'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் ' - 40

Advertisement

Rudraprarthana

Well-Known Member
11105நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி

ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

என்றும் போல இன்றும் சரண் கீர்த்தி இடையே இருக்கும் மனக்கசப்பு நீங்கி இருவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டி கடவுளை துதித்து பூஜை செய்து முடித்தவள் வழக்கம் போல நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து வெளியில் வர என்றுமில்லாத திருநாளாக இன்று பரபரப்புடன் வீடு இயங்கி கொண்டிருப்பதை கண்டாள் ப்ரீத்தி.

என்னவாக இருக்கும் என்று யோசித்த வண்ணம் சமையலறையினுள் நுழைய போனவளை 'ப்ரீத்தி' என்று அழைத்து தடுத்திருந்தார் சிவசங்கரன்.

'சொல்லுங்க மாமா' என்று அவர் முன் சென்று நிற்க,

'பிறந்த நாள் வாழ்த்துக்கள் ப்ரீத்தி' என்று இன்முகத்துடன் அவளை வாழ்த்த அவளே மறந்திருந்த அவள் பிறந்தநாளுக்கு சிவசங்கரன் வாழ்த்தியதில் மனம் நிறைந்திட 'தேங்க்ஸ் மாமா' என்றவள் வித்யாவையும் அழைத்து இருவரிடமும் ஆசி பெற்று எழ,

"ப்ரீத்தி இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல சின்ன கெட் டு கெதர் இருக்கு அதோட அரேஞ்மென்ட்ஸ் பத்தி ஆகாஷ் உனக்கு சொல்லுவான் கொஞ்சம் பக்கம் இருந்து எல்லாமே சரி பார்த்திடு எங்களுக்கு முக்கியமான மீட் இருக்கு, கேட்ரிங் பெவிரேஜ்ஸ் எல்லாம் உன்னோட பொறுப்பு சின்ன தப்புக்கு கூட வாய்ப்பு இருக்க கூடாது , கெஸ்ட் லிஸ்ட் சீட்டிங்க்ஸ் டீடெயில்ஸ், மீடியா ஸ்பேஸ் எல்லாமே பக்காவா இருக்கணும் " என்ற வித்யாதேவியிடம்,

'என்ன விசேஷம்' என்று கேட்க நா எழுந்தாலும் அவரது அவசரத்தை கண்டு 'சரிங்க ஆன்டி' என்று தலை அசைத்தவள் இருவருக்கும் காலை உணவை பரிமாறி வழியனுப்பி உள்ளே நுழைய ஆகாஷ் ஒரு பட்டியலுடன் ப்ரீத்தியை நெருங்கினான்.

'என்ன விசேஷம் ஆகாஷ்..?? ஆன்டி மீடியா வரும் சொல்லி இருக்காங்க எதாவதும் முக்கிய அனௌன்ஸ்மென்ட் பண்ண போறாங்களா..? என்று கேட்டவளுக்கு அப்போது தான் நினைவு வர,

'ஒருவேளை பாரின் கொலாப் பத்தி பேச போறாங்களா..??' என்று ஆர்வம் தாங்காமல் கேட்க,

"அண்ணி ஐ ப்ராமிஸ்..!! நம்புங்க நானுமே உங்களை மாதிரி தான் எதுக்கு இந்த கெட் டூ ன்னு தெரியாம தலையை பிச்சிட்டு இருக்கேன்"

'உங்களுக்கும் தெரியாதா..??'

'நிஜமா தான் அண்ணி, தியாம்மா எதுவும் சொல்லலை வழக்கமா அபிஷியல்ஸ், மீடியாக்கு என்ன அரேஞ்ச்மென்ட்ஸ் இருக்குமோ அதை லிஸ்ட் போட்டு உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க அவளோதான் அண்ணி எனக்கு தெரியும் '

'சரி சரி உட்காருங்க ப்ரேக்பாஸ்ட் முடிச்சிட்டு யோசிக்கலாம்' என்று கூற கை கழுவி வந்து அமர்ந்த ஆகாஷிற்கு பரிமாறியவள் தனக்கும் போட்டுக்கொண்டு உன்ன தொடங்கினாள்.

