கொலுசொலி மயக்குதடி - 13

Advertisement

விடிகின்ற நேரத்தில் எல்லாம் சோம்பலுடன் எழுந்து ஆபிஸ் கிளம்பும் சக்தி இன்றோ உற்சாகமாக எழுந்தான்.....

இருந்த அனைத்து சட்டைகளையும் நல்லா இல்ல நல்லா இல்ல என கழற்றி வீசினான்... இறுதியில் சிவப்பு கலர் முழுக்கை சட்டையும் ப்ளூ ஜீன்சையும் போட்டவன் கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே பார்த்துக் கொண்டான்....

ச்சே... இப்போ தான் காலேஜ் படிக்கற பையன் மாதிரி பண்றியே சக்தி... அவகிட்ட என்ன எல்லாம் சவால் விட்டோம்... இப்போ என்னடான்னா மொத்தமாக விழுந்திட்டியே... இருந்தாலும் அவ அதுக்கு வொர்த் தான்.... தனக்குள் பேசி சிரித்தவன் கோவிலிற்கு கிளம்பினான்....

முன்பாகவே கோவிலிற்கு வந்து விட்டதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை.. அன்று அவள் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து கொண்டவன் அவள் வருகிறாளா என வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான்....

வாசு படுக்கையை விட்டு எழவும் நிலா அவன் முன்னால் முழு அலங்காரத்துடன் நின்றிருந்தாள்...

பிங்க் வண்ண பட்டுப்புடவையும் கழுத்தில் ஆரமும் காதில் ஜிமிக்கியும் கை நிறைய வளையல்களும் என அம்மன் சிலைபோல் நின்று கொண்டிருந்தாள்.....

நிலா... நீயா இது... எப்படி இருக்க தெரியுமா.. யூ ஆர் லுக்கிங் லைக் எ ஏஞ்சல்... வாசுவின் பாராட்டில் முதல் முறையாக கன்னங்கள் சிவக்க நின்றிருந்தாள் நிலா...

என்ன எதுவும் பேச மாட்டேங்குற... அவன் புரியாமல் அவளை கேட்கவும்.... அவனது கையில் கொலுசை வைத்தாள்.... வாசு புரியாமல் பார்க்க... புடவையை சற்று உயர்த்தி அணிவிக்குமாறு கால்களை காட்டினாள்.....

நிஜமாகத் தான் சொல்றியா.... அவனால் நம்பவே முடியவில்லை...

இதுல என்ன நிஜத்தை நான் சொல்லனும்.. வாங்கிட்டு வந்தீங்க... போட்டு விட சொல்றதுல என்ன உங்களுக்கு இவ்ளோ ஆச்சர்யம்... வழக்கத்திற்கு மாறாக மிகவும் மெல்லிய குரலில் நிலா பேசினாள்...

மின்னல் ஒரு கோடி

எந்தன் உயிர்தேடி வந்ததே...
லட்சம் பலலட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே...
உன் வார்த்தை
தேன் வார்த்ததே...
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே..
ஏழை தேடிய
இராணி நீ என்

காதல் தேவதையே....!

அவனது மனமெங்கும் அந்த பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது...

கீளே கால்களை மடக்கி மண்டியிட்டவன் அவளது காலை பற்றினான்... கூச்சத்தில் சிலிர்த்தவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்....

மெதுவாக அவளது கால்களை அவனது தொடையின் மேலே வைத்தவன் மென்மையாக அவளது கால்களில் கொலுசை மாட்டினான்.... மற்றொரு காலையும் எடுத்து கொலுசை மாட்டி முடிக்க.. அவளோ கண்களை திறவாமல் அதே நிலையில் நின்றிருந்தாள்....

நிலா எப்படி இருக்குனு கண்ணைத் திறந்து பாரு... அவனும் மிக மெலிதான குரலில் கேட்டான்...ஹிம்... நல்லா இருக்கு... கண்களைத் திறவாமல் அவள் கூறவும் வாசு சிரிக்கத் தொடங்கினான்....

அதில் கண்களை திறந்தவள் உங்களை என அடிக்க வர.... மீ எஸ்கேப் என பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.... அவளும் சிரித்தபடியே கோவிலிற்கு வேண்டிய பூஜை சாமான்களை எடுத்து வைக்கலாம் என கிளம்பினாள்....

