'நெஞ்சமெல்லாம் அலரே !!' - 54

Advertisement

Priyaasai

Active Member
View attachment 11115

'கம்மின் மிசர்ஸ் எழிலன்" என்று புன்னகைத்தவர் அவள் அமர்ந்ததும் 'யுவர் குட் நேம்..???' என்று கேட்க,



'அலர்விழி'



'ரொம்ப அழகான பெயர் உங்களை மாதிரியே' என்றிட,



அலரோ இருகரங்களையும் மேஜையின் மீது கோர்த்தவள், "என்கிட்டே ஏதோ சொல்லனும்ன்னு சொன்னீங்களே டாக்டர்" என்று எடுத்து கொடுக்க,



நேரடியாக விஷயத்திற்கு வருபவளின் அறிவை மெச்சும் விதமாக புருவங்களை ஏறி இறக்கியவர் 'எஸ்' என்றவாறு பக்கவாட்டு மேஜையில் இருந்து நீல நிற கோப்பை எடுத்து அவள் முன் நீட்டிய மருத்துவர், "இது உங்க கணவரோட கேஸ் ஹிஸ்டரி கடந்த ஒருவருஷத்துக்கும் மேலா மிஸ்டர் எழிலன் என்கிட்டே ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காரு" என்று கூற



"வாட்" என்று அதிர்ச்சியுடன் அவரை கேட்டவளின் பார்வை கோப்பின் மீது படிய, "எதுக்கு ட்ரீட்மென்ட்" என்று நெற்றியை நீவிக்கொண்டு கோப்பை பார்வையிட,



"டோக்கோபோபியா" (Tokophobia)



'போபியா' என்று தனக்குள் உச்சரித்து பார்த்தவள் "டாக்டர் யு மீன் பியர் ஆப்..... " என்று மருத்துவரை பார்க்க,



"பியர் ஆப் சைல்ட் பர்த்" (fear of child birth) என்று மருத்துவர் கண்மூடி திறக்கவும் கோப்பை நழுவ விட்டவளாக விழிகளில் படர்ந்த அச்சத்துடன் மருத்துவரை பார்க்க,



"எஸ்..!! வீ கால் இட் ஆஸ் "டோக்கோபோபியா" (Tokophobia) இன் மெடிக்கல் டெர்ம்ஸ்" என்றவர் அலரின் பார்வையை உணர்ந்தவராக, "லுக் மிசர்ஸ் எழிலன் ஜெனெரலா இது முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வரகூடிய ஒரு வகையான 'போபியா' பெண்களை ஒப்பிடும் போது இதனால பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு தான், பட் unfortunetly உங்க ஹஸ்பண்டும் இதனால பாதிக்கபட்டிருக்காரு" என்று கூற,



சட்டென நாற்காலியில் இருந்து எழுந்தவள், "என்ன பேசுறீங்க டாக்டர்..!! இப்போ என் பையனுக்கே ஒன்றரை வயசுக்கு மேல ஆச்சு, அவரும் நார்மலா இருக்காரு எதுக்கு தேவை இல்லாம அவரை நீ.. நீங்க.." என்றவளின் மனம் தன்னவன் ஒரு வருடத்திற்கும் மேலாக மனநல மருத்துவரின் உதவியை நாடியுள்ளான் என்ற நிஜத்தை ஏற்க முடியாமல் துடிக்க, அதற்க்கு மேல் தொடர முடியாமல் இதழ்களை கடித்து கொண்டு மேஜையை அழுந்த பற்றி அலர் அவரை பார்க்க,



"கண்ட்ரோல் யுவர்செலப் அலர்விழி அண்ட் அக்செப்ட் தி ட்ரூத், நீங்க சொல்ற மாதிரி "ஹீ இஸ் பிசிக்கலி வெல் அண்ட் குட் ஆனா சைக்காலாஜிக்கலா ஒரு சின்ன காம்ப்ளிகேஷன் இருக்கிறதால அவரோட மெண்டல் ஸ்டேடஸ் இஸ் லிட்டில் பேட்" என்று கூறவும் அலரின் விழிகள் அவளனுமதி இன்றி கண்ணீரை சொரிய தொடங்கிட அதை கண்ட மருத்துவர்,