பேச்சுக்கள் மீண்டும் அன்றைய விசேஷத்தை குறித்தே நீள ஒரு கட்டத்தில் என்ன முயன்றும் என்னவாக இருக்கும் என்று கண்டு பிடிக்க முடியாமல்,

"சரி ஓகே விடுங்க எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிட போகுது" என்றவள் ' நீங்க லிஸ்ட் கொடுங்க ஆகாஷ் ' என்றாள்.

"இந்தாங்க அண்ணி..!!" என்று பட்டியலை அவளிடம் கொடுத்தவன் "தனியா மேனேஜ் பண்ணிடுவீங்களா..?? வர்ஷுக்கு வேற ப்ராக்டிகல்ஸ் எனக்குமே பேக் டு பேக் சர்ஜரிஸ் இருக்கு எல்லாருமே சாயங்காலம் தான் வர முடியும்" என்று நிஜமான கவலையுடன் கேட்க,

"நோ ப்ராப்ளம் ஆகாஷ் ஐ கேன் மேனேஜ் அல்ரெடி காலேஜ்ல நிறைய எவென்ட்ஸ் எடுத்து பண்ணி இருக்கேன் அதுவும் இங்க நீங்களே எல்லாம் முடிசிட்டிங்க ஜஸ்ட் அரேஞ்ச்மென்ட்ஸ் அண்ட் லாஸ்ட் மினிட் மானிடரிங் தானே சோ ஐ கேன் யு டோன்ட் வொரி" என்று கூற,

'ஓகே அண்ணி டேக் கேர்' என்று ஆகாஷ் விடைபெற்று கிளம்ப குழந்தைக்கு பால் கொடுத்து வசுந்தராவிடம் விட்டவள் அடுத்தடுத்து ஆட்கள் வர வெளி தோட்டத்திலேயே அன்றைய நாள் அவளை இழுத்து கொண்டது..

மேடை அலங்காரம் முதலில் முடிய மைக் மற்றும் விளக்குகளை பரிசோதித்தவள் அவர்களுக்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்து அனுப்பி வைத்தவள் பின் உணவை பார்க்க சென்றாள். இடையில் ஒருமுறை வீட்டிற்கு சென்றவள் குழந்தையின் தேவையையும் வசுந்தராவின் தேவையையும் கவனித்து திரும்ப அதேநேரம் பார்வதி வீட்டினுள் நுழைந்திருந்தார்.

அவரை கண்டு இனிதாக அதிர்ந்தவள் 'பாரும்மா' என்று ஓடி சென்று கட்டிக்கொண்டாள் ப்ரீத்தி.

ஆரணியில் இறுதியாக அவரிடம் கோபத்தில் பேசியவள் அதன் பின் இப்போது தான் பார்க்கிறாள். சௌமியின் விசேஷத்தின் போது கூட அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.. பல நாட்களாகவே அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று துடித்து கொண்டு இருப்பவளுக்கு இன்று அதற்க்கான சந்தர்ப்பம் அமைய உடனே 'மன்னிச்சிடுங்க பாரும்மா' என்றாள் அவர் அணைப்பில் இருந்துக் கொண்டே.

'ஹேப்பி பர்த்டே ப்ரீத்தி' என்று அவளுச்சியில் முத்தமிட,

'நீ.. நீங்க என்னை மன்னிச்சிடீங்களா பாரும்மா' என்று எதிர்பார்ப்புடன் அவர் முகத்தை பார்க்க,

'எப்படிடா இருக்க..??' என்றார்,

"சொல்லுங்க பாரும்மா அன்னைக்கு நான் உங்களை நிறைய பேசிட்டேன் , ஆனா இப்போ புரியுது நீங்க எப்பவும் எனக்கு நல்லது மட்டும் தான் செய்வீங்க நான் கொஞ்சம் உங்க பேச்சை கேட்டு இருக்கணும் பாரும்மா இல்லனா எனக்கு இந்த கஷ்டம் இருந்திருக்காது" என்றிட

