கொலுசொலி மயக்குதடி - 10

Advertisement

சக்தியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் சங்கடப்பட்ட நிலா, வாசுவின் அக்கறையால் மனம் லேசாக அன்றிரவு அமைதியாக உறங்கி விட்டாள்.....

நாட்கள் அதன் போக்கில் நகரத் தொடங்கியது.. வாசுவும் சக்தியும் புதிதாக கிடைத்த ப்ராஜெக்டில் பிசியாக இருந்தனர்....

சக்தியை அழைத்த வாசு...நாம சப்ளை பண்ணிட்டு இருக்க வசு புட் மில்ஸ் ஏதோ ப்ராப்ளம் பண்றாங்கனு சப்ளை டீம்ல இருந்து தகவல் வந்துச்சு... நீ போய் என்னனு விசாரிச்சுட்டு வாடா....

அதிசயமாக இருக்கே... பொதுவாக இது போன்ற எல்லாத்துக்கும் நீதானே போவ.. இப்போ என்ன என்னை போக சொல்ற..

நீ கொஞ்சம் பொறுமையாக கேட்டுட்டு வாடா.. ரெகுலராக டீலிங் வச்சுட்டு இருக்காங்க... என்னால இன்னைக்கு போக முடியாது... ஒரு முக்கியமான வொர்க் இருக்கு... அத இன்னைக்கே முடிக்கனும்....

வாசுவின் வேளைப் பளுவை நன்கு உணர்ந்த சக்தியும் சரியென கிளம்பினான்.

வசு புட் மில்ஸ் க்ரீம்ஸ் சாக்லெட்ஸ் மற்றும் கேக்ஸ் தயாரிக்கும் நிறுவனம்... அவர்கள் வாசுவின் கம்பெனியில் தான் அனைத்து பால் சார்ந்த பொருட்களையும் ரெகுலராக வாங்கிக் கொண்டிருந்தனர்...

சில நாட்களாக அவர்கள் வாங்கும் அளவு குறைந்திருந்தது... காரணம் கேட்டதற்கு தரத்தில் குறைவு இருப்பதாக சொல்லவும்... வாசுவும் அப்படி இருக்க வாய்ப்பில்லை என மேற்பார்வை செய்தான்... ஆனால் அப்படி எதுவும் தரத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்க அதைப்பற்றி விசாரிக்கத் தான் சக்தியை அனுப்பினான்....

சக்தி வசு புட் மில்லை அடையவும் க்ரீம் சாக்லெட்களின் வாசனை மூக்கைத் துளைத்தது.... அதை ஆழ மூச்செடுத்தவன் நேராக மேனேஜர் ரூமை நோக்கிப் போனான்....

சக்தியை கண்டதும் அவனின் குணம் பற்றி அறிந்தவர் வாயெல்லாம் பல்லாக அவனை ஆரவாரமாக வரவேற்றார்....

வந்ததற்கான காரணத்தை கூறவும் அவரிற்கு நா எழவில்லை... சமாளிக்க மழுப்பலாக பதிலை சொன்னவர் கேக்கிற்கு தேவையான பொருட்கள் எல்லாம் குவாலிட்டி இல்லையென பழியை போட்டார்.... அவரை அழைத்துக் கொண்டு கேக் செய்யும் செக்சனுக்கு கிளம்பினான்....

அங்கு ஏற்கனவே பலமுறை வந்துள்ளதால் சக்தி முன் நடக்க ஏற்கனவே அவனின் வரவால் சர்வமும் நடுங்கி இருந்தவர் அவன் கேக் செய்யும் செக்சனுக்கு வேறு செல்லவும் பயந்து நடுநடுங்கி போனார்....

நேராக உள்ளே சென்ற சக்தி அங்கு முழு கிச்சன் ஓவர்கோட் அணிந்து அப்பொழுது செய்த ஒரு கேக்கை ப்ரீசரில் வைக்கப் போன பெண்ணின் கையில் இருந்த கேக்கை சராலென பறித்தான்.....