"லிசன் அலர் இட் இஸ் அ கைண்ட் ஆப் போபியா(phobia) இடையில வந்தது அண்ட் கியுரபில், நீங்க எமோட் ஆகுற அளவு பெரிய விஷயம் இல்லை" என்றவாறு கையில் இருந்த பேனாவை உருட்டியவர், "ஒரு விஷயம் புரிஞ்சிக்கோங்க நொவ் ஹி இஸ் ஆல்ரைட்..!! அவர் உங்களோட டெலிவரி சம்பந்தப்பட்ட நாளில் இருந்து வெளியில வந்து நார்மலா இருக்காரு பட்... பட்"



"எது டாக்டர் பெரிய விஷயம் இல்லை ஒரு வருஷத்துக்கும் மேல மாமா.." என்று எச்சில் கூட்டி விழுங்கியவள் "அப்போ நா.. நான் தான் பெரிய தப்பு பண்ணிட்டேன்" என்று துடிக்கும் இதழ்களை பற்களை கொண்டு கட்டுபடுத்தி தோய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தவள், "நான் அவரை என்கூட கூட்டிட்டு போகாம இருந்திருந்தா இன்னைக்கு அவ... அவரு இப்.. இப்படி..." என்று விம்மும் மனதை கட்டுபடுத்த முடியாமல் அலர் கலங்கிய விழிகளுடன் அவரை பார்க்க,



"நோ நோ.... இட்ஸ் நாட் யுவர் பால்ட்... ப்ளீஸ் காம் டவுன்" என்று குற்றஉணர்வில் உழன்று கொண்டிருப்பவளை நன்கு புரிந்தவராக அவள் புறம் தண்ணீரை நீட்ட,



அலரோ அதை மறுத்து, "நோ டாக்டர் யு ஆர் ராங், பால்ட் இஸ் மைன்..!!!" என்று கண்களை துடைத்து கொண்டு திடமாக அவரை பார்த்தவள் "எஸ் பால்ட் இஸ் ட்ரூலி மைன்..!!! நல்லா இருந்தவரை லேபர் வார்ட் கூட்டிட்டு போய் நானே இப்படி மாத்திட்டேன், தப்பு எல்லாம் என்னோடது தான்.. அப்போவே பெரியவங்க எல்லாம் சொன்னாங்க கூட்டிட்டு போக வேண்டாம்ன்னு ஆனா... ஆனா நான், எப்பவும் அவர் என்கூடவே இருக்கணும்ன்னு நெனச்சேனே தவிர அவர் மனசை புரிஞ்சிக்கலை... என்னோட சின்ன வலியை கூட தாங்காதவரால் எப்படி என்கூட அங்க இருக்க முடியும்ன்னு நான் யோசிச்சிருக்கணும்..., "ஐ ஆம் அ பூல்..!!!" என்றவள் இருகரங்களால் தன்னையே அறைந்து கொள்ள அவள் உணர்வுகளை அவதானித்து கொண்டிருந்த மருத்துவரோ உடனே எழுந்து சென்று அவள் கரங்களை பிடித்து தடுக்க,



"நோ டாக்டர் லீவ் மீ ஐ டிசர்வ் திஸ்..!! எப்பவும் என்னால அவருக்கு கஷ்டம் மட்டும் தான்" என்றவளின் குரல் உடைந்து கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் போக அவர் கரங்களில் முகம் பொத்தி அலர்விழி கதற தொடங்க தன் பெண்ணை ஒத்த வயதில் இருப்பவளை அவள் படும் பாட்டை ஒரு பெண்ணாக, தாயாக சக மனுஷியாக உணர்ந்த மருத்துவர் அவள் முகம் நிமிர்த்தி முகத்தை துடைத்தவர், "இல்லைம்மா நீ காரணம் இல்லை புரிஞ்சிக்கோ" என்று தன்மையாக எடுத்து கூற,