அவரோ அவள் கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் இறுதி வார்த்தையை மட்டும் எடுத்து கொண்டு, "உனக்கு என்னடா கஷ்டம் விச்சு உன்னை நல்லா பார்த்துக்குறான் தானே"

விஷ்வாவின் பெயரை கேட்டதுமே அவள் உடலில் சிறு அதிர்வு. சௌமியின் வளைகாப்பிற்கு பின் விஷ்வா அவளுக்கு அழைக்கவில்லை இதோ இப்போது பார்வதி கேட்கவும் தான் இன்றோடு அவள் கேட்டிருந்த இரண்டு மாத கெடு நினைவில் எழ ப்ரீத்தியின் உடலில் அன்னிச்சையாக நடுக்கம் பரவியது.

அவருக்கு பதில் சொல்ல முடியாத அளவு அச்சம் அவளை கவ்விப்பிடிக்க கைகளை பிசைந்தவாறு மெளனமாக அவரை பார்த்தாள்.

'சொல்லுடா விச்சு உன்னை நல்லா பார்த்துகுறானா..??' என்று மீண்டும் கேட்க

ப்ரீத்தியோ அவருக்கு பதிலளிக்கும் மனநிலையில் இல்லை 'கடவுளே எப்படி இன்றைய நாளை மறந்தேன்' என்று உள்ளுக்குள் தவித்து போனவளுக்கு நினைவெல்லாம் விஷ்வாவை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை தான்.

' ப்ரீத்தி ' என்று பார்வதி உலுக்கவும் திகைத்து பார்த்தவள்,

'ஹா... ஹான் பாரும்மா நீங்க இருங்க' நான் வெளியே வேலை முடிஞ்சதா பார்த்துட்டு வரேன் என்றவள் சமையலறைக்கு சென்று அவருக்கு குடிக்க பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தவள் வெளியே செல்ல சில நிமிடங்களுக்கு அவளையே பார்த்து கொண்டு நின்ற பார்வதி பின் வசுந்தராவின் அறைக்கு சென்றாள்.

*

வசுந்தராவை தொடர்ந்து வித்யா பார்வதி அனைவரும் மேடையில் இருக்க ப்ரீத்தி வர்ஷினியுடன் பக்கவாட்டில் நின்றிருந்தாள்.

"டியர் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் தேங்க் யூ சோ மச் பார் யூவர் ப்ரெசென்ஸ் ஐ வெல்கம் யு ஆல்" என்று சிவசங்கரன் அனைவரையும் வரவேற்க அதை தொடர்ந்து கரகோஷம் எழுந்தது,

கைதட்டல் குறைந்ததும் அனைவரையும் பார்த்தவர், "எதுக்குடா இந்த கெட் டூன்னு எல்லாரும் யோசிக்கலாம், பொதுவா அபிஷியல் மீட் இங்க நடக்காது வீட்ல அரேஞ் பண்ணி இருக்கிறதுலேயே பலர் கெஸ் பண்ணி இருப்பீங்க எஸ் இன்னைக்கு ரொம்ப ரொம்ப விசேஷமான நாள்..!! உங்க எல்லாரையும் இங்க வரவச்சதுக்கு மூணு முக்கியமான காரணம் ஒன்னு எங்களோட மருமகளை உங்களுக்கு அறிமுகபடுத்த அடுத்து எங்க பேரனை அறிமுகபடுத்த அடுத்து ரொம்பவே முக்கியமான வி டி க்ரூப்ஸ் உடைய அடுத்த தலைவரை அறிமுகபடுத்த" என்று சிவசங்கரன் முடிக்கவும் அங்கு பலத்த கரகோஷம் உண்டானது.

