பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 95. மருந்து, குறள் எண்: 943 & 949.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள் :- முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
 

Sasideera

Well-Known Member
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

பொருள் :- மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

வாத பித்த சிலேத்துமம் என மூன்றில் அளவு கூடுவதும் குறைவதுமே நோய். உண்ட உணவு செரித்தபின் போற்றி உண்பவருக்கு மருந்து தேவையில்லை. உணவை சரியாக தீர்மானித்தால் அளவை அறிந்து உண்டால் நோய் வராது. நோய் என்ன ஏன் வந்தது எப்படி தீர்ப்பது எந்த மாதரியான காலத்தில் வந்துள்ளது என்பதை ஆராய்ந்து மருந்து எடுக்க வேண்டும். நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top