Rudraprarthana
Well-Known Member

பதவி உயர்விற்கான ஒன்றரை மாத கால பயிற்சியை முடித்து வீடு திரும்பியவனை வரவேற்றது என்னவோ உரக்க ஒலித்து கொண்டிருந்த "அடியே அடியே என் குட்டி பட்டாசே.." பாடலும் கமகமக்கும் நெய் வாசமும் தான்.
சமையலா..?? அதுவும் தன்னவளா..?? என்று முகம் ஆச்சர்யத்தை தத்தெடுக்க இதழ்களில் மென்னகையுடன் தன்னவளை தேடி சென்றான்.
அங்கு த்ரீ போர்த் பேண்டும் இடை வரையிலான டாப்பும் அணிந்து விரித்து விடப்பட்டிருந்த கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக்கொண்டே சமைத்து கொண்டிருந்தவளின் அழகில் தன்னிலை இழந்து சொக்கி நின்றான்.
தலை முதல் கால் வரை அவளை அளவெடுத்தவாறே நெருங்கியவன் ஆடி கொண்டிருந்தவளின் இடையை வளைத்து பின்னிருந்து இறுக அணைத்து கார்க்கூந்தலில் முகம் புதைத்தான்.
அவள் சுகந்தத்தை சில நொடிகள் ஸ்பரிசித்து " நெய் வாசத்தை மிஞ்சி உன் வாசம் ஆளையே தூக்குதுடி குள்ளச்சி " என்று கூந்தலை விலக்கி கழுத்து வளைவில் முகம் புதைத்து காதல் தீயை மெய் கொண்டு வார்க்க பல நாட்களுக்கு பின்பான தன்னவனின் தொடுகையில் சிலிர்த்தவள் முகத்தில் செம்மை படர்ந்தது.
'எப்போ மாமா வந்த..?? என்றவளை தன் புறம் திரும்பியவன் "அடங்கவே மாட்டியாடி நீ...! நான் தான் வரேன்னு சொன்னேனே, அதுக்குள்ள ஏன் வந்த.." என்று செல்லமாக கடியவும்,
அவன் கழுத்தில் கரம் கோர்த்தவள் "நான் என்ன சின்ன குழந்தையா..?" என்று கேட்டு கண்சிமிட்டிட மலரவளின் கண்களில் ஒளிர்ந்த காதலும் தேடலும் அகனவனின் அகம் நிறைக்க அலரை காற்று புகாதவாறு இறுக்கமாக அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.
மெல்ல அவள் மலர்வதனத்தை கரங்களில் ஏந்திட அலங்காரம் ஏதுமற்ற அவள் முகத்தில் தனக்கான அங்கீகாரத்தை நெற்றி வகிட்டில் உரக்க பறை சாற்றியிருப்பதை கண்டவனின் கரங்கள் சுதந்திரமாய் மலரவளில் ஊர்வலம் வரத்தொடங்கி அவளை கொள்ளை கொள்ள துடித்தது.
அவன் தேவை உணர்ந்தவளோ "மாமா ஒரு நிமிஷம்.." என அவனிடம் இருந்து விலக முனைய
"எதுவா இருந்தாலும் இப்படியே சொல்லு" என்று கிறங்கிய குரலில், இடையோடு இறுக்கி பிடித்து அவள் விழிகளை ஊடுருவி கூற..
"உனக்காகவே பார்த்து பார்த்து சமைச்சிருக்கேன் மாமா அதனால சாப்பிட்டுட்டு.." என்று ஆரம்பித்தவள் என்றும் போல் அவன் விழி வீச்சிற்கு கட்டுப்பட்டவளாய் அவனில் லயிக்க புன்னகையுடன் அவளை கரங்களில் ஏந்திக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.
உள்ளே சென்றவன் அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை கண்டு பிரமித்து நிற்கவும், அவன் திகைப்பை ரசித்தவள் "சர்ப்ரைஸ்" என்று இறங்கி அவனை அணைத்து மார்பில் இதழ் பதித்தாள்.
என்..ன..டி ..??? என்று அவளை தன் கைவளைவில் நிறுத்தியவனின் கரங்கள் இடையை அழுத்தமாய் இறுக்கியது.
