மாயவனின் அணங்கிவள் -37

Advertisement

Priyamehan

Well-Known Member
அருவியின் கண்கள் வேந்தனிடம் எதையோ சொல்ல வருவதுப் போல் தோன்றியது.

"என்னவா இருக்கும்...?"என்று புருவம் சுருக்கி வேந்தன் யோசிப்பதற்குள் அருவியின் முகம் லேசாக சுருங்கவும்
"என்ன" என்றான்.

"அது...." என்று இழுத்தவள் "நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடறேன்" என்று எழ....

"ம்ம்" என்றவன் எழுந்து நின்று வலதுப் புருவத்தை கட்டை விரல் நகத்தால் நீவியப்படி நின்றான்.

குளியறையில் இருந்து வெளியே வந்தவள் தயங்கி தயங்கி நிற்க

"எதாவது வேணுமா?" என்று வேந்தனாகவே முன் வந்து கேட்டான். அவள் கையில் இருந்த சிவந்த மருதாணியின் நிறத்தைப் பார்த்தவாறே.
அது ரத்தமாக சிவந்து அவன் மீது கொண்ட காதலின் அளவைக் காட்ட.. 'இவ என்னைய நினைச்சி இதை வெச்சிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்' என்று அவன் மனம் உள்ளுக்குள் கதறாமல் இல்லை.

"ம்ம்."

"என்ன?"

"அது..அது" என்று மறுபடியும் தயங்கவும்

"அதான் எது...?" என்றவன் அவள் தயக்கத்தில் அதுவாக தான் இருக்கும் என்று புரிந்துகொண்டான்.

"அது மெடிக்கல்ஸ்ல கிடைக்கும், தலைக்கு ஊத்திட்டேன்" என்று அவனுக்கு புரியுமோ புரியாதோ என்ற சந்தேகத்துடன் பொதுவாக சொன்னாள்.

"சரி இரு" என்று வெளியே போனவன்... "குளிச்சிட்டு ரெஸ்ட் எடு வந்தரேன்" என்று சொல்லிவிட்டு சென்றான்.

போன வேகத்தில் வந்தவனின் ஒரு கையில் கருப்பு பையில் பேப்பர் சுற்றிய ஒரு பொட்டலம் இருக்க..இன்னொரு கையில் சாப்பிட தேவையான உணவு பலகாரங்களும் பழங்களும் இருந்தது.

தலைக்கு குளித்து தலையில் துண்டை கட்டியிருந்த அருவி வேந்தன் பைகளுடன் உள்ளே வந்ததைப் பார்க்க.. அவனும் இவளை தான் பார்த்திருந்தான்.

"இந்தா.. இதுல உனக்கு தேவையானது இருக்கு..."

"ம்ம்" என்று அவன் ஒரு கையில் இருந்த கருப்பு பையை மட்டும் வாங்கிக் கொண்டவள், மீதியை டேபிள் மேல வைங்க என்று மீண்டும் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

"என்னன்னே சொல்லாம கரைட்டா வாங்கிட்டு வந்துட்டான்..நீ சுமார்ட்டா அதி .. ஐ லவ் யூ" என்று இதழ் குவித்து காற்றுக்கு முத்தம் கொடுத்தாள்.

உணவு பண்டங்களை மேஜையின் மீது வைத்தவன் அருவிக்காக மாதுளை பழச்சாறு தயாரித்தான்.

குளியலறையில் இருந்து வெளிவந்த அருவி சமையலறையில் சத்தம் கேட்கவும் அங்கு சென்றவள் வேந்தன் வேலை செய்வதைப் பார்த்து மலைத்து நின்றாள்.

அவள் முன் பழசாறை நீட்டியவன் "குடி" என்க .

"உங்களுக்கு இந்த வேலைக் கூட செய்ய தெரியுமா...?என்று விழி விரித்தவளை வினோதமாக பார்த்தவன் பதில் சொல்லாமல் சென்று சோபாவில் அமர்ந்துக் கொண்டான்

அவன் பின்னாலையே சென்றவள்.. "நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்க தானே.." என்று தயங்கி தயங்கி கேக்க..

அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு "இல்லை" என்று தலையசைத்தான்.

"அன்னிக்கு கோவிலுக்கு போகும் போது நான் இன்னைக்கு சொன்ன காரணத்தை தான் சொன்னேன், அப்போ 'எனக்கு தெரியும் நீ எப்போ தலைக்கு குளிப்பங்கற' மாதிரியோ என்னவோ சொன்னிங்க...எப்படி என்னோட டேட் டைம் உங்களுக்கு தெரியும்...?"

