என் இதய விழி நீயே 21

Advertisement

achuma

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க, உங்களின்
ஆதரவிற்க்கு ரொம்ப நன்றி.
எழுத்து பிழை இருந்தால் மன்னியுங்கள் ,
தவுறு இருந்தால் , ப்ளீஸ் சொல்லுங்க .:)(y)


please read and gice comments
thanks for all your support
be safe n take care all :love::)(y)(y)


அபி ஆதியுடன் தனியாக செல்லும் முதல் பயணம் , எப்பொழுதும், அர்ஜுன், ஸ்ரீ, அபி மற்றும் ஆதி அனைவரும் ஒன்றாகவே எங்கும் செல்வார்கள்.

அபியுடன் பயணிப்பது,ஆதிக்கு காற்றில் மிதப்பது போன்று மிகவும் உல்லாசமாக இருந்தான் .
ஆனால் அபிக்கோ , அவனிடம் செல்லும் நினைவு இன்றி எங்கோ வெறித்து பார்த்து கொண்டே வந்தாள் ...
அபியின் நிலைக்கு, காலையில் பிரேமாவின் வருகையே காரணம் ...

அபி என்ற பெயரின் தனித்துவம் மறைந்து , ஆதியின் மனைவியாக இனி வாழ்க்கையில் பயணிப்பது பற்றிய கவலையே அவளிற்கு அதிகம் ...
காலையில் இருவரும் வெளியே செல்லும் நேரம், பிரேமா கணவருடன் வீட்டிற்குள் வந்தார் ...


காலை வணக்கத்துடன், பிரேமாவின் கணவர் சிவநேசனிடம், நிஷா பற்றி, அவளின் புகுந்த வீட்டை பற்றி பேசிவிட்டு, அபி ஆதியையும் வாழ்த்தினார் ...
இருவரும் பிரேமாவிடமும், விஜயனிடமும் காலில் விழுந்து ஆசி பெற்றனர் ...
ஆதிக்கு அவர் திருமண மண்டபத்தில் பேசியது வருத்தம் இருந்தாலும், அவர் உடனே மன்னிப்பு கேட்டதும் அவனும் சாதாரணமாக கடந்து விட்டான் , சூழ்நிலை ஏற்ப மாறும் திறன் பிரேமாவிற்கு இருப்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை ...

மனதளவில் சாபத்துடனே இருவரையும் பிரேமா வாழ்த்தினார் ...
அபிக்கு அவரை கண்டதும் பயமே .
எப்பொழுதும் அபியிடம் சிடுசிடுப்புடனே அவர் இருப்பது அவளிற்கு தான் தெரிந்த ஒன்று அகிற்றே ...
பிறகு பொதுவான பேச்சுக்கள் ஆண்களுக்கு இடையில், அதன் பிறகு, பிரேமா, "அண்ணா! இனி ஷோரூம், காம்ப்லெஸ் பொருப்பு,எல்லாம் அபியை கவனிக்க சொல்லிடுங்க , நீங்க எனக்கு குடுத்த பொருப்பை உங்க கிட்ட திரும்பவும் ஒப்படைச்சிட்டேன், அப்படிங்குற நிம்மதியே எனக்கு போதும் . என் கடமை முடிந்தது... "

"அடுத்தவர்கள் பொருள் நம்ம கிட்ட இருக்கும் வரை ஒரு டென்ஷன் அண்ணா , இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும் , இன்னைக்கே நல்ல நாள் . அபி கம்பெனிக்கு வந்து பார்த்துக்க சொல்லிடுங்க , நான் வீட்டில நிம்மதியா இருப்பேன் , என் கடமை முடிந்த திருப்தியில் ..."(என்ன நடிப்பு )

விஜயனுக்கு எப்பொழுதும் போல் மனைவி மீது பெருமையே ...