"நீதானடா ரொம்ப பீல் பண்ண அப்படி ஒரு பர்ஸ்ட் நைட் யாருக்குமே அமைஞ்சிருக்காதுன்னு அதான்.." என்று கண்சிமிட்டி சிரிக்கவும் ..,
"ஏன்டி குள்ளச்சி... உனக்கு சிரிப்பா இருக்கா..?" என்று அவள் கன்னத்தில் அழுந்த கடிக்க,
"ஹாஆஆ.. ஹாப்பி பர்த்டே மாமா" என்றாள் வலியையும் மீறி உரக்க..
அவன் இனிதாய் அதிர்ந்து நிற்ப்பதை கண்டவள் எக்கி அவன் நெற்றியில் இதழ் பதித்து "பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா செல்லம்" என்றவளை காற்று புகாதவாறு இறுக அணைத்தவன் "கிப்ட் எங்கடி..?" என்று விழிகளால் அவளை பருகியவண்ணம் கேட்கவும்
"என்னை விட பெரிய கிப்ட் என்ன இருந்திட முடியும்..??" என்று அவன் மூக்குரசி கேட்டவளை அள்ளி சென்று களவாட ஆரம்பித்தான். நெடுநாள் பிரிவிற்கு பின்பான தேடலில் அலர்விழியும் எழிலிடம் தன்னை தொலைத்து அவனை மீட்டெடுத்தாள்.
தன் முன் பரிமாறப்பட்டிருந்த உணவுகளையும் விழியவள் கரத்தில் இருந்த கேசரியையும் எழிலன் ஆராய்ச்சியோடு பார்த்திருக்க.. "சாப்பிடுடா" என்று கேசரியை அவனுக்கு ஊட்டிவிட... சுவைத்தவன் உடனே...
"நீலாம்மா வந்திருந்தாங்களா..?" என்றான் மென்னகை இழையோட..
ஏன் என்று புரியாது "இல்லையே" என்றவள் பின்னர் அவன் கேலி புரிந்ததும் 'டேய்ய்...' என்று கண்களை உருட்டியவள்
"என்னை பார்த்தா உனக்கு சமைக்கிற மாதிரி தெரியலையாடா " என்று முறைக்கவும்..,
"நம்ப முடியலையேடி... உனக்கும் சமையலுக்கும் தான் பூர்வ ஜென்ம பகையாச்சே.. அதான் கேட்குறேன் எப்படி இவ்ளோ டேஸ்ட்டா இருக்கு..!" என்று அவளுக்கும் ஊட்டிவிட்டவாறு கேட்க..
"சந்தேகமே வேண்டாம் நான் சமைச்சது தான்.. இனியும் தொடரும்" என்று மெல்ல தலை தாழ்த்த...,
அவள் முகம் பற்றி நிமிர்த்தியவன் "எப்படிடி" எனவும்..,
"சாப்பிடும் போது பேசக்கூடாது அதனால மொதல்ல சாப்பிட்டு முடி.. அப்புறம் சொல்றேன்" எனவும், அவளுக்கும் ஊட்டி விட்டவாறு நிறைவாய் உண்டு முடித்தான்.
அவள் மடியில் தலை சாய்த்தவன் "சொல்லுடி குள்ளச்சி எப்படி..? என்றான்.
"எனக்கு எல்லாம் தெரியும் மாமா.."என்றாள்.
"ஓஹ் ஊருல இருந்தப்போ மாமி உனக்கு ட்ரைன் பண்ணினாங்களா..?? இத்தனை நாள் உன்னை விட்டுட்டு போனதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு" என்றான்.
'இல்லை' என்ற தலையசைப்போடு "எனக்கு எல்லாமே தெரியும்.." என்ற அவள் குரல் வேறுபட்டிருக்க அதை கண்டுகொண்டவனின் புருவம் 'என்ன..??' என்பதாய் ஏறி இறங்கியது.
அன்று அவனை சுயநலவாதி என்று உரக்க சாடியவள் அது பொய்த்துப்போனதை உணர்ந்து அவனிடம் எவ்வாறு உரைப்பது என்று புரியாமல் கலங்கி உதட்டை அழுத்தமாக கடித்து கொண்டு அவன் சிகையில் கரங்களை அழுத்தமாக அலைபாய விட்டு கொண்டிருந்தாள்.
