சின்னஞ்சிறு இரகசியமே பாகம் 1

Vanathi

New Member
வணக்கம் சகாக்களே நான் வானதி. கடந்த இரண்டு வருடமாக எழுதி வருகிறேன். தற்போது இந்த தளத்திலும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. மல்லிகா மேமுக்கு ரொம்ப நன்றி

சின்னஞ்சிறு இரகசியமே நகைச்சுவையான காதல் கதை. மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்டது. நான்கு நெருங்கிய நண்பர்களை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன். அவர்களின் கலாட்டா நிச்சயம் உங்களை இரசிக்க வைக்கும்.

முதல் பாகம் விஜய் நித்யாவின் காதல் பற்றியது. உடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கலாட்டா நிறைந்திருக்கும். படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள். தினமும் ஒரு அத்தியாயம் பதிவிடுகிறேன் நன்றி

சின்னஞ்சிறு இரகசியமே அத்தியாயம் 1

அந்த வீட்டில் மயான அமைதி. ஒரு
அறையில் மட்டும் மெல்லிய
வெளிச்சம். கதவை திறந்து
கொண்டு உள்ளே சென்றால்...

மெத்தையில் நால்வர் சாய்ந்து
அமர்ந்து கொண்டு தீவிரமாக
எதிரே இருந்த பெரிய எல்ஈடி
டிவியை பார்த்துக்
கொண்டிருந்தார்கள். அங்கு டீவியின் வெளிச்சம் மட்டும்தான். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டார்கள்.

என்னடா என்று பார்த்தால்
லைட்ஸ் ஒளட் ( lights out) என்ற
ஆங்கில பேய் படம் தமிழ்
டப்பிங்கில் ஓடிக்கொண்டிருந்தது. நம்ம ஆட்கள்தான் தமிழ் டப்பிங்
என்றாலே பங்கம் பண்ணிவிடுவார்களே.

இப்போதுதான்
ஆரம்பித்திருக்கிறது போல.
அதில் மார்டின் என்ற சிறுவன்
தன் தந்தையிடம் வீடியோ காலில்
பேசிக் கொண்டிருந்தான் " அம்மா இப்போல்லாம் தனியா பேசுறாங்க " மார்டின் ஹஸ்கிவாய்ஸில் சொல்ல, உடனே இங்கே நித்யா " ஹைய்யய்யோ " என்றாள் அதே ஹஸ்கி வாய்ஸில்.

மற்ற மூவரும் பட்டென்று சிரித்து
விட்டார்கள்.

பயங்கரமான பேய் படம்
ஆனால் வச்சு செய்து
கொண்டிருந்தார்கள். அதிலும்
அந்த பேய் டயானா... பாவம் அந்த
ஜீவன். அவளை நார் நாராக
கிழித்து விட்டார்கள். அது போகும்
இடமெல்லாம் தன்னுடைய பெயரை கேபிடல் லெட்டரில் எங்காவது கிறுக்கிவிட்டு வருவது வழக்கம்.

விஜய் கடுப்பாகிவிட்டான். " இதென்னடா இவ... என்னவோ
ஸ்ரீராமஜெயம் மாதிரி எப்ப பாரு
டயானா டயானான்னு கிருக்கிட்டு வரா... "

" வித் அவ உருவ படத்தோட "
தமிழரசி சிரித்தவாறே
சொன்னாள்.

" இதுக்கு என் கையெழுத்தே எவ்வளவோ தேவலாம். " நித்யா.

" கொஞ்சமாவது பொட்ட புள்ள
மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்க
வேண்டாம். ட்ரெஸ் போடுறதில்ல.. முடிய விரிச்சி போட்டுட்டு சுத்துது... இதெல்லா
எங்க உருப்புட போகுது... " டயானாவை கரித்துக்கொட்டினான் சரவணன்.

" உனக்கு டயானா ட்ரெஸ்போடாதது பிரச்சனையா.. இல்ல அத இருட்டுலேயே காட்றது
பிரச்சனையா" தமிழ் கேட்கவும் " கடங்காரி கண்டுபுடிச்சிட்டாளே "
என்று திருட்டு முழி முழித்தான்
சரவணன்.

