நீ இருக்கும் நெஞ்சம் இது …21

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை, “ஸ்பீக்கர்” வழியாக கேட்டுக்கொண்டிருந்த சந்தோஷ், இந்த விஷயம் இவளுக்கு எப்படி தெரிந்தது?, இப்போ அது முக்கியமில்லை, முதலில் அவளை போய் பார்ப்போம் என்று வேகமாக வரவும், இவளும் மாமா என்று கட்டிக்கொண்டு அழுகவும். இவனால் தாளவே முடியவில்லை, இங்க பாரு வாசுகி எது பொய்யோ, உண்மையோ நானும், நம்ப பசங்களும் மட்டும் நிஜம் ,அதுவுமில்லாம உன்னை யாரும் அப்படி உன்னை பிரிச்சு பார்த்ததில்லை.

இன்னும் சொல்லப்போனா ,கிருஷ்ணாவுக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது, என்று சொல்லவும், எனக்கு அது தெரியும் என்று சொல்லி “அடுத்தது அதிர்ச்சியைக் கொடுத்தாள்” உனக்கு யாரு இந்த விஷயத்தை சொன்னது என்று கேட்கவும்? கிருஷ்ணா கூட வேல பாக்குற, நிஷா தான். அவங்களோட” உனக்கு எப்படி ஃப்ரெண்ட்ஷிப் ஆச்சு? கிருஷ்ணா க்கு, நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி, எதேச்சையா அவங்கள ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தேன், அவங்கதான் எல்லா விஷயமும் சொன்னாங்க.

அவங்களுக்கு எப்படி “எல்லா விஷயமும் தெரியும் என்று மனதிற்குள் நினைத்தவன்” இதை கிருஷ்ணா கிட்ட பேசி தெளிவு படுத்தனும் என்று நினைத்துக்கொண்டு, டாக்டரை பார்த்தவன் ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். நானும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன், இவ எந்த விஷயத்தையும் சொல்லல, “தப்பு என் மேலயும் இருக்கு” கல்யாண பிசில கொஞ்சம் கவனிக்காம விட்டுட்டேன், என்று சொன்னவுடன் “டாக்டர் சாரதா” எவ்வளவு பிஸியா இருந்தாலும், கொஞ்சம் “ஃபேமிலி டைம் ஸ்பென்ட் பண்ணனும்” என்று சொல்லிவிட்டு அவர்களை வாழ்த்தி அனுப்பிவிட்டனர்.

இங்கு வீட்டில் கிருஷ்ணா. கண்மணி, பிரபாகர், யசோதா அனைவரும் பதட்டத்தோடு இருந்தனர். அவர்கள் வீட்டிற்குள் வந்ததும். வேகமாக சென்ற யசோதா, இந்த அம்மா மேல ஏதாவது கோவமா வாசுகி? என்ன தப்பு பண்ணியிருந்தாலும் அம்மாவ மன்னிச்சுடு என்று சொல்லவும், யசோதா அவை கட்டிக்கொண்டு அழுத வாசுகி என்ன மன்னிச்சிடு மா என்று சொல்லவும், நீ என்னடா தப்பு பண்ண?...

அங்கு நடந்த, எல்லா விஷயத்தையும் சந்தோஷ் சொல்லவும், “கிருஷ்ணா மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான” அவனை பிடித்த கண்மணி அவளுக்கும் இது அதிர்ச்சிதான். தன் அம்மாவிடம் சென்ற கிருஷ்ணா “ரொம்ப சந்தோஷமா நீ என் மேல வெச்சா நம்பிக்கையோடு அளவு இவ்வளவுதானா? எனக்கு உண்மையை தெரிஞ்சா நான் அக்காவை வெறுத்து விடுவேன்னு அற நினைச்சியா என்று கேட்கவும்.

நீயும், என்னை சந்தேகப்பட்டு இல்லக்கா, என்று கேட்கவும்? இல்ல கிருஷ்ணா,உண்மை தெரிந்ததும் எனக்கு எப்படி “ஹாண்டில்” பண்றதுன்னு தெரியல.

