மண்ணில் தோன்றிய வைரம் 20

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
இரு வாரங்களுக்கு பிறகு நிஷாவின் திருமணத்திற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான் அஸ்வின். அதிகாலை ஐந்து மணிக்கு பிரம்மமுகூர்த்த வேளையில் திருமணம் என்பதால் அதிகாலை இரண்டு மணிக்கு பயணப்பட வேண்டும் என்று முடிவானது. கிளம்பும் நேரம் முடிவானதும் சித்ரா சாருவை தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டாள். அதனை மறுத்த சாருவிடம்
“இங்க பாரு சாருமா.. நீங்க ஏர்லி மார்னிங் கிளம்புறீங்க.. அந்த நேரத்திலே நீ உங்க வீட்டுல இருந்து கிளம்பி வருவது அவ்வளவு பாதுகாப்பில்லை. அதோடு உன்னோட வீடும் இங்க இருந்து ரொம்ப தூரம்.. அதனால நீ கல்யாணத்திற்கு முதல் நாள் டிரைவரோடு இங்க வந்துரு. இங்க இருந்து கிளம்பி போகலாம். அப்போ எங்களுக்கும் நிம்மதியா இருக்கும்” என்று கூற இல்லை என்று சாரு மறுக்கும் முன்பு சித்ரா
“இந்த அம்மா சொன்னால் கேட்பியா மாட்டியா??” என்று கேட்க மறுபேச்சு பேசாது தன் தலையை டங்கு டங்கு என்று ஆட்டினாள் சாரு. இவ்வாறு அங்கு அவள் தங்குவது முடிவானதும் திருமணத்திற்கு முதல் நாள் வருகை தந்த சாருவிற்கு அன்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் தடல்புடலான விருந்துபசாரம்.. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினின் கண்களுக்கு தெரிந்தது சாருவின் மகிழ்ச்சி மட்டுமே. எப்போதும் எதிரிலிருப்பவரின் கண்ணை பார்த்து பேசும் வழக்கமுடைய அஸ்வினிற்கு சாருவைவிடம் பேசும் சந்தர்ப்பத்தில் அவள் கண்கள் ஏதோ ஒரு சோகத்தை தத்தெடுத்து உயிர்ப்பற்று இருப்பதாய் தோன்றும். பல நாட்கள் அது தன்பிரம்மையோ என்று நினைத்திருந்தவன் சாரு தன் வீட்டிற்கு வந்து தன் குடும்பத்தாருடன் உறவாடுகையில் அவ்வுணர்ச்சி அவள் கண்களில் இருந்து விடைபெற்று கண்கள் உயிர்ப்படைந்ததாய் தோன்றியது. அந்த உயிர்ப்பு அவனது வீட்டில் இருக்கும்போது மட்டுமே சாருவின் கண்களில் இருப்பதையும் அவன் கவனிக்க தவறவில்லை. அந்த உயிர்ப்பையே அவன் மனம் விரும்புவதையும் அவன் மறுக்கவில்லை. இன்றும் அதே மலர்ச்சியுடன் இருந்தவளை காண்கையில் அவன் மனம் பரவசமடைந்தது.ஆனால் அவன் அதற்கான காரணத்தை அறியமுயலவில்லை. காரணம் ஒவ்வொரு முறையும் அவனது மனம் சாருவின் மகிழ்ச்சியில் பரவசமடையும் போது காரணம் அறிய முயன்ற மனமோ அங்கு இங்கு முரண்பட்டு கடைசியில் மனக்குழப்பத்தையே பதிலாக தந்தது. அதனால் அவன் அந்த விஷ பரீட்சையை செய்ய முயலவில்லை. அதற்கு பதில் தன் மனதினை அதன் போக்கிலே விட்டுவிட்டான். ஆனால் அந்த பரவசத்திற்கான காரணத்தை தான் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை.
தயாராகி ஹாலிற்கு வந்த அஸ்வின் சாருவிற்காக காத்திருக்கலானான்.
நேரமாகுவதை உணர்ந்து தன் சித்தியை அழைத்த அஸ்வின் அங்கு தன் சித்தி மற்றும் கவியுடன் வந்த சாருவை பார்த்து பேச்சின்றி நின்றான்.