"ஐயோ அத்தை ! நீங்க என்ன அதற்குள்ள இப்படி சொல்லிட்டீங்க, அபி காலேஜ் போகணும் இருக்கா , நீங்களே அங்க இருங்க, ...
ஆதி அது நல்ல இருக்காது பா , இனி எனக்கு அதில் எந்த சம்மந்தமும் இல்ல ஆதி , அது சரியும் இல்ல பா"

"ஆதி, உன்னால ஹாஸ்பிடல் வேலையே சரியாய் இருந்தா கூட , அர்ஜுன், அண்ணா, ஸ்ரீ இவங்க எல்லாம், அபிக்கு சப்போர்ட்டா இருப்பாங்க பா ..
எனக்கு என்னோட சேவை , கிளப் இதுல பிஸியா நேரம் போய்டும்," என்று பெருந்தன்மையாக பேசினார் ...
"அதுவும் இல்லாம கணக்கு எல்லாம் சரியாய் இருக்கானு நாளைக்கு ஆபீஸ் வந்து பார்த்துடுங்க , எனக்கும் நிம்மதி ."
"பிரேமா! என்ன மா இது? கணக்கு பற்றி எல்லாம் பேசுற , உன் மேல நம்பிக்கை இல்லாத மாதிரி பேசிறியே மா , எங்கள ஒதிக்கிட்ட போல இருக்கு மா , நிஷா இந்த வீட்டுக்கு மருமகளா , வரல என்றாலும், எங்க உறவு இல்லை என்று ஆகிடாது ..."
"நீ எனக்கு தங்கைனு தான், நான் நினைக்கிறேன், நீ ஆனா இப்படி பிரிச்சி பேசுறியே ," என்று வருந்தினார்

"ஐயோ அண்ணா! அப்படி எல்லாம் இல்லை , நான் என்ன சொல்லுறேனா ".......
"அத்தை ! உங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் மகன் சொல்லுவீங்க , இப்போ மகன் சொத்து , நீங்க பார்த்துக்க மாட்டிங்களா? "

" இப்போ என்ன அபி கவனிக்கணும் அதானே , காலேஜ் முடிந்ததும், ஈவினிங் வந்து , அவ கொஞ்ச நேரம் உங்க கூட இருந்து, எல்லாம் தெரிஞ்சிக்கட்டும்..."

அதன் பிறகு, அவ படிப்பு முடிந்ததும், ரெண்டு பெரும் சேர்ந்து பார்த்துக்கோங்க , சரியா என்று ஆதி கூறினான் ...
அபிக்கு தூக்கி வாரி போட்டது பிரேமாவுடன் ஷோரூம் செல்வது ...
பிரேமாவிற்கும் இது தானே வேண்டும் , அபியின் பயந்த முகமும் கண்டு கொண்டாள் ...

"என்ன அபி, உனக்கு ஓகே தானே?" என்று சிவநேசன் கேட்டதும், எப்பொழுதும் போல் சம்மதம் என்று தலை ஆட்டி வைத்தாள் ...

பிறகு அபியின் கன்னங்களை பிடித்து, "அபி குட்டி நல்ல வளர்ந்துட்டே , அன்றைக்கு , கல்யாணத்தில் ஏதோ ஒரு கோவம், அதான் என்னமோ பேசிட்டேன் , ஏதும் மனசுல வெச்சிக்காத ," என்று அவளிடம் அவரின் நடிப்பும் அரங்கேறியது ...

அபிக்கும் அவரின் அன்பான பேச்சில் பயம் தெளிந்து, "பரவாயில்லை ஆண்டி ," என்று புன்னகையித்தாள் ...

ஸ்ரீ, டி தயார் செய்து கொடுக்கவும், அடுத்த பேச்சுவார்த்தை, நடந்தது ...

"எங்கயோ வெளிய கிளம்பி போறத இருந்தது போல, நாங்க வந்து தொந்தரவு செய்துட்டோம்," என்று இருவரும் எங்கு செல்கிறார்கள், என்று தெரிய முற்பட்டார் , பிரேமா ...

