கொலுசொலி மயக்குதடி - 9

Advertisement

சக்தியின் மேல் ஆத்திரம் பெருகவும் அவனை கொலை வெறியில் முறைத்தபடியே நின்றிருந்தாள்.

இவன் என்னதான் மனசில் நினச்சிட்டு இருக்கான். பேரை பாரு சக்தி சுத்தினு என மனதிற்குள் அர்சித்தபடியே சக்தி செல்லும் திசையை பார்த்து முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள். அதற்கு பின்பே நேரமாவதை உணர்ந்து க்ளாசிற்கு கிளம்பினாள் நிலா....

சிறு எரிச்சலுடன் அன்றைய வகுப்புகளை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்....

ஏனோ மனம் படபடப்பாக இருந்தது... எதில் இருந்தோ தப்பிக்கும் எண்ணத்துடன் கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்து கொண்டாள்.....

பேரு சக்தி சரவணன்.... அவள் காதில் அப்போதும் அந்த குரல் ஒலிக்க காதை இறுக்கமாக கைகளால் மூடிக் கொண்டாள்.

இந்தப் பேர்ல இருக்க எல்லோருமே இப்படித் தான் திமிராக இருப்பாங்களோ.. ச்சே எனக்கு நினைச்சாவே கடுப்பாக இருக்கே...
இன்னொரு தடவை என் கண்ணுல மாட்டட்டும் செத்தான் அவன்... மனதிற்குள்ளே அவனை போட்டு வறுத்துக் கொண்டிருந்தாள் ....

சக்தி என்னதான் பண்றான்னு பார்க்கலாம்..... அவன் சும்மாவே ஆடுவான்... இப்போ சலங்கையை கட்டி விட்டது போல இருக்கான்.. சாமி ஆடிட்டு இருக்கானோ என்னவோ....

கோவிலில் இருந்து ஆபிஸ் வந்த சக்தி கேபினிற்குள் போனவன் தான்... வெளியே வரவில்லை.... அவனின் நிலையை பார்த்து அஞ்சி யாரும் அவனின் கேபின் பக்கம் கூட போகவே இல்லை..

சக்தி எப்போதும் ஆபிஸ் வரும் போதே கோபமாகத் தான் வருவான். இன்றோ நிலாவின் கைகாரியத்தால் ஐய்யனார் சாமியைப் போல வந்தான்... கையில் அருவா மட்டும்தான் மிஸ்ஸிங்...

சக்தியோ.. இவ என்ன தான் நினைச்சிட்டு இருக்கா....என கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான்....

நினைவுகள் கோவிலில் அவளிடம் பேசுவதற்கு முன்பு நடந்ததை நோக்கிப் போனது...

காலையில் சக்தி தூங்கிக் கொண்டிருந்த போது போன் அடிக்கத் தொடங்கியது.. யாரு இந்த நேரத்தில் கால் பண்றது என நினைத்தபடியே போனை பார்க்க அம்மா என்று திரையில் ஔிர்ந்தது...

சொல்லுங்க அம்மா.. என்ன இவ்வளவு காலையில் போன் பண்ணி இருக்கீங்க...

தூங்கிட்டு இருக்கியா கண்ணா.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..

பரவாயில்ல சொல்லுங்க என்ன விசயம்...

அவன் கேட்டதே போதும். நல்ல மூட்ல இருக்கும் போதே விசயத்தை சொல்லிடலாம் என மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ம்மா... லைன்ல இருக்கீங்களா என சக்தி கேட்கத் தொடங்கினான்..

இன்னைக்கு உனக்கு நேரம் சரியில்லையாம்.. அங்க இருக்க அஷ்டலட்சுமி கோயிலிற்கு போய்ட்டு ஆபிஸ் போ என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லி விட்டார்...

என்ன நினைத்தானோ சரி சரி போயிட்டு வரேன் என்றவன் அவரின் பதிலிற்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்து விட்டான்.. எங்கே அதற்கு மேல் இருந்தால் இன்னும் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் என்ற எச்சரிக்கை தான்.....

அம்மாவைத் அப்போது திட்டத் தொடங்கியவன் கோயிலிற்கு வரும் வரையில் அவனின் வாயால் அர்ச்சனை ஆராதனை அபிஷேகம் சிறப்பு பூஜை என எல்லாத்தையும் அவனது அம்மாவிற்கு முடித்திருந்தான்.....

