தீத்திரள் ஆரமே -7

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.

ஆரா கொடுத்த முத்தத்தில் உள்ளே இருந்தவன் ஒரு நொடி ஆடித்தான் போனான் என்றால்.. வெளியே இருந்த விதுர்ணாவோ மயக்கம் போட்டு விழாத குறையாக நின்றாள்..

"ஏய் விது.. இங்க பாரு விது..என்னடி ஆச்சு?" என்றாள் செய்வது எல்லாம் செய்துவிட்டு.

"ம்ம் ஆரா, நீ இப்போ என்ன பண்ணுன..?"

"காருக்கு கிஸ் குடுத்தேன், அதுக்கு எதுக்கு இந்த அளவுக்கு ஷாக் ஆகற?, வா போலாம்" என்றாள் சாதாரணமாக.

"நீ தெரிஞ்சிதான் பேசறீயா ஆரா..?உள்ளே ஆள் இருந்தாங்கனா அவங்களுக்கு குடுத்ததா தானே நினைப்பாங்க, ஏன் இப்படி பண்ணுன, உன்னைய அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?" என்று கேள்வி கேட்டாள்.

'அதுதானே எனக்கும் வேணும்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..

ஆராவைப பொறுத்த வரையில் அன்று நிழலாக தெரிந்த உருவத்தை , இன்று நிஜத்தில் அவன் முகத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு சட்டென்று தோன்றிய யோசனையில் முத்ததை கொடுத்துவிட்டாள் ஆரா.. முத்தம் கொடுத்ததிற்காக ஒன்று சண்டை போட வெளியே வருவான், இல்லை என்றால் வழியவாவது வெளியே வருவான் என்பது ஆராவின் எண்ணம்.

"உள்ளே இருக்கறது யார்னு தெரியுமா?" என்று விதுர்ணா விழியகலக் கேட்கவும்..

"யாரா இருந்தா எனக்கு என்ன விது..? எனக்கு பிடிச்ச கார் இதுதான், அதான் கிஸ் பண்ணிட்டேன்" என்றாள் சாதாரணமாக.

ஆனால் ஆராவைப் போல் விதுவால் இந்த விஷயத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் காரின் உள்ளே இருப்பவன் யார் என்று தெரிந்ததால் கூட இருக்கலாம்.

"ஐயோ!! என்ன நினைச்சிருப்பாரோ" என்று பயந்தபடியே இருந்த விதுர்ணாவை அதிசயமாக பார்த்தவள், "சரி விது அப்பா வந்துட்டார், நான் கிளம்பறேன்" என்றாள்.

"சரி ஆரா, பார்த்து போ.." என்றாள்.

சரி என்று தலையை அசைத்து விட்டு வேலுவுடன் ஆரா கிளம்பிவிட..

ஆரா சென்று விட்டாள் என்று உறுதிப்படுத்திக் கொண்ட விது.. அந்த ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரில் சென்று ஏறினாள்.

"அண்ணா அவ ஏதோ விளையாட்டுக்கு தான் பண்ணுனா, நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க" என்று தயங்கி தயங்கி சொல்லும் தங்கையைப் பார்க்கும் போது முகத்தில் கனிவு வந்தது சக்திக்கு.

சிறு புன்னகையை தங்கைக்கு பரிசாக கொடுத்தவன் எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.

குழந்தை வேலுவுடன் மீண்டும் Msv கம்பெனிக்கு சென்றாள் ஆரா..

இருவரும் நேராக எம்டியின் அறைக்குச் சென்றனர்..

"எக்ஸ்கியூஸ் மீ சார்" என்று வேலு உள்ளே வர அனுமதி கேட்டு நிற்க..

"ம்ம் எஸ் கமின்" என்ற வார்த்தைகள் கம்பீரமாக வந்து விழுந்தது..

"சார் இது என்னோட பொண்ணு, நம்ப காலேஜில தான் பிஇ பைனல் இயர் படிக்கிறா..." என்று தன்மகளை அறிமுகப்படுத்தினார்.

"நீ விதுவோட பர்த்டே பார்ட்டிக்கு வந்த தானே" என்றார் எதிர் இருந்தவர்.

அந்த இடத்தில் விதுவின் அப்பாவான அன்பரசுவை எதிர்பார்க்காததால் அதிர்ச்சில் இருந்த ஆரா.. அவர் கேள்வி கேட்கவும்..

"ஆமா" என்று தலையை ஆட்டி, "அங்கிள் இது உங்க கம்பெனியா?" என்றாள் கேள்வியாக.

அப்பாவை போல இவரும் இங்கு வேலை செய்பவராக இருப்பார், என்று நினைத்து தான் அந்த கேள்வியைக் கேட்டாள் ஆரா.

