தமிழர்களின் ஒற்றுமை

Advertisement

Rajesh Lingadurai

Active Member
உலக வரலாற்றில், யூதர்களைப் போல உலகெங்கும் சுற்றித் திரிந்த ஒரு இனமென்று சுட்டிக்காட்ட வேண்டுமானால், அது நிச்சயம் தமிழினமாகத்தான் இருக்கும். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒரு யூதன் தன்னை யூதனாகவே உணர்கிறான். ஒரு மலையாளி தன்னை மலையாளியாகவே உணர்கிறான். தமிழனுக்கு மட்டும் வந்த சாபம், மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், தேசத்தால் இந்தியன் என்று ஆயிரம் குழப்பம் நிறைந்த உள்ளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். போதாதென்று சாதிமத வேற்றுமைகள் வேறு தமிழர்களை மேலும் பிரித்தாள்கிறது. இந்த பேதங்களைத் தாண்டி தமிழர்கள் ஒன்றிணைய முடியுமா? அது சாத்தியமா? இவற்றை அலசும் சிறு கட்டுரை இது. கட்டுரையைப் படித்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-7j
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான கட்டுரை,
ராஜேஷ் லிங்கதுரை சகோதரரே

உயிர் பயம் வரும்பொழுது ஒருங்கிணைந்து
ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்றும் தமிழன்
(என்னையும் சேர்த்துத்தான், சகோ)
உயிருக்கு வந்த ஆபத்து விலகியதும்,
ஏன் ''பழைய குருடி கதவைத் திறடி''-ங்கிற
கதைக்கு திரும்புகிறான்?
இந்தக் கேள்வியை ஒவ்வொரு தமிழனும்
மனதில் நிறுத்தி விடை கண்டறிந்தால்,
எங்கும் எப்பொழுதும் தமிழன்
ஜெயிப்பான், சகோதரரே
ஆனால் அதற்கு மற்றவர்கள்
விட மாட்டார்களேப்பா?

கூனிச்சம்பட்டு கிராமத்தில் எம்டன்
கப்பல் போனவுடன் இன்றோ நாளையோ
சாகப்போகும் அந்த கிழவி எத்தனை
பேரை சாகடித்து விட்டாள்?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?

சாதி என்னய்யா, சாதி?
எல்லோருக்கும் ரத்தம் ஒரே சிவப்பு
நிறம்தான்
எல்லோருக்கும் இரண்டு கை,
கால்கள்தான்
வேறு மாதிரி இருந்தால் அவன்
சாதாரண மனிதனல்லவே?
எல்லோருக்கும் இருப்பது ஒரே
இதயம்தான்
தனக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும்
அதே தசையும் எலும்புகளும்=தான்
இருக்கு-ன்னு ஒரு மனிதன் என்று
புரிந்து கொள்கிறானோ, அன்றுதான்
தமிழர்களுக்குள் ஒற்றுமை ஓங்கி
வளரும், சகோதரரே

அருமையான கட்டுரைக்கும் மற்றும்
ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்னுடைய
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்,
ராஜேஷ் லிங்கதுரை சகோதரரே
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அயல்நாட்டுக்காரனை கூட பாகுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் தமிழனால் சொந்த நாட்டுக்காரனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
சிந்திக்க வேண்டிய விஷயம் சார்..
எல்லாரும் நம்ம சகோதர சகோதரிகள் என்கிற எண்ணம் மட்டும் அடிக்கடி காணாமல் போயிருது.
பொது எதிரி வரும்போது தான் மக்களிடையே ஒற்றுமையும் வருது..
அது என்னமோ உண்மை தான்.
அருமையான கட்டுரை சார்
 

Rajesh Lingadurai

Active Member
Arumai sago, pothu yethiri thedasolluvathu kastam dhan ungal sinthanai kojam vithiyasamgave erukirathu, erunthalum thediparkalam....

பொது எதிரி என்பது சற்று மாறுபட்ட கோணம்தான். ஆனால் யோசித்துப்பார்த்தால், பாகிஸ்தான் என்ற பொது எதிரியைக் காட்டித்தான் இந்தியாவின் ஒற்றுமை கட்டமைக்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவைச் சுட்டுக்காட்டிதான் பாகிஸ்தான் அரசியலே நடக்கிறது. அதற்காக நாமும் இன்னொரு இனத்தை எதிரியாகக் காட்டவேண்டுமென்றத் தேவையில்லை. பொது எதிரி என்பது வறுமை, காவேரிப் பிரச்னை, நம் இனத்தை அழிக்க நினைக்கிற நாடு, இப்படி ஏதோ ஒன்றாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைவதற்குத் தேவை ஒரு மையப்புள்ளி, அவ்வளவே.
 

Rajesh Lingadurai

Active Member
அயல்நாட்டுக்காரனை கூட பாகுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் தமிழனால் சொந்த நாட்டுக்காரனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
சிந்திக்க வேண்டிய விஷயம் சார்..
எல்லாரும் நம்ம சகோதர சகோதரிகள் என்கிற எண்ணம் மட்டும் அடிக்கடி காணாமல் போயிருது.
பொது எதிரி வரும்போது தான் மக்களிடையே ஒற்றுமையும் வருது..
அது என்னமோ உண்மை தான்.
அருமையான கட்டுரை சார்

மிக்க நன்றி.
 

Rajesh Lingadurai

Active Member
:D :p :D
மிகவும் அருமையான கட்டுரை,
ராஜேஷ் லிங்கதுரை சகோதரரே

உயிர் பயம் வரும்பொழுது ஒருங்கிணைந்து
ஒற்றுமையைக் கட்டிக் காப்பாற்றும் தமிழன்
(என்னையும் சேர்த்துத்தான், சகோ)
உயிருக்கு வந்த ஆபத்து விலகியதும்,
ஏன் ''பழைய குருடி கதவைத் திறடி''-ங்கிற
கதைக்கு திரும்புகிறான்?
இந்தக் கேள்வியை ஒவ்வொரு தமிழனும்
மனதில் நிறுத்தி விடை கண்டறிந்தால்,
எங்கும் எப்பொழுதும் தமிழன்
ஜெயிப்பான், சகோதரரே
ஆனால் அதற்கு மற்றவர்கள்
விட மாட்டார்களேப்பா?

கூனிச்சம்பட்டு கிராமத்தில் எம்டன்
கப்பல் போனவுடன் இன்றோ நாளையோ
சாகப்போகும் அந்த கிழவி எத்தனை
பேரை சாகடித்து விட்டாள்?
இவளெல்லாம் என்ன ஜென்மமோ?

சாதி என்னய்யா, சாதி?
எல்லோருக்கும் ரத்தம் ஒரே சிவப்பு
நிறம்தான்
எல்லோருக்கும் இரண்டு கை,
கால்கள்தான்
வேறு மாதிரி இருந்தால் அவன்
சாதாரண மனிதனல்லவே?
எல்லோருக்கும் இருப்பது ஒரே
இதயம்தான்
தனக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும்
அதே தசையும் எலும்புகளும்=தான்
இருக்கு-ன்னு ஒரு மனிதன் என்று
புரிந்து கொள்கிறானோ, அன்றுதான்
தமிழர்களுக்குள் ஒற்றுமை ஓங்கி
வளரும், சகோதரரே

அருமையான கட்டுரைக்கும் மற்றும்
ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்னுடைய
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்,
ராஜேஷ் லிங்கதுரை சகோதரரே

மிக்க நன்றி. நீங்கள் கூறும் பரந்த மனப்பான்மை வந்து விட்டால் நம் தலைமுறை நன்றாக இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top