அதுக்கு முன்ன ப்ளீஸ் புட் யுவர் ஹாண்ட்ஸ் டுகெதர் டு வெல்கம் அவர் டாட்டர் இன் லா 'மிசர்ஸ் ப்ரீத்தி விஷ்வதேவ்' என்று அழைக்க உடனே அனைவர் பார்வையும் சிவசங்கரனை தொடர்ந்து ப்ரீத்தி மீது படிய,

'அண்ணி அப்பா கூப்பிடுறாங்க போங்க' என்றால் வர்ஷினி

ப்ரீத்தியோ நடப்பதை நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றிருந்தாள். அவளை அறிமுகபடுத்துகின்றனரா ஆனால் ஏன்..?? எதற்கு..?? என்ன அவசியம் வந்தது..?? என்று குழம்பி தவித்து நின்றவள் அப்போது தான் மீடியா முழுக்க அவள் புறம் போகஸ் செய்திருப்பதை கண்டு இதற்க்கு மேலும் அங்கு நிற்பது சரியாக வராது என்று எண்ணி உடனே முன்னே சென்றாள்.

வித்யா அவள் மேடை ஏற உதவியர் , "இது தான் எங்களுடைய மருமகள் டாக்டர் ப்ரீத்தி விஷ்வாக்கும் இவங்களுக்கும் போன வருஷம் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகிட்டு திருமணத்தை அவசரமா செய்ய வேண்டிய நிலை முன்னாடியே உங்களுக்கெல்லாம் அறிமுகபடுத்த வேண்டியது ஆனால் சமயம் சந்தர்ப்பம் சரியா அமையாம போனதால முடியலை" என்று கூற ப்ரீத்தியோ திடுக்கிட்டு போய் இது என்ன புதுக்கதை என்பதாக அவரை பார்த்தாள்.

அவரோ ப்ரீத்தியிடம் கண் மூடி திறக்க, 'மேடம் அப்போ குழந்தை' என்று வசுந்தராவின் கையில் இருந்த குழந்தையை பார்த்து ஒருவர் கேட்க,

வித்யாவோ புன்னகையுடன் அடுத்து அவரை தான் அறிமுகபடுத்த போறேன் கொஞ்சம் பொறுங்க என்றவர் வசுந்தராவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி வந்து முன்னே நின்றவர்,

இவர் எங்களோட பேரன் 'ஆதிரையன் விஷ்வதேவ்' என்று அறிமுகபடுத்திட,

'மேடம் விஷ்வா சார் எங்கே..??'

"அவர் இப்போ இந்தியால இல்லை ஆனா கூடிய சீக்கிரமே விஷ்வா உங்களை சந்திப்பார்" என்று கூற கையில் இருந்த குழந்தை சிணுங்க தொடங்கியது உடனே ப்ரீத்தி குழந்தையை வாங்கி கொண்டு அங்கிருந்து செல்ல கூட்டத்தில் சிறு சலசலப்பு,

'இன்னைக்கு எங்க மருமகளோட பிறந்த நாள் அவசரமா உங்களை எல்லாம் இங்க வரசொன்னதுக்கு முக்கியமான காரணம் இருக்கு" என்றவர் குரலை செருமி,

"என்ன காரணம் என்பதை என்னோட அத்தை சொல்லுவாங்க" என்றவர் வசுந்தராவிடம் மைக்கை கொடுக்க வாங்கியவர்,

"அனைவருக்கும் வணக்கம் இந்த வி.டி குழுமம் என் கணவர் ஆரம்பிச்சது அவர் தொடங்கின நாளில் இருந்தே நிர்வாகம் என்பது எங்க குடும்பத்து பெண்களின் பொறுப்பு என்ற எழுதப்படாத விதியை உருவாக்கி இருந்தார் அதன் படி அவரோட அம்மாவில் தொடங்கி, நான் என் மருமகள்ன்னு இதுநாள் வரை நிர்வாகத்தை கவனித்து வந்தோம் இப்போது அடுத்த தலைமுறைக்கு வழி விடும் நேரம் வந்துவிட்டது" என்றவர் தன் முன்னே இருந்த கோப்பில் கையெப்பம் இட்டு அதை உறுதி செய்ய அவரை தொடர்ந்து பார்வதி , வித்யாவும் கையெழுத்திட அப்போது தான் குழந்தையோடு அங்கு வந்த ப்ரீத்தி
என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்கள் கையெழுத்திடுவதை ஒருவித ஆச்சர்யத்துடனே பார்த்து கொண்டிருந்தாள்.