கோயிலின் உள்ளே போனவனின் கண்களில் முதலில் தென்பட்டது புடவையில் தெய்வீக அழகுடன் அமைதியே உருவாய் இருந்த நிலா தான்.....

இவள் இங்கே இருக்கிறாளா....?
பார்த்ததும் அம்மாவிற்கு நடைபெற்ற பூஜைகள் நிலாவிற்கு இடம் மாறியிருந்தது.... கோபம் இருந்தாலும் சாமியைக் கூட தரிசிக்காமல் அவளின் மேலேயே பார்வையை பதித்திருந்தான்....

பெரிய பூமா தேவினு நினைப்பு இவளுக்கு... எப்படி சாது மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கா... நாம தான் ரொம்ப நேரமாக பார்க்கிறோம்... இவள் என்னடான்னா நாம ஒருத்தன் இருக்கறதே தெரியாம இருக்கா... அதற்கு எதற்கு அவள் மேல் கோபம் வர வேண்டும் எனத் தெரியாமல் கோபமாக இருந்தான்...

கோவிலிற்கு எதற்காக வந்தோம்... சுற்றிலும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற அனைத்தையும் மறந்து போய் நிலா மட்டுமே அவனது கண்களில் தெரியவும் அவளையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

சாந்தமாக இருந்தவளின் பார்வை கோபமாக மாறவும் அவளின் பார்வை போன திசையை நோக்கி இவனின் பார்வையும் போனது...

யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் முறைதவறி நடப்பதை பார்த்து இவனிற்கு நரம்புகள் புடைத்தெழ கோபத்துடன் சட்டையை மடித்துவிட்டு அங்கே போக அடிகளை எடுத்து வைத்தான்..

அதற்குள் நிலா அவனை ஓங்கி ஒரு அறை விடவும் நடந்த அவனது கால்கள் அப்படியே அதே இடத்தில் வேரூன்றியது போல நகர மறுத்தது..

அதற்கு பின்பு நடந்த அனைத்தையும் சக்தி மௌனமாக வேடிக்கை தான் பார்த்தான். நிலா அதற்குள் கிளம்புவது தெரிந்ததும் அவளிடம் பேசி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் கோபத்தையும் மீறி அழைத்து விட்டான்.....

டா போட்டு அவள் பேசிவிட மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு கோபம் மட்டுமே இருக்க கத்தியின்றி யுத்தமே முடிந்து போனது......

நிலா கோபத்தில் பேசும் பொழுது காதில் இருந்த ஜிமிக்கி அவளது அசைவிற்கு ஏற்ப அங்குமிங்கும் அசைந்தாடியது. அதைப் பார்த்ததும் அவனையும் அறியாமல் அதில் ஒன்றை எடுத்தும் விட்டான்..

ஆனால் அதை ஒப்புக் கொள்ள மனமின்றி கோப பூச்சை பொய்யாக முகத்தில் பூசிக் கொண்டான்.....

கோவிலில் கடைசியாக அவளை ஒருமுறை பார்த்ததை நினைத்து அவளின் மேல் இரசனையும் அதோடு அவள் தன்னிடம் பேசியவை எல்லாம் நினைவிற்கு வரவும் கைமுஷ்டி இறுகியது...

என்ன தைரியம் உனக்கு. என்கிட்ட யாரும் எதிரில் நின்னு குரலை உயர்த்தி பேசவே பயப்படுவாங்க. நீ என்னடான்னா என்னை டா சொல்லி மரியாதை இல்லாம பேசிட்டியே. இதுக்கு எல்லாம் வருங்காலத்தில் நீ நல்லா அனுபவிக்க போற என மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான்...

வருங்காலத்தில் யார் அனுபவிக்கப் போகிறார்கள்.. யார் யாருக்காக ஏங்கப் போகிறார்கள் என அறிந்திருந்த விதி நடக்கப் போவதை எண்ணி கேலியாய் சிரித்துக் கொண்டிருந்தது...

மனம் அவ்வாறு அவளை திட்டிக் கொண்டிருக்க கைகளோ பாக்கெட்டில் இருந்த கம்மல்ளை வெளியில் எடுத்திருந்தது. வலிக்குமோ என்ற எண்ணத்துடன் மென்மையாக அதை உள்ளங் கையில் வைத்தவன் ஏதேதோ தனியாக புலம்பத் தொடங்கினான்.....

இது எதுவும் அறியாத வாசுவோ வழக்கம் போல அவனது வேலையி்ல் மூழ்கியிருந்தான்....