அவள் உணர்வை படித்தவன் "ம்ம்ம்... சொல்லு என்ன தெரியும்.." என்றான் சற்று குரல் உயர்த்தி.
இன்றே சிறு கசடையும் நீக்கி விடும் முனைப்புடன், "இத்தனை வருஷமா நீயும், மாமாவும் உ உங்க.." என்று திணற..,
அதுகாறும் இருந்த இதம் மறைந்து எழுந்து அமர்ந்தவனின் முகம் இறுகவும்..
நொடியில் அதை கண்டுகொண்டவள், "ப்ளீஸ் மாமா எனக்கு அப்போ தெரியாது.. நீங்களும் மாமாவும் அவங்க கையால சாப்பிடாம தனியா சமைச்சி சாப்பிட்டது... எங்க அம்மாக்காக அவங்க கிட்ட பேச்சுவார்த்தை இல்லாமல் ஒதுக்கி வச்சது... அப்பவும் உன்னை நிம்மதியா இருக்க விடாம பெண் பார்க்க கூட்டிட்டு போனது..." என்று முகம் சுழிக்கவும்,
அதை கண்டவனின் இறுக்கம் தளர்ந்து.., முறுவலுடன் "ஏன்டி அதை மட்டும் நீ விடவே மாட்டியா..?" எனவும்.
அவன் தாடை பற்றியவள் "எப்படிடா விட சொல்ற... கூப்பிட்டா அதுதான் சாக்குன்னு கிளம்பிடுவியா..?" என்று வலிக்க அவன் கன்னத்தில் கடிக்கவும்...
"ஸ்ஸப்பா ... ஏய் விடுடி விடு... ராட்சசி கொஞ்சம் விட்டிருந்தா ரத்தமே வந்திருக்கும்" என்று கன்னத்தை தேய்க்க
"என்னால அதை ஏத்துக்கவே முடியலைடா.." என்று கண்கள் கலங்க கூறியவளை அணைத்து கொண்டவன்
"முற்றுப்புள்ளி வைக்கணும்னு தான்டி போனேன்" என்றான்.
அவன் சகஜமாகியதை உணர்ந்தவள் அவன் மடியில் அமர்ந்து கொண்டு.., "அம்மாவை பேசினத்துக்காக நீங்களும் அண்ணியும் துடிச்சு போய் எங்க வீட்டுக்கு வந்தது... ஆனா எங்கப்பா யாரோ பேசினத்துக்கு உங்களை வீட்டுக்குள் சேர்க்காம போனது.. எல்லாமே தெரியும் மாமா .., என்று அவள் தந்தை அவனை அன்று அவமதித்ததற்காக.. இன்று கலங்கியவளாய் கண்களில் வலியுடன் அவன் நெற்றியில் மன்னிப்பாய் முத்தம் பதித்து கூற..."
அவள் முகம் பற்றியவன் "விடுடி.. அன்னைக்கு நடந்த விஷயம் எதுவும் உனக்கு தெரியாது. அதுக்கப்புறம் நீதான் ஹாஸ்டல்லயே முக்கால்வாசி நேரம் இருந்தயே .... சோ உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை" என்று அவளை அணைத்துக்கொண்டான்.
இருவருக்கும் இடையே கனத்த மௌனம் நிலவ நீண்ட நிமிடங்களுக்கு பின் தலை உயர்த்தி அவன் முகம் கண்டவள்..,
"எனக்கு இது ஒன்னு தான் மாமா புரியலை அவ்ளோ வன்மத்தோட பேசினவங்க எப்படி நம்ம கல்யாணத்தை நடத்த விட்டாங்கன்னு தான் ஆச்சர்யமா இருக்கு, என்ன நடந்தது சொல்லு மாமா" என்றாள் ஆர்வமுடன்.
"ஏன்டி நீ கேட்குற வேகத்தை பார்த்தா வந்து தடுத்து நிறுத்தாததுக்கு ரொம்ப பீல் பண்ற மாதிரி தெரியுதே..?" என்று புருவம் ஏற்றி தலை சாய்க்கவும்....