ப்ரீத்தி திரும்பியதை பார்த்த சிவசங்கரன், வீ ஆர் ப்ரவுட் டு இண்ட்ரடியுஸ் அவர் நெக்ஸ்ட் சேர்மன் ஒப் வி.டி க்ரூப்ஸ்... 'மிசர்ஸ் ப்ரீத்தி விஷ்வதேவ்' என்று அவர் கூறி முடிக்கவுமே ஒரு நொடி அவர் என்ன பேசினார் என்பது புரியாமல் நின்றவளுக்கு அவர் மீண்டும் அதையே கூறி ப்ரீத்தியை மேடைக்கு அழைக்கவும் ப்ரீத்திக்கு உலகமே தட்டாமாலையாக சுழன்று போனது.

ஒரு காலத்தில் விஷ்வாவின் பெயர் புகழோடு சேர்த்து அவன் மருத்துவமனையையும் அழிப்பேன் என்று உறுதி கொண்டவளையே இன்று அதிகாரத்தில் அமர்த்தி இருக்கும் காலத்தை என்னவென்று சொல்ல..!!

ப்ரீத்தியால் சுத்தமாக இதை ஏற்க முடியவில்லை மேடையில் இருந்த பார்வதியை பார்க்க அவரோ வாஞ்சையோடு ப்ரீத்தியை தான் பார்த்து கொண்டிருந்தார். 'என்ன பாரும்மா இது..??' என்று விழிகளாலேயே அவரை கேட்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுப்பதை தவிர்க்க முடியவில்லை.

"அண்ணி அப்பா கூப்பிடுறாங்க போங்க" என்று வர்ஷு கூறிய எதுவுமே அவள் செவி வழி நுழைந்து சிந்தையை எட்டவே இல்லை.

"என்ன செய்கிறார்கள் இவர்கள் அவளை பற்றி எதுவுமே தெரியாமல் எந்த நம்பிக்கையில் இத்தனை பெரிய பொறுப்பில் அவளை அமர்த்த முயல்கிறார்கள் என்ற கேள்வியே அவளை சிதைக்க மனதில் பதட்டம் அதிகரித்து கால்கள் பின்னிகொண்டன கையில் இருந்த குழந்தையையும் பிடிக்க முடியாமல் நழுவவிடும் முன் விஷ்வாவின் கட்டளை படி உடனே குழந்தையை தான் வாங்கி இருந்தான் ஆகாஷ்"

ஆம் விஷ்வாவே தான் அவன் அங்கு இல்லையே தவிர நடக்கும் அனைத்தையும் நேரலையில் பார்த்து கொண்டு இருந்தவன் ப்ரீத்தியின் உணர்வுகளை அவதானித்து ஆகஷிர்க்கு உடனுக்குடன் கட்டளை பிறப்பித்து கொண்டிருந்தான்.

குழந்தையை வாங்கி கொண்டு "அண்ணி வாங்க எல்லாரும் உங்களுக்காக காத்திருக்காங்க" என்று ஆகாஷும் அழைக்க,

ப்ரீத்தியின் முகம் அச்சத்தில் வெளிறிப்போனது..!! அத்தனை பேரின் பார்வையும் அவள் மீது அதுமட்டும் இன்றி அங்கு குழுமி இருந்த மீடியாவும் ப்ரீத்தியை போகஸ் செய்து கொண்டிருப்பதை கண்டவளுக்கு எப்படி இதை தடுப்பது என்று புரியாமல் அலமலந்து போனால் அவசரமாக கைபேசியை எடுத்து விஷ்வாவிற்கு அழைக்க அவனோ இதை எதிர்பார்த்தவனாக அவள் அழைப்பை துண்டித்து நேரலையில் அவள் உணர்வுகளை கண்டுகொண்டிருந்தான்.

"கம் ஆன் ப்ரீத்தி இன்னும் கொஞ்ச நேரம் தான் ஜஸ்ட் ஹோல்ட் யுவர் எமோஷன்ஸ்..!! டோன்ட் டிஸ்சபாயின்ட் மீ..!! போ ..!! கோ ப்ளீஸ் கோ ப்ரீத்தி...!! "என்று திரையில் இருந்த அவளை பார்த்து கூற,

ப்ரீத்திக்கோ இப்போது இதை மறுத்து வித்யா சிவசங்கரனுக்கு அவமரியாதையை தேடி கொடுப்பதில் துளியும் விருப்பம் இல்லை அதே நேரம் இதை ஏற்ப்பதன் மூலம் அவர்கள் குடும்பத்திற்க்கு தீராத களங்கத்தை விளைவிக்கவும் தயாராக இல்லை.