'மனசு பிடிச்சிருந்தவங்களோட ஒவ்வொரு அசைவுமே தெரியும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்.. "அதுக்கு முன்னாடி தான் அத்தை உனக்கு வயிறு வலின்னு சொல்லி மாத்திரை வாங்கிட்டு வர சொன்னாங்க.. நான் ஹாஸ்பிடல் போலாம்ன்னு சொன்னப்ப.. இது மாசம் மாசம் வரது தான் இதுக்காகலா ஹாஸ்பிடல் போக வேண்டியதில்லை சொல்லி நீ தலைக்கு ஊத்திருக்கறதை சொன்னாங்க... அதுக்கு 10 நாள் கழிச்சி தான் நம்ப கோவிலுக்கு போனோம்.. மாசத்துக்கு 30 நாள் தானே" .என்று நிறுத்த

'நான் தான் அப்போது இவனை தவறாக நினைத்து விட்டேனா' என்று மனம் நினைக்க..

வேந்தன் தாத்தாவிற்கு அழைத்து பேசினான்.

"எப்போ ராசா வந்த? எனக்கு நியாபகமே இல்ல... இன்னைக்கு நம்ப பங்காளி வீட்டு வரவேற்பு முடிஞ்சதமும் சாங்கியம் பண்ண இருக்க சொல்றாங்க நாளைக்கு காலையில மூகூர்த்தம்... புள்ளைய வேற தனியா விட்டுட்டு வந்துட்டோமேனு கவலைப்பட்டுகெடந்தோம்..நல்ல வேலை நீ வந்துட்ட"

"அவசியம்னா இருந்துட்டு வாங்க தாத்தா.."

"நீ ரவைக்கு புள்ளைய பார்த்துக்கோ ராசா ... கொழந்த புள்ள ஆள் இல்லைனா சாப்பிட மாட்டிங்கிறா" என்று பக்கத்தில் இருந்து பாட்டி கத்த .

"சரி பாட்டி நான் பார்த்துக்கறேன் கவலைப்படாம கல்யாணத்தை முடிச்சிட்டு வாங்க" என்றவனுக்குள் 'இன்னைக்கு உனக்கு சிவராத்திரி தான்டா' என்று சொல்லிக் கொண்டான்.

அலைபேசியை அணைத்ததும் "என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள் ஆர்வமாக .

"அவங்க சொன்னது இருக்கட்டும் இப்போ எதுக்கு மருதாணி வெச்ச..?"

"சும்மா பாட்டி வெச்சிப்பார்க்க ஆசைப்பட்டாங்க அதான் வெச்சேன்."

"ம்ம் நைட்டுக்கு அங்க இருந்துட்டு காலையில வராங்களா.."

"அப்போ நைட் யாரு சமைப்பா..?"

"இப்போவே இன்னும் சாப்பிடல, அதுக்குள்ள நைட்டுக்கு கவலையா...?"

"எனக்கு இப்போ சாப்பாடு வேண்டா..."

"ஏன் இப்போதான் பசிக்குது சொன்ன?"

"அது ... இந்த டைம்ல சாப்பிட்டா வாமிட் வந்துடும்.. அதனால தலைக்கு ஊத்துனதும் ஒரு நேர சாப்பாட்டை அவாய்ட் பண்ணிடுவேன்"என்று சொல்லவும் ...

பெண்கள் எந்த அளவிற்கு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்று நினைத்தவனுக்கு பெண்கள் மீது தனி மரியாதை தோன்றியது.

அவள் அருகில் சென்று அமர்ந்தவன் "ரொம்ப வலிக்குமா?" என்று மென்மையான குரலில் கேக்க..அந்த குரலை தான் இவ்வளவு நாள் அருவி அவனிடம் எதிர்பார்த்தது.

"எனக்கு பெயின் பெருசா வராது... ஏனா அம்மாவும் அத்தையும் என்னையும் ரித்துவையும் வயசுக்கு வந்தப்ப நல்ல சாப்பாடு கொடுத்து பார்த்துகிட்டாங்க அதனால் பெருசா வலி இல்ல ஆனா அப்படி செய்யாம இருக்கற என்னோட பிரண்ட்ஸ்க்குலாம் வலி இருக்கும் அவங்க கஷ்டப்படறதை பார்த்துருக்கேன், எனக்கு இந்த மாதிரி டைம்ல வாமிட் வர மாதிரி தான் இருக்கும் என்று வேந்தனின் குரலு க்காகவே அருவியாக கொட்டினாள்.

