திரைப்பட விமர்சனம் "கொரோனா" (சிலோன் வேர்சன்)

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
திரைப்பட விமர்சனம் -
"#கொரோனா"
(சிலோன் வேர்சன்) "
- அழகான திரைக்கதை -

இந்த திரைப்படத்தின் சிறப்பே, இந்த திரைப்படம் சீனாவில் வெளியாகிய பின்னர், பெரு வெற்றியால், உலகின் எல்லா நாடுகளிலும் அந்தந்த மொழிகளிலும் எடுக்கப்பட்டதுதான். நாம் பார்ப்பது கொரோனா சிலோன் வேர்சன்.

கதை இதுதான்
ஒரு சீனப்பெண்மணியை முத்தமிடுவதில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படுகின்றது. மக்கள் எல்லோரும் தேர்தல் பரபரப்பில் நீயா நானா என பரபரப்பாக இருக்கிறார்கள். அப்போது நாட்டின் பாடசாலை ஆசிரியர்கள் எல்லோரும் பணிப்புறக்கணிப்பு என அறிவிக்கின்றார்கள். அது மிகப்பெரும் தலையிடியை அரசாங்கத்துக்கு ஏட்படுத்துகின்றது. அப்போது தான் நாட்டில் ஒருவருக்கு வைரஸ் ஒன்று தாக்குகின்றது. இதுதான் சாட்டென்று மறுநாள் பாடசாலைகள் ஏப்ரல் 20வரை பூட்டப்படுகின்றன. போராட்டம் காணாமல் போகின்றது.

பின்னர், அடுத்தடுத்து மேலும் சிலரை வைரஸ் தாக்குகின்றது. நாடு முழுதும் வைரசால் பரபரப்பாகிறது. டிவி காரரும் கருப்பு கோர்ட் போட்டு டிஸ்கஷன் தொடங்கி விட்டார்கள்.. ஆனால் தேர்தலை எப்படியாவது நடத்தி தன் கனவை அடைய வேண்டும் என ஹீரோ நினைக்க, தேர்தலுக்கு தடை வருகிறது.

ஹீரோ களத்தில் இறங்குகின்றார். அதில் இருந்துதான் படம் சூடு பிடிக்கிறது.

நாடு முழுவதும் முடங்குகிறது. மக்கள் வேலையில்லை.
பசி வேறு. கையில் பணம் இல்லை. வைரஸ் மேலும் பரவி கொண்டு போகிறது. தொடர் ஊரடங்கால் மக்கள் வேறு முனுமுணுப்பு, இப்போது ஹீரோ எதையாவது செய்வார் என்று எதிர்பார்ப்புக்கள். அப்போது ஹீரோ டிவியில் தோன்றி பருப்பு, டின் மீனை ப்ரோமோஷன் செய்கின்றார். நாடு முழுதும் கரகோஷம். மறுநாள் மக்கள் கடைகளுக்கு போனால் அதிர்ச்சி..
ஆம்.. பருப்பு, டின் மீனை அங்கு காணவில்லை
(Oh my god).

இதற்கு இடையில் நாட்டின் வடபகுதி காட்சி திரையில் வருகின்றது...
அம்பிகாவா அமலாவா என்ற விவாதம் அங்கு இன்னும் முடியவில்லை... நாங்களே பெரிய வைரஸ் எங்களுக்கு எது வைரஸ் என்பது போல வட மாநில மக்கள் சுற்றித் திரிகின்றார்கள்.
ஆனால்..
திடீர் என "சுவிஸ் சொக்கலேட்" சாப்பிட்ட சிலர் வாந்தி எடுக்க அங்கும் வைரஸ்..
அட கடவுளே..
அவர்களின் முழு கொழுப்பும் அங்கு வீட்டுக்குள் அடங்கி போகிறது..

இப்போது மீண்டும் பசி, வீட்டுக்குள் முடக்கம் என்று நாடு முழுதும் புலம்பல் வர.. ஹீரோவுக்கு பெரும் தலையிடி. அப்போதுதான் ஹீரோவுக்கு அவர் நண்பன் 'சமுர்த்தி' உதவி செய்கிறான். மக்கள் எல்லோருக்கும் 10,000 ரூபாய் கொடுப்பதாக ஹீரோ அறிவிக்கின்றார். மக்கள் கைதட்டி, காசை எண்ணி கொண்டிருக்கும் சமயம் பார்த்து, ஹீரோ கச்சிதமாக தனது பழைய ரௌடி ஒருவனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருகின்றார்.

இதே வேலை, பசியைப் போக்க நாட்டின் இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றார்கள். படம் முழுதும் அவர்களின் பணி தொடந்து கொண்டே இருக்கும். (இவர்களை பார்த்த பலரும் தாங்களும் ஸ்கோர் செய்யும் காட்சிகளும் வரும் ). மறுபுறம் ஹீரோ தானும் ஒரு உண்டியலைத் தொடங்குகின்றார். பல கறுப்பு முதலைகள் உண்டியலில் காசுபோட்டுவிட்டு போட்டோவும் எடுத்து கொண்டன. பின்னர் உதவும் என..

ஆனால் தொடர் ஊரடங்கால், மக்கள் சலிப்படைகின்றார்கள். அப்போது ஹீரோ மக்களை இடையிடையே வெளியே விட்டு விட்டு உள்ளே எடுக்கின்றார்.

படத்தில் வில்லன்கள் எல்லாம் அவ்வப்போது வந்து பஞ்சாயத்தை 'கூட்டு கூட்டு' எண்டு சவுண்ட் விட்டாலும், இந்த கதையில் நிஜ வில்லன் என்னவோ 'பசி' தான்.