அவள் மனமே அவளை கேள்வி எழுப்பி தடுத்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அவள் பெயரை உச்சரித்து சிவசங்கரன் ப்ரீத்தியை மேடைக்கு அழைக்க அவள் உடல் முழுக்க தொப்பலாக வியர்த்து போனது.

நடுங்கும் கரங்களும் பின்னிக்கொண்ட கால்களும் அச்சம் மேவிய பார்வையும் விழிதிரை மறைத்த கண்ணீரும் அவளை ஒரு எட்டு வைக்க முடியாமல் செய்ய ப்ரீத்தி திண்டாடி போனாள். எத்தனை பெரிய பொறுப்பு அதில் அவளை அமர்த்தும் முடிவிற்கு எப்படி வந்தனர் அதுவும் வித்யா...?? அவரால் எப்படி முடிந்தது என்ற கேள்வியையே மனம் வட்டமடித்து கொண்டிருந்தது.

அவள் நிலையில் உணர்ந்த பார்வதி உடனே மேடையில் இருந்து இறங்கி அவள் கையை பிடித்து, "வா ப்ரீத்தி" என்று அழைக்க,

அவர் கையை விலக்கியவள் ப்..ளீ..ஸ் பா... பாரும்மா என்று உதடுகள் துடிக்க அவரை பார்த்தவள், "என்ன நடக்குது இங்க இது ரொம்ப தப்பு..!! ஏன் இப்படி செய்யறாங்க ப்ளீஸ் ப்ளீஸ் ஸ்டாப் திஸ் பாரும்மா" என்று அவரிடம் கெஞ்ச,

"இல்லடா எல்லாம் சரியா நடக்குது "யு டிசெர்வ் !!" உன்னை விட இதை யாரும் சரியா செய்ய முடியாது வித்யாவே உன்னை ஏத்துகிட்டா இன்னும் என்ன தயக்கம் வா" என்று கையை பிடித்து இழுத்து செல்லாத குறையாக செல்ல,

அங்கே குழுமி இருந்தவர்களிடையே சிறு சலசலப்பு அனைவரும் ப்ரீத்தியை பார்க்க அவளோ, "இல்ல பாரும்மா இது தப்பு ப்ளீஸ் என்னை விடுங்க என்று அவர் கரத்தில் இருந்து தன் கரத்தை பிரித்து எடுத்தவளின் மூச்சு காற்று சீரற்று போக நெடிய மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன்படுத்த முயல மீண்டும் ப்ரீத்தி என்று அழைத்தார் சிவசங்கரன்.

இப்போது சுற்றி இருந்தவர்களின் பார்வை அவள் மீது அழுத்தமாக படிய விம்மும் மனதை ஒரு கையால் அழுத்தி பிடித்தவாறு அனைவரையும் பார்த்தவள் கண்ணீரை அவசரமாக துடைக்க,

'ப்ரீத்தி போ !!' என்று விஷ்வா திரையில் தெரிந்த அவளிடம் கத்தி கொண்டிருந்தான்.

ப்ரீத்தியோ இன்றைய நிலையில் தன்னை நிறுத்திய காலத்தை மனதினுள் சபித்தவாறு மெல்ல அடி எடுத்து வைத்திருந்தாள் மனமெங்கும் சூறாவளியாய் கடந்த காலம் சுழன்று அடிக்க மீண்டும் ஒரு குடும்பத்தை அவர்கள் நம்பிக்கையை ஏமாற்ற வேண்டிய கட்டாயத்தில் தன்னை நிறுத்தி வேடிக்கை பார்க்கும் காலத்தை அறவே வெறுத்தவளுக்கு இப்போதே எல்லா உண்மையையும் சொல்லி விட்டால் என்ன..?? என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

