மாயவனின் அணங்கிவள் -28

Advertisement

Priyamehan

Well-Known Member
அருவியின் மனம் குழப்பத்தில் இருந்தது, வேந்தன் டி போட்டு அழைக்கவில்லை என்று ஒரு மனம் வருத்தப்பட்டாலும் இன்னொரு மனமோ 'இவங்க எல்லோரும் சேர்ந்து உன்னைய குற்றவாளி ஆக்கப் பார்க்கறாங்க அருவி முழிச்சிக்கோ இல்லனா மேலும் மேலும் உனக்கு தான் கஷ்டம்' என்று சொல்ல யோசனையில் இருந்தவள் தன்னை தெளிவாக்கிக் கொள்ள முழுதாக பத்து நிமிடம் எடுத்துக் கொண்டாள்.

பேசியதில் ஒன்னிரெண்டு வார்த்தைகளை விட்டதை தவிர வேறு எந்த தவறும் தன் மேல் இல்லை என்று மனதை தெளிவாக்கி கொண்டு வேந்தனிடம் பேச ஆரம்பித்தாள்.

"இங்க பாருங்க மாமா" என்றதும் வேந்தன் அவளைப் பார்க்க அவன் இரு கண்களும் ரத்தமாக சிவந்து இருந்தது... கம்பீரமாக நாலுப் பேரை அதட்டியே பார்த்த வேந்தனை முதன் முறையாக கண்கள் கலங்கி சிவந்திருப்பதைப் பார்த்ததும் மனம் வலிக்க தான் செய்தது அருவிக்கு.

"ம்ம்"

"நான் இன்னைக்கு பேசுனது தப்பு தான் அதும் ஒன்னு ரெண்டு வார்த்தை தான் தப்பே தவிர, ஒட்டுமொத்தமா தப்பில்ல... நீங்க பண்ணதை தானே சொன்னேன் நானா ஒன்னும் திரிச்சி எதையும் சொல்லலையே... நீங்க பண்ணதை சொல்லிக்காட்டும் போதே.... உங்களுக்கு இவ்வளவு வலிக்குதுன்னா அந்த வலியை அனுபவிச்ச எனக்கு எப்படி வலிச்சிருக்கும்னு யோசிச்சிப் பாருங்க.. உங்களை குத்தம் சொல்லணும்னு சொல்லல உண்மையாவே நான் அவ்வளவு வலி அனுபவிச்சிருக்கேன் மாமா...

ஒரு அப்பா இல்லாத பொண்ணு அப்பாவை மட்டும் மிஸ் பண்ண மாட்டா... அவரால கிடைக்கிற ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிஸ் பண்ணுவா அதை தான் நானும் மிஸ் பண்ணேன்... இங்க வரும் போது எனக்கு பத்து வயசு தான் பெருசா ஒன்னும் தெரியல, ஆனா பெரிய மாமாவும் சின்ன மாமாவும் உங்களை எல்லாம் மடியில தூக்கி வெச்சி கொஞ்சும் போது , தோள் மேல தூக்கி வெச்சி சுத்தும் போது, எங்க அப்பா இருந்திருந்தா என்னையும் நிருவையும் இப்படி தானே பார்த்துருப்பார்ன்னு எங்களுக்குள்ள எவ்வளவு ஏக்கமா இருக்கும் தெரியுமா? பல நாள் அம்மாகிட்ட சொல்லி அழுதுருக்கேன்... நிரு அதையிலா கடந்து போற அளவுக்கு பக்குவப்பட்டான் எதையும் பெருசா வெளிய காட்டிக்க மாட்டான், அதுக்காக அவனுக்கு ஆசை இல்ல ஏக்கமில்லன்னு சொல்லிட முடியாது... துணி மணி சாப்பாடு, படிப்பு இருக்க இடம்னு இதை மட்டும் கொடுத்துட்டா நாங்க சந்தோசமா இருக்கோம்னு அர்த்தமில்ல மாமா..." என்றவளுக்கு அன்றைய நாட்களை நினைத்து கண்களில் கண்ணீர் ஆர்ப்பரிக்க...அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த கைகளை எப்போதும் போல் இப்போதும் அடக்கிக் கொண்டான் வேந்தன்.