அந்த பசி வில்லனை சமாளிக்கும் ஹீரோவின் யுக்தி அபாரம். அதற்காகவே மக்களை சமாளிக்க வீடுகளுக்கே ஹீரோ பொருட்களை அனுப்பி, வாங்கி சாப்பிடச் சொல்லுகின்றார்.
(ஆனால் காசுக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு படத்தில் கடைசி மட்டும் விடை இல்லை). மேலும் வில்லனை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் அட்டாக் கைதுகளும் இடைக்கிடை வந்துபோகும்... நடிகர் ரஞ்சன் கௌரவ வேடத்தில் ஒரு கட்டத்துக்கு வந்து போகின்றார். சிறைக்கு போவதாக அவருக்கு ஒரு காட்சி. டாக்டர்கள் அவ்வப்போது 8 மணி செய்தியில் வந்து
"Stay Home , Stay Home"
"வெளிய வராதீங்க, அப்புறம் செத்துருவிங்க"
என்டு வெருட்டுவது (மக்களுக்கு சலிப்பு வந்தாலும் வேறுவழியில்லை அவர்களுக்கு). மேலும் மக்கள் பசியை மறந்து, தெற்கில் 'பாலித ரெட்டி'யை பற்றியும், வடக்கில் 'சைக்கிளை' கழுவி பூட்ட வேண்டுமா',?
"சுவிஸ் சாக்லேட்" எப்படி யாழ்ப்பாணம் வந்தது?... அதை தடை செய்ய வேண்டும்...என்றும் டிஸ்கஸ் பண்ண வைத்து நாட்கள் போவதும்..
எல்லோருக்கும் கிடைக்கும் என்டு சொல்லிக்கொண்டே கடைசி மட்டும் அதை கொடுக்காமல் கொண்டு திரியும் யோகிபாபுவின் 5000/=மும் ...என படம் முழுதும் ஆங்காங்கே.. வில்லனை மறக்க செய்யும் அருமையான காட்சிகள்.. (5000/= யாருக்கு கிடைக்கும்? கிடைக்காது? என்று சொல்லும் அந்த சூத்திரம் தான் படம் பாத்த பலருக்கு கடைசி வரைக்கும் விளங்கவே இல்லை?)

மேலும், பசி வரும் போதெல்லாம் மக்கள் 'Dialog'ஐ ரவுண்டு கட்டி அடிப்பது..(இன்னும் நல்லா குடு எண்டு தியேட்ட்டரில் பலத்த சத்தம் வேற.. என்ன அடி)

'நாங்க 3 மாசத்துக்கு லோன் கட்ட தேவையில்ல தெரியுமா' எண்டு நகை அடகு வைக்க வங்கியில லைன்ல நிண்டு கொண்டே ஒருவர் அப்பாவியாக சிரிப்பது... எண்டு மனதை தொடும் காட்சிகளுக்கு படத்தில் குறைவே இல்லை.

அதே போல... யார் ஸ்கோரை முதலில் சொல்வது எண்டு கன பேர் அடிபட்டுக் கொள்ளும் போதும் ....

3 மாசத்துக்கு தேவையான சாமானை வாங்கி வீட்டுல வைச்சுட்டு... நாளாந்தம் கிடைக்குற காசுக்கு சாமானை வாங்க முண்டியடிக்கும் கூட்டத்தை பார்த்து "இதுகள் எப்ப தான் திருந்த போகுதுகளோ'.. 'எளிய சனம்' எண்டு மாச சம்பளக்காரரும், வெளிநாட்டு சம்பளக்காரரும் திட்டும்போதும் தியேட்டரில் ஒரு கோபம் தெளிவாகத் தெரிகிறது...
அந்த காட்சி அப்படியே மனதை தொடும்.. உங்களுக்கு.

இசை என்றால்..''எழுக நம் நாடு'' தான் படத்தில் தீம் மியூசிக். அடிக்கடி வரும் பிரேக்கிங் நியூஸ் சவுண்ட் தான் கொஞ்சம் காதை பிளக்கும்.. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்..

படத்தில் மிகப்பெரிய நகைச்சுவை என்றால் நான் சொல்லி தான் ஹீரோ 10லட்சம் கொடுத்தார் என்டு சொல்லி அசிங்கப்படும் காட்சி தான். இந்த காட்சிகளில் நீங்கள் சிரித்தே செத்து விடுவீர்கள்.

இப்படி சுவாரஸ்யமாக கதை நகர்ந்து, வைரஸை எங்கள் ஹீரோ சிம்பிளா முறியடிப்பார் என்று மக்கள் புளுகி கொண்டு இருக்க.. ஹீரோவோ "பாடசாலை".. "கம்பஸ்" எல்லாம் ஆரம்பம், என அறிவிக்கும்போது தான் இறுதிக்காட்சி சூடு
பிடிக்கத் தொடங்கும்... ஹீரோ மீண்டும் தன் தேர்தல் கனவை அறிவிப்பார்..

தேர்தல் நடந்ததா?.. வைரஸுக்கு என்ன ஆச்சு?..
மக்கள் காப்பாற்றப்படடார்களா?..
ஹீரோவின் கனவு நனவாகியதா?
என்பது தான்..
கதையில் "டுவிஸ்ட்"...
அட்டகாசமான பக்கா கிளைமாக்ஸ்...

கிளைமாக்ஸ் இல் ஹீரோ வெல்லும் போது....
நம்பியார், MGR ஆனது போல நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள் பாருங்கள்..

அதுதான் திரைக்கதையின் வெற்றி..
 

JRJR

Well-Known Member
திரைப்‌படத்தை பார்த்த உணர்வை தருது உங்கள் விமர்சனம்.
இது என்ன சிறுகதையா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top