சாரல் 12

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே,


போன வாரம் பதிவு போடாததுக்கு சாரி. பதிவு போடலை என்றால் அதை முன்னாடியே சொல்லிடுவேன் மக்களே. இருந்தாலும் உங்களை எல்லாம் வெயிட் செய்ய வைத்ததுக்கு ரொம்ப ரொம்ப சாரி. எனக்கு திருப்தி வரும் வரை, அழித்து அழித்து எழுதுவேன். இந்த முறை லேட் ஆகிடுச்சு.


உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு என்னை மன்னிச்சுடுங்க! போன பதிவுக்கு விருப்பம், கருத்துகள் தெரிவித்த அனைத்து நட்பூக்களுக்கும் நன்றி.


இந்த பதிவு எப்டி இருக்குனு நீங்க தான் சொல்லணும். நான் சரியா பயணிக்கிறேனா இல்லையா என நீங்க தான் சொல்லணும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,


நான் உங்கள்

சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 12


மெல்லிய தூறலாய் வானம் பூ தூவிக் கொண்டிருந்தது. சற்று முன்னர் தான் பலத்த மழை பெய்து ஓய்ந்திருக்க, அதன் மிச்சமாய் வானம் பூ சிதறல்களை சிதறவிட்டுக் கொண்டிருந்தது. மழை மக்களின் அன்றைய பொழுதை சற்று சோம்பலாய், எரிச்சலாய், கோவமாய் மாற்றிக் கொண்டிருந்தது.


மழை இருந்தாலும், அந்த உணவகத்தில் எப்போதும் போல அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் ஆட்கள் இருந்தபடி தான் இருந்தனர். முகுந்தன் தனது வேலை முடிந்து சற்றே ஆசுவாசமாய் இருந்த நேரம் அது. தனது நண்பன் ஜேக்கப் கொடுத்த டீயை பருகியபடி, அந்த சிறு இடைவெளியில் தளர்வாய் அமர்ந்தான். உடலின் சோர்வு அவனை ஆட்டி படைக்க, லேசாய் உடலை வளைத்துக் கொண்டான்.


அவனுடன் சற்று நேரத்தில் அவனது நண்பன் ஜேக்கப்பும் சேர்ந்துக்கொள்ள, நண்பர்களை கேட்கவும் வேண்டுமா? நீண்ட நெடிய நேரத்துக்கு பின், தனது குரலை செருமிக் கொண்ட ஜேக், “அதுக்கு அப்புறம் அக்காவை

போய் பார்த்தியா மச்சான்?” என கேட்க, அவனிடம் பெரும் மௌனம். கண்கள் நேரேதிரே வெறிக்க, மெல்ல இல்லை எனும்படி தலை அசைத்தான்.



“ம்ம்ச்! என்னடா நான் எவ்ளோ சொல்லியும நீ இப்படியே பண்ணுனா என்னடா அர்த்தம்? நீ அங்க போய் அவங்களை அடிக்கடி பார்த்தாதான் அவங்களுக்கும் ஒரு தைரியமா இருக்கும்!” என கடிந்தவன் குரலில் நண்பனின் மீதான அதிருப்தி அப்பட்டமாய் தெரிந்தது.


“சரி விடு எல்லாம் சரியாகிடும்!” அவனே சற்று நேரத்தில் சகஜமாகி, நண்பனை தேற்றினான். “சரி டா மச்சான் உனக்கு டுட்டி டைம் முடிந்ததுல! அப்புறம் பாக்கலாம்!” என்றபடி வேலையை தொடர்ந்தான்.


நீண்ட நேரம் நின்றதால், வலித்த கால்களை தடவிக் கொண்டவன், தன்னை சுத்தம் செய்துக் கொண்டு, தன்னுடைய லாக்கர் சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரம் வெளியே சலசலப்பு கேட்டது. முதலில் கண்டுக்கொள்ளாது இருந்தவன், நேரமாக நேரமாக சத்தம் அதிகரிக்கவும், மெதுவாய் தலையை நீட்டி என்னவென்று பார்க்க, கூட்டமாய் இருக்கவும் ஒன்றும் தெரியவில்லை.