பிரேமாவிற்கு, ஆதி அபியிடம் அவனின் காதலை கூறினானா, என்று தெரிய வேண்டியது இருந்தது ...
ஸ்ரீயிடம் பொதுவாக பேசுவது போல் பேசி, "ஆமா நான் ரூம்ல இருந்தேன், என்ன நடந்ததுனு ,எனக்கு தெரியவே இல்லை," என்றார் ஸ்ரீயிடம் ...
அவளும் மண்டபத்தில் நடந்தது ஒன்று விடாமல் கூறிவிட்டாள் ...

ஆதிக்கு அபி மீது காதலா என்று ஒன்றும் தெரியாதது போல் ஆச்சர்யத்துடன் கேட்டார் ...
"ஆமா சித்தி, இந்த டாக்டர் மனசுல இந்த மேடம் இருக்காங்கனு தெரியாம போச்சு,எப்படி இருந்தாலும் நிஷாவும் சரி, ஆதியும் சரி அவங்க மனசுக்கு பிடித்தவர்கள் கூட தான் சேர்ந்து இருக்காங்க என்று மகிழ்ந்தாள்.
"ஆமா ஏன் அபி முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு," என்று அடுத்த கேள்வி கேட்டார் பிரேமா.

"அவ குழப்பத்துல இருக்கா சித்தி ,"
"ஏன்?" என்ற பிரேமாவின் கேள்விக்கு அபியின் வீட்டில் நடந்ததும் ஸ்ரீ சொல்லிவிட்டாள் , "அதனால் ஆதி இன்னும் அவன் லவ்வ சொல்ற சூழ்நிலை இல்ல சித்தி..."என்று வருந்தினாள் ...
"ஓஹ் "என்றதோடு பிரேமா சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்
"அவனே அபி இங்க கொஞ்சம் நல்ல பொருந்தி போனதும் அவன் லவ் சொல்றதா சொல்லிட்டான்.அபிக்கும் எதுவும் தெரியாது , மாமாக்காக தான் இந்த கல்யாணம் நினைச்சிட்டு இருக்கா ..."

"ஆனா ஆதி புரிய வைச்சிடுவான் சித்தி , நீங்க கவலை படாதீங்க, அவ நம்ம கிட்ட இனி சந்தோஷமா இருப்பா , "என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் ...

அப்படினா சந்தோஷம் தான் டா ஸ்ரீ," என்று பிரேமாவும் வெளிலே சிரித்து, (அதுக்கு நான் விட்ட தானே ) என்று நினைத்தாள் ....

பிறகு ஸ்ரீயும் ஆரவை கவனிக்கும் வேலை இருப்பதாக சென்று விட்டாள் , பிரேமாவும் அபியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் ...

" நீ ஆதியை கல்யாணத்திற்கு முன்ன பார்த்து ரொம்ப வருடம் ஆகிடுச்சு இல்ல , உனக்கு இன்னும் அவனை பற்றி நிறைய தெரியணும், வீட்டுல பெரியவங்க இந்த பசங்க கல்யாணத்தை பற்றி பேசியதும்,அவனுக்கு ரொம்ப சந்தோஷம் ..."

21 4

"அபி எனக்கு இந்த இரண்டு பசங்க மீது அன்பு அதிகம் டா , அந்த நிஷா பொண்ணு இந்த மாதிரி ஆதிக்கு துரோகம் செஞ்சிருக்க வேண்டாம் , இவ வேற ஒருத்தன் மேல அன்பு இருக்குனு முன்னாடியே சொல்லி இருக்கலாம், ஆதி வேற அவன் மனசுல நிஷா மேல அளவுக்கு அதிகமா ஆசை வெச்சிட்டான் ..."

"நீயும் அவன் மனசு புரிஞ்சி நடக்கணும், இனியாவது, உனக்கு புரியும் நினைக்கிறன் அபி நான் என்ன சொல்ல வரேன்னு ,"என்று அவளின் முகத்தை பார்த்து கொண்டே கேட்டார் .அவள் அவளின் வருத்தத்தை முகத்தில் காட்டாது வெறித்தே அமர்ந்து இருந்தாள்... அபி மனதில் மிகவும் வருந்தினாள் இவ்வார்த்தையில்.