ஹீரோயினின் பாய்
ஃப்ரெண்டை பார்த்து நித்யாவும்
தமிழும் ஜொல்லு ஊற்றினார்கள்.

" அவன் செமயா இருக்கான்டி. " நித்யா.

" இந்த மாதிரி எனக்கு ஒருத்தன்
கெடைச்சா எப்படி இருக்கும்.
நம்ம தலையில என்ன எழுதி
இருக்கோ.." தமிழரசி.

ஒரு காட்சியில் ஹீரோயினின்
அம்மாவின் உடையை பிடித்து
அறைக்குள் இழுத்து கதவை
சாற்றும் டயானா. விஜய்
" அவ்ளோ வெறி மாப்ளைக்கு "
என்றதும் சிரித்தார்கள்.

இவர்கள் படு தீவிரமாக
பார்த்துக் கொண்டிருக்க
திடீரென்று கரென்ட்
போய்விட்டது.

" அடச்சே." என்று தமிழ் எழவும்
சரவணன் நிறுத்தினான்.

" எதுக்குடி எழுற? "

" டீவி ஆஃப் பண்றதுக்கு "

" அதுக்கு எதுக்கு எழுந்து போற?
அதான் ரிமோட் இருக்கே. இந்தா "
என்று அவன் ரிமோட்டை எடுத்து
கொடுக்க, மற்ற மூவருக்கும்
எங்காவது போய் முட்டிக்
கொள்ளலாம் போல இருந்தது.

விஜய் அவன் தலையில் தட்டி "எரும எரும... கரென்டே
போயிடுச்சாம்... இவரு டீவிய
ரிமோட்ல ஆஃப் பண்ணுவாராம்..
என்னத்தடா எஞ்சினியரிங்
படிக்கற நீ " என்றான்.

" ஓ ஆமால்ல." சரவணன்.

"பொசகெட்ட பய " என்ற
தமிழ் சரவணனையே எழுந்து சென்று டீவியை
அணைக்கச் சொன்னாள்.

விஜய்... எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு பயில்கிறான். அப்பா வங்கி மேலாளர். அம்மா மருத்துவர். வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளை.

நித்யா... ஜூவல்லரி டெஸைனிங் படிக்கிறாள். பெற்றோர் இல்லை. அண்ணன் அண்ணியிடம் வளர்கிறாள். அவர்கள் இருவரும் ஒரு சிறு அட்வெர்டைஸிங் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

சரவணன்... பொறியியல் இறுதியாண்டு பயில்கிறான். பெற்றோர் இருவருமே அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள். ஒரு அண்ணன் உண்டு. லண்டனில் படித்துவிட்டு அங்கேயே பணிபுரிகிறான்.

தமிழரசி... சட்டம் பயில்கிறாள். அப்பா பிரபலமான வழக்கறிஞர். அம்மா ஒரு தனியார் பள்ளியின் முதல்வர். ஒரு உடன் பிறந்த தம்பி நகுலன். தமிழின் பெற்றோருக்கு இரு தத்துப்பிள்ளைகளும் உண்டு. சுபா மற்றும் அவளின் உடன் பிறந்த தம்பி சுனில்.

சரவணனுக்கு சுபா மீது விருப்பம். ஆனால் அவள் இப்போதுதான் பத்தாம் வகுப்பு படிப்பதால் விலகியிருக்கிறான். இந்த விஷயம் தமிழுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் அவளாகக் கண்டுபிடித்தது. சரவணன் யாரிடமும் சொல்லவில்லை. தமிழுக்கு தெரியும் என்ற விஷயமும் அவனுக்கு தெரியாது.

நால்வருமே சிறு வயது முதலே மிக நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக ஒரே பள்ளியில் படித்து கல்லூரியில் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.

ஆனால் நால்வரும் தினமும் சந்தித்துக் கொள்வார்கள். வார இறுதி நாட்களில் இப்படி யார் வீட்டிலாவது கூடி அரட்டையடிப்பது, விளையாடுவது, படம் பார்ப்பதெல்லாம் வழக்கம்.