"எங்க அம்மா பண்ண ஒரே தப்பு எங்களைப் பத்தி யோசிக்காமல் அண்ணன்ங்க உறவு விட்டு போய்டக் கூடாது அவங்க வந்து கூப்பிட்டதும் இங்க வந்தது தான்... கடம்பூர்லையே இருந்திருந்தா எங்களுக்கு இது மாதிரி எந்த எண்ணமும் வந்திருக்காது...நான் அப்பா பாசத்துக்கு இந்த அளவுக்கு ஏங்கிருக்க மாட்டேன்... ஏக்கத்தையும் கஷ்டத்தையும் வெளிக்காட்டிக்க கூடாதுனு நிருவை பார்த்து தெரிஞ்சிகிட்டேன், ஆனா என்னாலே அப்படி இருக்க முடியல அதனால தான் சின்ன சின்ன குறும்பு பண்ணி என்னோட கஷ்டத்தை அது பின்னால மறைக்க முயற்சி பண்ணேன், அதுவும் உங்களுக்கு பிடிக்கல எப்போ பாரு திட்டிட்டே இருப்பிங்க அது இன்னும் என்னோட மனசை அதிகம் பாதிச்சுது... ரொம்ப சேட்டை பண்றேன்னு ஹாஸ்டல் கொண்டுப் போய் சேர்த்திங்க... ஏதோ அம்மா கையில சாப்பிட்டு, அத்தைக்கிட்ட சண்டை போட்டுட்டு இனியன் கார்த்திக்கோடா விளையாடிட்டு இருந்த என்னைய போய் தனி தீவுல தள்ற மாதிரி ஹாஸ்டல் சேர்த்துனா எப்படி புடிக்கும் இதுல சாப்பிடல எங்க போனாலும் வடை பாயாசத்தோட வேணும்னு கேட்டா என்ன பண்ணறதுன்னு கேக்கறீங்க...?எனக்கு சாப்பாடு வேணாம் மாமா பாசம் வேணும் எனக்கே எனக்கு மட்டும் பாசத்தை கொட்டற ஒரு உறவு வேணும் இதை தான் நான் தேடறேன்... எனக்கு என்ன தேவைன்னு இப்போவாது உங்களுக்கு புரியுதா?" என்று இவ்வளவு நாள் மனதில் இருந்த ஏக்கத்தை எதற்கு இவனிடம் சொல்கிறோம் என்றுக் கூட உணராமல் கொட்டிக் கொண்டிருந்தாள் அருவி...

"தேவாவும் கார்த்திக்கும் சொல்றாங்க நீங்க என்னைய லவ் பண்றீங்களா? அந்த உரிமையில தான் அப்படிலாம் பண்ணீங்களா...? இதை கேக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருது...

நான் கீழே விழக் கூடாதுன்னு உங்க கையை பிடிச்சதே உங்களுக்கு பிடிக்கல, இதுல வாழ்க்கை முழுக்க என் கையை பிடிச்சிட்டு வர விருப்பபடுவீங்களா... கார்ல உங்கப் பக்கத்துல உக்கார்ந்துட்டு வர உரிமையையே நீங்க எனக்கு குடுக்கல இதுல உங்க பக்கத்துல உக்கார்ந்து கழுத்துல தளைய தளைய தாலி வாங்கிக்கறது உரிமை குடுப்பிங்களா?" என்றவள் ...