அவன் முதுகில் ரெண்டு வைத்தவள் "நீ கேடிடா யார் தடுக்க வந்திருந்தாலும் தாலி கட்டி இருப்ப..? ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லு மாமா எனக்கு தெரியனும்" எனவும்,
"இருந்தா தானே வரதுக்கு" என்றான் கசந்த முறுவலுடன்.. ஒரு நொடி அதிர்ந்தவள் "அப்போ.. அப்போ... என்றவளிடம்
"இல்லை" என்று பலமாய் தலை அசைத்தவன் அன்றைய நாளை அவளுக்கு விவரிக்க தொடங்கினான்.
வெற்றி திருமணம் முடிந்து குலதெய்வ கோவிலுக்கு சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக அலருடனான அவன் திருமணத்தை உறுதி செய்தவன்.. செல்லும் முன் சரசுவை ஒருதரம் பார்த்தான்.
அவள் விழிகளில் வெஞ்சினம், வன்மம், பழிவெறி என அனைத்தும் போட்டிபோடுவதை கண்டுகொண்டவன்... நிச்சயம் தன் வாழ்வில் இடையூறு ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை என்பதை உணர்ந்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட தொடங்கினான்.
வீடு வந்து சேர்ந்த சரசுவோ உடன் பிறந்தோர் முதற்கொண்டு ஊரார் வரை அனைவரும் அவளை அற்ப புழுவாய் கண்டு விலகியதை எண்ணி பார்த்தவள்.. அடிபட்ட புலியாய் அனைத்திற்கும் காரணமான எழிலை கடித்து குதற துடித்துக்கொண்டிருந்தாள்.
ஊரார் முன்னிலையில் தன்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் அலட்சியப்படுத்தி, அசிங்கப்படுத்தியவன் மீது பழிவெறியே ஓங்கி இருந்தது. பெற்றவளை அசிங்கப்படுத்தி தள்ளி வச்சிட்டு நல்லா வாழ்ந்துட முடியுமாடா..? என்று உள்ளுக்குள் கறுவியவள் ஆத்திரத்தில் அறிவிழந்து தாய் என்ற நிலை வழுவி... எழிலின் நிச்சயத்தை தடுக்க தரம் தாழ்ந்த திட்டம் தீட்டி, யாரையோ தொடர்பு கொண்டு பேசி.. பின் உள்ளுக்குள் குரூரமாக சிரித்து கொண்டவள் "என்னை மீறி எப்படி நீ நடத்தி காட்டுறன்னு நானும் பார்த்துட்றேன்டா" என்று சூளுரைத்தாள்.
அன்று மாலை சுடரின் வீட்டிற்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் "இங்க எழில் யாரு..?" என்று கேட்க,
எழில் முன்னே வரவும் "உங்க மேல ஒரு கம்பிளைன்ட் வந்திருக்கு இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வரசொன்னாரு" என்றார்.
அவரிடம் வந்த சுடர் "என்ன கம்பிளைன்ட்" என்று கேட்கவும் "ஒரு பொண்ணு இவர் மேல புகார் கொடுத்திருக்குமா.." எனவும்
' பொண்ணா' என்று திகைத்தவள் எழிலை பார்க்க அவனோ இதை நான் எதிர்பார்த்தேன் என்பதாய் தமக்கையை பார்த்தான்.
"யாரு..?? எப்போ..?? என்ன புகார்..??" என்று சுடர் அடுத்தடுத்து கேட்கவும்..
"அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து தெரிஞ்சிகோங்கமா" என்றவர் எழிலிடம் போகலாமா..? என்று கேட்கவும்..,
'நீங்க போங்க நான் வரேன்' என்று அவன் உரைத்த விதத்தில் அவர் செல்ல உடனே சிலருக்கு போன் செய்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்டேஷனில் இருந்தான்.
உள்ளே நுழைந்தவனின் கண்ணில் சரண்யா படவும் அவளிடம் சென்றவன் "என்ன ஆச்சு சரண்யா என்ன பிரச்சனை..? மாமா அத்தை எங்கே...? நீ எதுக்கு ஸ்டேஷன்க்கு எல்லாம் வர... எதாவது தொலைச்சிட்டியா..?? " என்று கேட்கவும்,
பெற்றோரின் கட்டளையின் பேரில் அங்கு வந்திருந்தவள் எழிலின் அக்கறையிலும் அன்பிலும் மேலும் கூனி குறுகி போய் தலை குனிந்து மௌனமாய் நின்றாள்.