சரவணன் டீவியை அணைக்க நெருங்கிய நேரம் கரென்ட் வந்துவிட்டது. திடீரென்று டயானாவின் முகம் திகிலூட்டும் பின்னனி இசையுடன் திரையில் நெருக்கத்தில் காட்டப்பட, அந்த கோரத்தைப் பார்த்து " ஆத்தா... " என்று அலறி அவன் மயங்கியே விழுந்துவிட்டான்.

சரவணனுக்கு கொஞ்சம் பேய் பயம் உண்டு. இப்போதும்கூட நண்பர்கள் உடனிருப்பதால்தான் இந்தப் படத்தையே பார்க்கிறான்.

அவன் மயங்கி விழுந்ததும் " ஹப்பாடா சனியன் ஒழிஞ்சது " என்று நித்யா தமிழுக்கு ஹைஃபை கொடுத்தாள்.

" ஓஹோ... இதான் அழகுல மயங்குறதா... " தமிழ்.

" அடியே கூருகெட்ட டயானா... அவன் உன்ன சைட் அடிச்சதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட " என்று நண்பனை எழுப்பச் சென்றான் விஜய்.

" போதும் எந்திரி நாயே " என்று சரவணனின் காலில் எட்டி உதைக்க, அவன் அசையவில்லை.

" அடிங்... " என்று சற்றே மேலே உதைக்கப் பார்க்க,

படுத்திருந்தவன் " ஐய்யோ டேய் எனக்கு புள்ள பொறக்க முடியாம பண்ணிடாதடா " என்று பதறி எழுந்தான். " நாயே... நீ டாக்டருன்னு எனக்கு ஃபேமிலி ப்ளானிங் பண்ணிதான் நிரூபிக்கனுமா? " என பல்லைக்கடித்தான்.

" பின்ன... அஞ்சு ரூபாய்க்கு நடிக்க சொன்னா அஞ்சு ரூபாய்க்கு மட்டுந்தான் நடிக்கனும். " விஜய்.

தமிழும் நித்யாவும் மெத்தையில் உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

" அப்பவே சொன்னேன்... ரிமோட்ல ஆஃப் பண்ணித் தொலடின்னு " என்று சலித்தவாறே எழுந்தான் அந்த அறிவுக் களஞ்சியம்.

பின்னர் மீதமிருந்த படத்தை பார்த்து முடித்துவிட்டு நால்வரும் விஜய்யின் அறையை விட்டு வெளியே வர, அனைவருக்கும் இரவு உணவை தயார் செய்து வைத்திருந்தார் விஜய்யின் அம்மா கங்காதேவி. அவன் தந்தை இளங்கோவனும் சாப்பிட வந்தார்.

அனைவரும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தார்கள். தமிழ் அமரும்போது சரவணனை விட்டு சற்று தள்ளி நித்யாவை நெருக்கிக் கொண்டு அமர்ந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஆள் அமரும் இடைவெளி.

" தள்ளி உட்காரேன்டி. அதான் அவ்ளோ இடம் இருக்கே. " நித்யா.
" ச்சே ச்சே அங்க டயானாதான் உட்காரனும். இல்லைன்னா புள்ள ஏங்கி போயிடுவான். " என்று தமிழ் சரவணனின் தாடையைப் பிடித்து கொஞ்சுவது போல பாவனை செய்ய, அவனுக்கு அல்லு விட்டது.

" மச்சான் இங்க வாடா "என்று அவன் விஜய்யை பிடித்து இழுத்து அந்த இடத்தில் அமர வைத்தான்.
தமிழ் உடனே " என்னடா விஜி பேய் மடியில உட்கார்ந்திருக்க... " என்றிட, அவனுக்கே அந்த படம் பார்த்த எஃபெக்டும் இவளின் பில்டப்பும் பயத்தை கிளப்பியது.

" தகப்பா என்ன காப்பாத்து " என்று தன் தந்தையின் அருகில் ஓடிச் சென்று அமர்ந்து கொண்டான் விஜய்.

தமிழ் நித்யாவுடன் சேர்ந்து விஜய்யின் பெற்றோரும் அடக்க முடியாமல் சிரித்தார்கள்.