அழுது சிவந்த முகத்துடன் தலையை இருமருங்கிலும் ஆட்டியவள், "இல்லை டாக்டர் உங்களுக்கு தெரியாது எப்பவும் என்.. என்னை... என்கூட... மாமா எ..ப்..படி, இப்போ, எனக்கு தெரியலை என்றவளின் அழுகை அதிகரிக்க, எஸ் டாக்டர் குழந்தைக்கு உடம்பு முடியாம போனது, அப்.. அப்போ அண்ணி வந்தது எனக்கு எக்ஸாம் நான் படிச்சிட்டு இருந்தேன்..., எனக்கு தெரியலை நான் எத.. எதையுமே கவனிக்கலை" என்று திக்கி தினறியவள் இதழ்களை அழுந்த மடித்து பக்கவாட்டில் திரும்பி சில நொடிகள் கண்மூடி ஒருவாறு தன்னை திடப்படுத்தி கொண்டு திரும்பியவள் மருத்துவரிடம், "ஆனா இப்.. இப்போ, அவரு அவ..ரை அவரோட உணர்வை நானே கொன்னுட்டேன் என்னை... என்னால் எவ்..ளோ கஷ்டம்" என்று கிட்டத்தட்ட இருவருடங்களாக தன் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு தனக்காகவே தன்னிடம் இருந்து முற்றிலும் விலகி நிற்பவனை எண்ணி விழிநீர் சிந்த,



அவளை இழுத்து தன்னோடு அணைத்து கொண்ட மருத்துவர் "கண்ட்ரோல் யுவர்செல்ப் அலர்விழி.., இது உங்களோட தப்பு இல்லைமா முதல்ல அதை புரிஞ்சிக்கோங்க, இந்த கில்ட் உங்களுக்கு வேண்டாம்" என்று அவள் அழுகையில் குலுங்கும் அவள் முதுகை ஆதூரமாக வருடி கொடுக்க,



அழுது சிவந்த விழிகளுடன் அலர் அவரை பார்க்க,



"எஸ், இது லேபர் ரூம்ல நீங்க பட்ட கஷ்டத்தை பார்த்ததால மட்டும் இந்நிலை அவருக்கு ஏற்பட்டது இல்லை" என்று கூற,



அலரோ திகைத்த விழிகளுடன் அவரை பார்க்க,



"ஆமா அலர் அது மட்டுமே காரணமா இருந்தா இந்நேரம் அவரை அதுல இருந்து மீட்டு எடுக்குறதோ அடுத்த குழந்தைக்கு மனதளவுல தயார் படுத்துறதோ ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. ஏன்னா இப்போ எல்லாம் டெலிவரி அப்போ கணவர்களும் பிரசவ அறையில அனுமதிக்க படுறாங்க அதனால சமீபகாலமா மனைவியோட வலியை அருகே இருந்த பார்க்கிற ஆண்களில் சிலருக்கு பாதிப்பு ஏற்படுது... நானே நிறைய பேரை ட்ரீட் பண்ணி ரெகவர் பண்ணி இருக்கேன் அவங்கல்ல பல பேர் இப்போ ரெண்டு, மூணு குழந்தைன்னு நிறைவான வாழ்க்கை வாழுறாங்க" என்று கூற அலரின் முகத்தில் சிறு நம்பிக்கை கீற்று உருவானது.



"ஆனா மிஸ்டர் எழிலன் கேஸ்ல உங்க டெலிவரிக்கு அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அவரோட மனநிலையை ரொம்ப மோசமா பாதிச்சிடுச்சி..., அதுலயும், அதுலயும் என்று நெற்றியை நீவியவர், ஐ டோன்ட் ரிமம்பர் தி நேம் பட் உங்களோடவே டெலிவரி ஆன ஒரு பிரெண்ட் வைப் 'மடேர்னல் டெத்' ஆனது, அதை தொடர்ந்து உங்களுக்கு தையல் சரியா போடாம ஹெவி பிளட் லாஸ் ஆனது, உங்களை சில நொடிகளுக்கு உணர்வற்று மயங்கிய நிலையில் பார்த்தது பிள்ளைபேருக்கு பிறகும் தையல் போட்டதால இயற்க்கை உபாதைகளுக்காக நீங்க பட்ட கஷ்டமும் அடுத்து உங்களோட காயத்துக்கு மருந்து போடும் போது தன்னால தானே உங்களுக்கு இந்த நிலைன்னு அவருக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாமே சேர்ந்து அவரை அதீத மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிடுச்சி , எங்கே இன்னொரு குழந்தைன்னு போனா திரும்ப அந்த கஷ்டத்தை அனுபவிக்கிறதோட எங்கே அது உங்களோட உயிரை பரிச்சிடுமோ..!! தானும் அந்த பிரெண்ட் மாதிரி ஆகிடுவோமொன்னு அவரோட அதீத பயம், ஐ மீன் ஆங்சைட்டி, ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் அவரை இயல்பா இருக்கவிடாம ஒருவித ரெஸ்ட்லெஸ்னெஸ்ல கொண்டு விட்டுடுச்சி.