என்ன தான் தெரிந்த விஷயம் என்றாலும் , இப்பொழுது அபி தான் அவனின் மனைவி, அதனால் அவனின் பழைய காதல் என்று அவளும் மனதளவில் ஏற்று கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் ...

"சிவநேசன் அண்ணா கூட, உன்னோட நிலைமை எல்லாம் தெரிந்து தான் இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டுவந்து இருக்காங்க ..."
"அதனால உன்னோட மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து இந்த குடும்பத்துக்கு ஏற்றது போல் இருக்க பாரு மா ..."

"கொஞ்சம் நன்றியோட இருக்க பாரு மா," என்று வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று , அவளின் வாழ்க்கை முறையை மட்டம் தட்டி பேசினாள் ...
அபியும் மனதில் போராட்டத்துடன், சரி என்று தலையாட்டி வைத்தாள் ...

அவளின் கவலையான முகமே பிரேமாவிற்கு மிகவும் திருப்தி ...

"உன்னோட நல்லதுக்கும் , இந்த குடும்பத்துக்கும் தான் நான் இது எல்லாம் சொல்றேன் சரியா ..."

அவளின் தாழ்வு மனப்பான்மையே அவளின் வருத்தத்திற்கு காரணம், பிரேமாவும் அவளின் வாழ்வில் விளையாட இதே போதும் ...

பிறகு காரின் ஹார்ன் ஒலியிலே , அபி வீட்டில் நடந்த சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள் ...
"ஹலோ மேடம் , என்ன தான் சிந்தனை, எனக்கு தொண்டை தண்ணியே வத்தி போச்சு, அந்த அளவு கத்திட்டேன் ...
இந்த ஹார்ன் சத்தம் நான் முன்னயே குடுத்து இருக்கலாம்," என்று ஆதி அவளிடம் செல்லமாக குறை பட்டு கொண்டான் ...
அவனிடம் சொல்லும் அளவிற்கு பிரேமாவின் வார்த்தை அவளை நெருங்க விட வில்லை ...
ஒன்றும் இல்லை என்று மழுப்பி , அவனிடம் இருந்து அவனின் தொலைபேசி கேட்டு வாங்கி கொண்டாள் ...


அதில் கூகுலின் உதவியுடன், பங்களா, பெரிய வீடுகள் , அதற்கேற்ற வீட்டு பொருட்கள் என்று அணைத்தும் தேர்வு செய்து கொண்டாள், ஆதியின் மற்றும் சிவநேசன் குடும்பத்தின் தகுதி தன்னால் எவ்விதத்திலும் இறங்க கூடாது என்று மிகவும் கவனமாகவே இருந்தாள் ...
அபியின் தேர்வு மிகவும் அழகாவே இருந்தது ஆதி அதையும் பாராட்டினான் .

அபிக்கும் அதிக விலையில் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தான்,எந்த மறுப்பும் இன்றி அதுவும் அவனின் விருப்பதிற்கே வாங்கி கொண்டாள் அமைதியாக ...

பிறகு வீட்டிற்கு வந்ததும், அதி அனைவரிடமும், சொல்லி விட்டு ஹாஸ்பிடலிற்கு சென்றான் ...

ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அபியின் மீது தனி கவனம் செலுத்திகிறான் , என்று அபிக்கு தான் தெரியாமல் போயிற்று...

காலையில் நன்றாக தானே இருந்தாள் , ஒரு வேலை ஷோரூம் பொறுப்பு கொடுத்ததால் பயந்து விட்டாளோ , என்று அவனும் அபியை எதும் கேட்க வில்லை ...

அபி நான் ஹாஸ்பிடல் கிளம்பனும் , நிறைய வேலை இருக்கு, நைட் வந்து மீட் பன்னுறேன் , என்று அவளிடம் தனியாக சொல்லி விட்டே கிளம்பினான் ...