வாசு குளித்து இடுப்பில் டவலுடன் வெளியே வந்தான்... எப்போதும் இதுபோல் நடக்க மாட்டான்... நிலா சங்கடப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பான்.. இன்று நிலாவிடம் இருந்து தப்பிக்க வேகமாய் பாத்ரூமிற்குள் ஓடி விட்டதால் தேயைானதை எல்லாம் எடுக்க மறந்து விட்டான்....

வேறு வழியின்று இடுப்பில் ஒற்றை டவலுடன் வெளியே வந்தவன் டேபிளின் மேலே அயர்ன் செய்யப்பட்டு இருந்த பேண்ட் சட்டையை பார்த்ததும் நிலாவின் வேலை எனப் புரிந்து கொண்டான்...

அதன் மேலே ஒரு காகிதத்தில் ஏதோ எழுதியிருக்க அதை எடுத்துப் பார்த்தான்...

அணிந்தால் மகிழ்வேன்... சீக்கிரமாக வரவும்...
இப்படிக்கு
நிலா....

வாசுவும் வெள்ளை நிறச் சட்டையும் அதற்கு பொருந்தும் ப்ளூ ஜீன்சை அணிந்தவன் ரூமை விட்டு வெளியே வந்தான்...

சூப்பரா இருக்கு.... நிலா கையில் தம்ஸ்தஅப் காட்டவும்....

அப்படியா எனக் கண்களை உயர்த்திக் கேட்டான்....

அவளும் ஆமாம் என்பதைப் போல கண்களை ஒருமுறை மூடித் திறந்தாள்.....

இவனும் கண்களாலே நீ எடுத்து வைத்தது தான் என சைகை செய்தான்...

அங்கே வார்த்தைகளுக்கு இடமின்றி அழகான மௌனமொழி கண்களால் நடந்து கொண்டிருந்தது.. அன்பு கொண்ட இதயங்கள் இரண்டு மட்டுமே பரிமாறிக் கொள்ளும் மொழியது... அதற்கு மேல் மொழிபெயர்க்க நானும் விரும்பவில்லை.....

அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடலாம்... சக்தி என்ன செய்றான்னு பார்க்கலாம்....

அன்று விசேச நாள் என்பதால் சிறிது நேரம் ஆக ஆக கூட்டம் வரத்தொடங்கியது... அவனும் போவோர் வருவோரை எல்லாம் சாதாரணமாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.... கண்கள் மட்டும் மிகவும் கூர்மையுடன் அவன் பார்வை வட்டத்தில் அவள் விழுவாளா என தவமாய் தவமிருந்தான்....

சிறிது நேரம் கழியவும் அவனது எண்ணத்தை பொய்யாக்காமல் நிலா கோவிலிற்குள் வரவும் அவனின் கண்கள் விரிந்தது....

கோவிலிற்கு வந்தாலே மேடம் புடவை தான் போல.. என்ன அழகாக கட்டியிருக்கா... இங்கேயும் தான் கட்டறாங்களே... பாதி இடுப்பை காட்டிட்டு... ஏனோ அதை நினைத்தால் இவனிற்கு வெறுப்பாய் இருந்தது... நிலாவை பார்க்க அவளோ இதைவிட கண்ணியமாய் புடவையை கட்ட முடியாது என்பதை போல நேர்த்தியாக கட்டியிருந்தாள்.... அதைக் கண்டதும் அவனது விழிகள் மலர்ந்தது.....

நிலா உள்ளே வந்து கொண்டிருக்க திடீரென அவளின் முன்னால் நின்று ஷாக் கொடுக்க வேண்டும் என மறைந்து நின்று கொண்டான்.... அவனிற்கு அதைவிட பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருப்பது தெரியாமல்....

நிலா பூஜைக் கூடையுடன் உள்ளே வந்தவள் நேராக சாமி சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.....

ஓஓஓ.... சாமி எல்லாம் கும்பிட்டு அதற்கு பின்னால் தான் இங்கே வருவாளோ என நினைத்தபடியே சக்தி மறைவாக நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் திரும்பி நின்று கொண்டிருந்ததால் அவளது முகத்தை பார்க்க முடியவில்லை அவனால்....

சாமியை தரிசித்து விட்டு அவள் வந்து கொண்டிருக்க.... இவளை நோக்கி ஒரு அடியை எடுத்து வைக்க போனவன் ஷாக் அடித்தது போல அப்படியே நின்று விட்டான்....

