவில் தான் இருந்தான்.

எப்போதும் அருவி வேந்தன் மார்பில் படுத்து உறங்கினாளோ அப்போதில் இருந்து உடலாலும் உள்ளத்தாலும் அவள் வேண்டும் அனைத்திற்கும் அவள் வேண்டும் என்றது மனம்...

யாராலும் தூண்ட முடியாத உணர்வுகளை அருவி சிறு பார்வையால் தூண்டிவிடுகிறாள்.

அருவியை கண்டுவிட்டால் மட்டும் அவன் உணர்வு அருவியாக கொட்ட ஆரம்பித்துவிடுகிறது...
அருவி பேசிய பேச்சிருக்கு இவ்வளவு நாள் காதலை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தான், ஆனால் அவனால் அதை கடைபிடிக்க முடியவில்லை.

அருவி எது செய்தாலும் அது தனக்காக தான் இருக்க வேண்டும் என்று மனம் அடம்பிடித்தது,

அதேப் போல் அவளை தொடும் காற்றுக் கூட அவனை கேட்டு தான் தொட வேண்டும், அருவிக்கு அனைத்துமாக வேந்தனாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவன்,

அப்படி இருக்கும் போது அவளை வேற ஒருவனுக்கோ, இல்லை அவனை வேற ஒருத்திக்கோ, விட்டு கொடுக்க எப்படி முன் வருவான்?. அதனால் இன்று அவன் மனதை அருவிடம் சொல்லிவிடும் எண்ணதில் தான் இருந்தான். அவளே அதற்கு வழி செய்துகொடுக்க
கார் வீட்டின் முன் நின்றது.

"இறங்கு"

"ஹும்ஹும் பதில் சொன்னாதான் இறங்குவேன்"

"என்ன அடம் இது? இறங்கு"

"அடமே தான் எனக்கு பதில் வேணும்..சொல்லுங்க மாமா"

"சரி இறங்கு சொல்றேன்"

"நீங்க சொல்லுங்க நான் இறங்கறேன்."

அவளை நோக்கி திரும்பி அமர்ந்தவன்.. "காதலர்தினம் படம் பார்த்துருக்கியா?" என்றான் சம்மந்தமே இல்லாமல்.

"ஹா பார்த்துருக்கேன் அதுக்கு என்ன ...?"

"அதுல ஒரு பாட்டு வருமே"

"அதுல நிறைய பாட்டு வரும் அதுலாம் எதுக்கு? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க".

"அதுல தாண்டி பதில் இருக்கு... ரோஜா பாட்டு கேளு தெரியும்?" என்று காரைவிட்டு இறங்கி உள்ளே செல்ல
தன்னுடைய அலைபேசியில் அந்த பாட்டை தேடிக் கொண்டே வீட்டின்னுள் வந்தாள் அருவி..

வீட்டின் கூடத்தில் அனைவரும் அமர்ந்திருக்க அதில் நடுநாயகமாக அமர்ந்திருந்தனர் ஷர்மிளாவும் அவரது கணவர் நந்தகோபாலணும்.

"வா வேந்தா ..."

"அத்தை மாமா எப்படி இருக்கீங்க? வந்து நேரமாகுதா" என்று கேட்டுக்கொண்டிருக்க

அவனுக்கு பின் அலைபேசியை அலசிக் கொண்டு வந்த அருவியை நோக்கி தான் அனைவரின் பார்வையும் சென்றது.

"ஏய் அரு.. வரேன்னு சொல்லவே இல்ல" என்று ரித்து ஓடி சென்று அருவியின் கை பிடிக்க தேவா என்ன செய்வது என்று தெரியாமல் தாயின் அருகில் அமர்ந்திருந்தாள்.

ஹா அலைபேசியை பார்த்துக் கொண்டே "உங்க நொண்ண தான் கூட்டிட்டு வந்தார்" என்றவளின் கையை பிடித்து கிள்ளினாள் ரித்து.

"ஏய் என்னடி? எதுக்கு கிள்ளற? உனக்கு எத்தனை தடவை சொல்றது கிள்ளாதன்னு?" என்றவளுக்கு அப்போது தான் அனைவரும் தங்களை தான் பார்க்கிறார்கள் என்று தெரிந்தது.

அவர்களுக்கு ஒரு அசட்டு சிரிப்பை சிந்தியவள்... விசாரிக்க வேண்டுமே என்று

"சித்தி சித்தப்பா எப்போ வந்திங்க? நல்லா இருக்கீங்களா?" என்றாள்.

"ம்ம் ம்ம்" என்றனர் இருவரும்.

"அரும்மா அருக்குட்டி "என்று சேனாதிபதியும், தினகரனும் அருவியை கொஞ்ச போய் விட... இங்கு ஷர்மிளாவிற்கு அடிவயிறு எரிந்தது.

அவர்களிடம் பேசிவிட்டு "நான் குளிச்சிட்டு வந்துடரேன்" என்றவள் வேந்தனிடம் "பாட்டை கேட்டுட்டு வரேன்" என்று உதட்டை அசைத்து விட்டு அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.

பாட்டை கேட்டதும் அவளது முகபாவனை எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும் என்று வேந்தன் மனம் முரண்டு பிடிக்க..அனைவரின் முன் எழுந்து செல்ல முடியாது என்று அமைதியாகிவிட்டான்.

அறைக்குச் சென்று படுக்கையில் மல்லாக்க படுத்துக் கொண்டே பாட்டை போட்டாள். ( நீங்களும் ஒருதடவை அந்த பாட்டை கேட்டுட்டு வந்துடுங்க, அப்போதான் வேந்தன் காதல் புரியும்)

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடு வந்தேன்

உன்னைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்

உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன

நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா

இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்

நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா.

பாடல் முழுவதும் ஒலித்து முடிக்க மீண்டும் மீண்டும் ஒரு இருபது முறை விடாமல் கேட்டப் பின்பு தான்... அதன் அர்த்தம் புரிய... அலைபேசியை தூக்கி போட்டுவிட்டு..கதறி கதறி அழுதாள்.

"நான் தப்பு பண்ணிட்டேன்....தப்பு பண்ணிட்டேன் அன்னைக்கு அப்படி பேசிருக்க கூடாது... ஆஆ... ஆஆ... " என்று ஆற்றாமையில் அழுகை அழுகையாக வந்தது.

எதற்கு இந்த அழுகை என்றால் இவ்வளவு நாள் வேந்தனுக்கு தன்னை கண்டாலே பிடிக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்க அவனோ தன் மீது உயிரையே வைத்திருக்கிறான் என தெரிந்ததும் உண்டான அழுகை. இது.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top