"நீங்க என்னைய கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டது நிரு ரித்து கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னு தானு எனக்கு தெரியும்... அதை சொன்னா இவங்க நம்ப போறதில்லை... இப்போ எதுக்கு இதுலாம் சொல்லிட்டு இருக்கேன்னு கூட தெரியல. உங்க கண்ணு சிவந்து இருக்கறதை பார்க்கும் போதே நான் பேசுனதுல நீங்க எவ்வளவு கஷ்டபடறீங்கனு உங்க வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது, என்னோட வலியை தான் யாரும் புரிஞ்சிக்கல அதையே நானும் பண்ண எனக்கும் உங்களுக்கு வித்தியாசம் இருக்காது. உங்ககிட்ட மன்னிப்பு கேக்க தான் வந்தேன்... எல்லோருக்கு முன்னாடி வெச்சி பேசுனதுக்காக இல்ல...கோவத்துல ஒன்னு ரெண்டு வார்த்தை அதிகமாக வந்து விழுந்துடுச்சி. அதுக்காக மட்டும் தான் மன்னிப்பு கேக்க வந்தேன் மன்னிச்சுடுங்க மாமா..." என்றாள் வேந்தனின் கண்ணைப் பார்த்து.

வேந்தன் எதுவும் பேசாமல் அருவியை பார்த்திருக்க

"என்ன மன்னிச்சிட்டீங்களா? இல்லையா? சொன்னிங்கனா கிளம்பிடுவேன்" என்று விடாபிடியாக கேட்டாள். இவ்வளவு நாள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியது போல் மனம் லேசாக இருக்க... மீண்டும் குறும்புத்தனம் வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பித்தது

வேந்தனை சொல்லி தப்பில்லை அவன் வளர்ந்த முறை தான் தப்பு... கிருபாகரனும் மாலதியும் குடும்பத்திற்காக ஓட ஆரம்பிக்க... வேந்தன் வீட்டின் முதல் வாரிசாக சேனாதிபதியின் அறிவுரையில் வளர ஆரம்பித்தான்.

அந்தகால மனிதருக்கு குடும்ப கவுரவம், தன்மானம், ஜாதி இதெல்லாம் தான் பெரிதாகவும் முக்கியமாகவும் இருந்தது...அதற்கு ஒரு கலங்கம் வந்தால் அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.. அனைத்தையும் காக்க தனக்கு பின் தன் பேரன் வேந்தன் தான் சரியான ஆள் என்று சிறு வயதில் இருந்தே ராணுவ அதிகாரிப் போல் கட்டுப்பாடுகளையும் எப்படி அனைவரிடமும் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற முறைகளையும் சொல்லி சொல்லி வளர்த்ததால் தான் வேந்தனும் எந்நேரம் கடப்பாரையை முழுங்கியது போல் விறைப்பாக சுற்ற ஆரம்பித்தான்.

வேந்தன் பெரியவன் அவன் செய்தால் தப்பிருக்காது , சொன்னால் சரியாக இருக்கும், அவன் செய்யவது அனைத்தும் ஊர் நல்லதுக்கும் குடும்ப நல்லதுக்கும் தான் என்றே அவனை அனைவரிடமும் இருந்து தள்ளி நிறுத்தினர்...

எதிரில் இருப்பவர்களை குற்றம் சொல்லும் போது அந்த விரல் தன்னை நோக்கி திரும்பிவிடக்கூடாது என்பதால் தன் மீது குற்றம் இல்லாதவாரு பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான்...
அடுத்தவருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்... என்று ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் சிறப்பாக கடைபிடித்தவன் அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தான்.

மாலதியிடம் கூட அளவுக்கு அதிகமாக பேசியதில்லை...மடியில் படுத்து செல்லம் கொஞ்சியதில்லை..வீட்டின் தலை மகனாக பிறந்தாலே பொறுப்பு அனைத்தும் அவனை தான் சேரும் வேந்தன் மட்டும் விதிவிலக்கில்லை...அதற்காக அவனுக்கு யார் மீதும் பாசமில்லை என்று சொல்லிவிட முடியாது... அதை வெளிக் காட்ட தான் தெரியவில்லை..
அன்பு காட்ட தெரியாமலே சுற்றுபவனுக்கு தங்கையை கண்டால் கண்களில் தோன்றும் கனிவு வார்த்தைகளில் தோன்றாது.... ரித்து கேட்டால் செய்து கொடுப்பது தான் அருவி கேட்டாலும் செய்துக் கொடுப்பான் தான் . ஆனால் வேந்தனின் மீது இருக்கும் வெறுப்பில் அருவி எதையும் நேரடியாக வேந்தனிடம் கேப்பதில்லை...

குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் தான் நடைப் பயிற்சி செல்ல சொல்கிறான்... அவர்கள் செய்யும் போது அருவி மட்டும் செய்யாமல் இருந்தால் அதை கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் நாளை மற்றவர்களும் அருவியைப் போல் செய்தால் வீட்டில் ஒழுக்கம் சீர்குலையும் என்பது வேந்தனின் எண்ணம்.

அருவியின் மீது முதன் முதலாக காதல் உணர்வு தோன்றிய போது ரித்துவும் அருவியும் பள்ளியின் இறுதி வகுப்பில் இருந்தனர் . அப்போது சென்று காதல் சொன்னால் ரித்துவிற்கு அது ஒரு தப்பான எடுத்துக்காட்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் காதல் சொல்வதை தவிர்த்து விட்டான். அருவியை தன்னவளாக பார்க்க ஆரம்பித்ததில் இருந்து பொறாமை உணர்வு தலை தூக்க ஆரம்பிக்க அவளோ இனியனுடனும் கார்த்திக்குடனும் சுற்றி வேந்தனை வெறுப்பேற்ற அந்த கோவத்தையும் அருவியின் மீதுதான் காட்டுவான் அவனுக்கு கோவத்தை தான் காட்ட தெரிந்தது..அதை தாண்டி அவனால் வெளிவர முடியவில்லை. தன்னவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துவிட்டு அது தங்கைக்காக செய்தது என்று சொல்லிவிடுவான்...இதுபோன்று பல தடவை நடந்திருக்கும்...வருடங்கள் செல்ல செல்ல அருவின் மீது கொண்ட காதலின் விளைவு கனவுகளில் இம்சை செய்ய தொடங்கியது... கனவில் அருவியுடன் குடும்பம் நடத்தவே ஆரம்பித்துவிட்டான்... கனவின் தாக்கத்தை எங்கு நிஜத்தில் கையாண்டு விடுவோமோ என்ற பயத்தில் தான் அருவியை வேந்தனின் அருகில்லையே விடுவதில்லை அவனும் அருவியின் அருகில் செல்ல மாட்டான். காரின் முன் பக்கம் அமர விடாமல் செய்தது அவள் கைப்பிடிக்கும் போது உணர்வின் தாக்கத்தை தாங்கமுடியாமல் அருவியை திட்டியது இதுயெல்லாம் அதன் விளைவு தான்.என்ன தான் விறைப்பாக சுற்றினாலும் அவனும் மனிதன் தானே அவனுக்கு என்று உணர்வுகள் இருக்க தானே செய்யும்

ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களுமே ஒவ்வொரு அளவில் இருக்கும் போது மனிதனிடம் இவனை போல் அவன் இருக்க வேண்டும் அவனைப் போல் இவன் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியுமா...

உருகி உருகி காதல் செய்த ரோமியோவும் காதலன் தான்... உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாமல் மனிதர்களை பறவைகள் போல் கொன்று குவித்த ஹிட்லரும் காதலன் தான்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்
அவரவர் வளர்ந்த சூழ்நிலைகள் தான் ஒருவரை நல்லவராகவும் கெட்டவராகவும் மாற்றுகிறது.

வேந்தனும் அப்படி தான் இருந்தான்... அருவி வரும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பவனுக்கு அதை அவளிடம் சொல்ல தோன்றியதில்லை.. அப்பா இல்லாத பெண் என்று வீட்டில் அனைவரும் அதிக செல்லம் கொடுக்கும் போது அந்த சுதந்திரம் தப்பாக சென்றுவிடக்கூடாது என்று இவன் கண்டிப்பைக் காட்டுவான். இளங்கலை படிப்பை வீட்டில் இருந்து படித்தவள் வெளிஉலகம் தெரிந்துக் கொள்ளட்டும் என்று தான் விடுதியில் சேர்த்தான், அவளை மட்டும் சேர்த்திருந்தால் அது காழ்ப்புணர்ச்சி என்று சொல்லலாம் ரித்துவையும் சேர்த்து தானே சேர்த்தினான்... அதை எப்படி அருவியின் மீது இருக்கும் கோவம் என்று சொல்ல முடியும்?...