“ம்ம்ச்!” சலித்துக்கொண்டவன், திரும்ப போக, ஒரு பெண் ஆவேசமாய் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. மேனேஜரிடம் கோபமாய் கையை நீட்டி நீட்டி பேச, அதில் அவள் அணிந்திருந்த மெல்லிய விலை உயர்ந்த கடிகாரம் தெரிய, அவனது கவனம் அங்கே குவிந்தது. மெதுவாய் தனது பார்வையை முன்னேற்றியவன் கண்களுக்கு, அவளின் ஒரு பக்க தோற்றத்தை தான் காண முடிந்தது. அதில் லேசாய் சுணங்கினான். அவள் பேசும் போது காதில் கிடந்த பெரிய வளையமும், முன்னும் பின்னும் நர்த்தனமாட, அவன் கவனம் அங்கே குவிந்தது.


“என்ன சர்வீஸ் செய்றீங்க? எது கேட்டாலும் இல்லனு சொன்னீங்க! ஒரு ஆர்டர் சேர்வ் செய்ய அரைநாள் ஆக்க வேண்டியது. இதுல நான் கேட்டேன்! நீங்க என்ன கொண்டு வந்துருக்கீங்க!” காச் மூச் என கத்திக் கொண்டிருந்தாள், அந்த பெண்.


அவளை உடன் இருந்த தோழிகள் சமாதானம் செய்து கொண்டிருக்க, அவள் அமைதியாகும் வழியை தான் காணோம். “ஹே வேணாம்டி! வா போகலாம்! எந்த பிரச்சனையும் வேண்டாம்!” அவர்களில் ஒருத்தி இவளை பிடித்து இழுக்க, “விடுங்கடி என்னைய! ஹோட்டல் நடத்துறாங்களாம் ஹோட்டல்! சாரி எங்க கிட்ட நீங்க கேட்குற எதுவும் இருக்காதுனு வெளிய போர்டு மாட்ட வேண்டியது தானே! ஹோட்டல மூடிட்டு வேணும்னா எங்க கம்பனிக்கு வாங்கையா! எங்க கம்பெனில உங்களுக்கு வேலை போட்டு தரேன்!” கூட்டம் குறைவாக இருந்தாலும், அங்கங்கு இருந்தோரின் பார்வை முழுக்க இங்கேயே இருக்க, மேனேஜரின் சமாதானம் தான் அவளிடம் செல்லுபடியாகவில்லை.


மேனேஜர் செர்வ் செய்த பணியாளிடம் கேட்க, “சார் அவங்க டிரமிசு பன்னா கோட்டா வித் காபி சாஸ் (tiramisu panna cotta with coffee sauce) ஆர்டர் செய்து இருந்தாங்க. ஆனா… மாங்கோ பன்னா கோட்டா (mango panna cotta) மாறி வந்துடுச்சு சார்” தாழ்ந்த குரலில் எச்சில் கூட்டி விழுங்கியபடி, கிசுகிசுப்பாய் மொழிய, அவருக்கு எங்கேயாவது தலையை முட்டிக் கொள்ளலாம் போலத் தான் இருந்தது.


“மேடம் சாரி மேடம்! மிஸ்டேக் எங்க மேல தான்! வீ வில் ரீப்ளேஸ் இட் சூன் மேம்” என தகைந்து குழைந்து பதிலளிக்க, அப்போதும் அவள் அடங்கிய பாடாக இல்லை. இவர்கள் தங்களுக்குள் எதோ பேசிக் கொண்டிருக்க, அவளது தோழிகள் அவளை சமாதானப் படுத்தும் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தனர்.