இன்ஸ்பெக்டரிடம் சென்றவன் "சார் என் சொந்தகார பொண்ணுதான் எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் அவளை அனுப்பிடுங்க" என்றான்.
"அந்த பொண்ணு தான் உங்க மேல கம்பிளைன்ட் பண்ணினது" என்றார்.
அதை கேட்ட நொடி அவன் முகத்தில் உணர்வுகள் முற்றிலும் துடைக்கப்பட்டிருந்தது, "என்ன கம்பிளைன்ட்" என்றான்.
"நீங்க அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டதாவும் அதனால உங்களை திருமணம் செய்து வைக்க சொல்லி வந்திருக்கு" என்றார்.
சரண்யாவின் குடும்ப பின்னணி நன்கு அறிந்தவனுக்கு இது யார் வேலை என்று புரிய... மனம் கூசி, அருவருத்து போனது அத்தகைய உறவை எண்ணி.
"யார் என்ன சொன்னாலும் விசாரிக்க கூப்புடுவிங்களா சார் மொதல்ல அந்த பெண்ணை விசாரிச்சீங்களா..? என்று கேட்கவும்..,
"என்ன சார் பேசுறீங்க இந்த விஷயத்துல யாராவது பொய் சொல்லுவாங்களா..?" என்றார்.
இதை அந்த பொண்ணு கிட்டயே கேளுங்க... என்றவன் சரண்யாவை அழைக்க தலை குனிந்திருந்தவள் அமைதியாய் இருக்கவும்
"இதோட விளைவு என்னன்னு தெரியாம வந்திருக்க சரண்யா" என்று கூறவும்
எழிலை திருமணம் செய்யும் ஒரே வழி இதுதான் என்று சரசுவின் தூண்டுதலின் பெயரில் பெற்றோரின் வற்புறுத்தலில் வந்தவள்... பின்பே நிலை உணர்ந்து கூனி குறுகி போய் அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்க..,
வெற்றியை அழைத்து உடனே அவள் வீட்டில் விடுமாறு கூறியவன்
"அவரிடம் பொண்ணுங்க இப்படி புகார் தூக்கிட்டு வந்தா மொதல்ல அவங்களையும் பெற்றவர்களையும் விசாரிங்க சார் அப்புறம் எங்க கிட்ட வருவீங்க" என்றவன்..,
இப்போ நான் ஆதாரத்தோடு புகார் கொடுக்குறேன் நடவடிக்கை எடுங்க என்று கம்பிளைன்ட் எழுதி ஆதாரத்தையும் சமர்ப்பித்து கிளம்பினான்.
**
கடந்த ஒரு வாரமாக வெளியூர் சென்றிருந்த நந்தன் வீடு திரும்பி கொண்டிருக்கஅவருக்கு அழைத்த சுடர்கொடி கோவிலில் நடந்த அனைத்தையும் கூறவும் நந்தன் கொதிநிலையை அடைந்தார்.
அலரின் மீது மலையளவு பாசம் கொண்டவர் எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும் நாதன் குடும்பத்தின் மீது மரியாதையும் பாசமும் உள்ளவர்.
சரசு எனும் வெறிநாய் அலரை குதறி எடுத்ததை கேட்டவருக்கு உணர்வு பெருக்கில் கண்களில் சிவப்புடன் நீரும் இமை மீறியது.
அனைவர் முன்னிலையிலும் அவள் பட்ட பாட்டை எண்ணி.. வீட்டிற்கு வந்த மறுநொடி ஒய்யாரமாய் கட்டிலில் படுத்து புத்தகம் படித்து கொண்டிருந்தவளை எக்கி விட்டார் ஒரு உதை..
அதன் விளைவாய் கட்டிலின் மறுபுறத்திற்கு உருண்டு கீழே விழுந்தவள் இடுப்பை பிடித்துக்கொண்டே "ஏய்ய்ய்ய்ய்ய்ய்..." என்றவாறு எழ முற்படவும்..,
கொத்தாய் அவள் கூந்தலை பற்றியவர் "சாக்கடை... சாக்கடை... உன் கண்ணுக்கு கங்கையும் கூவமாத்தான்டி தெரியும் கேடுகெட்ட நாயே.........." என்று வசை பாடியவாறு அவளை நிறுத்தி இடியென கரத்தை இறக்கவும் சுழன்று சுவரோடு ஒன்றினாள்.