"ஓ.."

"ம்ம் வயசுக்கு வரும்போது சின்ன பொண்ணு தானே...இடுப்பு எலும்பு ஸ்ட்ராங் ஆகணும்னு நாட்டுகோழி முட்டையை மேல் ஓடு மட்டும் எடுத்துட்டு அப்படியே பச்சையா குடிக்க சொல்லுவாங்க.. அப்புறம் முட்டையோட ஓட்டுல நல்லெண்ணெய் ஊத்தி குடிக்க சொல்லுவாங்க.. அப்புறம் உளுத்தங்களி, உளுந்து வடைன்னு 90 நாளைக்கு இது மாதிரி தினமும் குடுத்தாங்க.. வ்வே நெனச்சாலே வாந்தி வந்துடும்" என்று உமட்டுவது போல் செய்தவள்.."இதை சாப்பிட்டா எலும்பு நல்லா பலமா இருக்குமா அதனால வலி வராதுன்னு சொன்னாங்க..அதான் ஹெல்த்தி புட்டும் கூட. நமக்குதான் நாக்குக்கு ருசியா கேக்குதே அப்புறம்
அப்படி இருந்தும் ஏதாவது ஒரு மாசம் லைட்டா பெயின் வந்துடும்" என்றாள்.

"நீ இதை எல்லா குடிச்ச அதை நான் நம்பனும்.."

"உண்மையா குடிச்சேன் அதி.. நீ வேணா அத்தைகிட்ட கேளு.."

"ஏய் இப்போ என்ன சொன்ன?"என்று வேந்தன் அதி என்ற வார்த்தையை கேட்டுவிட்டு கேக்க..

"அத்தைக்கிட்ட கேக்க சொன்னேன்" என்றாள் சாதாரணமாக.

"அதுக்கு முன்னாடி"

"என்ன சொன்னேன்?" என்று யோசித்தவளுக்கு அவனை "அதி" என்று அழைத்தது நினைவு வர நாக்கை கடித்துக் கொண்டவள்...

"ஒன்னும் சொல்லலையே" என்று சமாளித்து விட்டு அவன் போட்டுக் கொடுத்த மாதுளப்பழசாறைக் குடித்தாள்.

ஆனால் வேந்தன் அவள் சொன்னதை தெளிவாக கேட்டுவிட்டான்.அவளின் அதி என்ற அழைப்பில் உடல் சிலிர்த்து கை முடிகள் அனைத்தும் குத்திட்டு நின்றது அவனுக்கு..

அதன்பிறகு இருவரும் அமைதியாக இருக்க..மதியம் போய் மாலை வந்தது.. கணக்கு வழக்குகளை பார்த்து முடித்தவன்..

"தோட்டம் வரைக்கும் போய்ட்டு வரேன்" என்றான்.

"நானும் வரட்டுமா?" என்று ஆசையாக கேக்க..

அவளை திரும்பி பார்த்தவன் "ம்ம் வா" என்று செருப்பை மாட்டினான்.

"இங்க வந்ததுல இருந்து தாத்தா பாட்டியோடவே இருந்துட்டேன் தோட்டம் பக்கம் போகவேயில்ல.." என்று அருவி வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வர.
"ஷர்மிளா அத்தை நாளைக்கு ஊருக்கு வராங்க" என்றான்.

அதில் அருவியின் நடை தடைப்பட்டது. அருவி நிற்பாள் என்று எதிர்பார்க்காமல் நடந்ததால் அருவியை இடித்து நின்றான் வேந்தன்.

அதில் இருவருக்குள்ளும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயிந்தது போல் இருந்தது அருவி முழுவதுமாக வேந்தனின் மார்பில் சாய்ந்து நின்றாள். முதலில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட வேந்தன்.

"அவங்க வராங்கன்னா நீ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகற?" என்று அருவியின் காதலில் மூச்சுக்காற்று உரசக் கேட்கவும்..

அவள் மனதோ பதறியது.. ஷர்மிளாவிற்கு தேவாவிற்கும் வேந்தனிற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டியிருக்கிறார். வந்ததும் பேச்சை ஆரம்பித்தால், அன்று தான் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு வேந்தன் தேவாவுடனான திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் உண்டான பதட்டம் இது.

"ஒன்னுமில்ல..." என்று அமைதியாக நடக்க ஆரம்பித்து விட்டாள்.

இருவருக்கும் தங்கள் மனதை உரைக்க சரியானா சந்தர்ப்பம் அமைந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இனியன் ரேணுகாதேவியை பார்க்க பட்டணத்தில் இருக்கும் ஒரு காபி ஷாப்பிற்கு சென்றான்.