ஏனென்றால் நிலா அதற்கு முன்பே அவனை பார்த்துவிட அவனிற்கு முன்பு வந்து நின்று ஹலோ என்ன எனக் கேட்டவாறு அவனது முகத்திற்கு நேராக சொடக்கிட்டாள்.....

நிலா இங்க என்ன பண்ற.... கேட்ட குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க... சக்தியோ அதிர்ந்து போனான்....

போலாம்... சும்மா தான்.. நிலா பேசியவாறு அங்கிருந்து நகரப் போனாள்... ஆனால் அதுவரையில் நிலாவை பார்த்தே பேசிக் கொண்டிருந்த வாசு... நிலாவிற்கு எதிரில் அவள் மறைத்தவாறு நின்றிருந்த சக்தியை பார்த்ததும் சர்வமும் நடுங்கி போனது....

ஐயோ... இவனா... இவன் கோவிலிற்கு எல்லாம் வரும் ஆள் இல்லையே... வாசு இன்னைக்கு செத்தடா... மனதிற்குள் அபாயமணி ஒலித்தது....

வாசு சார்... சக்தி அவனை நக்கலாக அழைத்தபடியே அவனது அருகில் போகவும் அவனோ ஓரடி பின்னால் நகர்ந்தான்....

ஏய்..... என்ன அவரை மிரட்டற... இருவருக்கும் இடையில் நிலா வந்து நின்றாள்..

தள்ளிப் போ... சக்தி சீறினான்.... வாசு தான் பயந்து போனான்.... நிலாவோ அசராமல் நின்று கொண்டிருந்தாள்....

ஓகோ.... இவனிற்காக தான் ஊரை விட்டு ஓடி வந்தியா..... எளக்காரமாய் சக்தி கேட்ட கேள்வியில் நிலாவோ துடிதுடித்து போனாள்... வாசுவோ கோபம் கொண்டு அவனை அடிக்க கையை ஓங்கியிருந்தான்....

வாசுவின் கோபத்தில் ஒரு நிமிடம் சக்தி திகைத்தாலும்.... மறுநிமிடமே என்னடா இதுதான் நீ சமைக்க வீட்டில் வச்சுருக்க பாட்டியா.... அவனிடம் கேட்டவாறு நிலாவை நக்கலாக பார்த்தான்....

நிலா அதற்கு பின்பே ஒன்றை கவனித்தாள் ... இருவரும் முன்பே தெரிந்தவர்கள் போல நம்மால் ஒன்றும் அவன் கோபம் கொள்ளவில்லை என்பதையும் புரிந்து கொண்டாள்....

இவ்வளவு சீரியசான சூழ்நிலையிலும் வாசு தன்னை பாட்டி என சொன்னதை நினைத்து அவனிடம் கோபமாக நான் உங்களுக்கு பாட்டியா வாசு.... என சண்டைக்கு போனாள்... அவனும் மற்றதை எல்லாம் மறந்து விட்டு... நான் இல்ல அவனால் தான் என பள்ளி சிறுவனை போல சக்தியை கைகாட்டினான்...

வீட்டிற்கு வாங்க உங்களுக்கு இருக்கு என நிலா கோபம் கொள்ள....

ஐயோ அதுவெல்லாம் ஒண்ணுமில்ல நிலாமா... ப்ராமிஸ் நம்பு.. அவனோ அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தான்...

சக்தி ஒருவனே அங்கு இல்லை என்பதைப் போல இருவரும் அவர்கள் உலகத்திற்கு போய்விட சக்தி தான் பே...வென பார்த்துக் கொண்டிருந்தான்.....

நான் க்ளாஸ் போறேன்.... நிலா கிளம்பவும்... ஓய்... நான் கொண்டு வந்து விடறேன்.... அவள் அதைக் கேட்காமல் முன்னால் போக... சக்தி ஆபிஸ்ல பார்க்கலாம் என போகிற போக்கில் சொல்லிவிட்டு விட்டால் போதுமென்று அவளின் பின்னாலேயே ஓடி விட்டான்...

சக்தி தான் என்னடா நடக்குது இங்கே... என்ற எண்ணத்தில் அவர்கள் போகும் திசையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.....

மயக்குவாள்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top