Caro Mary
Well-Known Member
வாழ்த்ததை பரிமாறிய
அஞ்சல் கடிதங்கள்
காணாமல் போயின.
வீதியில் தேடி அலைந்து
வாங்கும் ஆடைகளை
ஆன்லைனில் தேடுகிறோம்.
நட்போடு சேர்ந்து ஓயாது
வெடித்த வெடிகளை
வேடிக்கை பார்க்கிறோம்.
பலகதைகள் பேசி செய்யும்
பாரம்பரிய பலகாரங்களை
கடைகளில் வாங்கிறோம்.
உறவினர் வீட்டுக்கு செல்லாமல்
ஊடகங்களில் உரையாடி
உறவை வளர்க்கிறோம்.
பெரியவர்களின் பாதம் பணிந்து
பெறும் ஆசியை தொலைபேசியில்
பெற்று மகிழ்கிறோம்.
மாறி வரும் நவீன உலகில்
மறக்கிறோம் பண்டிகையின்
மரபுகளை..
அஞ்சல் கடிதங்கள்
காணாமல் போயின.
வீதியில் தேடி அலைந்து
வாங்கும் ஆடைகளை
ஆன்லைனில் தேடுகிறோம்.
நட்போடு சேர்ந்து ஓயாது
வெடித்த வெடிகளை
வேடிக்கை பார்க்கிறோம்.
பலகதைகள் பேசி செய்யும்
பாரம்பரிய பலகாரங்களை
கடைகளில் வாங்கிறோம்.
உறவினர் வீட்டுக்கு செல்லாமல்
ஊடகங்களில் உரையாடி
உறவை வளர்க்கிறோம்.
பெரியவர்களின் பாதம் பணிந்து
பெறும் ஆசியை தொலைபேசியில்
பெற்று மகிழ்கிறோம்.
மாறி வரும் நவீன உலகில்
மறக்கிறோம் பண்டிகையின்
மரபுகளை..