"ஆமா, ஏன் உன்கிட்ட விது சொல்லலையா?" என்றார் அன்பரசு.

"இல்ல சொல்லிருப்பா நான்தான் சரியா காதுல வாங்கிருக்க மாட்டனோ என்னவோ" என்று அவர் விதுர்ணாவின் அப்பாவே ஆயினும், அவரிடம் தன் தோழியை விட்டு கொடுக்க மனம் இல்லாமல் சொன்னாள்.

"ம்ம் சரி, நீ இங்க இன்டென்ஷிப் பண்ணனுமா?" என்றார் மீண்டும் கேள்வியாக

இவ்வளவு நேரம் இங்கு செய்யலாம் என்ற எண்ணதில் இருந்தாள் தான், ஆனால் இப்போது இங்கு செய்ய வேண்டுமா? என்ற எண்ணம் எழ ஆரம்பித்திருந்தது..

விதுர்ணா தன் சுயத்தை மறைத்து பழகியது தப்பு இல்லை, ஏனென்றால் ஆரா கூட தன் குடும்பத்தை பற்றி எந்த விஷயத்தையும் விதுர்ணாவிடம் பகிர்ந்து கொண்டது இல்லை.

ஆனால், அன்று தான் இந்த கம்பெனியில் தான் இன்டென்ஷிப் செய்ய போகிறேன் என்று சொல்லியும் கூட , இதுதான் எங்க கம்பெனி என்று அவளிடம் எந்த பதிலும் வரவில்லையே என்று நினைக்கும் போது ஒருபுறம் அதிர்ச்சியாக இருந்தது என்றால் , மறுபுறமோ வருத்தமாக இருந்தது.

ஆராவை முந்திக்கொண்டு குழந்தைவேலு "ஆமா சார்" என்று சொல்ல..

"ஓகே பர்மிஷன் தரேன், உன் பொண்ணு இங்கையே பண்ணட்டும், காலையில நேரமா வரணும்,ஈவினிங் வேலை முடிச்சிட்டு தான் கிளம்பணும் சரியா?" என்றார்.

"சரி சார்" என்றாள்.

அதன்பின் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அன்றைய நாளின் அதிர்ச்சி இத்தோடு முடியவில்லை என்று ஆராவிற்கு தெரியவில்லை..

வேலு எதுவும் பேசாமல் வண்டிய ஓட்டவும், விதுர்ணா பற்றிய நினைவுகளுடன் வீடு வந்து சேர்ந்தாள் ஆரா.

வீட்டிற்கு வந்ததும் கண்கள் வராண்டாவில் நிற்கும் பரணி, சாய் வண்டியின் மீது செல்ல சசியின் வண்டி இன்னும் வராததை கவனித்த ஆரா, "இன்னிக்கு தான் அம்மா அண்ணா ஆபிஸ் போலைனு சொன்னாங்களே, வண்டிக்கு என்னாச்சினு அண்ணாகிட்டையே கேப்போம்" என்று வேகமாக சசியின் அறைக்குள் புகுந்து விட்டாள்...

அந்த வீட்டில் மொத்தம் நான்கு அறைகள், கீழே இருந்த இரண்டு அறையில் ஒன்றில் குழந்தை வேலுவும், திலகவதியும் தங்கிருக்க, மற்றொரு அறையில் சசி தங்கிருந்தான்.

மேலிருந்த இரண்டு அறையில், ஒன்றில் பரணியும், சாயும் தங்கி இருக்க, மற்றொன்றில் நம் நாயகி தங்கிருந்தாள்.

வேகமாக சசியின் அறைக்கு சென்ற ஆரா.. அங்கு சசி உடலில் கட்டுக்களுடன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் ஐந்து நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.

பின் சுயநினைவுக்கு வந்தவள், சசியின் அருகில் சென்று அவனது காயத்தை வருடிக் கொடுத்தாள்.. அவள் கண்கள் கலங்கி இருந்ததும்,

கட்டின் நிறத்தைப் பார்த்தால் இப்போது போட்டது போல் தெரியவில்லை.. 'அப்போ நைட் தான் அடிபட்டிருக்கணும், எல்லோரும் சேர்ந்து என்கிட்ட இருந்து மறைச்சிட்டாங்க' என்று நினைத்தவுடன் வந்த கண்ணீர் தான் அது.

"திலகா, அம்மு உள்ளே வந்ததே எங்க காணோம், ரூம்க்கு போய்டுச்சா?" என்று கேட்டப்படி வந்த வேலு..ஆரா சசியின் ரூமில் இருந்து எங்கையோ வெறித்துப் பார்த்தப்படி வரவும்.. மகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று புரிந்து போனது அந்த பாச தந்தைக்கு..