என்று சொல்லவும், “யசோதாவின் மடியிலிருந்து, தன் தலையை கிருஷ்ணாவின் மடிக்கு மாற்றிக்கொண்டால்” அவர்களுக்கு தனிமை கொடுத்து, அனைவரும் விலகிக்கொள்ள. இப்ப சொல்லுக்கா உனக்கு இந்த விஷயம் எப்போ தெரிஞ்சது? என்று கேட்கவும்.

நிஷாவை முதன்முதலாக பார்த்தது, எல்லா விஷயத்தையும் சொல்லவும். அவளுக்கு, எப்படி இந்த விஷயம் தெரிஞ்சு தான் ஒருவாட்டி பாட்டியும், நம்ம அம்மாவும், கோவில்ல உக்காந்து பேசிட்டு இருக்கும்போது, கேட்டு இருக்கா. அப்போ,அவ ரொம்ப நாளா, “நம்ம ஃபேமிலிய வாட்ச்” பண்ணிட்டு இருந்துருக்கா. உன்னோட பலகீனத்தை “யூஸ் பண்ணிட்டா” என்று சொல்லவும்.

அதுமட்டுமில்ல கிருஷ்ணா, உனக்கு இந்த விஷயம் தெரியாது என்று சொன்னா. எங்க உனக்கு உண்மை தெரிஞ்சிடும் அதுமட்டுமில்லாம, பொதுவாவே, “பசங்களுக்கு கல்யாணம்” ஆனா, மத்தவங்க எல்லாம் “ஃபர்ஸ்ட்” முதல்ல வைஃப் த்தான் முக்கியத்துவம் தருவாங்க. அதுவுமில்லாமல், நான்” உன் சொந்த அக்கா இல்லன்னு தெரிஞ்சா” நீ என்ன முழுசா வெறுத்து விடுவாயோ என்று பயந்தேன். என்று சொல்லவும், நீ என் மேல வச்ச அவ்வளவு தானா? அக்கா எவ்வளவு பேர் வந்தாலும், “அம்மா, அப்பா எடுத்த யாராலும் நிரப்ப முடியாது” அதேபோலத்தான், அக்கா, அண்ணா, ஒய்ஃப், பசங்க எல்லாம். “ அவங்கவங்க இடத்தை அவங்க தான் நிரப்ப முடியும்”…

முதல்ல தூங்குங்க என்று சொல்லிவிட்டு “லைட் ஆஃப் செய்துவிட்டு” வெளியே சென்றுவிட்டான். அங்கு யசோதா அழுது கொண்டிருக்க. கிருஷ்ணா என்ன மன்னிச்சிடு பா, என்று சொல்லவும், விடும்மா. ஆனா, ஒரு விஷயத்துல உன்ன பாராட்டனும். எல்லாரும் அவங்களுக்கு. ஒரு பசங்க வந்தா, “தத்தெடுத்த பசங்களுக்கும், பெத்த பசங்களுக்கும் “டிஃபரன்ஸ் காமிப்பாங்க” ஆனா, நீ அக்காக்கு முதல்ல, முக்கியத்துவம் கொடுத்திருக்க என்று சொல்லவும். அப்படி இல்லடா, எனக்கு ரெண்டு பேரும ஒன்னு தான்.

எனக்குள்ள ஒரு குற்றவுணர்ச்சி, எங்க என்னையும் அறியாம வேறுபாடு காட்டிடுவேன். அதுக்காக, அவளை கொஞ்சம் அதிகமா கவனிச்சேன். உன்னையும், அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வெச்சேன். இப்பயும், எனக்கு வாசுகி மேல அன்புதான் என்று சொல்லவும், ரொம்ப வருஷமா குழந்தை இல்லாம இருந்த என்ன “அம்மான்னு ஒரு அந்தஸ்து தந்தது அவதான்.

“ஒரு பாலைவனம் போல் இருந்த வயிற்றில்

பாலை வார்த்தாலே இந்த பாவி உன்னை

சுமக்கவில்லை நானும் உன் தாயே”

அதற்கு பிரபாகர், நீ அன்பு காட்டுவது தப்பில் ஆனால், “அளவுக்கு மீறி போனா, அமிர்தமே ஆனாலும் விஷம்தான்” அன்போடு சேர்ந்த கண்டிப்பு ரொம்ப முக்கியம்.

