பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 93. கள்ளுண்ணாமை, குறள் எண்: 926 & 930.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 926:- துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள் :- உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
 
Sasideera

Well-Known Member
குறள் 930:- கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள் :- போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?.
 
Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

கள் மீது காதல் கொண்டவர் உறவை இழந்து சுய ஆற்றலையும் இழந்து முன் உதாரணமாக வாழும் சான்றோன் என்ற தகுதியையும் இழப்பார். நாணம் என்ற நற்பண்பு கெடுங்கும் கள் தன்னை மறக்கச் செய்யும். மதுக்கு அடிமையாக உள்ளவருக்கு போதிப்பது நீருக்குள் தீபந்தம் ஏற்றுவது போன்றது. போதை இல்லாதபொழுது போதையுள்ளவர்களின் செயலைப் பார்த்து திருந்த வேண்டும்.
 
Manimegalai

நன்று.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top