பிறகு ஸ்ரீயின் துணையுடன் அவளின் உடை எடுத்து கபோர்டில் அடுக்கும் நேரம், அபியின் உடைகள் சரியாக இல்லை என்று, ஸ்ரீ அவளை துணி கடைக்கு அழைத்து சென்று, அவளின் அளவிற்கு ஏற்றது போல் விலை அதிகமாக ரெடிமெட் சால்வார்ஸ் , புடவைகள் , வீட்டிற்கு தேவையான துணிகள், என்று நிறைய வாங்கி விட்டாள் ...

அக்கா ப்ளீஸ் இதுக்கு மேல முடியாது , போதும், என்று அது வரை பொம்மை போல் அளவு எடுப்பதற்கு நின்று இருந்த அபி வாயை திறந்தாள் ...

"ஏன் உன் வீட்டுக்காரன் என்ன திட்டுறதுக்கா , பழைய ட்ரெஸ்ஸா இருக்கு டா அபி, காலேஜ்க்கு கொஞ்சம் ,சுடிதர்ஸ் , வெளிய போறதுக்கு ஏற்றது போல கொஞ்சம் தான் வாங்கினேன்...
உன் புருஷன் வந்ததும், அவன் கிட்ட பைசா வசூல் பண்ணிடுவேன் ...
நீ அது பற்றி எல்லாம் கவலை படமா இரு ...

இந்த டிரஸ் மட்டும் தான் நீ இனி போடணும், அந்த பழைய டிரஸ் எல்லாம் யூஸ் பண்ணாத சரியா என்று, ஸ்ரீயும் எதார்த்தமாக தான் கூறினாள் ...
அபிக்கு தான் அதனை மனதில் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது ...

நட்பு எந்த வித ஏற்ற தாழுவையும் பார்க்காது , அனால் உறவு என்று வந்து விட்டால் , அனைத்தும் மாறும் என்று தவறாக கருதி கொண்டாள் ...

இந்த ஒரு நாள் பிரேமாவின் வார்த்தையே இந்த அளவிற்கு அபியை மாற்றும் என்றால் , இனி தினமும் அவளின் நிலை ?

பிறகு ஸ்ரீயின் துணையுடன் அவளின் உடை எடுத்து கபோர்டில் அடுக்கும் நேரம், அபியின் உடைகள் சரியாக இல்லை என்று, ஸ்ரீ அவளை துணி கடைக்கு அழைத்து சென்று, அவளின் அளவிற்கு ஏற்றது போல் விலை அதிகமாக ரெடிமெட் சால்வார்ஸ் , புடவைகள் , வீட்டிற்கு தேவையான துணிகள், என்று நிறைய வாங்கி விட்டாள் ...

அக்கா ப்ளீஸ் இதுக்கு மேல முடியாது , போதும், என்று அது வரை பொம்மை போல் அளவு எடுப்பதற்கு நின்று இருந்த அபி வாயை திறந்தாள் ...

"ஏன் உன் வீட்டுக்காரன் என்ன திட்டுறதுக்கா , பழைய ட்ரெஸ்ஸா இருக்கு டா அபி, காலேஜ்க்கு கொஞ்சம் ,சுடிதர்ஸ் , வெளிய போறதுக்கு ஏற்றது போல கொஞ்சம் தான் வாங்கினேன்...
உன் புருஷன் வந்ததும், அவன் கிட்ட பைசா வசூல் பண்ணிடுவேன் ...
நீ அது பற்றி எல்லாம் கவலை படமா இரு ...

இந்த டிரஸ் மட்டும் தான் நீ இனி போடணும், அந்த பழைய டிரஸ் எல்லாம் யூஸ் பண்ணாத சரியா என்று, ஸ்ரீயும் எதார்த்தமாக தான் கூறினாள் ...
அபிக்கு தான் அதனை மனதில் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது ...