"இதனால சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாம பார்க்கிற வேலையிலும் செய்யற செயலையும் கவனம் பதிக்க முடியாம போனவர் இரண்டு முறை விபத்துல சிக்கி மயிரிழையில தப்பிச்சி இருந்தாரு அப்போதான் தனக்கு ஏதோ பெரிய பிரச்சனைன்னு உணர்ந்து என்கிட்டே வந்தாரு. அடுத்தடுத்த செஷன்ல டீப்பா பேச தொடங்கினவரோட நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருந்தது....



பொதுவாவே சொல்லுவாங்க சூடுகண்ட பூனை அடுப்பாங்கரை அண்டாதுன்னு கிட்டத்தட்ட மிஸ்டர் எழிலனுடையதும் அதே நிலை தான்...!! உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாது என்கிற நினைப்பே அவரை வேற எதை பத்தியும் யோசிக்க விடலை... மொத்த வாழ்க்கைக்குமே நீங்க அவர் எதிர்ல நடமாடிட்டு இருக்க நிஜம் போதும் இருக்காரு. ரொம்ப நாள் எடுத்தது அவரை குணபடுத்த என்னோட சைட்ல இருந்து நானும் அவருக்கு கவுன்சலிங் கொடுத்து CBT அப்புறம் நிறைய AV ரெபரன்ஸ் கொடுத்து ,யோகா, மெடிடேஷன் ப்ராக்டிஸ் பண்ண வச்சி மனசை ஒருமுகபடுத்தி பிரசவம் பற்றின புரிதலை கொண்டு வந்துட்டேன். இப்போ அன்றைய நாளில் இருந்து வெளியில வந்துட்டாரு முன்ன மாதிரி அவருக்கு பயமோ, அழுத்தமோ எதுவும் இல்லை ஆனா இன்னும் மனசளவுல அடுத்த குழந்தைக்கு மட்டுமில்லை தம்பத்தியத்திற்க்கும் அவர் தயாரா இல்லை" என்று கூற,



அதுநேரம் வரை கண்ணீர் கரைந்தோடிய விழிகளுடன் தன்னவனின் நிலையை கேட்டுகொண்டிருந்த அலரோ அவரின் இறுதி வாக்கியத்தில் அதற்க்கு மேலும் முடியாது என்பது போல தலையை இருகரங்களாலும் பிடித்து கொண்டு மேஜையில் கவிழ்ந்து விட்டாள், மெளனமாக அவள் உடல் குலுங்குவதை கண்ட மருத்துவரும் வேதனையுடன் அவளை பார்க்க,



சில நிமிடங்களுக்கு பின் தலையை உயர்த்தியவளின் பார்வை "ஏன்..?? இப்படி..??" என்பதாக அவர் மீது படிய அதை புரிந்து கொண்டவரும்,



"உங்களோட உயிரை பணயம் வச்சி ஒரு புது உயிரை நீங்க பிரசவிச்சதை கண்முன்ன பார்த்தவர் மனசுல நீங்க.. நீங்க.." என்றவர் அவள் சிகையை ஆதூரமாக வருடி "அலர் பொதுவா சொல்லுவாங்களேமா அம்மா தான் முதல் தெய்வம்ன்னு, இங்க உங்க கணவர் மனசுலயும் நீங்க அப்படி தான் பதிஞ்சிருகீங்க, நீங்க மட்டுமில்ல எல்லா பெண்களுமே என்று சத்தமே இல்லாமல் இடியை அவள் தலையில் இறக்க ஸ்தம்பித்து போனாள் அலர்விழி.



திகைத்த அவள் முகத்தை கண்டவரின் முகத்திலும் வேதனையின் சாயல் படர ஒரு பெருமூச்செறிந்து தன் இடத்தில் சென்று அமர்ந்தவர் அவள் கொண்டிருக்கும் அதிர்ச்சியை ஏற்று இயல்பிற்கு திரும்பவதற்காக காத்திருக்க தொடங்கினார்.