கணவனின் சத்தம் கேட்டு வெளியே வந்த திலகா, மகள் எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்து, "என்ன அம்மு எக்ஸாம் எப்படி நல்லா எழுதுனியா?" என்று அவள் தோள் மீது கை வைத்தார்.

அவர் கையை எடுத்துவிட்ட ஆரா.. "அண்ணாவுக்கு அடிபட்டுருக்கு, இது எப்ப நடந்தது?" என்றாள்.

'எப்படி தெரிந்தது?' என்று திலகா வேலுவைப் பார்க்க.. அவர் உதட்டைப் பிதுக்கி, "எனக்கு தெரியாது" என்று உதட்டை அசைத்தார்.

"உங்ககிட்ட தான் கேட்டேன், சொல்லுங்க" என்றவளின் குரலில் சத்தம் இல்லை ஆனால் அழுத்தம் இருந்தது.

"நேத்து நைட் வரும் போது வண்டிக்கு குறுக்க நாய் வந்துடுச்சா , அதுல கீழே விழுந்து அடிப்பட்டுடுச்சினு அண்ணா சொன்னான்" என்றார் திலகா

"ஓ, வீட்டுல எல்லோருக்கும் இது தெரியுமா?"

"ம்ம்"

"அப்போ எனக்கு மட்டும் தான் சொல்லல" என்றவள் , அவர்களிடம் மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

"என்னங்க அவ எதுமே சொல்லாம போறா..?"

"ம்ம் கோவம் இருக்கும்ல, விடு " என்றவர் சோர்ந்து போய் சோபாவில் அமர்ந்தார்.

மகளின் மனம் தெரிந்த தந்தை தான், அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் கூட அடுத்த நொடியில் சமாதனம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் ஆராவோ ஆழ்கடலை போல் அமைதியாக இருக்கவும், இது புயலுக்கு முன் வரும் அமைதி என்று வேலுவிற்கு புரிந்தது..

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு மனமோ, இது வண்டியில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட அடி போல் தெரியவில்லை, என்று உறுதியாக சொல்லிக்கொண்டே இருந்தது.

அதுவும் இல்லாமல் சசியுடன் கூட வந்த நபரை ஏற்கனவே சக்தியுடன் பார்த்திருக்கிறார் என்று யோசிக்க... "சசி வேலையில ஏதாவது தப்பு பண்ணிருப்பான" என்று இடியாப்பம் போன்ற சிக்கலான பிரச்சனையில் நூலின் நுனியை கண்டுபிடித்து விட்டார்.

தனது அறைக்கு சென்ற ஆரா, இரவு சாப்பிடுவதற்கு கூட கீழே வரவில்லை.

அவளால் இந்த ஏமாற்றங்களை தாங்கி கொள்ள முடியவில்லை. இன்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை எதிர்க்கொண்டவளின் மனம் சோர்ந்திருக்க, திலகா சாப்பிட அழைத்தும், "பசிக்கவில்லை" என்று சொல்லிவிட்டாள்..

இதனால் வரும் நாட்கள் அனைவருக்கும் சந்தோசமாக இருக்குமா என்று கேட்டால் சந்தேகமே..

அந்த பெரிய வீட்டின் முன் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் கார் நின்றது.

வீடு பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும், வீட்டின் முன்னால் நடைபாதை அமைந்திருக்க, நடைபாதையின் இருபுறமும் மரம், செடி, கொடி என்று அழகான தோட்டம் அமைக்கப்பட்டிருந்து.. தோட்டத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சலும், அதை பெரியவர்கள் வேடிக்கைப் பார்க்க கல் பெஞ்சும் போடப்பட்டிருந்தது.

வீட்டைப் போலவே, வீட்டில் இருப்பவர்களின் மனமும் பெரிதாக தான் இருந்தது.

சாப்பிடுவதற்காக, அந்த வீட்டில் இருந்த அனைவரும் டைனிங் ஹாலில் கூடியிருந்தனர்,

"விது இன்னைக்கு உன்னோட பிரண்ட் ஆரா நம்ப கம்பெனிக்கு வந்துருந்தது" என்று அன்பரசு சொல்லவும்.

"அவ உங்களைய பார்த்துட்டாளாப்பா?" என்றாள் விதுர்ணா அதிர்ச்சியாக..

"இது என்ன கேள்வி?, கம்பெனி நம்மளுது , இன்டென்ஷிப் பண்ண கேக்க வரவிங்க என்னைய பார்க்காம எப்படி போவாங்க " என்றார்.

"அவளுக்கு என்னைய பத்தின எந்த விசயமும் தெரியாதுப்பா" என்றாள் கவலையாக...