“மீன் சாப்பிட சொல்லிக் கொடுக்கிற பெத்தவங்கள விட, மீன்பிடிக்க கற்றுக்கொடுக்கிற அம்மா அப்பாதான் சிறந்த அவங்க”. ஒன்னு புரிஞ்சுக்கோ யசோதா ,எவ்வளவு தான் “நம்ம தூக்கி பசங்கள வச்சிருந்தாலும், தரையில ஒரு நாள் இறக்கிவிட்டு தான் ஆகணும்”…

“பசங்க போற பாதையில, ரோஜா மட்டும் தான் இருக்கும்னு நம்ம எதிர்பார்ப்பது தப்பு.” “முட்களும் இருக்கும், கற்களும் இருக்கும்” நம்மளோட வேலை என்ன தெரியுமா? பார்த்து பாதையை எப்படி கடக்கிறது சொல்லிக் கொடுக்கணும்.

அத விட்டுட்டு, நடக்கவே வேணாம் அப்படின்னு சொல்லி தூக்கி வச்சுக்க கூடாது, “ சில தோல்விகளும் நல்லது அழகானது. அதுதான்” மிச்ச வாழ்க்கைக்கு கடக்க, உண்டான தைரியத்தை. தன்னம்பிக்கையை கொடுக்கணும்”

அதை கொடுக்க கொடுக்கத் தவறிவிட்டோம். தப்பு நம்ம பேர்ல, இருக்கு. என்று சொல்லவும். அனைவரும் அமைதியாக இருந்தனர். எல்லாரும் அவளை அதிகப்படியாகவே செல்லம் கொடுத்துட்டோம். ஒரு இயல்பான ஒரு உறவு கூட அவளால ஏத்துக்க முடியல. அதுவும் இல்லாம, அவ நமக்கு பொறக்கல, உண்மை தெரிஞ்சதும் அவளால தாங்க முடியாமல், அவளை அவளே அவள வச்சுக்கிட்டா. எனக்கு என்ன வருத்தம் தெரியுமா வெளிய என்ன நடந்தாலும்? பெத்தவங்க கிட்ட சொன்னா அவங்க நம்ம பிரச்சனைக்கு, “சொல்யூஷன் தருவாங்க” அப்படின்னு நம்பிக்கையே, நம்ம பொண்ணுக்கு கொடுக்க தவறி விட்டோமோ?... என்று இவர்கள் குள்ளேயே வெகுநேரம் பேசிக்கொண்டிருக்க.

பிரபாகர் தான் “ரொம்ப டைம் ஆச்சு” கிருஷ்ணா, கண்மணி நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க என்று சொல்லவும். அவர்கள் ரூமிற்குள் சென்றவுடன், கண்மணியின் கையை, பிடித்துக்கொண்ட கிருஷ்ணா கொண்ட கிருஷ்ணா. உனக்கு தான், முதல்ல தேங்க்ஸ் சொல்லணும்.

இல்லன்னா ஒரு முடிவு வந்து இருக்காது. இந்த பிரச்சனை, உன்னை நான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் என்று சொல்லவும். என்னங்க பிரிச்சு பேசுறீங்க, இது நம்ம குடும்பம் தானே, எனக்கும் கடமை இருக்குல்ல என்று சொல்லவும் இருந்தாலும் கல்யாணம் ஆனவுடனே, “என் பாரத்தை சுமக்க வேண்டிய உன்ன” குடும்ப பாரத்தை சுமக்க வச்சிட்டேன். ச என்று கண்ணடித்து சொல்லவும், அவன் கையில் கிள்ளியவள்.

அப்பா நீங்க இப்படி பழையபட மாற இவ்வளவு நாள் ஆச்சு. அவளை கட்டிக்கொண்டு கிருஷ்ணா. என்ன பொறுத்த வரைக்கும் “ஐ லவ் யூ” என்று சொல்வதை விட “ஐ அண்டர்ஸ்டாண்ட் யு” உண்மையானது. அந்த வார்த்தை தான் உண்மையானது, நிரந்தரமான, “அண்டர்ஸ்டாண்ட்” எங்க இருக்கோ, அங்க “லவ்” தானா வந்துடும் எந்த உறவாக இருந்தாலும்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆது?
வாசுகி தத்துப் பெண்ணா?
இம்புட்டு நாளா இதை நீங்க சொல்லவேயில்லையே கிருஷ்ணா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top