விழிகள் அச்சத்தில் விரிய தன் முன் நின்றிருந்தவரை பார்த்தவள்... மறுநொடி கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு "ஏய் யார் மேல கைவைக்குற..." என்று எகிறிக்கொண்டு சென்றாள்.
நொடிக்கும் குறைவான நேரத்தில் தன் பெல்ட்டை கையில் எடுத்து சரமாரியாக இடைவெளியே இல்லாமல் நந்தன் அடிக்க துவங்க வலி தாங்காமல் ஐயோ.. அம்மா.. என்றவாறு ஓடினாள்.
அவளை விடாமல் அடித்தவாறே "நன்றி கெட்டவளே எப்படிடி அந்த குழந்தையை அசிங்கப்படுத்த துணிஞ்ச... யார் கொடுத்தா உனக்கு அந்த தைரியத்தை..? உன்னை சொல்லி குத்தமில்லைடி அன்னைக்கு அந்த பொண்ணு வளர்மதி மேல அபாண்டமான பழி போட்டப்பவே உன்னை விளாசி இருந்தேன்னா இன்னிக்கி இப்படி துணிஞ்சிருக்க மாட்ட..." என்று கீழே கிடந்தவளை ஒரே மிதி மிதிக்கவும்..
உடல் வெடவெடக்க.. மேனி முழுக்க சரமாரியாக வரி வரியாக சிவந்திருக்க.. கண்களில் நிற்காத கண்ணீருடன் வெகுண்டெழுந்தவள் "யாருயா பழிபோட்டது.. அவ ஒரு ... " எனும்முன் பெல்ட்டை அவள் வாய் மீது பலமாய் வீசியவர்,
"இதுக்கு தான்டி.. உன் வாயில அந்த பொண்ணு திரும்ப விழக்கூடாதுன்னு தான் அமைதியா விலகினேன் இல்லை அந்த பொண்ணை வரைமுறையே இல்லாம இன்னும் அசிங்கப்படுத்திருப்ப." என்றவர் கண்மூடி நிதானித்து குரல் செருமி...
ஆனா விலகி போனது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்னு இப்போ தான்டி புரியுது எனவும்..,
"டேய்ய்ய்... எவளுக்காகவோ என்னை அடிப்பியா..? என்றவள் அந்த சிறுக்கி மவ உன் மகனோட சேர்...." என்று முடிப்பதற்குள் மனம் பதற... "ச்சீய்.." என்று அருவருத்து போனவர் ஓங்கி அறைந்ததில் சுருண்டு விழுந்தவளின் இதழ் ஓரம் கிழிந்து ரத்தம் கசிந்தது.
அவள் கழுத்தை பிடித்து சுவரோடு சாய்த்து இறுக்கி "தரங்கெட்டவளே உன் தரத்துல தானே அடுத்தவங்களை நிறுத்துவ" எனவும் மூச்சு காற்றுக்கு தவித்தவள் வி.. விட்.. என்று கூற...
"விடுறதா.. அதுவும் உன்னையா...? இதுக்கு மேலயும் "ஊரு, உலகம், மானம், மரியாதை, ம*** மண்ணாங்கட்டின்னு அடுத்தவங்க நினைப்புக்கு அஞ்சி தொடப்பக்கட்டைக்கு பட்டு குஞ்சம் கட்டி வெச்சிருந்த என்னை சொல்லணும்.." என்று தலையில் கரம் கோர்த்து கவிழ்ந்தவர் சில நொடிகளில் நிமிர்ந்து..
"உன்னை மாதிரி ஒரு விஷ ஜந்துவை விட்டு வச்சேன்னா அந்த ஆண்டவனே என்னை மன்னிக்க மாட்டான்டி... நீயெல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமாய்" என்று கரத்தில் அழுத்தம் கூட்டவும்.. மூச்சு திணற உயிர் பயம் கண்முன் வர...கை கால்களை உதைத்தவாறு விடுபட முயன்றாள்...
"உன்னால யார் நிம்மதியா இருந்திருக்கா சொல்லு பெற்றவங்கள்ல இருந்து கூட பிறந்தவங்க, உனக்கு தாலி கட்டின பாவத்துக்கு என்றவர்.