ஆனால் வாசுவின் மனதிற்குள் மட்டும் ஏதோ சரியில்லை என்ற எண்ணமே உழன்று கொண்டிருந்தது.....

எப்போதும் போல வீட்டிற்கு வாசு கிளம்பவும் எதிரில் சக்தி வந்தான். ஏதாவது கேட்பானோ என்று நினைத்தவாறு வாசு யோசிக்கவும் அவனோ அதைவிட பெரிய யோசனையுடன் வாசு நிற்பதை கவனிக்காமல் கடந்து போய் விட்டான்...

என்னடா அதிசயமாக இருக்கு. மத்த எல்லாரையும் இவன் தான் மண்டையை பிச்சுக்க வைப்பான். இப்போ இவனை யாரு இந்த அளவுக்கு யோசிக்க வச்சாங்க...

அட யாரா இருந்தால் என்ன. நம்மளை இவன் கண்டுக்காம விட்டானே அதுவே போதும் என நினைத்தபடியே வீட்டிற்கு கிளம்பினான்..

வாசு வீட்டை அடையவும் வழக்கமாக சிரித்த முகமாய் வரவேற்கும் நிலாவின் முகம் பொலிவிழந்து இருப்பதைப் பார்த்து வாசுவிற்கு ஐயம் துளிர்விட்டது...

வாசு வந்ததும் அவன் பேசும் முன்பே நிலா தான் பேச்சையே தொடங்குவாள்.. இ்ன்றோ வந்து இவ்வளவு நேரம் ஆகியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளின் கவனம் வேறு எங்கோ இருந்தது.....

நிலா.... ஆர் யூ ஓகே.... ஹெல்த் எதுவும் ப்ராளமா...?

வாசு கேட்ட பிறகு சுய நினைவை அடைந்தவள் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல வாசு... லைட்டா தலைவலி அவ்ளோ தான் என்றாள் முயன்று வரவழைத்த குரலில்..

தலைவலியா எனக்கு கால் பண்ணி இருக்கலாம்ல. சரிவிடு இப்போ போய் டேப்லட் வாங்கிட்டு வரேன் என வேகமாக எழப் போனவனை வேண்டாம் என்ற நிலாவின் குரல் நிறுத்தியது....

என்னாச்சு ஏன் வேண்டாம் நான் போய்ட்டு வரேன்... வாசுவிற்கு நிலை கொள்ளவில்லை....

லேசான தலைவலி தான்... இருங்க உங்களுக்கு போய்ட்டு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்... ட்ரெஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு வாங்க.... பேசியவாறு எழப் போனவளை ஓடி வந்து தடுத்தவன்.... நோ... அதெல்லாம் முடியாது... நீ ரெஸ்ட் எடு.. நான் போய் எடுத்துட்டு வரேன்...

வாசு அவளிடம் கண்டிப்புடன் கூறிவிட்டு கிச்சனிற்கு போகவும் நிலாவும் பேசாமல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்து கொண்டாள்.....

வீரவசனம் பேசிவிட்டு வந்த வாசுவோ பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தான் எதற்காக என யோசிக்கிறீர்களா... அடுப்பை பற்ற வைக்கத்தான்..

நெடு நேர முயற்சிக்குப் பின்பு ஒரு வழியாக அடுப்பை பற்ற வைத்தவன்.... ஹய்.... ஜாலி ஜாலி.... பத்த வச்சுட்டேன் என குதித்தவாறு வெறும் பாத்திரத்தை மட்டும் அடுப்பில் வைத்தான்...
அதற்கு பின்பு தான் ப்ரிட்ச்சை திறந்து பால் பாக்கெட்டை எடுத்தான். ஸ்டைலாக செய்கிறேன் என செய்து பால் பாக்கெட்டை கட் செய்யவும் பாதி பால் கீழே கொட்டி விட்டது. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காபி போடுவதில் முனைப்பாக இருந்தான். மீதியிருந்த அனைத்து பாலையும் பாத்திரத்தில் ஊற்றி விட்டான்..

பால் பொங்குவதற்கு முன்பே அடுப்பை அணைத்தவன்... காபி கப்புகளை எடுத்து வைத்து எத்தனை ஸ்பூன் காபித்தூள் போடுவது என தீவிரமாக யோசித்தான்....

அட ஒரு கப்க்கு ஒரு ஸ்பூன் தான்... எதையோ கண்டுபிடித்ததை போல தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான்.....