ஏதோ ஒரு உந்துதலில்,

கூட்டத்தை நோக்கி சென்றான், முகுந்தன். கூட்டத்தை விலக்கியபடி சென்றவன், “எக்ஸ்கியூஸ் மீ மேடம்!” என அழைக்க, யாரோ ஒரு பெண் என எண்ணி வந்தவன், அவள் திரும்பவும், அதிர்ந்து போனான். கோபத்தில் கத்திக் கொண்டிருந்த அர்ச்சனா, இவனை “யார் நீ?” என்பது போல் ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தவள், அவன் யார் என்பதை கண்டுக் கொண்டாள். கண்களில் ஒரு அலட்சிய பாவம்.


அவள் முகத்தில் வந்து போன பாவங்களை பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனுக்கு, தான் யார் என்பது அவளுக்கு தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டான். அவளது அலட்சியத்தை கண்டவுடன் அவனது வதனத்திலும் ஒரு அலட்சியம் வந்து அமர்ந்துக் கொண்டது. அவள் அவனை கண்டு யார் நீ எனும் விதமாய் புருவத்தை ஏற்றி இறக்கி, குரலிலும் அதே அகம்பாவம் தொனிக்க, “ஹூ ஆர் யூ!” என கேட்க, முகுந்தன் முகத்திலோ ஒரு வித இறுக்கம். அவனது முகம் கண்டு, “இவன் ஏன் இங்க வந்தான்? இது இவன் வேலையே இல்லையே!” என்று தான் மேனேஜர் நினைத்தார். வேகமாய் இருவருக்கும் இடையே வந்த மேனேஜர், “மேடம் ப்ளீஸ் காம் டெளன் ப்ளீஸ்!” அவளை சமாதானம் செய்ய, “முதல இந்த ஆளு யாரு?” என அவனை கை காட்டிக் கேட்க, “அவர் எங்க ஸ்டேஷன் செப் மேடம்!” என பதிலளிக்க, அதில் அவள் முகத்தில் ஒரு திமிர் கலந்த அலட்சியம்.


“ஒஹ்! சொல்லுங்க சார்! நான் ட்வென்டி பீஸ் ஆர்டர் செய்தேன். சும்மா நீங்க தரலல! நானும் அமௌன்ட் பே பண்ணி இருக்கேன்ல!” கைகளை கட்டிக் கொண்டு மேனேஜரிடம் பேசினாலும், அவளது பார்வை முழுதும் முகுந்தனிடம் தான் நிலைத்திருந்தது.



“ஹையோ எனக்கு இன்னைக்கு முழிச்ச நேரம் சரி இல்லை!” என்றுதான் மேனேஜர் மனதினுள் நொந்துக் கொண்டார். அதற்குள் ஜேக் சலசலப்பு கேள்வி பட்டு, வாயில் அருகில் வந்து நிற்க, அப்போது உள்ளே வந்த பணியாளரிடம் என்ன விஷயம் என்று கேட்டான். “அந்த பொண்ணு டிரமிசு பன்னா கோட்டா வித் காபி சாஸ் ஆர்டர் செய்து இருந்தது. ஆனா மாங்கோ பன்னா கோட்டா கொடுத்துட்டாங்க. அதை மாத்தி தரோம்னு சொன்னாலும் காதுலையே வாங்காம, காச் மூச் என்று கத்திகிட்டு இருக்கு!” என விவரம் தெரிவிக்க, அப்போது தான் நண்பன் அங்கிருப்பதையும் கவனித்தவன், “அய்யய்யோ இவன் எங்கடா இங்க இருக்கான்! இவன் இன்னும் வீட்டுக்கு போகலையா? அப்பவே கிளம்பினானே!” என சத்தமாய் சொல்லிக்கொண்டான்.