சரவணனின் தந்தையோடு பரம்பரை பகை இருப்பது அனைவருக்கும் தெரியும் போது வேந்தனுக்கு பிடிக்காத ஒன்றை தான் செய்தே தீருவேன் என்று சரவணனுடன் நட்பு பாராட்டினாள் அருவி அதன் விளைவு தான் இப்போது சரவணன் ரித்து காதல் வரை வந்திருந்தது.அது தான் காழ்ப்புணர்ச்சி பின்னால் வரப் போகும் விளைவுகளை யோசிக்காமல் செய்து வைக்கும் போது வேந்தன் அருவியை கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும்.

அன்று குளத்தங்கரையில் அருவியை சரவணனுடன் பார்க்கும் போது வேந்தனுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழவில்லை அதுக்கு மாறாக தனக்கு கிடைக்காத இடம் அவனுக்கு கிடைக்கிறதே என்று எழுந்த பொறாமை தான் காரணம்.
அதனால் தான் அன்று அனைவரும் அவள் மீது சந்தேகப்பட்டு பேசும் போதுக் கூட வேந்தன் அவளைப் பற்றி பேசாமல் இருந்தது.

கண்டிக்காதவர்கள் முதன்முறையாக கண்டிக்கும் போது தள்ளி இருந்து தான் பார்க்க வேண்டும் என்பது வேந்தனின் கருத்தை அதை மாற்ற யாரால் முடியும்.

அருவி வீட்டிற்கு வரவில்லை என்றதும் மற்றவர்களை காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டது வேந்தன் தான் அதனால் என்று போன் செய்யாதவன் அன்று செய்தான்.அருவியை பார்க்க வேண்டும் என்று தான் கேரளா போகவே சம்மதம் சொன்னான் இல்லை என்றால் வரவில்லை என்று கண்டிப்பாக மறுத்திருப்பான்.

கேரளா போகும் போது இந்த நீண்ட பயணத்தை அருவியுடன் அனுபவிக்க ஆசைக் கொண்டவனுக்கு எப்போதும் போல் அதட்டி மிரட்டியே அதையும் சாதித்துக்கொண்டான். வேந்தன் கெஞ்சியோ கொஞ்சியோ கேட்டிருந்தாலும் அருவி வரமாட்டேன் என்று தான் சொல்லிருப்பாள்.

பேய் வீடு செல்லும் போது அருவி பயத்தில் வேந்தனின் மார்பில் சாயும் போதுக் கூட அவள் இதழ் உரசலில் தான் ஏதாவது செய்துவிடுமோ என்று தான் வேந்தன் அருவியை வேகமாக விலக்கிவிட்டான்

வெளி வந்ததும் அருவி இதுக்கு தான் கார்த்திக்கை கூப்பிட்டேன் என்று சொன்னதும் அப்போ அவன் வந்தாலும் இது மாதிரி தான் நடந்துருப்பாளா என்ற பொறாமை தலைத் தூக்க உள்ளுக்குள் இறுகிப் போனான்.

அருவி எப்படி அவள் பக்கம் ஒரு நியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறாளோ அதுப் போல் வேந்தனும் அவன் பக்கம் ஒரு நியாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறான். யார் மீது குற்றம் சொல்வது...?
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
இவன் மனசுல என்ன இருக்குனு
அவளுக்கு எப்படி
தெரியும்
 
Nithi_lovesReading

Well-Known Member
ம்ம்...இரண்டு பேருமே அவங்கவங்க பிடியில இருந்து இறங்கி வரனும்...
 
Chithra K

Active Member
இப்ப அருவி எப்படி அவளோட பீலிங்ஸ் நேரடியா... வேந்தனிடம் சொன்னாள்.... அதே மாதிரி வேந்தனும் சொன்னால் சரியா இருக்கும்......
Venthan ... atleast now you can say something to her.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top