நட்பு எந்த வித ஏற்ற தாழுவையும் பார்க்காது , அனால் உறவு என்று வந்து விட்டால் , அனைத்தும் மாறும் என்று தவறாக கருதி கொண்டாள் ...

இந்த ஒரு நாள் பிரேமாவின் வார்த்தையே இந்த அளவிற்கு அபியை மாற்றும் என்றால் , இனி தினமும் , அவளின் நிலை ?

நாட்களும் மாதங்களாக கடந்து, அபிக்கும் காலேஜ் சேரும் நாளும் வந்தது ...
அது வரை , அபி காலையில் வீட்டு வேலைக்கு வரும் ஒரு பெண்ணின் உதவியுடன், காலை உணவு செய்வது,
ஆதி, சிவநேசன் அவரவர் வேளைக்கு சென்றதும், அந்த பெண்ணுடன் சேர்ந்து தோட்டத்தை சுத்தம் செய்வது, சிறு சிறு செடிகள் வைப்பது, மதிய உணவு செய்து, ஆதிக்கும், சிவநேசனுக்கும் டிரைவரரிடம் குடுத்து அனுப்புவது ,மாலையில் ஒரு சில நேரங்களில், ஸ்ரீ இங்கு வந்து விடுவாள் , அவளுடன் அபிக்கு நன்றாக பொழுது போகும்...

ஆதிக்கு அவனின் துறையில் நேரம் காலம் கிடையாது...
ஆனால் வீட்டினில் இருக்கும் நேரம் அபியுடம் நேரத்தை செலவு செய்வான்.
அபியை எங்கேனும் வெளியே அழைத்து செல்வான் , அவளே கேட்கவில்லை என்றாலும் , அவனின் விருப்பம் என்று, அபிக்கு ஏதேனும் வாங்கி கொடுப்பான் ...

ஆனாலும் அனைத்துக்கும் ஒரு ஒதுக்கமே, அபியிடம் ...
இன்னும் அவளின் கூட்டில் இருந்த வெளியே வர விருப்பம் இல்லை ...

யாரும் அபியை ஷோரூம் செல்வது பற்றி கேட்கவில்லை , அதுவரை நிம்மதி என்று அபியும் அவளின் நாட்களை நகர்த்தினாள் ...

காலேஜ் சேர்ந்தும் மூன்று மாதம் ஆகிற்று ,

மூன்று மாதம் கடந்ததும் பிரேமாவே, "அபிக்கு செமஸ்டர் இப்போ இல்லையே அண்ணா , அதனால் நாளையில் இருந்து, அவ இங்க வந்தா நல்ல இருக்கும் நினைக்கிறன், நீங்களே அவளை அனுப்பி வைப்பிங்கனு,பார்த்தேன், ஆனா இவ்வளவு நாள் ஆகிடுச்சே,"என்று பிரேமா சிவநேசனிடம் கேட்டாள் ...

அது இல்ல மா , அன்னைக்கே ஆதி அபிக்கு விருப்பம் இல்லாம, அவ போக வேண்டாம் சொல்லிட்டான் , அவளும் பயப்படுறா போல , அதான் நாங்களும் எதுவும் கேட்டுக்கல ...

பிரேமா , "ஆமா , இன்னும் பொத்தி பொத்தி பார்த்துப்பான் , உங்க மகன், என்று மனதிலே கருவி கொண்டாள் ..
வெளியே சிரித்து,"அவ கத்துக்கிட்டா , கொஞ்ச நாட்களில் எல்லாம் தெரிஞ்சிட போகுது , நீங்க அனுப்பி வைங்க அண்ணா , நான் பார்த்துகிறேன் ..."

"என்னாலயும் முன்ன மாதிரி எல்லா இடம் போய் பார்த்துட்டு வர முடியல , அதான் ...

சிவநேசனும், ஆதியிடம் கூறுவதாக சம்மதித்தார் ...


அபி ஷோரோமிற்கு செல்லும், நேரம் வந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top