அர்ச்சனா எதுவோ சொல்ல, முகுந்தன் முகத்தில் ஒருவித இறுக்கம். பார்த்துக் கொண்டிருந்த ஜேக் ஏதோ உணர்ந்து, வேகமாய் நண்பனை நோக்கி ஓடினான். அதற்குள் தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றி இருந்தான். கண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். ஜேக் ஐயோ என தலையில் கைவைத்தபடி அப்படியே நின்றுவிட்டான். முகுந்தன் மேலும் ஏதாவது கிடைக்கிறதா என சுற்றும் முற்றும் தேட, “டேய் அவனை பிடிங்கடா!” என அலறியபடி நண்பனிடம் வந்து சேர்ந்தான், ஜேக்.



விரைந்து முகுந்தனிடம் வந்தவன், அவன் கையை பிடிக்க, மற்றவர்களும் அவனை பிடித்துக் கொண்டனர். “சாரி மேடம் சாரி மேடம்!” மேனேஜர் நடந்து விட்ட அசம்பாவிததுக்கு மன்னிப்பு கோரினார்.



“யு…. யு….! என் மேலையே தண்ணியை எடுத்து ஊத்திட்டியா! உன்னை என்ன பண்றேன் பாரு!” என அவனை அடிக்க பாய, தோழிகள் தடுத்து பிடித்துக் கொண்டனர். “எங்க அப்பாகிட்ட சொல்லி உங்க ஹோட்டெல மூட வைக்கல என் பேரு அர்ச்சனா இல்லை!” அவளது தோழி வேகமாய் டிஷு கொண்டு தண்ணீரை துடைக்க, அவள் கையை தட்டி விட்டாள். வேகமாய் அவளை இழுத்துக் கொண்டு சென்றனர் அவர்கள்.



தனது அறையில் மேனேஜர் கையில் தலையை தாங்கிய படி அமர்ந்திருந்தார். அவரின் முன் முகுந்தனும், அவனது ஹெட் மாணிக்கவேலும் நின்று இருந்தனர். மாணிக்கவேலின் கண்கள் அவனை தான் சுட்டு எரித்துக் கொண்டிருந்தது. அவன் முகமோ நிர்மலமாக

இருந்தாலும், எதையோ சாதித்த நிறைவு வதனத்தில் குடி கொண்டிருந்தது.



“சொல்லுங்க சார். ஒரு ஸ்டேஷன் செப்க்கு டைனிங் பிளேஸ்ல என்ன வேலை? உங்க ஜூனியர் தானே! வேலைக்கு சேரும் போதே என்னென்ன ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் இருக்குனு சொல்ல மாட்டிங்களா? இல்ல அவருக்கே இதெல்லாம் தெரியாதா?” கேள்வி ஹெட் செப்பிடம் (chef) இருந்தாலும், பார்வை அவனிடம் தான் இருந்தது. “உங்களுக்கே இதெல்லாம் தெரியாதா முகுந்தன்? காலேஜ்ல இதெல்லாம் தானே பேசிக்!”


“சாரி சார் நான் அவனை என்னனு கேட்கிறேன்! இனிமே இது போல நடக்காம பார்த்துக்கிறேன் சார்!” என தனது ஜூனியருக்காக தான் மன்னிப்பு கேட்டார். அவர் கண்களோ, “என்னை இப்டி நிறுத்தி விட்டாயே!” என அவனை குற்றம் சாட்டியது. அதில் குற்ற குறுகுறுப்பாய் இருக்க, அவர் பார்வையை சந்திக்க முடியாமல், தலை குனிந்தான்.



ஒரு பெருமூச்சு விட்டு கண்களை மூடி திறந்தவர், “மிஸ்டர் முகுந்தன் இனிமே இப்படி நீங்க நடந்துக்க கூடாது. ஒரு லெட்டர் எழுதி கொடுத்துட்டு போங்க!” என கடுமையாய் மேனேஜர் சொல்ல, மாணிக்கவேலும், கண்களாலே அவனை பணித்து விட்டு, வேகமாய் வெளியேறினார்.