இனி ஆராவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்றுகூட விதுவால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஆராவை தெரிந்துகொண்ட வரைக்கும் ஒன்று வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் அதை காலத்துக்கு திரும்பி பார்க்க மாட்டாள்.

"அதனால என்ன விது?, அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டா போகுது" என்று முகிலன் சொல்ல..

"இல்ல, இல்ல, நான் அந்த அர்த்தத்துல சொல்லல,நம்ப காலேஜ்னு தெரிஞ்சா சகஜமா பழக மாட்டானு தான் நான் எதுவும் சொல்லாம இருந்தேன், ஆனா இப்போ அவளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும், நானா அவகிட்ட சொல்றது வேற, அவளா தெரிஞ்சிக்கறது வேற, அவளா தெரிஞ்சிக்கிட்டதால நான் மறைச்சிட்டேன்னு தானே நினைப்பா, அப்போ சொல்லாதது என் தப்பு தானே"என்றாள் கவலையாக..

"அந்த பொண்ணு உன்னோட பர்த்டே பார்ட்டிக்கு வந்துருந்ததே, அப்போ எதுவும் தெரியாமலா வந்தது" என்றார் பார்கவி.

"ஆமா அம்மா.. நான் பர்த்டே பார்ட்டிக்கு வானு சொன்னேன், அவளும் வந்தா அவ்வளவு தான், மத்தபடி எதுவும் அவளுக்கு தெரியாது..? நானும் சொல்லல" என்றாள்.

"பிரண்ட்னு சொல்ற.. இப்படிதான் பிரண்ட்ஸ்குள்ள எதுவும் சொல்லிக்காம இருப்பிங்களா?" என்றான் சக்தி.

அவன் குரலில் எதுவோ இருந்தது.. அதை அங்கிருந்த விதுவின் பாட்டி கண்டு கொண்டார்..

"அது, அவளும் அவங்க பேமிலி பத்தி சொல்ல, அதனால நானும் சொல்லல , இரண்டு நாளைக்கு முன்னாடி தான், அவளோட அப்பாவும், அண்ணாவும் நம்ப கம்பெனியில வேலை செய்யறாங்க அவங்ககிட்ட தான் இன்டென்ஷிப் பண்ண போறேன்னு சொன்னா.. அப்போ என்னைய பத்தி தெரிய வாய்ப்பில்லைனு நானும் விட்டுட்டேன்" என்றாள்.

"அவங்க அப்பாவும், அண்ணாவும் நம்ப கம்பெனி வேலை செய்யறாங்களா" என்றவன் "எந்த பிரான்ச்?" என்றான் கேள்வியாக.

"சக்தி, பைனான்ஸ் கம்பெனி மேனேஜர் குழந்தைவேலு இருக்கார்ல"

"ம்ம் "

"அவர் தான் அந்த பொண்ணோடா அப்பா"

"அப்போ டைல்ஸ் கம்பெனி மேனேஜர் தான் அண்ணனா?"

"ம்ம் ஆமா அண்ணா, அப்படிதான் ஆரா சொன்னா.."

"ம்" என்றவன், "சரி அந்த பொண்ணை டைல்ஸ் கம்பெனியிலையே பண்ண சொல்லுங்க.. அவங்க அண்ணா அங்கதானே இருக்கான்"

"சசிக்கு சின்ன ஆக்சிடென்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு லீவ் சொல்லிருக்கார்.." என்ற முகிலன், "எப்போ விது இன்டென்ஷிப் பண்ணனும்..?"என்றான்.

"இன்னையோட மாடல் முடிஞ்சிது அண்ணா.. அடுத்த வாரத்துல இருந்து பண்ணனும்.."

"அப்போ நீ எங்க பண்ண போறே?"என்றான் முகிலன்.

"நான் அப்பாகிட்ட ஆல்ரெடி சொல்லி வெச்சிட்டேன்" என்றவள்.. "இனி ஆரா என்கிட்ட பேசுவாளானு தெரியல.." என்றாள் கவலையாக.

"அந்த பொண்ணு இது உங்க கம்பெனியா அங்கிள்னு கேட்டுது, நான்கூட ஆமா ஏன் விது சொல்லலலையானு கேட்டேன்,? அப்போக்கூட, சொல்லிருப்பா நான்தான் மறந்து இருப்பேன்னு உன்னைய விட்டு குடுக்காம தான் பேசுச்சி, அதனாலே நீ பீல் பண்ணாத" என்ற அன்பரசும்

"பேசாம எங்க போயிரும் அதுலாம் பேசும்" என்று கிருத்திகாவும் சொன்னார்கள்

ஆனாலும் விதுவின் மனம் சமாதானம் ஆகவில்லை, அவளின் முகம் வாடியிருக்க, சக்தியின் முகமோ என்றும் போல இறுகி இருந்தது...
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top