ஏற்கனவே கோவில் திருவிழாக்களில் குடும்ப அறிமுகத்தின் போதும், ஒரு முறை தனியாகவும் பார்த்திருக்கிறான் அதனால் ரேணுகாவை அடையாளம் காண்பது அரிதாக இருக்கவில்லை.

அவனுக்கு முன்பே ரேணுகா வந்து காத்திருக்க..

"சாரி..கரைட் டைம்க்கு வந்துடலாம்ன்னு பார்த்தேன் டிராபிக் சொதப்பிடுச்சி"

"பரவலா நானும் இப்போதான் வந்தேன்.. என்று இருவரும் கைகுலுக்கி அமர்ந்தனர்

யார் முதலில் ஆரம்பிப்பது என்பதில் தயக்கம் இருக்க..

"உங்களுக்கு என்னைய பிடிச்சிருக்கா?" என்று ரேணுகா தான் முதலில் ஆரம்பித்தாள்.

"முன்னையே பார்த்துருக்கேன் அப்பவே புடிக்கும்னு பொய்லாம் சொல்ல விரும்பல.. இப்போதான் கல்யாணம் பேச்சி எடுத்ததும் உங்க இன்ஸ்டா பேஜை பார்த்தேன்.." என்று நிறுத்தியவன் "எனக்கு சம்மதம் தான்" என்று தலையை ஆட்ட..

ரேணுகாவோ "இங்க பாருங்க இனியன், எனக்கு காதல் கத்திரிக்கா மேலலா நம்பிக்கை இல்லைனு சொல்றதை விட விருப்பமில்லை.. அதுக்காக அப்பா அம்மா பார்க்கற பையனை அப்படியே கல்யாணம் பண்ணிப்பேன்னும் சொல்ல மாட்டான், அதான் உங்ககிட்ட பேசணும்னு விருப்பப்பட்டேன், உங்களுக்கு ஏதாவது சொல்லம்னுனா இப்போவே சொல்லிடுங்க. இப்போ விட்டுட்டு கல்யாணத்துக்கு அப்பறம் சொன்னா கண்டிப்பா நான் அதை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன். எங்கப்பா முதல வேந்தன்னு சொன்னார் அப்புறம் இனியன்னு சொன்னார், நாளைக்கு வந்து வேற ஒருத்தன்னு சொன்னாலும் சொல்லுவார் அதனால நான் எதையும் பெருசா மைண்ட்ல ஏத்திக்கல எப்போ வரைக்கும்ன்னா நீங்க என் கழுத்துல மூனு முடிச்சி போடற வரைக்கும்..

வேந்தனா இருந்தாலும் இனியனா இருந்தாலும் எனக்கு பிடிச்சிருந்தா தான் நான் ஓகே சொல்லுவேன். ஆல்ரெடி ரெண்டு தடவைக்கு மேல உங்களைப் பார்த்துருக்கேன் உங்களோட ஒட்டி பிறந்ததுப் போல எப்போவும் ஒட்டியே இருப்பார் அவர் வரலையா?"

"கார்த்திக்கை சொல்றிங்களா?"

"ஹா அவர் தான்"

"என் லைப்பை முடிவு பண்ண நான் வந்தா போதும்னு நினைச்சேன் அதான் அவனை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்"

"குட்.. நான் சொல்றதுக்கு ஒன்னுமில்ல இனியன், நான் படிச்சதெல்லாம் சென்னையில அப்போ அப்போ இந்த பக்கம் வந்துட்டு போய்ட்டு இருந்ததால அப்பா இங்கையே இருக்கற மாதிரி பிளான் பண்ணிட்டார். உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க அது எனக்கு செட்டானா என்னோட விருப்பத்தை சொல்றேன் இல்லனா இல்லைனு சொல்லிடுவேன்" .என்று ஆடர் செய்த காபியை குடிக்க ஆரம்பித்தாள்.

தெளிவாக பேசியவளை வியப்பாக பார்த்தவன் அதேபோல் பேச முயற்சி செய்தான்.

" ரேணுகா எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான்.. " என்றவன் அவளை உற்றுப் பார்த்து.. "எங்க பேமிலி ஜாயின்ட் பேமிலி... இனியும் அப்படி தான் இருக்கும்.. நமக்கு கல்யாணம் ஆனதும் பிரைவசி பத்தலைனோ இல்லை ஏதாவது பிரச்சனை வந்துடுச்சின்னோட தனியா போலாமான்னு கேட்டா கண்டிப்பா நான் வரமாட்டேன். அதனால தனியா போற ஐடியா இருந்தா நம்ப பேச்சை இதோட முடிச்சிக்கலாம்.