அவள் வேகமாக திரும்ப அங்கு நின்ற சக்தியை பார்த்ததும் கோபம் தலைக்கேற ஏய்.... என சீறியவாறு அவனை அடிக்கத் கையை ஓங்கியிருந்தாள்....

அதற்கு பின்பே அவளின் முகத்தை பார்த்தவன் சன்னமாக அதிர்ந்தான்..... இருந்தும் கெத்தை கைவிடாமல் அந்த கேக்கை அங்கிருந்த குப்பைக் கூடையில் போட்டு விட்டான்....

மற்றவர்கள் அவனை அதிர்ந்து பார்க்க அவனோ சதாரணமாக நிலாவின் அருகில் வந்தவன் அவள் அணிந்திருந்த ஓவர்கோட்டை இழுத்து கழட்டி தான் மாட்டினான்.....

அந்த ஒரு நிமிடத்தில் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து போனாள்.... அதை அலட்சியமாக பார்த்தவாறு அடுத்து விறுவிறுவென கேக்கை தயாரிக்கத் தொடங்கினான்.....

அவன் கேட்ட பொருட்களை மற்றவர்கள் எடுக்க வர... ஒரு பார்வையில் அவர்களை அடக்கியவன் நிலாவை அழுத்தமாக பார்த்தான்.... அவளிற்கு கோபம் தலைக்கேற மேனேஜரோ அவளை கெஞ்சும் பார்வை பார்த்தார்...

வேறுவழியின்றி கோபத்தை உள்ளுக்குள் விழுங்கியவாறு அவன் கேட்டதை எல்லாம் எடுத்துக் கொடுத்தாள்.... அவனது கையில் கொடுக்கும் போதெல்லாம் கவனமாக அவனிடம் இருந்து எட்டி நின்று நிலா கொடுக்கவும் அதை நக்கலாக பார்த்தும் பார்க்காதது போல அவனது முழுக்கவனமும் அந்த கேக்கின் மேலே இருந்தது..

செய்து முடித்த கேக்கை பார்த்தவர்களால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை... அவன் செய்ததில் இருந்த நேர்த்தியக் கண்ட நிலா ஒரு நிமிடம் விழிவிரித்து அவனைப் பார்த்தாள்....

அனைவரின் பார்வையும் கேக்கின் மேலே இருக்க பாவையவளின் விழிகள் மட்டும் தன்னை நோக்குவதைக் கண்டதும் சக்தியின் முகம் பிரகாசமானது....

நாம் நினைக்கும் அளவு இவள் மோசமில்லை... அன்று இவள் நடந்ததற்கு ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கும்.... இவள் மேல் தவறு இருக்காது.. மனம் ஏனோ அவளிற்காக சிந்திக்கத் தொடங்கியது... அதை நினைத்து அவனிற்கே வியப்பாக இருந்தது....

சக்தி அதே மனநிலையில் செய்து முடித்த கேக்கை கொண்டு போய் ப்ரீசரில் வைத்துவிட்டு மேனேஜரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்....

அங்கு இருந்த அனைத்து பெண்களின் பார்வைகளும் செல்லும் சக்தியை பின்தொடர அவனோ திரும்பி நிலாவின் முகம் நோக்கினான்.... அவளோ அவனை ஏமாற்றி வேறு எங்கோ பார்வையை பதித்திருந்தாள்....

ஏனோ அதுகூட மற்றவரிடம் இருந்து தனித்துவமாய் அவளைக் காட்டவும் சிறு புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான்...

மேனேஜரிடம் அவர்கள் பொருட்களில் எந்த தரக்குறைவும் இல்லையென்ற ஒப்பந்தமும் அதற்கு பின்பு ஆர்டர் எதுவும் வேண்டாம் என்ற கையெழுத்தையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்...

நாம் தான் ஒரு ஒப்பந்தத்தை வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.. நம் தொடர்பை மற்றவர்கள் முறித்துக் கொள்ள எந்த வாய்ப்பையும் கொடுக்கக்கூடாது என்பதைப் போல இருந்தது சக்தியின் செயல்கள்....

நிலா வகுப்பை முடித்துக் கொண்டு வெளியே வர... அவளை எதிர்பார்த்தபடி காரின் மேலே சாய்ந்தவாறு சக்தி ஒயிலாக நின்று கொண்டிருந்தான்.....

நிலாவோ அவனை கவனிக்காததை போல கடந்து செல்ல முயல... ஓய்... தமிழச்சி.... என்ன ஓடற... நில்லு கொஞ்சம்... இந்த மச்சானை பார்த்து இன்னும் எத்தனை நாளைக்கு ஓடப்போற.... குதூகலத்துடன் கண்களில் மையலுடன்... நேசத்தை தேக்கி வந்த வார்த்தைகளில் விதிர்விதிர்த்து போய் நின்றாள்.....

என்ன உளறல் இது.... நான் உங்களை பார்த்து ஓடிக் கொண்டிருக்கிறேனா.... யாருக்கு யாரு மச்சான்... வார்த்தையை அளந்து பேசுங்க.... சீறலாய் வெளிவந்தது நிலாவின் வார்த்தைகள்....

கண்களை சுருக்கி அவளைப் பார்த்தவன்... சக்தி டி.. சக்தி சரவணன்.... அவனின் வார்த்தைகள் உஷ்ணமாய் வெளிவந்தது....

ம்ப்ச்... யாரு நீங்க... எனக்கு ஒரே ஒரு சக்தியை தான் தெரியும்... அவனும் இங்க இல்ல ஊர்ல..

குழப்பமாக பேசிக் கொண்டிருந்த நிலாவை இடைவெட்டியவன் நீ என்னோட போட்டோவைக் கூட பார்க்கல இல்லையா.. கோபமாக அவளை நோக்கி வந்தவன் முரட்டுத் தனமாக அவளின் கையை அழுத்திப் பிடித்தான்....

நிலா அவனிடம் இருந்து திமிறி கைகளை விடுவிக்க முயன்றாள்... ஆனால் நிலாவால் அவனின் பிடியை அசைக்கக் கூட முடியவில்லை....

கையை விடுங்க... என்ன பண்றீங்க... நடுரோட்டில் வச்சு ஏன் அராஜகம் பண்றீங்க... லீவ் மீ.... உச்சஸ்தானியில் நிலா கத்தினாள்.....

சரிசரி ஏன் பூனை மாதிரி கத்தற... விடறேன்... அதுக்கு நீ என் கூட வீட்டிற்கு வரணும்... அதுவும் இப்போவே... உறுதியாக மொழிந்தான்....

வாட்.. என்ன நெனச்சுட்டு இருக்கீங்க... நீங்க யாருனு எனக்கு தெரியாது... தனியாக இருக்க ஒரு பொண்ணு கிட்ட வம்பு பண்றீங்களா.... நிலாவும் அவனிடம் இருந்து விடுபட போராடினாள்....

போனை கையில் எடுத்த சக்தி... அவனின் குடும்ப படத்தை அவளிடம் காட்டினான்... அதில் சக்தியோடு இருந்த அவனது அம்மா சிவகாமியை கண்டதும் நொடியில் அனைத்தும் விளங்கியது....

அவளின் பார்வையை வைத்து திருப்தியாக புன்னகைத்தவன் இப்போது போலாமா நம்ம வீட்டுக்கு என அமர்த்தலாக கேட்டு சிரித்தான்....

நான் எதுக்கு வரனும்.... அமைதியாகக் கேட்டாள்....

எதுக்கா...? என்ன சொல்வதென திகைத்தான்...

என்ன பதில் சொல்ல முடியல இல்லையா... அவன் திகைத்த சமயத்தில் தளர்ந்த அவனது பிடியில் இருந்து கையை விடுவித்துக் கொண்டவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்...

சக்தி அவள் கிளம்பிய சில நிமிடங்கள் கழித்தே சுய உணர்வுக்கு வந்தவன் அவளைத் தேட எப்போதோ அவனது பார்வையை விட்டு அவள் மறைந்திருந்தாள்...

மயக்குவாள்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top