அடுத்ததாக சர்க்கரை போட வேண்டும் என்பதை மறந்து போய்.. காய்ச்சிய பாலை ஊற்றி கலக்கிக் கொண்டு வேகமாகப் போனான்.....

பரவாயில்லையே சொன்ன மாதிரியே காபி போட்டுடீங்க போல என சிரித்தவாறு அவனிடம் வாங்கி ஒரு வாய் காபியை குடித்தவளின் சிரிப்பு காணாமல் போயிருந்தது.....

அட கொலைகார பாவி இப்படி காபியை கொடுத்து கொல்லப் பார்க்கறியே என அவனையே பார்த்தவளின் முகமோ விளக்கெண்ணெய் குடித்தது போலானது..

வாயில் இருந்ததை துப்பவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் வாயில் வைத்தவாறு நிலா முழிக்க.... நிலா காபி எப்படி இருக்கு என வாசு ஆர்வமாக கேட்டான்....

வாசுவின் பாசத்தில் நெகிழ்ந்தவளுக்கு அந்த காபி கூட அமிர்தமாய் இருந்தது... அதற்கு பின்பு ஒரு சொட்டு கூட விடாமல் குடித்து முடித்தாள்.

நிலா மறுக்க மறுக்க அவளது கப்பை வாங்கியவன் அதை கழுவ கிச்சனிற்கு போனான்.....

இன்னாெரு கப்பில் இருந்த காபியை பார்த்தவன்.... எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ணலாம் என யோசித்துவிட்டு காபியை எடுத்து ஒரு வாய் வைக்கவும் வாசுவின் முகம் மாறிப் போனது....

ச்சே... சுகர் போடலியே... நிலா எப்படித்தான் குடித்தாளோ என நினைத்தான். அவள் எதையும் காட்டாமல் தனக்காகத் தான் குடித்திருக்கிறாள் என புரிந்ததும் அவளின் மேல் அன்பும் பாசமும் பெருகியது.....

வெளியே வந்து பார்க்கவும் நிலா கண்மூடி அமர்ந்திருந்தாள். ஏனோ இன்று அவளின் முகம் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருந்தது.
எவ்வளவு வேலை செய்தாலும் இவ்வளவு டையர்ட் ஆனதே இல்லையே. இன்னைக்கு ஏன் இப்படி இருக்கா என அவனது முகம் யோசனையாக ஆனது...
நிலாவின் அருகில் வந்தவன் அவளிடம் மன்னிப்பை வேண்டவும்... எதுக்கு வாசு என புன்னகை மாறாமல் கேட்டாள்.....

சர்க்கரை போட மறந்துட்டேன் என்றான் தவறு செய்த குழந்தை போல. அவனின் செய்கையில் முன்னர் இருந்த மனநிலை முற்றிலும் மாற முகம் முழுதும் புன்னகையை பூசிக் கொண்டது...

சரி விடுங்க பரவாயில்லை என நிலா சொல்லவும் அதை ஏற்காத பாவத்துடன் அமர்ந்திருந்த வாசு நாளைல இருந்து காபி போடறது எப்படினு சொல்லிக் கொடு என சீரியசாகக் கேட்டவனைப் பார்த்து நிலா வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினாள் ...

வாசுவும் உடன் இணைந்து சிரிக்கவும் முன்பு இருந்த இறுக்கம் தளர்ந்து அவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் வீட்டை நிறைத்தது...

காபி என்ன குக் பண்ணவே கத்து கொடுக்கறேன் வாங்க என நிலா எழவும் ஹேய் என்ன பண்ற இனி ஒரு வேலைகூட நீ செய்ய கூடாது. போ போய் கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு...
தூங்கறதா.... அப்பறமாக யார் டின்னர் பண்றது.. நீங்களா என உதட்டில் உறைந்த புன்னகையுடன் கேட்டாள்..

ஐயோ அந்த விஷப்பரிட்சை எல்லாம் நான் பண்ண மாட்டேன். ஆர்டர் பண்ணிக்கலாம் நோ வொரீஸ் என்றான்...
சரி என்றவள்

அரைமனதாக ஓய்வெடுக்க உள்ளே போனாள்..வாசுவும் போனை எடுத்து டின்னர் ஆர்டர் செய்தான்..

மயக்குவாள்.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

சூப்பர் காபி சூப்பர் வாசு
இந்த மாதிரி இரண்டு நாள் குடித்தால் காபி ஆசையே மறந்து போய் விடும்
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top