நீண்ட நிமிடங்களுக்கு பின் இறுகிய முகத்துடன் மௌனமாக அலர் அவரை பார்க்க, "ஹோப் யு அண்டரஸ்டான்ட் என்று மேஜையில் முழங்கையை ஊன்றி அவளை பார்த்தவர் "இது முழுக்க முழுக்க மனசு சம்பந்தப்பட்டது அலர், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட சைட்ல இருந்து மெடிக்கலா என்னால முடிஞ்சதை செய்து அவரை மீட்டு கொடுத்துட்டேன் இனிமேல் இதை தக்க வச்சி அவரோட மனசை மாத்தி இயல்பான வாழ்க்கைக்கு திருப்புறதும் உங்களை மனைவியா பார்க்க வைக்கிறதும் உங்க கையில இருக்கு" என்று கூற அவருக்கு மறுமொழியும் கூற இயலாதவளாக விழிகளில் வலியுடன் அலர் அவரை பார்க்க.



"எஸ் யு கேன்..!! பட் கீப் ஒன்திங் இன் மைன்ட் அலர் , மறந்தும் குழந்தை பத்தின பேச்சு மட்டும் எடுக்காதீங்க அது அவரை பழைய நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கு..."



அப்போ இதற்க்கு தீர்வு தான் என்ன என்று அவளின் மனக்குரலை குமுறலை உணர்ந்தவராக, "நீங்க பொருமைசாலியான்னு எனக்கு தெரியாது ஆனா இனி வரகூடியது நீங்க ரொம்பவே பொறுமையா இருக்க வேண்டிய காலகட்டம், கண்டிப்பா உங்களுக்கும் அடுத்த குழந்தைக்கான வாய்ப்பு இருக்கு ஆனா 'ஹீ நீட்ஸ் டைம்..', இப்போதான் பழைய நினைவுகளை மறந்து இருக்கிறவர் இனி உங்ககூட இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினும் அப்படி நடந்தா அதுவே குட் சைன் தான் அப்போ கண்டிப்பா அவர் மனசு குழந்தையை ஏத்துக்கவும் தயார் ஆகும் ஆனா அதுக்கு வருஷ கணக்கு கூட ஆகலாம் அதனால பொறுமையா ஹாண்டில் பண்ணுங்க" என்றவர்



எழுந்து வந்து அலரின் கரத்தை பிடித்து வருடி, "இட்ஸ் அ சேலஞ் பார் யு அலர்..!! கிட்டத்தட்ட மிஸ்டர் எழிலன் இப்போ உங்க கையில இருக்க கண்ணாடி பாத்திரம் மாதிரி ஒன்ஸ் நழுவ விட்டீங்க திரும்ப ரொம்ப கஷ்டம்" என்றிட அவளும் புரிந்தது என்பதாக தலையாட்டி விடைபெற்றாள்.



'மிஸ்டர் நாதன் அட்டெண்டர் யாரு..??' என்று செவிலியர் கேட்கவும் தன்னவன் தோளில் சாய்ந்து பழைய நினைவுகளில் சிக்கி இருந்த அலர் நினைவிற்கு திரும்பி, வரேன் சிஸ்டர் என்று அவருடன் சென்றாள்.

****

நாதனை மருத்துவமனையில் சேர்த்த பின் முதல் இரு நாட்கள் தென்பட்ட இறுக்கத்தை தவிர எழிலிடம் பெரிதாக வேறு மாற்றம் இல்லை.. ஆனால் நாதனின் பேச்சு அவனிடம் எத்தகைய வினையை ஆற்றி இருக்கும் என்று புரிபடாத நிலையில் தினமும் அவனை கண்டு அலர் தான் பெரிதும் தவித்து போனாள். எங்கே அவனை மீண்டும் தொலைத்து விடுவோமோ..!! திரும்பவும் தான் தொடங்கிய இடத்திலேயே சென்று நிற்க வேண்டி வருமோ..!! அப்படியானால் இந்த முறை அவனை மீட்டெடுக்க எத்தனை வருடங்கள் ஆகும், மீண்டு வருவானா அல்லது அல்லது முன்பு போலவே..., என்ற எண்ணமே அவளை மனதளவில் பலவீனமாக்கி எதிலும் முழுமையாக ஈடுபட விடாமல் செய்திருந்த்து.