" நீயாவது இங்க வாடி " சரவணன் நித்யாவை அழைத்தான்.

" பேய் பக்கத்துல எல்லாம் மனுச உட்காருவானா... " என்றுவிட்டு அவள் தன் தலையாய கடமையை செய்ய ஆரம்பித்தாள். நன்றாக மொக்கினாள்.

ஆக மொத்தம் சரவணன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் உணவை உண்டு முடித்தான்.

தமிழ் இன்னும் அவனுடன் விளையாட எண்ணி தன் மொபைலில் திகிலாக ஒரு பெண் உச்சஸ்தாதியில் கத்தும் ஆடியோவை சரவணனின் காதருகே சென்று ப்ளே செய்தாள்.
திடீரென்று கேட்ட அலறலில் பயந்து போய் " ஆ.... " என்று இவன் அலறி, அவனுக்கு சற்று அருகில் அமர்ந்து ரசத்தை குடிக்கப் போன விஜய்யின் தட்டை தெரியாமல் தட்டிவிட, அந்த தட்டில் இருந்த ரசம் முழுவதும் விஜய் முகத்தை கழுவியது.

" அட பேய்க்கு பொறந்தவனே... உன் சாவு என் கையிலதான்டி. இரு சோத்துல வெசத்த வச்சிடுறேன். " என்று கத்திவிட்டு எரிந்த கண்களை துடைக்கச் சென்றான். நித்யா புரையேரும் அளவுக்கு சிரித்தாள்.

இப்படி இரணகளமாக இரவு உணவை முடித்துவிட்டு நித்யாவை விஜய்யும் தமிழை சரவணனும் அவரவர் வீட்டில் விட பைக்கில் சென்றார்கள்.

அன்றிரவு விஜய் நல்ல உறக்கத்தில் இருந்தான். திடீரென ஏதோ அசைவை உணர்ந்தான். மெல்லிய சத்தம். கண்களை திறந்து பார்க்க எதிரே டயானா இவனை மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தாள்.

விஜய் ஆனந்தமாக " அடி கள்ளி... மாமன பார்க்க நடு ராத்திரி வந்திருக்க... இன்னைக்கு வேட்டைதான். " என்று எழுந்து அவளருகே சென்றான்.

டயானா இவன் வேகத்தைக் கண்டு மிரண்டு " ஐய்யய்யோ " என்று கத்திவிட்டு ஓடினாள்.

அப்போதும் அவன் விடவில்லையே. " அட கிருக்கு பயபுள்ள... ஓடாதடி நில்லு " என்று அவளை கதறக் கதற கண்டமாக்குவதற்காகத் துரத்திக் கொண்டு ஓடினான்.

டயானா " வாரான்யா வாரான்யா " என்று ஒரு அறைக்குள் சென்றுவிட, " மூதேவி எங்க ஓடி ஒளியுது பாரு " என்றுவிட்டு அந்த அறைக்குள் புகுந்தான் விஜய்.

சுற்றிலும் தேட அங்கே டயானா இல்லை. பதிலாக நித்யா நின்றிருந்தாள். ஓடிவந்து இவனை கட்டிக் கொள்ள, இவனும் பதிலுக்கு அணைத்துக் கொண்டான். முத்தமிட்டாள். இவனும் முத்தமிட்டான். இருவரும் இதழ் முத்தமிடும் வேளையில் துயில் களைந்துவிட்டது.

கனவு...

நினைத்துப் பார்க்க சிரிப்புதான் வந்தது விஜய்க்கு. ஆனால் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு. ஒருவித பரவசம். நித்யாவை கனவில் நெருங்கியதன் விளைவு.

அவள் என் தோழி. தவறாக எண்ணக்கூடாது என்று நினைத்தாலும் அந்தக் கனவின் தித்திப்பு அந்த நினைப்பை மறக்கச் செய்தது.

முதல்முறையாக நித்யாவை தோழி என்ற வரையறையை மீறிய கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தான்.
 
Prashadi

Member

Welcome akki! Happy to see you . Semma ya iruku. Continue continue
 
Janu Croos

வாழ்த்துக்கள் வானுமா....தொடர்ந்து எழுதுங்க
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement