சித்திரையில் பிறந்த சித்திரமே 3

Advertisement

athu enna headingnu ungalukku theriyanuma guys


  • Total voters
    13

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே-3
லெட்சுமி வளர வளர அவள் செய்யும் சேட்டைகளும் அதிகம்
அவளுக்கு இப்பொழுது ஒரு தம்பியும் உண்டு அவன் பெயர் கமல்
லெட்சுமியின் பெரியப்பா மகள்கள் இருவருடனும் தான் அவளின் பெரும்பாலான நேரங்கள் கழியும்.
அவள் இருக்கும் ஏரியாவில் உள்ள எல்லாருக்கும் லெட்சுமியை பிடிக்கும்
சேட்டை செய்யும் அவளை செல்லம் கொஞ்ச தான் அனைவரும் ஆசை படுவர்.
அதனால் மதிய சாப்பாட்டிற்க்கு அவள் அப்பா வந்தால் அவள் எங்கு இருக்கிறாள் என கண்டுபிடிப்பதே பெரிய வேலை அவருக்கு யாரவது வீட்டுக்கு கூட்டி சென்று விடுவார்கள்.
சேகருக்கோ மகளை கண்டால் தான் மதிய சாப்பாடே
பள்ளியிலும் மேடமிற்க்கு விசிறிகள் அதிகம்
இயல்பிலே வாயாடி ஆதலால்
ஆசிரியர்களின் அவள் பேச்சு போட்டி செல்ல செல்லும் இடம்மெல்லாம் வெற்றி தான்
அதனாலே அவளுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் தோழிகள் கூட்டமும் அதிகம்
அவள் இருக்கும் இடத்தில் அவளை சுற்றி எப்போதுமே தோழிகளின் கூட்டம் தான்
தோழிகளுக்கு ஒன்று என்றால் துடித்து விடும் மனதல்லவா
அன்றும் அப்படித்தான் அவள் வகுப்பு தோழி ஒருத்தி அழுவதை பார்த்து விட்டால்
அவள் அருகே சென்று அமைதியாய் அமர்ந்து தீபுக்குட்டி அங்க பாரென் நம்ம
ஐஸ்வர்யாவ அவளொட முட்ட கண்ண முழிச்சு முழிச்சு இந்த கணக்கு விடை கண்டு பிடிக்க
புக்கையே புரட்டி போடுற பாரு இந்த டைமிங்க்கு நாம ஒரு பாட்டு பாடலாம்
என கூறி
போடி போடி புண்ணாக்கு போடதா தப்பு கணக்கு
அட இருக்கு ஒனக்கு இருக்கு விடையும் தானே இருக்கு
என லெட்சுமி பாட அந்நேரம் ஐஸ்வர்யாவும் நிமிர ஐஸு எல்லா ஆன்சரும் கண்டுபிடிச்சுடியாட என லெட்சுமி கேட்க "இல்ல லெட்சுமா என அவள் பாவமாய் சொல்ல"
பார்த்து கொண்டிருந்த தீபாக்கு தான் சிரிப்பு வந்துவிட்டது.
இவள் எப்படி பட்ட பெண் என்று அவள் பார்த்து கொண்டிருக்கையிலே அவளை
பார்த்து புன்னகைத்த லெட்சுமி சிரிச்சுடியா இப்போ எவ்வளோ அழகா இருக்க நீ தீபு
இவ்ளோ நேரம் அழுதுக்கிட்டு நல்லாவே இல்ல செல்ல குட்டி நீ இப்போ எப்படி இருக்க
தெரியுமா நீ "எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுகை தீர்வு கிடையாது டா செல்லம்
நீ அழுதுக்கிட்டே ஒரு விஷயத்துக்கு தீர்வு கண்டுபிடிச்சா அது கண்டிப்பா தப்பா தான் டா இருக்கும்.அதுக்கு நீ உனக்கு பிடிச்ச பாட்டை ஒரு அரை மணி நேரம் கேட்டுட்டு யோசி
கரெக்டா இருக்கும் அப்போ கூட அது சரியா தப்பானு யோசிக்காத சரியா வந்தா வெற்றி
தப்பா வந்தா அனுபவம் அவ்வளவு தான் ஒகெ வா டாட்டா என சொல்லி நகரவும்
அவ்வளவு அழுது கொண்டிருந்த தீபா நாம் எதற்கு அழுதோம் என்பதையே மறந்து விட்டாள்.