ஒருபுறம் கணவனின் நிலையை எண்ணி மருகியவளுக்கு மறுபுறம் நாதனின் நிலைக்கு தானே காரணம் ஆகிப்போனோமே என்ற குற்றஉணர்வு ஆட்டிபடைக்க நாதனின் மருத்துவ வாசத்தில் மற்றவர்களை விட அலர் தான் பெரிதும் உருக்குலைந்து போனாள். நாதன் எழிலை பேசியதில் மனமுடைந்து போயிருந்தாலும் பெற்ற தந்தையை இந்நிலையில் விட்டு விட்டு செல்ல இயலாமல் அலர் தவிக்க, அவள் நிலையை சரியாக உணர்ந்த எழிலே அவளிடம், "நீ இங்கயே அவர் கூட இரு நான் அப்புவை கூட்டிட்டு போறேன்... அப்ப..," என்றவன் தன் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே விழியவளுக்கு விழிகள் கலங்கி போனது.



'ப்ச் என்னடி இது..!!' என்று அவள் கண்ணீரை சுண்டிவிட்டவன், "நான் ஆபிஸ் முடிஞ்சதும் அப்பப்போ வந்து பார்த்துக்குறேன்.., நீ அவர் குணமான அப்புறம் வீட்டுக்கு வா" என்று கூற அவன் வார்த்தைகளில் நெக்குருகி போன அலரின் அழுகை மும்மடங்காக பெருகியது.., இந்நிலையிலும் தன் மனம் அறிந்து செயல்படுபவனின் தூய நேசத்தை கண்டு..!! அதன் பிறகு தினமும் மாலையில் குழந்தையுடன் மருத்துவமனைக்கு வருபவனின் மடியில் முகம் புதைத்து நாதனின் நிலையை எண்ணி அழுது கரைபவளை காண்பவனுக்கு அவளை தேற்றுவதே பெரும்பாடாகி போனது.



இருக்காதா பின்னே..!! நாதனின் குணத்தை நன்கு அறிந்திருந்த எழில் அன்று மனநல மருத்துவரிடம் இருந்து திரும்பிய பின் அவன் நிலை குறித்து அவள் வீட்டாரிடம் கூறிவிடலாம் என்ற போது அதை கடுமையாக மறுத்தவள் அலர் தான்..!!



"இல்லை மாமா வேண்டாம்..!! இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பாங்கன்னு சொல்ல முடியாது.., சரியா எடுத்துக்கிற அளவுக்கு யாருக்கும் புரிதல் இருக்க வாய்ப்பில்லை.., இதுக்கும் யாராவது உங்களை ஏதாவது...," என்று மென்று விழுங்க,



'இதுக்கும்..??' என்று புருவம் நெறிபட அவளை பார்த்தவன், "இதுக்கும்ன்னா வேற எதுக்கு..?? யார் என்ன சொன்னா..??" என்று கேட்க,



தானே உளறி கொட்டியதை எண்ணி ஒரு நொடி திகைத்து நின்றவளும் அவன் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்லுவாள்..??? திருமணம் ஆகி இருமாதங்களே ஆன நிலையில் எழில் மதுரைக்கு சென்றபோது பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த அலர் தந்தையின் பேச்சை எதேச்சையாக கேட்க நேரிட்டதையா..?? அல்லது அன்று நாதன் இருமாதங்கள் ஆகியும் மகள் கருவுறாமல் இருப்பது குறித்து வருந்தியதையா..??? அல்லது அதற்கும் எழிலை குற்றம் கூறி பேசியதையா..?? எதை அவனிடம் சொல்ல..!!



தன் படிப்பை முன்னிறுத்தி பிள்ளைபேரை தள்ளி போட்டிருப்பவன் மீது குற்றம் சுமத்தும் தந்தையை எதிர்த்து பேச முடியாதவள் அவர் பேசியதை மறைத்து உடனே குழந்தை வேண்டும் என்று எழிலிடம் அடம் பிடித்திருந்தாள். அப்போது மட்டுமா இப்போது பிரசவ அறையினுள் அவன் இருப்பை அவள் வேண்டிய போதும் அவள் ஆசையை நிறைவேற்ற வேண்டி நாதனை பகைத்து கொண்டு அங்கு வந்தவனின் நிலையை நிச்சயம் அவர் சரியாக புரிந்து கொள்ள போவதில்லை என்று அவளுக்கு நன்கு தெரியும்.., அதோடு சேர்த்து எழலை அவர் என்னவெல்லாம் பேசக்கூடும் என்பதும் தெரியும், அவிரனுக்கான துணை குறித்து யோசிப்பவர் நிச்சயம் தன்னவனின் நிலையை புரிந்து கொள்ள போவதில்லை என்பதாலேயே தானே பார்த்துகொள்ளவதாக அவனை சமாளித்திருந்தாள்.