வாடமல்லி பூ நிற சேலையில் பொன்னிற சரிகையுடைய பட்டு புடவையில் அழகுப்பதுமையாய் நின்றவளை பார்த்தவன் மூச்சுவிட மறந்து நின்றது புதுமையன்றே. சேலைக்கேற்ற அடுக்கு தட்டு ஜிமிக்கிகள் காதின் துளையினை கெட்டியாய் பிடித்து ஊஞ்சலாட அந்த சங்கு கழுத்தின் அழகினை மறைக்க விரும்பாத தங்க ஆரம் நெஞ்சுக்குழி வரை நீண்டுத்தொங்க, நானும் உங்கள் அழகு படுத்தும் சேவையில் என் பங்கை ஆற்றுவேன் என்ற ரீதியில் கோல்டும் பிங்கும் கலந்த அழகு படுத்தாமலே அவளது கைகளை அரணிட்டதால் ஒலி எழுப்பி அழகாய் மாறிய அந்த வளையல்களும் என்று ஆபரணங்கள் அவளது தோற்றத்தை ஒருபுறம் மெருகூட்ட அவளது அந்த வட்ட வடிவ வதனத்தில் விழிகள் கறுப்பு மையால் மைதீட்டப்பட்டு பார்ப்பவரை வா என்று அழைக்கும் ரீதியில் இருக்க மூடித்திறந்த இமைகளோ இளம் நீலமும் பொன்னிறமும் கலந்த அதிக ஒப்பனை என்று எண்ணத்தோன்றாத ரீதியில் கைவண்ணம் செய்யப்பட்டிருக்க இது கடவுளின் படைப்பா இல்லை மனிதனால் கற்பனையில் செதுக்கப்படும் சிலையா என்று அசத்திய வேளையில் அரிவாள் முனையாய் வளைந்திருந்த புருவங்கள் இரண்டிற்குமிடையே பிங்க் நிற பொட்டு மையப்புள்ளியாய் வீற்றிருந்து வீட்டின் மேலுள்ள சீலிங்கினை போல் குங்குமம் ஒற்றைக்கீற்றாய் பரந்திருந்திருக்க ஒப்பனை என்று பெயரில் அவளது அசாத்திய அழகு இன்னும் மெருகேற்றப்பட்டிருந்தது. நெற்றியின் இருமாங்கிலும் நீண்டுக்கொண்டிருந்த கூந்தல் காதின் பின்னால் ஹேர் பின்னினால் பொருத்தியிருக்க மீதி கூந்தல் லேசாகப் பின்னப்பட்டு தோளின் மீது படரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு அழகின் மொத்த உருவமாய் இருந்தவளை வாசனைப்பெற செய்யவென்று நெருக்கமாய் தொடுக்கப்பட்ட அந்த காட்டுமல்லிகை சரத்தினை சாருவின் தலையில் சித்ரா வைத்துவிட இவ்வளவு நேரம் ஏதோ குறைகின்றதே என்று குறைப்பட்ட அஸ்வினின் மனது பரவசமடைந்தது.அந்த மல்லிகைப்பூ சரத்தை எடுத்து சாரு முன்னாலிட அஸ்வினின் மனமோ அந்த செயலில் அவளிடம் மொத்தமாக சரணாகதியடைந்தது.
இப்படி அணுவணுவாக அவளிடம் சரணாகதியடையத் தொடங்கிய அஸ்வினை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது கவியின் குரல்
“சாரு சான்சே இல்லை. யூ ஆர் லுக்கிங் கார்ஜியர்ஸ்” என்று கூற அதை கேட்ட சாரு வாய் வார்த்தையாக
“தாங்கியூ” என்று கூறினாலும் மனதினுள் “ஊரில் உள்ளவங்க எல்லாம் சொல்றாங்க.. சொல்லவேண்டியது அப்படியே கல்லுமாதிரி இருக்குது.. இதுக்கெல்லாம் என்னைக்கு தான் பல்ப் பத்த போகுதோ தெரியலை. சாரு உன்நிலைமை ரொம்ப கஷ்டம் தான் போல” என்று மைண்ட் வாயிஸில் அஸ்வினை வருத்தெடுத்துக்கொண்டிருந்த சாருவிற்கு அஸ்வின் தன்னை அணுவணுவாய் சைட் அடித்த விஷயம் தெரிந்தால் என்ன செய்வாள்??
“ஆமா சாரு அப்படியே மகாலஷ்மி மாதிரியே இருக்க.. என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு. உன்னை கட்டிக்கப்போறவன் கொடுத்து வைத்தவன்” என்று சித்ரா கூற அஸ்வினின் மனமோ “அந்த கொடுத்து வைத்தவன் ஏன் நீயாக இருக்ககூடாது?” என்று கேள்வி கேட்க அந்த கேள்வியில் அதிர்ந்த அஸ்வின் தன் மனவோட்டத்தை கட்டுப்படுத்தும் வகையறியாது தடுமாற சாருவின் அந்த மென்னகை அவனை இன்னும் தடுமாறச்செய்தது.
அவனது முகபாவங்களை கவனித்த சித்ரா “ஏன் கண்ணா ஒரு மாதிரி இருக்க?? உடம்பிற்கு ஏதும் பண்ணுதா” என்று கேட்க அவரை சமாளிக்கும் முகமாக
“இல்லை சித்தி நைட் தூங்க லேட் ஆகிரிச்சி.. அதான் கொஞ்சம் டயர்டா இருக்க.. கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்” என்று சமாளிக்க
“சரி பா இரண்டு பேரும் இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்.. இல்லைனா முகூர்த்தத்திற்கு போய் சேரமுடியாது” என்று கிளப்ப அஸ்வின் சித்ராவிடம்
“சித்தி வருணிடம் சொல்லிட்டேன். விடிந்ததும் இங்க வந்துரேன்னு சொல்லிட்டான். ஏதும் தேவைனா அவனிடம் சொல்லுங்க. நான் எப்படியும் ஈவினிங் வந்திடுவேன்” என்று கூறிவிட்டு சாருவை அழைத்துக்கொண்டு தன் வீட்டாரிடம் விடைபெற்றான் அஸ்வின்.
அந்த விடைபெறும் கேப்பில் எப்போதும் போல் அன்றும் அஸ்வினை சைட் அடித்தாள் சாரு. வான்நீல நிற புல்ஸ்லீவ் சர்ட்டும் பட்டுவேட்டி சட்டையுமாய் இருந்த அஸ்வின் படு ஹேன்சமாக இருந்தான்.அந்த புல்ஸ்லீவ் சேர்ட் ஸ்லிம்பிட்டாகையால் அது அவனது உடற்கட்டிற்கு அம்சமாய் பொருந்தியிருந்தது. எப்பொழுதும் போல் அன்றும் ஜெல்லின் உதவியுடன் வாரப்பட்டிருந்த அவனது தலை முடி இன்று சற்று வேறுவிதமாக சீவப்பட்டு சில முடிக்கற்றைகள் அவனது முன்னுச்சியை முற்றுகையிட்டிருந்தது. அது அவனை இன்னும் அழகாய் காட்ட அவன் கையசைத்து பேசும் போது வெளியில் வந்து தன் இருப்பை உணர்த்திய அந்த மெல்லிய தங்க சங்கிலி அவனது கம்பீரத்திற்கு இன்னும் பெருமை சேர்த்தது. அடிக்கடி மணிக்கட்டினை நாடிய அந்த ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தினை அவன் சரிசெய்த முறையும் அவன் சேர்ட்டினை மடித்துவிட்ட தோரணையும் சாருவை அவன் மீது மேலும் மேலும் மையல் கொள்ள செய்தது. இவ்வாறு இருவரும் ஒருவர் மனதை மற்றொருவர் புரிந்து கொள்ளாது சைட் அடிப்பதை சரிவர செய்தனர். வீட்டு வாசலில் நின்ற காரினுள் ஏற சாருவிற்காக கார் கதவினை அஸ்வின் திறந்துவிட அதனை கண்ட சாருவின் மனம் ஏகத்திற்கும் துள்ளியது. தன் மனதில் கொண்டாட்டத்தை முகத்தில் காட்டாது காரினுள் அமர்ந்தாள் சாரு. ஆனால் பாவம் அவள் அறியாத ஒன்று மூன்று வருட காலம் அவுஸ்ரேலியாவில் வாசம் செய்த அஸ்வினிற்கு இதெல்லாம் வழமையாக செயல் என்று.. காதல் கொண்ட மனம் காதலனின் வழமையான செயலை கூட தனக்கானது என்று எண்ணுவதில் வியப்பேதும்ஸஇல்லையே... சாரு காரில் ஏறியதும் கதவை சாற்றிவிட்டு முன் சீட்டில் அமர்ந்த அஸ்வின் தன் வீட்டாரிற்கு கையாட்டிவிட்டு டிரைவரிடம் காரை கிளப்ப சொல்ல காரும் கிளம்பியது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top