கல்கி மீ்ண்டும்

Advertisement

SahiMahi

Well-Known Member
நண்பர்களே! கோரோனாவால் பொழுது போகாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. கல்கி நிறுவனத்தினர் தங்களது இணையத்தளத்தில் 1943 -2010 வரையில் வெளியான கல்கி இதழ்கள் அனைத்தையும், வெளியான தீபாவளி மலர்கள் போன்ற மலர்கள் அனைத்தையும் இலவசமாக வாசிக்க அனுமதியளித்துள்ளார்கள்.

பொன்னியில் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களையெல்லாம் ஓவியர் மணியம் , ஓவியர் வினு ஆகியோரின் ஓவியங்களுடன் மீண்டும் வாசிக்க முடிவது மகிழ்ச்சியை அளிப்பது.

இது போல் மீ.ப.சோமுவின் 'கடல் கண்ட கனவு', 'வெண்ணிலவுப் பெண்ணரசி', அகிலனின் 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி', 'வெற்றித்திருநகர்' , நா.பார்த்தசாரதியின் 'மணி பல்லவம்', 'பாண்டிமாதேவி' . கி.ராஜகோபாலனின் சரித்திர நாவல், கெளசிகனின் 'பாமினிப்பாவை', கல்கியின் 'பார்த்திபன் கனவு' , ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' போன்ற நாவல்களையெல்லாம் அத்தியாயங்களைத் தொகுத்து மின்னூல்களாக்கி வைத்துள்ளார்கள் .அவற்றையும் இலவசமாக வாசிக்கலாம்.

மின்னூல்கள்: https://www.kalkionline.com/publication/fpubbook.php

கல்கி இதழ்கள் (1943 - 2010): https://www.kalkionline.com/archivessale/readers1.php

----அமிர்தம் சூர்யா
தலைமை உதவி ஆசிரியர்,
கல்கி வார இதழ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top