காட்டு ரோஜா என் தோட்டத்தில்
அருமையான கதை. இப்படியும் குறும்பு செய்ய முடியுமானு அதும் இவ்வளவு செய்ய முடியுமானு மயக்கமே வருது இந்த ஸ்ருதி புள்ளை பண்ணும் குரும்பெல்லாம் பார்த்து. பயம்ங்கரது கொஞ்சம் கூட இல்லை. எப்போவும் இவ நடக்கிறதே கிடையாது. ஓடுறது, குதிக்கிறது, தாவுறது அப்படினு டார்வின் தியரிய கரெக்ட்டா புரூவ் பண்றா. யாரையுமே விட்டு வைக்காம கலாய்க்குறா. அவங்க அம்மா அப்பாவே நொந்து போறாங்க, இவள விட இவளை கட்டிக்க போற மாப்பிள்ளையை நினைச்சு அவங்க ரொம்ப கவலை படுறாங்கன்னா பார்த்துக்கோங்க. 12த் முடிக்ககுள்ள 18 பள்ளி இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க இவளோட வால்தனத்தை. அக்கா இறந்து போக அவ பிள்ளையை தன் பிள்ளையா பார்த்துக்கிறா. அப்படி ஒரு பாசம் அவன்மேல். இவளோட குறும்பு எல்லாம் அப்படியே அவனுக்கு பார்சல் பண்ணிட்டா. அவன் வேற யாரையும் அம்மானு கூப்பிட கூடாதுன்னே அக்கா கணவனை திருமணம் செஞ்சுக்குறா. அவனிடம் அவளுக்கே தெரியாத ஒரு பிடிப்பு இருக்கும் முன்னவே. கல்யாணம் ஆகி கூட இவ அடங்கவே இல்லை. அதும் ஹாஸ்பிடலில் இருக்கும் போது கூட இவ பண்ணும் சேட்டைகள் அப்பப்பா படிக்கும் நமக்கே கண்ணை கட்டும். கொஞ்சமாவது அடங்குவது அஸ்வினுக்கு தான்(அப்பறம் அவன் படும்பாடு தனி) இந்த குறும்புக்காரியும் வளர்ந்த பொண்ணா அஷ்வினொட காதல் பண்றது, அவனை தாங்குறது அவன் மேல் இவள் காட்டும் அன்பு லவ்லி... 9month pregnant la கூட இவ சுவர் ஏறி குதிக்க முனையும் இடம் நமக்குதான் தலை சுத்தும். இவளை போலவே இவளுக்கு வரும் வாலுங்க மூணையும் சமாளிக்க முடியாமல் வீட்டுல இருக்குற எல்லாரும் தினருறத பார்க்கும் போது சிரிச்சு முடியல என்னால. Such a mischievous children.
அஸ்வின் - பிஸினஸ் தான் முதல்ல இவனுக்கு, கல்யாணத்தை ஒரு கடமையாதான் பண்றான். ரொம்ப அமைதி. ஒருவார திருமண வாழ்வு பிறகு வெளிநாடு, இவன் திரும்பி வரும் போது ஒரு குழந்தையை விட்டுட்டு மனைவி இறந்துடுவா. ஆல்ரெடி அமைதி இதில் இன்னும் இறுகி போய்டுவான். தப்பு மனைவி மேலனா கூட அதை அவ ஃபேமிலி கிட்ட காட்ட மாட்டான். இவனையும் பேச வைக்க வராங்க நம்ம ஸ்ருதி அவளோட குறும்பால். அவளோட சேட்டையால் கவரப்பட்டு காதலில் விழுந்து கல்யாணம் பண்றான். பாவம் இவன் படும் அவஸ்தைகள். இவங்க ரெண்டு பேர் வர இடமெல்லாம் செம்மையாக இருக்கு. அவளை இவன் சமாலிக்குறது, அவளுக்கு ஒன்னுனா துடிக்கிறது, அவ மேல கொண்ட அளவில்லா காதல் வாவ் இவன் நிறைய இடத்தில மனசுல நின்னுட்டான். பரென்ட்ஸ் மீட்டிங் க்குக் பயந்து இவன் ஓடும் காட்சி ஹாஹாஹா... அவள் சொல்லும் விளக்கங்களுக்கு முழிக்கும் இடங்கள் ஹாஹாஹா..
கற்பகம் - அமைதியான இவங்களையும் கலகலப்பாக அவளோட சேட்டை மற்றும் அன்பால் மாத்திடுவா சேட்டைக்கார ஸ்ருதி.. மகனொட நல்வாழ்வு மட்டுமே இவங்க குறிக்கோள். ஸ்வேதா தப்பு செய்தும் கூட அவங்க குடும்பத்தை ஒரு குறை சொல்லாம அன்பா இருக்காது சூப்பர்.
சந்திரன் - கோகிலா : ஒருமகள் தவறு செய்து மருமகனின் வாழ்க்கையை அழித்து விட்டாள் என அவள் மேல் கோபமும் அவள் மறைவில் வருத்தமும் இருந்தாலும் இன்னொரு மகளை அவனுக்கே திருமணம் செய்வித்து அவங்களோட இருக்காங்க. பாவம் ரெண்டு பேரும் சின்னதில் மகளின் சேட்ட்டையால் நொந்து போனவர்கள் இப்பொழுது பேரன் n பேத்தியின் சேட்டையில் தலை சுத்திபோய் இருக்காங்க. அதும் கோகிலா சொல்லும் ஸ்ருதியின் சேட்டைகள் படிக்கும் நமக்கே மயக்கத்தை கொண்டு வரும்.. பேரனின் பரெண்ட்ஸ் மீட்டிங் க்கு போக அவர் பயப்படும் காட்சிகள் ஹாஹாஹா பாவமோ பாவம் அவர். Ukg க்கே 50டைம்ஸ் மீட்டிங் போவாங்க ஹாஹாஹா ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன்.. செம்ம லவ்லி ஸ்டோரி...