பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 123. பொழுது கண்டு இரங்கல், குறள் எண்: 1222&1228.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 1222:
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

பொருள் :- பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.
 

Sasideera

Well-Known Member
குறள் 1228:
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

பொருள் :- முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

காதலர் இல்லாதபோது, பகலும் இருளும் மயங்குகின்ற மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்துதலைச் சொல்வது. மாலை வந்தவிடத்து அது துணையில்லா மணந்த மகளிர்க்குத் துன்பந் தருவதை இவ்வதிகாரப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. காலையில் அரும்பிய இக்காதல் நோய் பகலெல்லாம் முதிர்ந்தஅரும்பாக-போதாக உள்ளது. மாலை வந்ததும் அது மலர்ந்து முழுஅளவில் வருத்துகிறது என்கிறது இப்பாடல் தொகுப்பு. .

மாலையோ இல்லை மணமானவர்கள் உயிர் வாங்கும் வேலையோ எப்படி இருப்பினும் உன்னை வாழ்த்துகிறேன். உன் துணையும் என் துணை போன்று பிரிந்து கூடும் ஒன்றோ பனி போல் துளித்து அரும்புகிறதே. காதலர் இல்லாத பொழுது வரும் மாலை ஒரு கொலைகளத்து எதிலர் போல் இருக்கிறது. காலை பொழுதிற்கு நன்றியும் மாலை பொழுதிற்கு பகையும் ஆனாது எனோ?. மாலை தரும் துன்பம் அவருடன் இருந்த காலத்தில் அறியவில்லை. காலை அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும் இந்த காமநோய். போர்களத்து ஓசையாக இருக்கிறது இந்த மாலை. நிலவும் மயங்கி நிலை குலைகிறது மாலை பொழுதில். ஒயாத உயிரும் மாய்கிறது பொருள் தேடி சென்ற தலைவன் நினைவால்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top