அவள் கழுத்தில் இருந்து கரம் விலக்கிய நொடி அவள் கழுத்தில் இருந்த தாலி கயிற்றை அறுத்திருந்தார். அதில் அதிர்ந்து அவரை பார்க்க "என்னடி பாக்கிற ஒருநாளும் இதுக்கு மதிப்பு கொடுக்காத உனக்கு இதுக்கு மேலயும் இது எதுக்கு..?" என்றவர் உன் மேல மட்டும் தப்பில்லைடி உன்னை மாதிரி இருக்குறவளை ஒன்னு அடக்கி இருக்கனும்... இல்லை வெட்டி விட்டிருக்கனும் ரெண்டுக்கும் துப்பில்லாம போன என் மேலையும் தப்பிருக்கு அதனால..." என்றவரின் அலைபேசி அழைக்க எடுத்து பேசியவரின் முகம் கனலாகியது.
போனை விசிறி அடித்தவர் அவளை நெருங்கவும் பயத்தில் ஒடுங்கியவளை கண்டவர்... உன்னை தொடறது கூட பாவம் என்று முகம் சுழித்தவர்
""ச்சீ.. ச்சீய்... தாயாடி நீயெல்லாம்" என்று அவள் முகத்தில் காரி உமிழ்ந்தவர்...
'பெத்த பிள்ளையையும் விட்டு வைக்காம உன் குரூர புத்தியை காட்டியிருக்கியே என்றவரின் மனம் உலைக்கலமென கொதிக்க... வராங்க உன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போக..!" என்றார் அதில் திகைத்து சரசு அவரை பார்த்திருக்க...,
"இல்லைடி இல்லை... நீ அப்படியெல்லாம் சொகுசா இருக்க கூடாது.., உயிர் வாழவே தகுதி இல்லாத ஜந்து நீ, செத்து ஒழி நாயே... அன்னைக்கு மண்ணெண்ணெய் எடுத்தப்பவே உன்னை கொளுத்திக்க விட்டிருக்கனும்" என்றவர்
அதுக்கென்ன இன்னிக்கு அந்த நல்ல காரியத்தை நான் செஞ்சி எனக்கான தண்டனையை உள்ள போய் நான் அனுபவிச்சிக்குறேன் என்று சமையலறை நோக்கி செல்லவும்..,
அதுவரை உயிர் ஊசலாட கண்களில் தீராத பழிவெறியுடன் நந்தனை பார்த்திருந்தவள் சேலையை சுருட்டி கொண்டு கிழிந்த ஆடையும்.. கலைந்த தலையும்.. வீங்கிய முகமுமாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இலக்கற்று வெளியில் ஓடினாள்.
அன்றைய நிகழ்வுகளை எழில் கூறி முடிக்கவும்... "அப்புறம் என்ன ஆச்சு மாமா" என்று சுவாரஸ்யமாய் கேட்டவளிடம்
"தெரியாதுடி.. அதுக்கப்புறம் அவங்களை தேட எங்கப்பாவும் எங்களை விடலை, மீறி போன அவரை மறந்திட சொல்லிட்டார்".
"இதுவரை அவர் பட்டதே போதும் இனியும் அவரை கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு நாங்களும் தேடலை" என்றான்.
அதுக்கப்புறம் உங்களை தேடி வரவே இல்லையா..? ஒருவேளை மாமா அடிச்ச அடில மூளை குழம்பி போயிருக்குமோ..? என்று கேட்கவும்
" ப்ச் இல்லைடி” என்று தோளை குலுக்கி உள்ளே சென்றான்.
நள்ளிரவில் செல்வத்திடம் இருந்து அழைப்பு வரவும் அதை ஏற்ற நந்தனிடம், "என்ன நந்தா உன் வைப் இந்த நேரத்துல அவசரமா ஸ்டேஷன் வந்திருக்காங்க..." எனவும் எழுந்து அமர்ந்தவர் "என்ன சொல்ற" என்றார்..,
"டே.... டேய்...ய்ய்ய்ய்" என்ற செல்வம் "அவங்க ஓடுற ட்ரைன்ல ஏறப் பார்க்குறாங்கடா, ட்ரெயின் வேற பாஸ்ட்டா மூவ் ஆகுது.. என்றவாறே சரசுவை நோக்கி ஓடவும் நொடிக்கும் குறைவான நேரத்தில் படியில் கால் வைத்தவள் பிடிமானமின்றி தடுமாறி ரயிலின் வேகத்தில் இழுபட்டு தண்டவாளத்தில் விழுந்தாள்.