ஆனால் இப்போது அவள் இருக்கும் சூழல் அதற்கும் அனுமதிக்காதே கனத்த நெஞ்சோடு ஒரு கட்டத்தில் நின்றுவிட்டவளிடம், 'போங்க அண்ணி' என்று வர்ஷு குரல் கொடுக்க மேலும் பிரயாத்தனபட்டு கால்களை நகர்த்தியவள் மேடையில் கால் எடுத்து வைத்தது தான் தெரியும் ஆனால் அதற்கு மேலும் முடியாது என்பது போல மறுநொடியே மயங்கி சரிந்திருந்தாள் ப்ரீத்தி.

அவளின் ஒவ்வொரு நகர்வையும் அவதானித்து கொண்டு இருந்த விஷ்வா 'ஆகாஷ் எமெர்ஜென்சி' என்று அழைத்து கூறவும் மேடையில் வசுந்தராவிடம் குழந்தை கொடுத்து பேசி கொண்டு இருந்த ஆகாஷ் ஓடி வந்து ப்ரீத்தி தரையில் விழுமுன் தாங்கி பிடித்தவன் அவளை தூக்கி கொண்டு வீட்டினுள் சென்றான்.

ப்ரீத்தி மயங்கி விழவுமே அடுத்த சில நிமிடங்களுக்கு அனைவரிடமும் பதட்டம் தொற்றிக்கொள்ள வித்யாதேவி முகத்தில் மட்டும் புன்னகை அரும்பியது. அவருமே பிரீத்தியிடம் இதை எதிர்பார்ததது போல இருந்தது அவர் புன்னகை அதனால் உடனே மைக்கை எடுத்து சூழலை சமாளித்தவர் அனைவரையும் உணவு உன்ன செல்லுமாறு கூறி வீட்டினுள் சென்றார்.

அவருக்கு முன்பாக பார்வதி ஆகாஷுடன் சென்றிருந்தார். வர்ஷு வசுந்தராவை அழைத்து கொண்டு செல்ல ரத்த அழுத்தம் கூடி மயங்கி இருந்த ப்ரீத்தி அருகே சென்று அமர்ந்தார் வசுந்தரா. அங்கு விஷ்வாவின் ஆலோசனை படி ஏற்கனவே ப்ரீத்திக்கு தேவையான முதலுதவிக்கான ஏற்பாடுகளை ஆகாஷ் செய்து வைத்து இருந்தவன் அவளுக்கான சிகிச்சை அளித்தான்.

ப்ரீத்தி கண்விழித்த போது அறையில் வித்யாவை தவிர வேறு யாரும் இல்லை. கண்களை கசக்கி கொண்டு பார்த்த பிரீத்தி முன் வந்து நின்ற வித்யா,

'பீலிங் பெட்டர் ப்ரீத்தி' என்று கேட்க,

ஆம் என்பதாக தலை அசைத்தாள்,

"போதும் நினைக்கிறேன் லெட்ஸ் பினிஷ் தி கேம்" என்று கூற ப்ரீத்திக்கு ஒன்றும் புரியவில்லை திகைத்து அவரை பார்த்தவள்,

'என்... என்ன கேம் ஆ.. ஆன்டி' என்று எச்சில் கூட்டி கேட்க,

அதை கேட்டு புன்னகைத்த வித்யா, "நாம கொஞ்சம் வெளிப்படையா பேச வேண்டிய நேரம் வந்துடுச்சி ப்ரீத்தி" என்று கூற,

'ஆன்டி' என்ற அதிர்வு அவளிடம்,

"என் பையனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..??" என்று கத்தியின் கூர்மையோடு அவர் வார்த்தைகள் வந்து விழ ஸ்தம்பித்து போனாள் ப்ரீத்தி.

ஹாய் செல்லகுட்டீஸ்...

ரொம்ப லேட் ஆகிடுச்சி மன்னிச்சு... இதோ அடுத்த அத்தியாயம் படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.
 
Last edited:

Priyaasai

Active Member
View attachment 11105நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

Super.. Gun point knockout questions for preethi n why not for vishwa
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top