செல்லும் லெட்சுமியையே பார்த்து மஞ்சள் பூசி கருப்பா இருக்கிறத கவர் பண்ணி இருந்தாலும்
இவ மனசு வெள்ளை தான் என்ன பிரச்சனைனு கேட்காமலே என்ன மாத்திட்டு
போய்டாளே மஞ்சக்காட்டு மைனா தான் இவ என மனதில் நினைத்துக் கொண்டால்.
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளீயிடு
எல்லாரும் பதட்டதுடன் காத்திருக்க பயப்படாமல் அவளுடைய தேர்வு முடிவுகளுக்காக
காத்திருந்தால் லெட்சுமி
அவள் அம்மா பத்ரா கூட வந்து கேட்டே விட்டார் "உனக்கு கொஞ்சம் கூட பயமெ இல்லையா என்று
தப்பு பண்ணா தான் பயப்படனும் பரிட்சை ரிசல்ட்க்கு எல்லாமா பயப்படுவாங்க என கேட்க
அந்நேரம் பார்த்து அவளுடைய அப்பா வீட்டினுள் நுழைய "எதுக்குடி பிள்ளைய திட்டுற என்று
கேட்க ஆமா நான் திட்டி உங்க மக அழுது இங்க ஆறா ஓடுது பெத்தவளுக்கு தெரியாத பிள்ளை கிட்ட எப்படி பேசனும்னு பெரிசா வந்துட்டாரு" என கூறிக்கொண்டே செல்ல
தன் தவப்புதல்வியிடம் வந்தவர் "என்னடா அடுத்து என்ன பண்றதுனு முடிவு பண்ணிட்டியா
என கேட்க அதெல்லாம் ரெடி பா''நான் அடுத்து computer science " தான் பா படிக்க
போறென் ஆனா அம்மா தான் நோ சொல்லறாங்க நீங்க சொல்லுங்க பா என கெஞ்ச தன்
மகளின் அதிகார தொனிக்கே தலையாட்டுபவர் கெஞ்சல் மொழிக்கு மறுப்பு சொல்வாரா என்ன?
சரி என்று விட்டார்.
இப்படியே அவளின் பள்ளி படிப்பு தொடர பள்ளிகளில் நடக்கும் பேச்சு போட்டிகளுக்கும்
பள்ளி சார்பாக அவள் செல்வது தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
இன்று மாநில அளவிலான பேச்சு போட்டி
முதல்முறையாக தந்தையும் மகளும் பிரிந்து இருக்கும் தருணம்
போட்டிக்காக லெட்சுமியோ மதுரை மாவட்ட அளவில் நாமக்கல் சென்றிருக்க இங்கு
சேகருக்கோ அவசர வேலை காரணமாக மதுரையிலையே இருக்க
உடல் மட்டும் தான் இங்கே உயிர் தன் மகளிடம் தான் சாப்பிட்டாலா என்ன செய்கிறாள் என்ற
எண்ணங்களோடு
அங்கோ போட்டி கலத்தில் லெட்சுமி
32 மாவட்டங்களுக்கு உண்டான பங்கேற்பாளர்களுடன்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு தரப்படும் தலைப்பு தரப்பட்டு சரியாய் ஏழு நிமிடங்கள்
கழித்து போட்டியாளர் தலைப்பை ஓட்டி ஏழு நிமிடங்கள் பேச வேண்டும்.
லெட்சுமிக்கு தலைப்பு தர பட்டு விட்டது.
தலைப்பை பார்த்தவளுக்கு கொஞ்சம் பயம் தான் எப்படி பேசப்போகிறோம் என்று
இருப்பினும் தன் தந்தையை இந்த வெற்றி சந்தோசத்தின் உச்சிக்கே எடுத்து செல்லும் என்பதால்
தைரியாமாய் கலம் இறங்கினால் தன் தந்தையின் மகளாக
அவள் பேச ஆரம்பித்த நொடி முதல் ஆவலோடு கேட்ட அனைவரும் அவள் பேச்சின் இறுதியில்
இருக்கையை விட்டு எழுந்து நின்று எழுப்பின கரவோலிகள்
இதோ வெற்றி கனியுடன் லெட்சுமி
அவள் அப்படி என்ன தான் பேசி இருப்பாள்
காத்திருப்போம்
சித்திரம் சிந்தும்3
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top