என் கதை 5

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
"நீங்க எங்க இந்த பக்கம். உங்க அலுவலகம் இங்கயா இருக்கு?" என கேட்டாள் பூங்குழலி. அதற்கு தமிழ் " என் அலுவலகம் இங்க இல்ல. உன்னை பார்க்கலாம்னு தான் வந்தேன்." "என்ன விஷயம்ங்க? எதுக்கு என்ன பார்க்கணும்? " "அன்னைக்கு கல்யாண வீட்டுல விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன். கோவிச்சுக்கிட்டியா என்ன? " . பூங்குழலி மௌனமாக இருக்கவும் " அப்படி ஹர்ட் ஆகியிருந்தா மன்னிச்சுக்க. ஆனா நீயே சொல்லு நீயும் குள்ளமா தான இருக்க. அது உண்மை தான. " என்க அவனை முறைத்தவள் "சரி பொளச்சு போங்க. மன்னிச்சிட்டேன்." என்றவள் "எனக்கு கல்லூரி பேருந்து வந்துருச்சு. நான் கிளம்பறேன்" என்க "ம். சரி கிளம்பு. ஆனா உன்கிட்ட வேற ஒரு விஷயம் சொல்லணும். நான் 5கிமீ. மாரத்தான் ஓடப்போறேன். நீயும் வர்றியா?" என்றான். பேருந்து அருகில் வந்துவிடவும் "யோசிச்சு சொல்றேன்" என்றவள் பேருந்திற்குள் ஏறி அமர்ந்தாள். "ஹேய் பூ! கல்யாணம் எப்படி நடந்துச்சு? நல்லா நடந்துச்சா? " என்று கேட்டாள் சுதா. "ம் நல்லா நடந்துச்சுடி" " விழிப்புணர்வு பேரணி எப்படி நடந்துச்சு டி" " நல்ல நடந்துச்சு டி " " ஹேய் நடிகர் ஆர்யாக்கு சயிஷா கூட கல்யாணம் நடந்துடுச்சு பார்த்தியாடி. அந்த சேனல்ல இந்த ஆர்யாக்கு பொண்ணு பார்க்கிறேன்னு 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி நடத்துனப்ப விழுந்து விழுந்து பார்த்தா கடைசில இப்படி ஆகிடிச்சு." "இவங்க எல்லாம் டிஆர்பி ரேட்டிங்க்குகாக நிகழ்ச்சி நடத்துறாங்க டி. அதயெல்லாம் உண்மை நம்பி பார்க்கிறத விட்டுடணும் டி." என்றாள். பேருந்து கல்லூரியை வந்து அடைந்ததும் இறங்கியவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். சுதா "ஹேய்! இன்னைக்கு நம்ம வகுப்பு தோழி ப்ரியாவோட பிறந்தநாள் விழாவுக்கு போகணும் டி. மத்தியாணம் கம்மியா சாப்பிடணும். அப்பதான் பிறந்தநாள் விழாவில ஒரு கட்டு கட்டலாம். " என்றாள் வாயெல்லாம் பல்லாக. பூவும் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டினாள். பிறகு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வர "ஹேய் சுதா ! நான் டயட்ல இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இன்னைக்கு பார்டில அதிகமா சாப்பிடாம இருக்க நீ தான்டி உதவணும்." "நான் எப்படி டி உதவ முடியும். சரி ஒரு நிமிஷம் பொறு" என்ற சுதா "காலையில நல்ல சாப்பிட்டயா?" "ஏன்டி எதுக்கு கேட்கிற?" " இல்லடி காலை உணவு எப்பவும் நல்லா சத்தானதா வயிறு நிறைய சாப்பிடணும். அப்ப தான் நடுல பசி எடுக்காது. நீ விழாவுக்கு போறப்பவே பசியோட போனா நிறைய சாப்பிடுவ." "ஐய்யய்யோ விழாவுல நிறைய சாப்பிடணும்னு வீட்ல கம்மியா தாண்டி சாப்பிட்டேன். இப்ப என்ன பண்றது?" "போனது போகட்டும். இனிமே வீட்டுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி சத்தான உணவு வயிறு நிறைய சாப்பிடு. அப்புறம் டயட்லாம் யாராவது மேற்பார்வையில் இருக்கணும். நீயா யாரோட guidance இல்லாம டயட்ல இருக்காது"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top