விழுந்த வேகத்தில் அவள் காலிலும் தலையிலும் சக்கரங்கள் ஏறி இறங்க... தண்டவாளத்தில் அவள் சிதைந்த முகம் கண்ட செல்வம் அதிர்ந்து போனார். நள்ளிரவில் நொடியில் நிகழ்ந்து விட்ட அசம்பாவிதத்தில் சில கனங்கள் உறைந்திருந்தவர்..
மீண்டும் அழைத்த நந்தனிடம் சரசு சம்பவ இடத்திலேயே இறந்ததை தெரிவிக்க " இதோ நான் வந்துட்டே இருக்கேன்.." என்று ரயில் நிலையத்திற்கு விரைந்தார்.
ரயில்வே போலீஸாரிடம் முகம் சிதைந்திருந்த உடலில் அங்க அடையாளம் காட்டி அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தவர்.. கணவன் பெயர் என்ற இடத்தில சந்துரு என்று இட்டு நிரப்பினார்.
கான்ஸ்டபில் இதை ப்ரெஸ்க்கு கொடுத்துடுங்க என்று உயர் அதிகாரி தெரிவிக்கவும். அருகே இருந்த செல்வம் அதிர அவரை கரம் கொண்டு அடக்கியவர் உடலை நேரே மின்மயானத்திற்கு எடுத்து சென்றார்.
"எதுக்கும் இன்னொரு முறை யோசி நந்தா.. இது ரொம்ப தப்பு பசங்களுக்கு கூட தெரியாம.." என்ற நண்பனின் வார்த்தைக்கு செவி சாய்க்காமல் மின்மயானத்தின் சம்பிரதாயங்களையும் முடித்தவர் கையெழுத்திட்டு உடலை தகன மேடைக்கு அனுப்பினார்.
நொடியில் சாம்பலாகி வரவும் அதை அவரிடம் அளிக்க... அவரோ கூவத்துல கரைச்சிடுங்க என்று விட்டு வெளியேறினார்.
மயான ஊழியர்கள் அவரை விசித்திரமாய் பார்க்கவும்... செல்வம் "நந்தா ரொம்ப தப்பு பண்ற... என்று அவர்களிடம் இருந்து வாங்கியவர் நந்தனிடம் "அங்க போலீஸ் கிட்ட என்னென்னா சந்துருன்னு சொல்ற... இங்க.." எனவும்
"சந்துரு.." என்ற பெயரை உச்சரித்தவர் சிறு இடைவெளி விட்டு அதுதான்டா சரியா இருக்கும் என்றவரை விசித்திரமாய் பார்த்த செல்வம்...,
"ஏன்டா இப்படி பண்ற..? அவங்க உன் மனைவி பசங்களுக்கு அம்மா.. அவங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கூட கிடைக்க விடாம " என்றவரை தடுத்த நந்தன்..,
"அதுக்கு தான்... என்று உறுதியான குரலில் தெரிவித்தவர் தொடர்ந்து "அவளுக்கு மாலை மரியாதை கொடுத்து அனுப்புற அளவுக்கு அவ ஒன்னும் புனித ஆத்மா கிடையாது... காட்டேரிடா... எத்தனை பேரை உயிரோட கொன்னிருக்கா தெரியுமா..? இந்த பிசாசுக்காக அம்மாங்கற முறையிலயோ பொண்ணுங்கிற முறையிலயோ யாரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக்கூடாது".. எந்த இடத்துலயும் இறந்தது இவதான்னு தெரியக்கூடாதுன்னு தான் அப்படி கொடுத்தேன் என்றார்.
நந்தா நீயா இது..! என்னால நம்ப முடியலை என்றவரிடம் ஆதி அந்தமாய் அனைத்தையும் பகிர.. இத்தனை மாசமா காணாம போனவங்க எப்படி திடீர்ன்னு இங்க என்று கேட்க...
"தெரியலை ஆனா ஆண்டவன் இருக்கான்டா" என்றவர்
"இன்னையோட எல்லாம் விட்டது... நான் போய் தலை முழுகுறேன்" என்று அதிகாலை வேளை வீடு நோக்கி சென்றார்.