சொல்லப் போனா வீட்டுல வேலையால பிரச்சனை வராது.. அம்மாவும் அத்தையும் அதை பார்த்துப்பாங்க மத்த வேலை செய்ய ஆள் இருக்காங்க ... தொழில் விசயத்துலையும் பிரச்னை வராது ஏனா எல்லோரும் ஆளுக்கு ஒரு தொழில் ரெண்டு தோழிலை கையில வெச்சிருக்கோ பிரச்சனைன்னு வந்தா யாராவது ஏதாவது சொல்றதுல தான் வரும்.அதுல உன்னைய யாரும் கைக் காட்ட கூடாது.இனியன் பொண்டாட்டியால தான் பிரச்சனைன்னு சொல்லக் கூடாது. ஏனா வேந்தன் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க போறது எங்க அரு தான் அவளால பிரச்சனை வராது அப்படியே வந்தாலும் சின்ன வயசுல இருந்து வளர்ந்தவளோட குணம் அங்க இருக்கற தூசி துரும்புக்கு கூட தெரியும். அவளுக்கு அப்புறம் இருக்கறது நீ தான்

வேற யாரு மேலையாவது தப்பா இருந்தா நானே அந்த இடத்துல கேட்டுடுவேன் யாரு கிட்டையும் உன்னைய விட்டு குடுக்க மாட்டேன் அதே மாதிரி உன்மேல தப்பு இருந்தாலும் நான் கேப்பேன் , எனக்கு நீயும் ரொம்ப முக்கியம் குடும்பமும் ரொம்ப முக்கியம்" என்று பேச்சு வாக்கில் ரேணுகாவை அந்த குடும்பத்தில் ஒருத்தியாகவும், அவனின் மனைவியாகவும் சொல்லிவிட்டான் அதை புரிந்துகொண்ட ரேணுகாவிற்கு இதழில் ஓரத்தில் சிரிப்பு வந்தது.

காபி கோப்பையை கீழே வைத்தவள். " சரி இனி என்னால நம்ப வீட்டுல எந்த பிரச்சனையும் வராது நீங்க சொன்னதுலாம் நான் அக்சப்ட் பண்ணிக்கறேன்... எனக்கு உன்னையும் ரொம்ப பிடிச்சிருக்கு உன் குடும்பத்தையும் பிடிச்சிருக்கு.." என்று அவன் கை மேல் தன் கையை வைக்க.

"இன்னொரு விசியம்" என்று இனியன் தயங்கவும்

"இன்னும் என்ன அதான் நான் சம்மதம் சொல்லிட்டேனே"

"இது.." என்று வேந்தன் அருவியைப் பற்றி மேலோட்டமாக சொன்னவன் "இப்போதைக்கு நம்ப கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை கொஞ்சம் நாள் எனக்காக வெயிட் பண்ண முடியுமா?" என்றான்.

இப்போ முடியாது .. வெயிட் பண்ணு என்று கட்டளை போடாமல் வெயிட் பண்ண முடியுமா என்று தன்மையாக கேட்கவுமே ரேணுகாவிற்கு இனியனை மிகவும் பிடித்து விட்டது

"வெயிட் பண்றேன்" என்றவள் அவன் முகத்தையே பார்க்க..அவன் முகம் பூவாக மலர்ந்தது.

"அதுவரைக்கும் ஏதாவது கோர்ஸ் பண்ணேன் அப்போதான் உங்க அப்பாவும் அமைதியா இருப்பார் இல்லைனா உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு பண்ணிடுவார்" என்று இனியன் சொல்லவும் ரேணுகாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

"எனக்கு ஓகே இனி அப்பாகிட்ட பேசறேன், பிறந்ததுல இருந்து தனியாவே இருந்துட்டேன் இனியாவது ஒரு ஜாயின்ட் பேமிலில இருந்து பார்க்கறேன்ப்பான்னு சொன்னா அப்பா சரின்னு தான் சொல்லுவாங்க இதுக்காகயெல்லாம் கோர்ஸ் பண்ண முடியாதுப்பா நானே எப்போடா படிப்பை முடிப்போம்ன்னு இருந்தேன் இதுல புது கோர்ஸ்ஸா... பயப்பட வேணா நான் பார்த்துக்கறேன்" என்றதும் இனியன் முகம் மலர்ந்தது. அதன்பின் இருவரும் அலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top