அவன் மேனேஜர் அறையை விட்டு வெளியே வந்த நேரம், ஜேக் அவனுக்காக அறையின் வெளியே காத்திருக்க, வேகமாய் நண்பனை எதிர்கொண்டான். “டேய் உள்ள என்னடா சொன்னாங்க? ஹெட் வேற ரொம்ப கோபமா போறார்!” அவன் கேட்க, “டேய்! சார் இப்ப எங்க இருக்கார்?” அவனை கண்டுக்கொள்ளாமல் திருப்பி கேள்வி கேட்க, “டேய்…. ம்ம்ச் நான் என்ன கேட்குறேன்? நீ என்ன கேட்குற? கிறுக்கு பயலே!” நண்பனை அர்ச்சித்தவன், “அவர் வேற ரொம்ப கோவமா போனார். தயவு செஞ்சு அவர் கண்ணுல ஒரு ஒரு வாரத்துக்கு மாட்டிடாத! உடம்பு சரி இல்லன்னு ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போய்டு! அவர் கண்ணுல மட்டும் நீ இப்ப பட்ட தொலைஞ்ச! அவ்ளோதான்!” என்ற நண்பனின் வார்த்தைகளை காதில் வாங்காது, “ம்ம்ச் வளவளன்னு பேசாம சொல்லுடா!” என சலித்துக் கொள்ள, “அவர் கிட்சேன்க்கு தான் போனார்!” சொல்லி வாயை மூடுவதற்குள், அந்த பக்கமாய் வேக வேகமாய் சென்றான்.


“டேய் டேய்!” ஜேக்கின் குரல் அவனை தீண்டவே இல்லை. “லூசு பய! லூசு பய! இவன் கூட சகவாசம் வச்சதுக்கு…. என் புத்திய தான் செருப்பால அடிக்கணும்!” முனங்கினான், ஜேக்.


அதே நேரம் முகுந்தன் சமையல் அறையை அடைந்த நேரம், அவனை கண்ட மாணிக்கவேல், தனது உதவியாளிடம், “விகாஸ் அவனை முதல போக சொல்லு! ஒரு வாரம் அவன் என் கண்ணுலேயே படக் கூடாது! “ என கட்டளையிட, அவன் அமைதியாய் அங்கேயே நிற்க, அதில் கோபம் கொண்டவர், “பர்ஸ்ட்! கெட் அவுட் ஒப் மை கிட்சேன்!” என கத்தினார்.



தொண்டை அடைக்க, முகம் சிறுத்து போக, தளர் நடையுடன் வெளியே வந்தான் முகுந்தன்.

—--------------------------------------------------------------------------------


ஓராயிரம் முறையாக தன்னையே நொந்துக் கொண்டான் முகுந்தன். “ஹையோ! ஹையோ! எல்லாம் என்னை சொல்லணும்!” என தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். அவனையே பரிதாபமாய் பார்த்தபடி ஜேக்.



வாங்கி வந்திருந்த கூலிங் பீரும் இவன் அடித்த லூட்டியில் சூடாகி இருக்க, கூடவே அவன் நண்பனாய் இருக்கும் பாவத்திற்கு ஜேக்கும் சூடாக இருந்தான்.


“டேய் கிறுக்கு பயலே! நானும் வந்ததுல இருந்து பாக்குறேன்.. நீ பாட்டுக்கு தனியா புலம்பிக்கிட்டு இருக்க… இதுல வாங்குன பீர் வேற கூலிங் போய்டுச்சுடா! ஆனா நீ என்னனு தான் சொல்ல மாட்டேங்கிற!” என பொறுமையிழந்து கத்தினான். அதற்கு முகுந்தன் அளித்த பதிலில், அவன் இதய துடிப்பு தாறுமாறாய் எகிறியது.

அப்படி என்ன சொன்னான் முகுந்தன்!...


சாரல் அடிக்கும்….
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top