'சொல்லுடி யார் என்ன சொன்னா..??' என்று எழில் அவள் கன்னம் தட்டி கேட்கவும்,



சில நிமிடம் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றவள் அவன் அழுத்தி கேட்கவும், "ஹான் அது... அது வந்து மாமா... அப்பத்தா அம்மாக்கு எல்லாம் இந்த சைக்கலாஜிக்கல் இஸ்ஸு பத்தின புரிதல் இருக்காது அதான் சோ..சொன்னேன்" என்று ஒருவழியாக அவன் நம்பும் விதமாக கூறி முடிக்க,



'இதுல என்னடி இருக்கு..?? எடுத்து சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சிப்பாங்க, நீ விடு நானே பேசுறேன்' என்று திரும்ப,



அவன் கரத்தை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தமாக பிடித்து கொண்டவள், "ஹ்ம்ஹும் வேண்டாம் மாமா யாரும் உங்களை ஏதாவது... அதுவும் எங்க அப்பா.." என்றவளின் குரல் உடைய முற்ப்பட குரலை செருமி தன்னை திடப்படுத்தியவள் "இல்லை அவர் உங்களை.. வேண்டாம் விடுங்க நான் பார்த்துக்குறேன்" என்று கலங்கி நின்றவளை இழுத்து அணைத்து கொண்டவன் அவள் விழிகளின் ஈரத்தை ஒற்றி எடுத்து,



"என்னடி பட்டு தொட்டதுக்கெல்லாம் கண் கலங்கிட்டு.. சரி விடு நாம யாருக்கும் சொல்ல வேண்டாம் சந்தோஷமா..??" என்று அவள் வழிக்கே சென்றிருந்தான்.



தனக்காக தன் ஆசைகளை புறம் தள்ளி சொல்லால் சொல்லாமலே காதல் சுகத்தை இந்நாள் வரை தனக்கு அளித்து கொண்டிருப்பவனை தந்தையே ஆனாலும் காயபடுத்துவதை எங்கனம் அவளும் பொறுப்பாள்..!!! அதனால் நாதனிடம் மற்றொரு குழந்தை பற்றிய அவர்கள் முடிவை கூற மறுத்தவள் எழிலிடம், "உன் மனசு மாறுற வரை நான் காத்திருப்பேன் மாமா.., அது ஒரு வருஷமா இருந்தாலும் சரி பத்து வருஷமா இருந்தாலும் சரி அதை எதுக்கு எங்க அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு அவர் கேட்டா நான் சமாளிச்சிக்கிறேன் நீ கவலையை விடு" என்றுவிட்டாள்.



ஆனால் அப்போது அவளுக்கு தெரியவில்லை தன்னுடைய அலட்சியமே நாளை பூகம்பமாக வெடிக்கும் என்று.., இதோ அன்று அவள் வளரவிட்டதன் விளைவாகவே மீண்டுமான நாதனின் மருத்துவமனை வாசம் என்று மனதினுள் குற்ற உணர்வில் தவித்தவளை தேற்றுவதே தினமும் எழிலின் அன்றாட பணியாகி போனது.



தினமும் பணி நேரங்களுக்கு பின் மகனுடன் தவறாமல் மருத்துவமனையில் ஆஜராகி விடுபவன் அவளுக்கு ஆறுதல் அளித்து நாதனின் நிலையை கேட்டறிந்து மகனுடன் வீட்டிற்கு திரும்பி விடுவான்... ஒருமுறை கூட நாதனை நேரில் சென்று பார்க்கவில்லை அலர்விழியும் அதுகுறித்து அவனிடம் கேட்டதில்லை. எழில் ஒன்றை தவிர்க்கிறான் என்றால் அது தனக்கானதாகத்தான் இருக்கும் என்ற தெளிவு பெற்றிருப்பவள் அவனை குறித்து கேட்கும் வளர்மதியையும் தாயம்மாளையும் சமாளித்து விடுவாள்.



கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு பிறகு முழுமையாக குணமாகி இருந்த நாதனை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த பின்னர் தன் வீட்டிற்கு திரும்பி இருந்தாள் அலர்விழி
]
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top